Wednesday, August 28, 2019

2:78 அவர்கள் பொய்களைத் தவிர உண்மையை அறிந்து கொள்ள மாட்டார்களா?

வாவு வந்தால் இன்னும் மேலும் என்று மொழி பெயர்த்தே ஆக வேண்டும். இப்படி மொழி பெயர்க்காமல் விடுவது யூதக் கொள்கை.  பீ.ஜே. தவிர எந்த மொழி பெயர்ப்பாளர்களும்  வாவுக்கு இன்னும் மேலும் என்று மொழி பெயர்க்காமல் விட்டதில்லை என்று விமர்சனம் செய்தவர்களின் மேலான கவனத்திற்கு. 

https://mdfazlulilahi.blogspot.com/2020/11/278.html

இந்த வசனத்தின்  முதல் வார்த்தையான   வமின்ஹும்    என்பதில் ஒரு வாவு ம்   இடையில் வரும்  வஇன்  என்பதில் ஒரு வாவும்  ஆக  இரண்டு வாவுகள் இடம் பெற்றுள்ளன.  

உமர் ஷரீப்

றஹ்மத்

ஸலாமத்

பஷாரத்

தாருஸ்ஸலாம், ரியாத் 

K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி போன்றவர்கள்  இரண்டு வாவுக்கும்  மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள்.  சிலர் ஒரு  வாவுக்கு மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள். 



وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ ﴿٧٨﴾

وَمِنْهُمْ -  வமின்ஹும் 
அவர்களில்

أُمِّيُّونَ உம்மீயூன 
 எழுத்தறிவற்றோரும் - கல்வி இல்லாதவர்கள் - படிப்பறிவில்லாத

لَا يَعْلَمُونَ - லா யஃலமூன 
அறிய மாட்டார்கள்

الْكِتَابَ அல் கிதாப 
வேதத்தை

إِلَّا இல்லா 
தவிர

أَمَانِيَّ - அமானிய்ய 
வீண் நம்பிக்கைகளை - பொய்களை

وَإِنْ - வஇன் 
இல்லை

هُمْ - ஹும்  
அவர்கள்

إِلَّا இல்லா
தவிர

يَظُنُّونَ  யழுன்னுான
சந்தேகிக்கிறார்கள்

மொழிப்பெயர்ப்புகள் :



அவர்களில் எழுத்தறிவற்றோரும் உள்ளனர். அவர்கள் பொய்களைத் தவிர வேதத்தை அறிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் கற்பனையே செய்கின்றனர். - (PJதொண்டி)

 

அவர்களுள் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர். அவர்கள் அறிந்து வைத்திருப்பதெல்லாம் கட்டுக் கதைகளேயன்றி இறைமறையன்று. மேலும் அவர்கள் எதையும் தாமாகவே கற்பனை செய்து கொள்பவர்களாவர். -  (அதிரை ஜமீல்)



கல்வி இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வீண் நம்பிக்கைகளைத் தவிர வேதத்தை (அவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் (வீணாகச்) சந்தேகிக்கிறார்களே தவிர (வேறு கல்வி அவர்களுக்கு) இல்லை. - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்)

மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. - ஜான் டிரஸ்ட்

 

அன்றி, கல்வி அறிவு இல்லாதவர்களும் அவர்களில் உண்டு. வேதத்தைப் பற்றி (கேள்விப்பட்டுள்ள) வீண் நம்பிக்கைகளைத் தவிர (உண்மையை) அவர்கள் அறியவே மாட்டார்கள். அவர்கள் வீண் சந்தேகத்தில் (ஆழ்ந்து) கிடப்பவர்களைத் தவிர (வேறு) இல்லை.-( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

மேலும், அவர்களில் மற்றொரு பிரிவினர், எழுதப் படிக்கத் தெரியாதவர்களாய் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வேதத்தைப் பற்றிய எந்த அறிவும் கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் வெறும் அடிப்படையற்ற நம்பிக்கைகளும் ஆசைகளும்தான்! மேலும் வெறும் ஊகங்களிலேயே அவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; வீண் நம்பிக்கைகளை (கொள்கையாகக் கொள்வதை)த் தவிர வேதத்தை அவர்கள் அறியமாட்டார்கள்; அன்றியும் அவர்கள் (வீண் கற்பனைகளை) எண்ணுவோர் தவிர வேறில்லை. -(அல்-மதீனா அல்-முனவ்வரா)


.மேலும் அவர்களிலுள்ள பாமர மக்களிடம், வெறும் கட்டுக் கதைகளைச் சொல்லி அவர்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களிடம் சொல்லி வருவதெல்லாம் வெறும் கற்பனையே அன்றி வேறெதுவும் இல்லை.

No comments: