Friday, August 23, 2019

2:73 இவ்வாறே - அப்படியே. காட்டுகிறான் - காண்பிக்கிறான்.

 


فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا ۚ كَذَٰلِكَ يُحْيِي اللَّـهُ الْمَوْتَىٰ وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ ﴿٧٣﴾ 



فَقُلْنَا - Fபகுல்னா 
எனவே (ஆகவே) கூறினோம்

اضْرِبُوهُ - அழ்ரிபபூஹு 

அவரை அடியுங்கள்

بِبَعْضِهَا பிபஃழிஹா 
சிலதை கொண்டு அதில்

كَذَٰلِكَ கதா(ரா)லிக 
அப்படியே

يُحْيِي யுஃஹ்யி 
உயிர்ப்பிப்பான்

اللَّـهُ - அல்ழாஹு
அல்ழாஹ்

الْمَوْتَىٰ - அல் மவ்தா
இறந்தவர்களை

وَيُرِيكُمْ - வயுறீகும் 
உங்களுக்குக் காட்டுகிறான் (காண்பிக்கிறான் )

آيَاتِهِ ஆயாதிஹி 
தனது சான்றுகளை - தன் அத்தாட்சிகளை

لَعَلَّكُمْ تَعْقِلُونَ - லஃஅல்லகும் தஃகிலுான
நீங்கள் விளங்குவதற்காக - சிந்தித்து புரிவதற்காக

மொழிபெயர்ப்புகள் :

"அதன் (மாட்டின்) ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!'' என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான்.24 - (PJதொண்டி)


அறுக்கப்பட்ட அப்பசுவின்) இறைச்சித் துண்டொன்றால் (கொலையுண்டவனின்) உடலில் அடியுங்கள்" என்று நாம் சொன்னோம். (அடித்தபின், அப்பிணத்திற்கு நொடிப் பொழுதில் உயிரளித்தோம்) அல்லாஹ் இறந்தவர்களை (இத்துணை எளிதாய்) உயிர்ப்பிக்கிறான். நீங்கள் அறிவுப் பாடம் பெறும் பொருட்டுத் தன் சான்றுகளை அவன் உங்களுக்குக் காட்டுகிறான். -  (அதிரை ஜமீல்)


"(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலை யுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்" என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான். - ஜான் டிரஸ்ட் 



எனவே," அதில் சில ( பாகத்)தைக்கொண்டு அவரை அடியுங்கள்." எனக் கூறினோம். அப்படியே இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான் நீங்கள் சிந்தித்து புரிவதற்காக தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான். (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்)


ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதனை அறுத்து) "அதில் ஒரு பாகத்தைக்கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்" என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வாறே இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வற்காக அவன் தன்னுடைய (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகின்றான். ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)


 

“(அறுக்கப்பட்ட) அப்பசுவின் ஒரு பாகத்தைக் கொண்டு கொலையுண்டவனை அடியுங்கள்” என அப்பொழுது நாம் கட்டளையிட்டோம். (பாருங்கள்) இவ்வாறே அல்லாஹ் மரித்தவர்களை உயிர்ப்பிக்கின்றான்; மேலும் நீங்கள் நல்லறிவு பெறும் பொருட்டு தன் சான்றுகளையும் உங்களுக்குக் காண்பிக்கின்றான். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)


 

ஆகவே, “(அறுக்கப்பட்ட பசுவாகிய) அதன் சில (பாகத்)தைக் கொண்டு (கொல்லப்பட்ட) அவனை அடியுங்கள்” என நாம் கூறினோம்; (அவன் உயிர் பெற்ற) அவ்வாறே, மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்; மேலும், நீங்கள் அறிந்துகொள்வதற்காக தன்னுடைய அத்தாட்சிகளை அவன் உங்களுக்குக் காண்பிக்கிறான்.-(அல்-மதீனா அல்-முனவ்வரா)



No comments: