Sunday, June 30, 2019

2:19 வானம் என்ற சொல் திருக்குர்ஆனில் எத்தனை அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.வானம் எத்தனை வகை?

மேலே தென்படும் வெட்டவெளி என்பது ஒரு அர்த்தமாகும்.

வானத்தில் இருந்து மழையை இறக்கியதாக 2:21, 6:98, 8:11, 13:17, 14:23, 15:22, 16:10, 16:65, 20:53, 22:63, 23:18, 25:48, 27:60, 29:63, 30:24, 31:10, 35:27, 31:21, 43:11, 50:9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இந்த வானத்தை நாம் எளிதில் அடைந்து விடலாம். விமானத்தில் பயணம் செய்பவர் இந்த வானத்துக்கும் மேலே அதாவது மழைபொழியும் மேகங்களுக்கும் மேலே பயணம் செய்ய முடியும்.

பறவைகள் வானத்தில் வட்டமடிக்கின்றன என்று அல் குர்ஆன் சொல்வது வெட்ட வெளியைத்தான்.

விஞ்ஞானிகள் இந்த வானத்தையே திடப்பொருள் அல்ல எனவும் சூனியம் எனவும் கூறுகின்றனர். இதனால் தான் நாம் இதை விமானத்தின் மூலம் தடையில்லாமல் கடந்து செல்ல முடிகிறது.

இது அல்லாத இன்னொரு வானத்தைப் பற்றியும் திரு குர்ஆன் கூறுகிறது. அது மனிதன் இன்னும் சென்றடையாத தொலைவில் இருக்கிறது. ஏழு அடுக்குகளைக் கொண்டதாக அது படைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும். திரு குர்ஆன் 41 : 12

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் வின்னுலகப் பயணம் அழைத்துச் சென்றபோது அவர்கள் ஒவ்வொரு வானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அங்கே வானவர்களை திறக்கச் சொல்லி அதன் வாசல்கள் திறந்த பின்பே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல முடிந்தது.

இவ்வாறு ஏழு வானங்கள் உள்ளன. இந்தவானத்தை விஞ்ஞானிகள் இன்னும் அறிவால் கூட அடையவில்லை. இவர்கள் ஆகாயம் எனும் வெட்ட வெளியின் இறுதி எல்லையைக் கூட அடையவில்லை. அது திடப்பொருள் என்றோ திரவப்பொருள் என்றோ இன்னும் அவர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை.

எந்த வசனத்தில் எந்த வானம் பற்றி பேசப்படுகிறது என்பதை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

மனிதனுடன் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி பேசும்போது வானம் என்பது வெட்டவெளி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.


மனிதன் அறிந்திராத நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் குறித்து வானம் என்று சொல்லப்பட்டால் அது மனிதன் சென்றடையாத ஏழு அடுக்குகளைக் கொண்ட திடப்பொருளான வானம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2:19 வசனத்திற்குரிய வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பை பார்ப்போம்.

أَوْஅவ்
அல்லது

كَ
போல,போன்ற, தன்மை, உவமை, உதாரணம்,  உவமானம் 

صَيِّبٍஸய்பின்
மேகம்

مِنَ - மின
 இருந்து (FROM) லிருந்து

السَّمَاءِஸமாயி 

விண்- வானம் 

فِيهِFEEபீஹி

அதில்


ظُلُمَاتٌ -  ழுலுமாதுன்
இருள்கள்

وَ   

இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி   


رَعْدٌறஃதுன்
இடி

وَ  

இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி  


بَرْقٌபர்ஃகுன்
மின்னல்

يَجْعَلُونَயஜ்ஃஅலுான

ஆக்குகிறார்கள்


أَصَابِعَهُمْஅஸாபிஃஅஹும்

அவர்களுடையவிரல்கள்


فِيFEEபீ 

இல்

اٰذَانِ- ஆதா(ரா)னி
காதுகள்

هِمْ -ஹிம் 

அவர்களுடைய

آذَانِهِمஆதா(ரா)னிஹிம் 

அவர்களுடைய காதுகள்


مِّنَமின
இருந்து

الصَّوَاعِقِஸ்ஸவாஃஇஃகி  

இடியோசை- இடி முழக்கங்கள்

حَذَرَஃஹத(ர)ர 

அஞ்சுதல்  - அச்சம் 


الْمَوْتِமவ்(தி)த் 

மரணம்

وَاللَّـهُவ ல்லாஹு 

அல்லாஹ்


مُحِيطٌமுஹீதுன்

சூழ்ந்து அறிபவன் _ முழுமையாக அறிபவன்


بِالْكَافِرِينَபில் காFEபிரீ(ன)ன்.

காஃபிர்கள்


இணைத்து படிப்போம்

أَوْ كَصَيِّبٍ مِّنَ السَّمَاءِ فِيهِ ظُلُمَاتٌ وَرَعْدٌ وَبَرْقٌ يَجْعَلُونَ أَصَابِعَهُمْ فِي آذَانِهِم مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ وَاللَّـهُ مُحِيطٌ بِالْكَافِرِينَ
அவ் க ஸய்பி(ன்)ம்  மின ஸ்மாயி  FEEபீஹி ழுலுமாதுன் வ றஃதுன் வ பர்ஃகுன்  யஜ்ஃஅலுான அஸாபிஃஅஹும்  FEEபீ ஆதா(ரா)னிஹிம்  மினஸ் ஸவாஃஇஃகி  ஃஹத(ர)ரல் மவ்(தி)த் வ ல்லாஹு முஹீதுன் பில் காFEபிரீ(ன)ன்.

தமிழாக்கம் - மொழிப்பெயர்ப்பு :


1. அல்லது, (இன்னும் ஓர் உவமை:) காரிருளில், இடி-மின்னலோடு வானத்திலிருந்து கடுமையுடன் கொட்டும் மேகம். (அதில் அகப்பட்டுக் கொண்டோர்) இடி முழக்கம் கேட்டு, மரணத்திற்கு அஞ்சித் தம் விரல்களைக் காதுகளில் திணித்துக் கொள்கிறார்கள். இந்த இறை மறுப்பாளர்களை அல்லாஹ் முழுமையாய் அறிவான். (அதிரை ஜமீல்)


2,3 அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்;(இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்.(அன்வாறுல் குர்ஆன். ஜான்,
4. அல்லது, அவர்கள் இருளும், இடியும், மின்னலும் கொண்ட  விண்ணிலிருந்து பொழிந்திடும் கடும் மழை (அதில் சிக்குண்டவர்களின் நிலை)யைப் போன்றதாகும்) அவர்கள் இடிமுழக்கத்தால் இறப்புக்கு அஞ்சி, தம் விரல்களைக் காதுகளில் திணித்துக் கொள்கின்றனர்; அல்லாஹ் (அவர்கள் தப்பிக்க முடியாதவாறு) நிராகரிப்பவர்களைச் சூழ்ந்து இருக்கின்றான்.(பஷாரத்) 

5. அல்லது (இன்னும் இவர்களுக்கு மற்றும் ஒரு உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம் போன்றதாகும்; (இதில்அகப்பட்டுக் கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் இந்த காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்.( இம்தாதி )

6. அல்லது (இவர்களுடைய உதாரணம்:) அடர்ந்த இருளும், இடியும், மின்னலும் கொண்ட மேகம் பொழியும் மழையில் அகப்பட்டுக் கொண்ட(வர்களின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. இவ்வாறு அகப்பட்டுக் கொண்ட இ)வர்கள் இடி முழக்கங்களால் மரணத்திற்குப் பயந்து தங்களுடைய விரல்களைத் தங்களுடைய காதுகளில் நுழைத்து (அடைத்து)க் கொள்கின்றனர். அல்லாஹ் நிராகரிக்கும் இவர்களை (எப்பொழுதும்) சூழ்ந்துகொண்டு இருக்கின்றான். (அப்துல் ஹமீது பாகவி)

7. அல்லது இவர்களுடைய உவமானம், இவ்வாறு இருக்கிறது: வானத்திலிருந்து கடும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது; அத்துடன் காரிருளும் இடியும் மின்னலும் உள்ளன. (அதில் மாட்டிக் கொண்டவர்கள்) இடி முழக்கங்களைக் கேட்டு மரணத்திற்கு அஞ்சி தம் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொள்கின்றார்கள். மேலும் (சத்தியத்தை) நிராகரிக்கும் இத்தகையோரை அல்லாஹ் எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான். (IFT)

8. அல்லது, (இவர்களுக்கு) இன்னும் ஓர் உதாரணம்:) வானத்திலிருந்து பொழியும் மழையைப்போன்றாகும்; அதில் காரிருள்களும், இடியும் மின்னலும் (கலந்து) உள்ளது; (இவ்வகை மழையில் அகப்பட்டுக் கொண்டோர்) இடிமுழக்கங்களால் மரணத்திற்குப் பயந்து தங்களுடைய விரல்களைத் தம் காதுகளில் ஆக்கிகொள்கிறார்கள்; அல்லாஹ்வோ நிராகரிப்பவர்களைச் சூழ்ந்து கொள்கிறவன். (சவூதி)


9.  அல்லது (இவர்களது தன்மை,) வானத்திலிருந்து விழும் மழை போன்றது. அதில் இருள்களும் இடியும், மின்னலும் உள்ளன. இடி முழக்கங்களால் மரணத்திற்கு அஞ்சி தமது விரல்களைக் காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். (தன்னை ஏற்க) மறுப்போரை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.2:19. (P.J.)


10. அல்லது (அவர்களுக்கு உதாரணம்) வானிலிருந்து பொழியும் மழை (யில் சிக்குண்டோர்) போன்றாகும். அதனுடன் இருள்களும், இடியும், மின்னலும் (சூழ்ந்து கொண்டன .அதில் அகப்பட்டுக் கொண்ட அவர்கள்) மரணத்தைப் பயந்து இடி முழக்கங்களின் காரணத்தால் தம் விரல்களை தம் காதுகளில் அவர்கள் வைத்து (அடைத்து)க் கொள்கின்றனர்.  அல்லாஹ் (ஓரிறை) நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்து அறிகிறவனாக இருக்கிறான். (மலிவு பதிப்பு)

Saturday, June 29, 2019

2:18. செவிடர்கள்; ஊமையர்கள்; குருடர்கள். எனவே அவர்கள் திரும்ப - மீளவே மாட்டார்கள்.

இந்த வசனத்தை மேடைக் கவர்ச்சித்த தமிழிலில்   கண்ணிருந்தும் குருடர்கள். காதிருந்தும் செவிடர்கள்.  வாயிருந்தும் (நாவிருந்தும்) ஊமையர்கள்  என்பார்கள். 

காதுகளில் ஏற்படும் குறைபாடுகளால் செவிட்டுத் தன்மை ஏற்படும்.  கண்களில் ஏற்படும் கோளாறுகளால் பார்வையில் கோளாறு ஏற்படும். அது போல் ஊமைத்தன்மை ஏற்படுவதற்கு வாயில் - நாவில் ஏற்படும் குறைபாடு தான் காரணம்   என்று மனித அறிவு சொல்லும்.  அறிவியல் ஆய்வில் அப்படி இல்லை என்றே முடிவாக ஆகி உள்ளது.

காதுகளில் குறைபாடு ஏற்படுவதால் மற்றவர்கள் பேசுவது உள்ளங்களில் – மனதில்  பதிவதில்லை. எனவே பிறவியில் செவிடாக இருப்பவருக்கு வாய் பேச முடிவதில்லை என்றுதான் இன்றைய விஞ்ஞான மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

இந்த 2:18 வசனத்தில் சிலரைப் பற்றி விமர்சனம் செய்யும் அல்லாஹ், அவர்களை செவிடர்கள்;  குருடர்கள்;  ஊமைகள் என்று விமர்சித்துள்ளான்.

2:7 வசனத்தில் அவர்களின் காதுகளான செவிப்புலன்களிலும் முத்திரை இடப்பட்டு விட்டது என்பதன் மூலம் செவிகளில் முத்திரை உள்ளதால் அவர்கள் செவிடர்கள் என்று தெளிவாக புரிந்து கொள்கிறோம்.

அவர்களின் கண்களில் திரை உள்ளது என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளதன் மூலம் பார்வையில் திரை உள்ளதால் அவர்கள் குருடர்கள் என்று புரிந்து கொள்கிறோம். இந்த இரண்டும் எல்லாக் காலத்திலும் மக்கள் சாதாரணமாக அறிந்த புரிந்த உண்மைகள் தான்.

ஊமைகளாக அவர்கள் ஆனதற்கு காரணம் அவர்களின் வாய்களில் நாவுகளில் முத்திரை இடப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறவில்லை. அவர்களின் உள்ளங்களில் முத்திரை இடப்பட்டுள்ளதாகவே கூறி உள்ளான்.

உள்ளத்தில் முத்திரையிடப்படுவதால் தான் செவிட்டுத் தன்மை ஏற்படுகிறது இந்த உண்மையை குர்ஆன் அருளப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் விஞ்ஞான மருத்துவ உலகம் கண்டுபிடித்துள்ள உண்மையாகும்.


எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி அவர்கள், அவர்களது காலத்தில் அவர்களது சமுதாயத்தில் நிலவிய அறிவைக் கொண்டு இப்படிக் கூறவே முடியாது. ஆகவே இந்த வசனங்கள் ஏக இறைவனிடம் இருந்து வந்தது தான் அல் குர்ஆன் என்று நிரூபித்துக் கொணடிருக்கின்றன.

இனி வார்த்தைக்கு வார்த்தை தமிழாக்கம் காண்போம்.


صُمٌّۢ - ஸும்மும்(ன்)
செவிடர்கள்

بُكْمٌ- புக்முன் 
ஊமைகள்

عُمْىٌ -ஃஉம்யுன்
குருடர்கள்

فَ - FA ப
ஆகவே – ஆக – ஆனால் – எனவே – எனினும் – பின்னர்- பிறகு- ஆதலி்ன்

هُمْ- ஹும்
அவர்கள் – இவர்கள்

لَا يَرْجِعُونَ- லா யர்ஜி ஃஊ(ன)ன்.
திரும்ப (மீள) மாட்டார்கள் - மீண்டு வர மாட்டார்கள்

தனித் தனி வார்த்தைகளாக பார்த்த நாம் இனி இணைத்து ஓதுவோம்.


صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَرْجِعُوْنَ ۙ‏

ஸும்மும்(ன்)  புக்முன்  ஃஉம்யுன்  FAபஹும் லா யர்ஜி ஃஊ(ன)ன்.

தமிழாக்கங்கள்

(ஏனெனில்) அவர்கள் (செவியிருந்தும்) செவிடர்கள், (நாவிருந்தும்) ஊமையர்கள், விழிகண் குருடர்கள். எனவே, அவர்கள் (நேர்வழிக்கு) மீளவே மாட்டார்கள். (அதிரை ஜமீல்)


(அவர்கள்) செவிடர்களாகஊமையர்களாககுருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள். (ஜான்)


(அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும்ஊமையர்களாகவும்குருடர்களாகவும் இருக்கின்றார்கள். ஆதலால்இவர்கள் (அபாயகரமான இந்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள். (அப்துல் ஹமீது பாகவி)


அவர்கள் செவிடர்களாய்ஊமையர்களாய்குருடர்களாய் இருக்கின்றனர். எனவேஇப்பொழுது அவர்கள் மீள மாட்டார்கள்;  (IFT)

(இவர்கள்) செவிடர்கள் (உண்மையை கேட்கவே மாட்டார்கள்)ஊமையர்கள் (உண்மையைப் பேசவே மாட்டார்கள்)குருடர்கள் (அவர்களுக்கு பலன் தரக் கூடியதைப் பார்க்கவே மாட்டார்கள்)ஆகவேஇவர்கள் (சத்தியத்தின்பால்) மீள மாட்டார்கள். ((சவூதி)

2:18. (இவர்கள்) செவிடர்கள்ஊமைகள்குருடர்கள். எனவே இவர்கள் (நல்வழிக்கு) திரும்ப மாட்டார்கள். (PJ)

2:18. (அவர்கள்) செவிடர்கள்ஊமையர்கள்குருடர்கள். ஆகவே அவர்கள் (நேர்வழியின்பால்) மீள மாட்டார்கள். (பஷாரத்)

2:18. (அவர்கள் நேர்வழி பெற முடியாச்) செவிடர்கள்ஊமையர்கள்குருடர்கள். எனவே அவர்கள் (நல்வழியின் பக்கம்) மீள மாட்டார்கள். (மலிவு பதிப்பு)