திருச்சியைச் சேர்ந்த பா. தாவூத்ஷா இஸ்லாமிய மறுமலர்ச்சி உரை நடையின் தந்தை எனப் போற்றப்பட்டவர். அவர் 1926ல் வெளியிட்ட 'குர்ஆன் மஜீத்' பொருளுரையும் விரிவுரையும் என்பதிலிருந்து, பிரமாணம் - (சத்தியம்) சம்பந்தமாக இதில் குறிப்பிட்டுள்ள சூரியன் என்ற அத்தியாயத்தின் 2 பக்கங்களை இணைத்துள்ளோம். https://kamfazlulilahi.blogspot.com/2019/06/2-5.html
இந்த தமிழ் அன்று தெள்ளு தமிழ் என்ற பாராட்டைப் பெற்றது. இந்த தமிழை இன்றைய தலைமுறை ஓரளவு புரியும். அடுத்தடுத்த தலைமுறைக்கு அறவே புரியாது. அதனால்தான் காலத்திற்கு காலம் உள்ள நடைமுறைப் பேச்சில் மொழி பெயர்ப்புகள் வர வேண்டும் என்று அறிவுள்ளவர்கள் விரும்புகிறார்கள்.
குர்ஆன் சொல்லுக்கு சொல்லில் 2 : 5 வசனத்தை பார்க்க உள்ளோம். முன்னதாக இதில் வாவு பற்றி தெரிந்து கொள்வோம்.
و வாவு இடத்துக்கு
தக்கவாறு பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொற்களில்
ஒன்றாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை, பெயர்களை இணைக்கக் கூடிய இடங்களில் ம் என்ற பொருள் தரும். இதற்கு உம்மைப் பொருள் என்பார்கள். அவனும் அவளும் அதுவும் இதுவும் என்கிற மாதிரி வருவது உம்மைப் பொருள் ஆகும்.
அஹ்மது
வந்தான். முஹம்மது வந்தான் என்பதை அஹ்மதும்
முஹம்மதும் வந்தான் என்று இணைத்து சொல்லும் போது ம் என பொருள் தரும். இப்றாஹீமும் இஸ்மாயீலும் என வரும் போது கடைசி எழுத்தில்
பகுதியை சேர்த்து – இழுத்து - இணைத்து மும் லும் யும் என பொருள் தரும்.
ஒரு
வசனத்தின் இடையில் வரும்போது இன்னும்
மேலும் என்ற பொருள் தரும்.
ஒரு
வசனத்தின் துவக்கமாகவோ முடிவாகவோ வரும்போது பொருள் தராது. ஒரு வசனத்தின் துவக்கம் முடிவு என விளங்கிக்
கொள்ள வேண்டும்.
சில
இடங்களில் துவக்கமாக வரும்போது சத்தியமாக என்ற பொருளும் தரும்.
கமர் - சந்திரன். வல்கமர் சந்திரன் மீது சத்தியமாக 91:2
நஹார் - பகல் - வன்நஹார் -பகலின் மீது சத்தியமாக 91:3
லைல் – இரவு. வல்லைல் - இரவின் மீது சத்தியமாக 91:4.
அல்லாஹ்
என்பதற்கு முன் வ வந்து வல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்ற பொருள்
தரும்.
இது
அரபி இலக்கணமாகும். ஒரேயடியாக இலக்கணத்தை விளக்கினால் போரடித்து
விடும். ஆகவே இப்போதைக்கு இது போதும். அவ்வப்போதைக்கு தேவைப்படும்
போது இடத்துக்கு தக்கவாறு அரபி இலக்கணத்தைப் பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.
أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
உலாயிக அலா ஹுதன்ம் மின்ர்றப்பிஹிம் வ உலாயிக ஹுமுல் முFப்லிஹுன்
أُولَـٰئِكَ – உலாயிக - இவர்கள்
-அவர்கள் - இத்தகையவர்கள்
عَلَىٰ – அலா- மீது - மேல்
هُدًى – ஹுதன் - -நேர்வழி
مِّن – மின் - இருந்து From -லிருந்து
رَّبِّ - றப்பி - இறைவன்
هِمْ- ஹிம்- அவர்களுடைய
رَّبِّ - றப்பி - இறைவன்
هِمْ- ஹிம்- அவர்களுடைய
رَّبِّهِمْ - றப்பிஹிம்- அவர்களுடைய இறைவன்
وَ – வ - இன்னும் - மேலும் – அன்றி - பின்னர், பின்பு
أُولَـٰئِكَ – உலாயிக - இவர்கள்
-அவர்கள் - இத்தகையவர்கள்
هُمُ - ஹுமு - அவர்கள்
الْمُفْلِحُونَ – முFப்லிஹுன் - வெற்றியாளர்கள்
வார்த்தைகளை தொகுத்துள்ள தமிழ் நடை மொழிப் பெயர்ப்புகள்
1. அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (பீ.ஜே.)
2. இவர்கள் தாம் தங்கள்
இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (டாக்டர். முஹம்மது ஜான்)
3. இத்தகையவர்கள்தான்
தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கின்றார்கள். இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி
பெற்றவர்கள். (அப்துல் ஹமீது பாகவி)
4. இத்தகையோரே தம்
இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும்,
இவர்களே வெற்றி பெறுபவர்கள் (IFT)
5. அவர்கள்தாம்,
தங்கள் இரட்சகனிடமிருந்துள்ள நேர்
வழியின் மீது இருப்பவர்கள். மேலும் அவர்களே தாம் வெற்றி பெறக்கூடியவர்கள். (மன்னர் ஃபஹத் வளாகம் சவூதி)
6. அவர்கள் தாம் தங்கள் ரப்பிடமிருந்து வந்துள்ள நேர்வழியின் மீதுள்ளனர். மேலும் அவர்கள் தாம் வெற்றி பெறுபவர்கள் ஆவர். (முஹம்மது சிராஜுத்தீன் நுாரி)
7. இவர்கள் தாம் தங்கள் இறைவனில் நின்றுமுள்ள நேர்வழியில் இருப்பவர்கள். மேலும் இவர்களே வெற்றியாளர்கள் (M.அப்துல் வஹ்ஹாப் M.A.B.Th, K.A. நிஜாமுத்தீன் மன்பயீ, R.K. அப்துல் காதிர் பாகவி,)
8.இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் நடை பயில்வோர்.
இவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அதிரை ஜமீல்)
No comments:
Post a Comment