Monday, June 24, 2019

2:13 அறிந்து ஆய்ந்து எல்லா மொழி பெயர்ப்புகளையும் படியுங்கள்



2:13.  வசனத்திற்கு அன்வாறுல் குர்ஆன்- ஜான் டிரஸ்ட்- K.S.R, மலிவு பதிப்பு ஆகிய 3 தமிழாக்கங்களும் வார்த்தைக்கு வார்த்தை ஒன்றுபோல் உள்ளன. K.S.R இம்தாதி மட்டும் (மற்ற) என்று அடைப்புக் குறிக்குள் உள்ளதில் மட்டும் மாற்றமாக வெளியில் இந்த என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்கள். 

மலிவு பதிப்பில் (மற்ற) என்பதுடன் மேலும் என்பதை சேர்த்து உள்ளார்கள். ஈமான் என்ற இடத்தில் நம்பிக்கை என்ற மொழி பெயர்ப்பை இடம் பெறச் செய்துள்ளார்கள். போல்/ போல (அப்படியல்ல) / அறிந்து கொள்ளுங்கள்இவர்கள் அறிவதில்லை/ அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. இவைதான் மேலே உள்ள 3 தமிழாக்கங்களுக்கும் மலிவு பதிப்பிற்கும் உள்ள வார்த்தை வித்தியாசங்கள். இதனை அறிந்து ஆய்ந்து எல்லா மொழி பெயர்ப்புகளையும் படியுங்கள் வித்தியாசங்களை அறிவதற்காக ஆங்காங்கே ஹை லைட் செய்துள்ளோம். அதை (ஹை லைட்டை ) பிளாக்கரில் தான் காண முடியும்

وَ -    

இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி   


اِذَا- இதா(ரா)

போது- ல் -ட்டால்-

قِيْلَ- ஃகீல 
சொல்லப்பட்டது- - கூறப்பட்டது 


لَهُمْ- லஹும்

அவர்களிடம்

 اٰمِنُوْا - ஆமினுா


நம்பிக்கை கொள்ளுங்கள் -விசுவாசங்கொள்ளுங்கள்

كَمَاகமாா
போல்- போன்று -போல

آمَنَ -ஆமன
நம்பிக்கை (விசுவாசம்) கொண்டான்

النَّاسُ -  ன்னாஸு 
ஜனங்கள் -  மக்கள் - மனிதர்கள்

آمَنَ النَّاسُ-ஆமனன்னாஸு

நம்பிக்கை (விசுவாசம்) கொண்ட மனிதர்கள் (ஜனங்கள் - மக்கள்)

قَالُوا-ஃகாலுாா 

கூறுகிறார்கள் - சொல்கிறார்கள்

أَنُؤْمِنُ- அனுஃமினு 

நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?'

كَمَا-கமாா
போல்- போன்று -போல

اٰمَنَ- ஆமன

நம்பிக்கை கொண்டது - நம்பிக்கை கொண்டான்

سُّفَهَاءُ- ஸுFAபஹாாஃஉ - 
மூடர்கள் -அறிவீனர்கள்

السُّفَهَاءُ- (அஸ்) ஸுFAபஹாாஃஉ - 


அந்த மூடர்கள் - அந்த அறிவீனர்கள் - இம்மூடர்கள் 

أَلَا அலா 

கவனத்தில் கொள்க! - அறிந்து கொள்ளுங்கள் - தெரிந்து கொள்ளுங்கள்

اِنَّ-   இன்ன - நிச்சயமாக - திண்ணமாக – உறுதியாக


هُمْ- ஹூம் 

அவர்கள் - இவர்கள்


إِنَّهُمْ-இன்ன ஹூம்  

நிச்சயமாக அவர்கள் (இவர்கள்) - அவர்களே


هُمُ -ஹுமு

அவர்கள் – இவர்கள்


السُّفَهَاءُ- (அஸ்) ஸுFAபஹாாஃஉ -

அந்த மூடர்கள் - அந்த அறிவீனர்கள் - இம்மூடர்கள் 

وَلَـٰكِن வ  லாகின்

மாறாக – எனினும் ஆனால் - ஆயினும்,



لا - லா
இல்லை


 يَعْلَمُوْنَ -யஃலமூ(ன)ன்
 அறிவார்கள்

 لَّا يَعْلَمُوْنَ‏- லா யஃலமூ(ன)ன்


அறிவதில்லை -அறிந்து கொள்ள மாட்டார்கள்.


இனி இணைத்து மூலத்தையும் மொழி பெயர்ப்பையும் ஓதுவோம்

وَاِذَا قِيْلَ لَهُمْ اٰمِنُوْا كَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوْاۤ اَنُؤْمِنُ كَمَاۤ اٰمَنَ السُّفَهَآءُ‌ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ السُّفَهَآءُ وَلٰـكِنْ لَّا يَعْلَمُوْنَ‏

வ இதா(ரா) ஃகீல லஹும் ஆமினுா கமாா ஆமனன்னாஸு  ஃகாலுாா அனுஃமினு  கமாா  ஆமனஸ் ஸுFAபஹாாஃஉ  அலா  இன்ன ஹூம்  ஹுமுஸ்  ஸுFAபஹாாஃஉ  வ  லாகின்ல் லா யஃலமூ(ன)ன்




2:13.  (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?' என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை (அன்வாறுல் குர்ஆன்- ஜான் டிரஸ்ட்- K.S.R)


(மேலும் மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல, நாங்களும் நம்பிக்கை கொள்ளவேண்டுமா?' என்று அவர்கள் கூறுகிறார்கள்; அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அவர்கள் தாம் மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. (மலிவு பதிப்பு)


(நல்ல) மனிதர்கள் ஈமான் கொண்டது போல் நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால், 'மூடர்கள் ஈமான் கொண்டது போல், நாங்களுமா ஈமான் கொள்ளவோம்?' என்று அ(ந்நய)வ(ஞ்சக)ர்கள் கூறுகின்றனர்; (முஃமின்களே) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தாம் மூடர்கள். எனினும் (தங்களது மூடத்தனத்தை) அவர்கள் அறிகிறார்களில்லை (பஷாரத்)


2:13. மேலும், அவர்களை நோக்கி "(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினால், (அதற்கு) அவர்கள் "அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?" என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் மூடர்கள். ஆனால் (தாங்கள்தான் அறிவீனர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள். (அப்துல் ஹமீது பாகவி)


2:13. இன்னும் மற்ற மனிதர்கள் ஈமான் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!என அவர்களிடம் சொல்லப்பட்டால் மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?” என்றே அவர்கள் பதில் சொல்கிறார்கள் எச்சரிக்கை! நிச்சயமாக இவர்கள்தாம் மூடர்களாவர். ஆயினும் (இதனை) அவர்கள் அறிவதில்லை!  (IFT)


2:13. மேலும், அவர்களிடம், “(குர்ஆனைச் செவியுற்று) மனிதர்கள் விசுவாசங்கொண்டது போன்று நீங்களும் விசுவாசங்கொள்ளுங்கள் என்று கூறப்பட்டால், அ(தற்க)வர்கள் மூடர்கள் விசுவாசங்கொண்டது போல், நாங்கள் விசுவாசங் கொள்வோமா?” என்று கூறுகிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக இவர்கள் தான் மூடர்கள்; எனினும், (அதைப்பற்றி) அவர்கள் அறிந்து கொள்ளமாட்டார்கள். (சவூதி)


2:13. "இந்த மக்கள் நம்பிக்கை கொண்டது போல் நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும்போது, "இம்மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல் நம்புவோமா?'' எனக் கேட்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்களே மூடர்கள். ஆயினும் அறிந்து கொள்ள மாட்டார்கள். (P.J.)


No comments: