Sunday, June 23, 2019

2 :12 இதில் இன்ன -அன்ன என்ற உறுதிபடுத்தும் சொற்கள் பற்றி தெரிந்து கொள்வோம்



அரபி மொழியில் ஒன்றை உறுதிபடுத்தும் விதமாக இன்ன -அன்ன என்பது போல பல சொற்கள் உள்ளன. இது போன்ற சொற்களுக்கு தஃகீத் சொற்கள் என்பார்கள்.  இன்ன -அன்ன  என்பதற்கு  நிச்சயமாக - திண்ணமாக – உறுதியாக என்று பலர் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். அதனால் (இன்ன -நிச்சயமாக  ஹும்-அவர்கள்)   இன்னஹும் நிச்சயமாக அவர்கள் என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். 

அவர்கள் என்பதை  அவர்களே அவர்கள் தாம் அவர்கள் தான் என்று சொல்லும்போதும் தமிழில் அவை தஃகீத் - உறுதிபடுத்தும்   சொற்களாக  ஆகி விடுகின்றன.  என்பதை இங்கே விளங்கிக் கொள்வோம்



أَلَا  -  அலா  

தெரிந்து கொள்ளுங்கள் - கவனத்தில் கொள்க!- அறிந்து கொள்ளுங்கள்

إِنَّهُمْ -இன்ன ஹும்

நிச்சயமாக அவர்கள் - அவர்கள்    தாம் -  அவர்களே

هُمُ -  ஹுமு

அவர்கள்


 الْمُفْسِدُوْنَ - (அல்)முFப்ஸிதுான

குழப்பவாதிகள்-  குழப்பம் செய்பவர்கள்- குழப்பம் உண்டாக்குபவர்கள்- விஷமிகள்


وَلَـٰكِن வ லாகின்


ஆனால் -எனினும் - ஆயினும்

لَّا -  லா

இல்லை

يَشْعُرُونَ யஷ்ஃஉரூ(ன)ன்

 உணர்கிறார்கள்

 لَّا يَشْعُرُوْنَ‏ - லா யஷ்ஃஉரூ(ன)ன்


உணர மாட்டார்கள்- உணர்கிறார்களில்லை.- உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.- உணர்வதில்லை

:
أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَـٰكِن لَّا يَشْعُرُونَ

அலா இன்ன ஹும் ஹுமுல் முFப்ஸிதுான வ லாகின்ல் லா யஷ்ஃஉரூ(ன)ன்

இனி ஆய்வுடன் படியுங்கள் உங்கள் பார்வையில் சரியான மொழி பெயர்ப்பு எது? சம்பந்தமில்லாத வார்த்தைகளை சேர்த்து மொழி பெயர்த்துள்ள மொழி பெயர்ப்பு எது?  என்பதை  அறியுங்கள்.


2:12. நிச்சயமாக அவர்கள் விஷமிகளே! ஆனால், (தாங்கள்தான் விஷமிகள் என்பதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள் - அப்துல் ஹமீது பாகவி


2:12 நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகள், ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.( இம்தாதி)

2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை. ஜான்

2:12 நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.-

2:12. எச்சரிக்கை! நிச்சயமாக அவர்கள்தாம் குழப்பவாதிகளாவர். ஆயினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. (IFT)

2:12. தெரிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தாம் குழப்பம் செய்பவர்கள், எனினும் (இதை) அவர்கள் உணர மாட்டர்கள்.  (சவூதி)

2:12. கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.PJ

2:12. ஆனால் நிச்சயமாக இத்தகையவர்களே சமுதாய ஒற்றுமையைச் சீர்குலைத்து, குழப்பங்களை உண்டாக்குபவர்களே ஆவார்கள். ஆனால் இவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொள்வதில்லை.

(முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் ஏற்படுத்துபவர்கள். எனினும் அவர்கள் (அதனை) உணர்கிறார்களில்லை.-பஷாரத்

அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகள்எனினும் அவர்கள் (இதை) உணர மாட்டார்கள். – மலிவு பதிப்பு



No comments: