إِذَا – இதா(ரா)
لَوْ- லவ்
اِنْ-இன்
ஆகிய இந்த துணை வார்த்தைகளை மற்ற வார்த்தைகளுடன் சேர்க்கும்போது அவற்றை நிபந்தனை வார்த்தைகளாக ஆக்கிவிடும்,
உதாரணம்
جَاءَ - ஜாஃஅ –
வந்தான், வந்தது என்ற பொருள் கொண்ட இந்த வார்த்தையுடன்
اِذاَ - இதா(ரா
வைச் சேர்த்து
اِذَا جَآءَ -இதா(ரா) ஜாஃஅ
என்று கூறினால் வந்தால், வரும்போது என்ற நிபந்தனை வார்த்தைகளாக ஆகிவிடும், இதுபோன்றே
شَاءَ - ஷாஃஅ
நாடினான் என்ற பொருள் கொண்ட வார்த்தையுடன்
إِذَا – இதா(ரா)
لَوْ- லவ்
اِنْ-இன்
வைச் சேர்த்து
اِذاَ شَاءَ
اِنْ شَاءَ
لَوْ شَاءَ
என்று கூறினால் நாடினான் என்பது நாடினால் என்று ஆகிவிடும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். இனி 2:11 க்குரிய சொல்லுக்கு சொல் பார்ப்போம். மேலும் இதில் திருச்சி சமஸ்பிரான் பள்ளி இமாம் ஷபி தாவூதி அவர்களின்
ஆக்கத்தையும் இணைத்துள்ளோம் கேட்டு பயன் பெறுங்கள்.
وَ -வ
இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி
اِذَا - இதா(ரா -
ல் -ட்டால்- போது - என்றால் (இது துணைச் சொல் - இடைச் சொல் என்பார்களே அது போல் உள்ளது. தனித்து பொருள் தாராது)
قِيْلَ - ஃகீல
சொல்லப்பட்டது - கூறப்பட்டது
إِذَا قِيلَ - இதா(ரா) ஃகீல
கூறப்படும்போது –கூறினால் – கூறப்பட்டால்- சொல்லப்பட்டால்
- சொன்னால்
لَهُمْ-லஹும்
அவர்களிடம்- அவர்களுக்கு-
அவர்களை நோக்கி
لَا- லா
வேண்டாம் -
تُفْسِدُوا -துFப்ஸிதுா -
குழப்பம் - விஷமம்
لَا تُفْسِدُوا - லா துFப்ஸிதுா
குழப்பம் செய்யாதீர்கள் - குழப்பம் விளைவிக்காதீர்!”- குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" - விஷமம் செய்(து கொண்டு அலை)யாதீர்கள்
فِىْ الْ -Feபில்
ல் -அதில்
اَرْضِۙ- அர்ழி
பூமி
குழப்பம் - விஷமம்
لَا تُفْسِدُوا - லா துFப்ஸிதுா
குழப்பம் செய்யாதீர்கள் - குழப்பம் விளைவிக்காதீர்!”- குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" - விஷமம் செய்(து கொண்டு அலை)யாதீர்கள்
فِىْ الْ -Feபில்
ல் -அதில்
اَرْضِۙ- அர்ழி
பூமி
قَالُوا- ஃகாலுா
கூறுகின்றனர்- கூறினார்கள்- சொல்கிறார்கள்.- கூறுகிறார்கள்.
إِنَّمَا- இன்னமா
நிச்சயமாக - திண்ணமாக- உறுதியாக (என்று உறுதி சொல்லும் இந்த வார்த்தைகளுக்கு இணையாக உறுதிபடுத்தும் இடைச் சொல் தாம், தான் என்ற பொருளும் உண்டு)
نَحْنُ- நஃஹ்னு
நாங்கள்
مُصْلِحُونَ- முஸ்லிஹு(ன)ன்
சமாதான வாதிகள் - . சீர்திருத்தம் செய்வோரே - சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் -
தனித்தனி வார்த்தைகாள பார்த்ததை வசனமாக படிப்போம்.
نَحْنُ- நஃஹ்னு
நாங்கள்
مُصْلِحُونَ- முஸ்லிஹு(ன)ன்
சமாதான வாதிகள் - . சீர்திருத்தம் செய்வோரே - சமாதானத்தை உண்டாக்குபவர்கள்தான் -
தனித்தனி வார்த்தைகாள பார்த்ததை வசனமாக படிப்போம்.
وَاِذَا قِيْلَ لَهُمْ لَا تُفْسِدُوْا فِىْ الْاَرْضِۙ قَالُوْاۤ اِنَّمَا نَحْنُ مُصْلِحُوْنَ
வஇதா(ரா) ஃகீல லஹும் லா துFப்ஸிதுா Feபில் அர்ழி ஃகாலுா இன்னமா நஹ்னு முஸ்லிஹு(ன)ன்.
تُفْسِدُوا -துFப்ஸிதுா -
(பஸாது) என்பதற்கு எத்தனை பேர் குழப்பம் என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். எத்தனை பேர் விஷமம் என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள்.
مُصْلِحُونَ- முஸ்லிஹு(ன)ன்
என்பதற்கு எத்தனை பேர் சமாதானம் என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். எத்தனை பேர் சீர்திருத்தம் என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள் என்று சிந்தித்து படியுங்கள்.
2:11. “பூமியில்
குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக
நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள். (டாக்டர். முஹம்மது ஜான்)
2:11. “பூமியில்
நீங்கள் குழப்பத்தை
உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகளே என்று
அவர்கள் (பதில்) சொல்கிறார்கள். (மலிவு பதிப்பு)
2:11. அவர்களை நோக்கி பூமியில் விஷமம்
செய்(து கொண்டு அலை)யாதீர்கள் என்று கூறினால், அதற்கவர்கள் "நாங்கள் சமாதானத்தை
உண்டாக்குபவர்கள்தான் (விஷமிகள் அல்லர்)" எனக் கூறுகிறார்கள். (அப்துல் ஹமீது பாகவி )
"பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று
அவர்களிடம் சொல்லப்பட்டால் "நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்"
என்று அவர்கள் சொல்கிறார்கள். (அன்வாருல் குர்ஆன் & இம்தாதி)
2:11. மேலும், பூமியில் நீங்கள் குழப்பம்
செய்யாதீர்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் நாங்கள் தான் சீர்திருத்தவாதிகள் என்று கூறுகின்றனர்.
(பஷாரத்)
2:11. மேலும், அவர்களிடம், “நீங்கள்
பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்” என்று கூறப்பட்டால் அ(தற்க)வர்கள் “நிச்சயமாக
நாங்கள் சீர்திருத்தம் செய்வோர் தாம் (குழப்பவாதிகளல்ல,)” எனக்கூறுகிறார்கள். (மன்னர் ஃபஹத் வளாகம்)
2:11. இன்னும் “பூமியில் குழப்பம் விளைவிக்காதீர்!” என
அவர்களிடம் சொல்லப்பட்டால், “நிச்சயமாக நாங்கள் சீர்திருத்தம் செய்பவர்களே!” என
அவர்கள் கூறுகிறார்கள். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்)
2:11. "பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று
அவர்களிடம் கூறப்படும்போது "நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக்
கூறுகின்றனர். (பீ.ஜே.)
No comments:
Post a Comment