திரு குர்ஆன் 2:9வது வசனத்தின் வார்த்தைக்கு வார்த்தை தமிழாக்கம்
يُخَادِعُونَ - யுகாதிஃஊன -ஏமாற்ற நினைக்கின்றனர் -
اللّٰهَ - அல்லாஹ்
وَ - வ- இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி
الَّذِيْنَ - அ ல்லதீ(ரீ)ன - சிலர்
اٰمَنُوْا- ஆமனுா - நம்பிக்கை கொண்டார்கள்
وَ - வ- இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி
مَا - மா- இல்லை
يَخْدَعُوْنَ- யஃக்தஊன- ஏமாற்றிக் கொள்கின்றனர்
اِلَّاۤ- இல்லாாா - தவிர
اَنْفُسَ- அன்Fபுஸ - தம்மைத் தாமே
هُمْ- ஹும்- அவர்கள்
وَ - வ-
مَا - மா- இல்லை
يَشْعُرُوْنَؕ-யஷ்ஃஉரூ(ன)ன் - உணர்ந்து கொள்ளல்
தனித்தனியாக உள்ள வார்த்தைகளை இணைத்து படிப்போம்
யுகாதிஃஊனல்லாஹ வ ல்லதீ(ரீ)ன ஆமனுா வ மா யஃக்தஊன இல்லாா அன்Fபுஸ ஹும் வமா யஷ்ஃஉரூ(ன)ன்.
தமிழாக்கங்கள் 9பதிப்புகளிலிருந்து
1. (அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையேயன்றி (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். 2:9.
அவர்கள் (இவ்விதம் கூறி) அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டவர்களையும் வஞ்சிக்(கக் கருது)கின்றனர். ஆனால், அவர்கள் தங்களையேயன்றி (பிறரை) வஞ்சிக்க முடியாது. (இதை) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். 2:9.
2, 3 (அன்வாறுல் குர்ஆன் / டாக்டர். முஹம்மது ஜான் )
(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள் ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை. 2:9.

4. (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்)
(இப்படிக் கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை! எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை 2:9.
(இப்படிக் கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்றுகின்றனர். ஆனால் (உண்மையில்) அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனரேயன்றி வேறில்லை! எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை
5. (சவூதி)
அவர்கள் அல்லாஹ்வையும், விசுவாசங்கொண்டவர்களையும் வஞ்சிக்கின்றனர். (இதனால்) அவர்கள் தங்களைத்தாமே தவிர (வேறெவரையும்) வஞ்சிக்கவில்லை; (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள். 2:9.
அவர்கள் அல்லாஹ்வையும், விசுவாசங்கொண்டவர்களையும் வஞ்சிக்கின்றனர். (இதனால்) அவர்கள் தங்களைத்தாமே தவிர (வேறெவரையும்) வஞ்சிக்கவில்லை; (இதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள்.
6. (K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி
அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள், ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை 2:9.
அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள், ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை 2:9.
7. (P.J)
அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே அவர்கள் ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.2:9.
அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே அவர்கள் ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.2:9.
8. (பஷாரத்)
(நாவினால்
மட்டுமே மொழிந்திடும் அந்நயவஞ்சகர்கள்) அல்லாஹ்வையும் அவனை ஈமான் கொண்டிருப்பவர்களையும் ஏமாற்ற
நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே அல்லாமல் (வேறெவரையும்) ஏமாற்றவில்லை.
அவர்கள் (இதனை) உணர்வதாக இல்லை. 2:9.
9 (மலிவு பதிப்பு)
.(இவ்வாறு
கூறி) அல்லாஹ்வையும் (அவன் மீது நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்று(வதாக
நினைக்கின்)றார்கள். ஆனால் (உண்மையில்) தம்மைத் தாமே தவிர (வேறு
எவரையும்) அவர்கள் ஏமாற்றவில்லை. எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து
கொள்ளவில்லை. 2:9.
No comments:
Post a Comment