இந்த வசனத்தின் சொல்லுக்கு சொல் மொழி பெயர்ப்பின் முடிவில் ஏழு தா்ஜு மாக்களிலிருந்து மொழி பெயர்ப்புகளை தந்துள்ளோம். அதில் இதயங்கள் - உள்ளங்கள், கேள்விப்புலன் – செவிப்புலன், கொடிய வேதனையும் உண்டு கடும் தண்டனைக்கு உரியவர்களாவர்., திரை போடப்பட்டுள்ளது- திரை உள்ளது- திரை கிடக்கிறது; -திரையிடப்பட்டுவிட்டது.- திரை விழுந்திருக்கிறது என்பது போன்றவற்றை அறிய புளு - நீல கலரில் காட்டி உள்ளோம். பிளாக்கரில் தான் வித்தியாசங்களை கலரில் காண முடியும்.
ஃகதம ல்லாஹு அலா ஃகுலுாபி ஹிம் வ அலா ஸம்இஹிம் வ அலா அப்ஸாரி ஹிம் ஃகிஷாவதுன் வ லஹும் அராபுன் அழீ(முன்)ம்
خَتَمَ اللَّـهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ وَعَلَىٰ
أَبْصَارِهِمْ غِشَاوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
خَتَمَ - ஃகதம முத்திரை வைத்தான் - முத்திரை இட்டு விட்டான் - முத்திரை வைத்து விட்டிருக்கிறான். முத்திரை வைத்துவிட்டான்
اللَّـهُ - அல்லாஹு/ஹ் -
عَلَىٰ - அலா- மீது - மேலே
قُلُوبِ - குலுாபி / ப் - இதயங்கள் - உள்ளங்கள்
هِمْ - ஹிம் - அவர்களது – அவர்களின் – அவர்களுடைய
قُلُوبِ - குலுாபி / ப் - இதயங்கள் - உள்ளங்கள்
هِمْ - ஹிம் - அவர்களது – அவர்களின் – அவர்களுடைய
قُلُوبِهِمْ - ஃகுலுாபிஹிம் - அவர்களின் இதயங்கள் / அவர்களது
உள்ளங்கள்
وَ - வ இன்னும், மேலும், பின்னர், பின்பு
عَلَىٰ - அலா- மீது - மேலே
سَمْعِ - ஸம் இ/அ - செவி - கேள்விப்புலன்
– செவிப்புலன்
هِمْ - ஹிம் - அவர்களது – அவர்களின் – அவர்களுடைய
سَمْعِهِمْ - ஸம்யிஹிம் அவர்களின் செவிப்புலன்கள்
وَ - வ இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி
عَلَىٰ -
أَبْصَارِ - அப்ஸா(ரி)ர் - பார்வை
هِمْ - ஹிம்
أَبْصَارِهِمْ - அப்ஸாரிஹிம் அவர்களின் பார்வை
غِشَاوَةٌ
- ஃகிஷாவதுன் - திரை
وَ - வ இன்னும், மேலும், பின்னர், பின்பு
لَهُمْ - ல ஹும் அவர்களுக்கு இருக்கிறது உண்டு
عَذَابٌ - அதா(ரா)புன் வேதனை
عَظِيمٌ - அழீ(முன்)ம் - கடுமையானது
வார்த்தைகளை இணைத்து தமிழ் நடையில் மொழிப்பெயர்ப்புகள்
2:7. அல்லாஹ் அவர்களின்
இதயங்களிலும், அவர்கள்
செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு
திரை கிடக்கிறது; மேலும்
அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. டாக்டர். முஹம்மது ஜான்
2:7. (அவர்கள் மனமுரண்டாக நிராகரித்ததன் காரணமாக) அவர்களுடைய
உள்ளங்களின் மீதும், கேள்விப்புலன்
மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களுடைய பார்வைகளின் மீதும்
திரையிடப்பட்டுவிட்டது. தவிர அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு. அப்துல் ஹமீது பாகவி
2:7. அல்லாஹ் அவர்களின்
இதயங்கள் மீதும், அவர்களின்
செவிப்புலன்கள் மீதும் முத்திரை வைத்து விட்டிருக்கிறான். மேலும் அவர்களுடைய
பார்வைகள் மீது திரை விழுந்திருக்கிறது. தவிர அவர்கள் கடும் தண்டனைக்கு
உரியவர்களாவர். (IFT)
2:7. அவர்களுடைய
இதயங்களின் மீதும், அவர்களுடைய
செவிப் புலன் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இன்னும்,
அவர்களுடைய பார்வைகளின் மீது
திரையிருக்கிறது; மேலும்,
அவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு. மன்னர் ஃபஹத் வளாகம்
2:7. (ஏனெனில்) அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்களது செவிகளிலும் முத்திரையிட்டு விட்டான்.; அன்றியும் அவர்களின் பார்வைகளின் மீது திரை போடப்பட்டுள்ளது மேலும் அவர்களுக்கு (முடிவில்லாத) கடுமையான வேதனையுமுண்டு. பஷாரத்
2:7. அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்; இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை இருக்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. இம்தாதி
2:7. அவர்களது உள்ளங்களிலும், செவியிலும் அல்லாஹ்
முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும்
வேதனையுமுண்டு பீ.ஜே.
No comments:
Post a Comment