படியுங்கள்
சிந்தியுங்கள் செயல்படுங்கள் பரப்புங்கள் பயன் பெறுங்கள் சொல்லுக்கு சொல் தமிழ் அரபியுடன்
மொழி பெயர்ப்பு .
வாவுக்கு மேலும் - இன்னும் - அன்றி பி க்கு கொண்டும் - மீதும் -யும் என்றுள்ள 3 வித மொழி
பெயர்ப்புகளையும் பிளாக்கரில் மட்டும் தான் கலர் கொடுத்து ஹை லைட் செய்து காட்ட
முடிகிறது. பிளாக்கர் அட்ரஸை பேஸ்புக்கில் போட முடியாது. தடை செய்து விட்டார்கள்.
وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ
வல்லதீ(ரீ)ய்ன யுஃமினுான பிமா உன்ஸில இலைக வமா உன்ஸில மின் கப்லிக வ பில் ஆகிறதி ஹும் யூகினுான்
وَ- வ - மேலும் - இன்னும் - அன்றி
وَ- வ - மேலும் - இன்னும் - அன்றி
الَّذِينَ- ல்லதீ(ரீ)ய்ன- எவர்கள் - அவர்கள்
يُؤْمِنُونَ - யுஃமினுான - நம்பிக்கை கொள்வார்கள் - நம்புவார்கள்- விசுவாசம் கொள்வார்கள்;-
بِ - பி -கொண்டு - மீது -யும்
مَا - மா- எதை
أُنزِلَ- உன்ஸில- இறக்கப்பட்ட என்பது நேரடி பொருள்ள இறை வேதம் என்பதால் கண்ணியத்துடன் - அருளப்பட்ட - இறக்கி
அருளப்பட்ட- இறக்கி வைக்கப்பட்ட என மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.
بِمَۤا اُنْزِلَ - பிமா உன்ஸில- இறக்கப்பட்டதைக் கொண்டும் - இறக்கப்பட்டதன் மீதும்
بِمَۤا اُنْزِلَ - பிமா உன்ஸில- இறக்கப்பட்டதைக் கொண்டும் - இறக்கப்பட்டதன் மீதும்
إِلَيْكَ- இலைக - உமக்கு - உங்களுக்கு-
وَ- வ - இன்னும் - மேலும் - அன்றி
مَا - மா- எதை
مَا - மா- எதை
أُنزِلَ- உன்ஸில- இறக்கப்பட்டது -அருளப்பட்டது - இறக்கி
அருளப்பட்ட- இறக்கி வைக்கப்பட்ட
مِن - மின் - இருந்து From -லிருந்து
لِكَۚ - லிக - லக - உமக்கு
قَبْلِكَ - கப்லிக முன்னர் உமக்கு - (உமக்கு முன்னர் )
بِ - பி -கொண்டு - மீது -யும்
وَبِالْآخِرَةِ- வ பில் ஆகிறதி இன்னும்
ஆகிரத்தை (மறுமையை)- மறுமையையும் - இறுதி நாளைக் கொண்டும். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும்
هُمْ- ஹும்- அவர்கள்
يُوقِنُونَ- யூகினுான் - உறுதி கொள்வார்கள் - உறுதியாக நம்புவார்கள்.- உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். விசுவாசம் கொள்வார்கள்;-
தமிழ் நடையில் 3 வித மொழிப்பெயர்ப்புகள் :
இன்னும் அவர்கள் (நபியே!) உமக்கு இறக்கப்பட்டதைக் கொண்டும் ; உமக்கு முன்னர் இறக் கப்பட்டவைகளைக் கொண்டும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் மறுமையை உறுதியாக நம்புவார்கள்.
2:4. (அன்றி, நபியே!) அவர்கள் உங்களுக்கு இறக்கப்பட்ட
இ(வ்வேதத்)தையும், உங்களுக்கு முன் (இருந்த
நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள்.
(நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள்.
மேலும்,
உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின்
(குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர்
இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித்
தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். 2:4.
No comments:
Post a Comment