Thursday, August 15, 2019

2:65 சாபத்துக்குரியவர்கள் குரங்குகளாக ஆனது உள்ளத்தாலா? உருவத்தாலா?

இந்த வசனத்தின் துவக்கமாகவும் “வாவு” வந்துள்ளது. பீ.ஜே.யைத் தவிர யாருமே  “வாவு”க்கு  இன்னம், இன்னும்,  அன்றி,  மேலும் போன்று தமிழாக்கம் செய்யாமல் விட்டதில்லை என்று ஏராளமான மவுலவிகள் எம்மிடம்  வாதம்  வைத்து  விமர்சனம்  செய்து  இருக்கிறார்கள். 


அவர்களின்  தவறான   இந்த வாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும்  2:40. 2:38, 2 : 5 ஆகியவற்றில் நாமறிந்த விளக்கங்களை எழுதி உள்ளோம்.  அதன் பின்னர் அல்லாஹ்வின் அருளால்  ஹிதாயத் (நேர்வழி) பெற்றவர்கள் உண்மையை ஏற்று  நன்றி  கூறி  இருக்கிறார்கள். 

https://mdfazlulilahi.blogspot.com/2020/09/265.html 

ஒரு வசனத்தின் துவக்கமாகவோ முடிவாகவோ “வாவு” வரும்போது பொருள் தராதுஒரு வசனத்தின் துவக்கம் முடிவு என விளங்கிக் கொள்ள வேண்டும். 


அதன் அடிப்படையில்  இந்த வசனத்தின் துவக்கமாக வந்துள்ள  “வாவு”க்கு இன்னம், இன்னும்,  அன்றி,  மேலும் போன்று  மொழி பெயர்க்காமல்  ஒரு வசனத்தின் துவக்கம் என்ற  அடிப்படையில் பீ.ஜே.யைப் போலவே

உமர் ஷரீப் காஸிமி

ஜான் டிரஸ்ட்

றஹ்மத் அறக்கட்டளை

தாருஸ்ஸலாம், ரியாத்

அதிரை ஜமீல்

K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்

ஆகியோர் மொழி பெயர்ப்புகளும் இந்த வசனத்தில் உள்ளன. 

 ---------------


இந்த வசனத்தில் உள்ள  Fபிஸ்ஸப்தி என்பதற்கு  சனிக்கிழமையில் -  சனிக்கிழமையன்று   என்ற ஒருமையே இதன் நேரடி பொருளாகும். உமர் ஷரீப்  காஸிமி  மட்டும்  சனிக்கிழமைகளில் என்று பன்மையாக மொழி பெயர்ப்பு  செய்துள்ளார். 

--------------


சனிக்கிழமை  மீன்  பிடிக்கக் கூடாது என்ற  கட்டளையை  மீறியவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர் என்று இந்த 2:65 வசனத்திலும் 5:60, 7:166 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் தெளிவாக  கூறி விட்டான்.


ப்படி அல்லாஹ் தெளிவாக  கூறி  இருக்க,   இஸ்ரவேலர்கள்  குரங்குகளாக மாற்றப்பட்டதானது  உள்ளத்தில்தானே தவிர உருவத்தில் அல்ல என்று அந்த பெரியார்கள் கூறினார்கள், இந்த நாதாக்கள் விளக்கம் கூறி உள்ளார்கள் என்று தப்ஸீர் என்ற பெயரால் பேசி  வருகிறார்கள். 


சனிக்கிழமையன்று வரம்பு மீறியவர்களுக்கு எப்படி? என்ன மாதிரி தண்டனை கொடுக்கப்பட்டது? என்று 2:65, 5:60ல் கூறிய அல்லாஹ் 7:163. முதல் 175  வரையிலான 13 வசனங்களில் வரிசையாகக் கூறி  விரிவாக  விளக்கி உள்ளான்.


அல்லாஹ் தெளிவாக விளக்கி கூறி  விட்டதற்கு மாற்றமாக  தப்ஸீர் என்ற பெயரால் விளக்கம் சொல்பவர்கள் எப்படி   பெரியார்களாகவும்   நாதாக்களாகவும்  இருப்பார்கள்?  சிந்திக்க மாட்டார்களா? 


அல்லாஹ்வின் சொல்லுக்கு மாற்றமாகக் கருத்து சொல்லும்   இந்தப் பெரியார்களுக்கும் நாதாக்களுக்கும் வக்காலத்து வாங்குபவர்கள்.   "இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!'' என்பது ஒரு குறியீடுதான் என்று கூறி   62:5. வசனத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.


அல்லாஹ் எவர்களைச் சபித்து 6 கோபம் கொண்டானோ, எவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாற்றினானோ,23 .....  என்று  அல்குர்ஆன்  5:60ல்     கன்னத்தில் அறைந்த மாதிரி  தெளிவாகக்  கூறி  விட்டது. 


இவர்கள் போற்றும் பெரியார்களும் நாதாக்களும்  ஆதாரமாகக் காட்டும் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது  என்ற  அந்த வசனத்தில் கூட  அது  உதாரணம்  என்றே அல்லாஹ்  கூறி உள்ளான்.


தவ்ராத்491 சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன்படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப்  போன்றது. 


ஆகி விடுங்கள் என்ற கட்டளைக்கும்  ஆக்கி விட்டான்  என்ற முடிந்து விட்ட இறந்த கால செயலுக்கும் உதாரணம், போன்றது என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர்களை நாதாக்கள் பெரியார்கள்  என்று கூறி அவர்கள் பின்னால் போனால் என்ன நடக்கும்?


எவர்கள் தீயசக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்களே தீய இடத்திற்குரியவர்கள். நேர்வழியிலிருந்து தவறியவர்கள்...... நாம் சொல்லவில்லை அல்லாஹ் 5:60ல்  சொல்லி உள்ளான்.  அது மட்டுமா? 


அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.  62:5.  என்றும் உறுதியாகக் கூறி விட்டான்.


இனி 2:65   வார்த்தைக்கு வார்த்தை


وَلَقَدْ عَلِمْتُمُ -  வலஃகத் ஃஅலிம்தும் 
அறிவீர்கள் - அறிந்து கொண்டீர்கள் - அறிந்தே  இருக்கின்றீர்கள்
(இதில் உள்ள வலஃகத் தஃகீத் - உறுதிபடுத்தும்  வார்த்தை)  

الَّذِينَ اعْتَدَوْا அல்ல(ரீ)தீனஃததவ் 
வரம்பு மீறியோரை - வரம்பு மீறியவர்களை

مِنكُمْ மின்கும் 
உங்களில் - உங்களிலிருந்து

فِي السَّبْتِ - Fபிஸ்ஸப்தி 
சனிக்கிழமையில் -  சனிக்கிழமையன்று - சனிக்கிழமைகளில்

فَقُلْنَا - Fபகுல்கனா 
எனவே கூறினோம் - அதனால் கூறினோம்

لَهُمْ லஹும் 
அவர்களுக்கு

كُونُوا கூனுா 
ஆகிவிடுங்கள்

قِرَدَةً - ஃகிரததன் 

خَاسِئِينَ - காஸிஃயீன
சிறுமைப்பட்ட

وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ

மொழிப்பெயர்ப்புகள் :

உங்க(ள் முன்னோர்க)ளுள் சனிக் கிழமை(மீன் பிடிக்கக் கூடாது என்ற)ச் சட்டத்தை மீறியவர்களைப் பற்றி நன்கறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி, "சிறுமையடைந்த குரங்காகிப் போங்கள்" என்று கூறினோம். - (அதிரை ஜமீல்)



உங்களில் சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை அறிவீர்கள்! "இழிந்த குரங்குகளாக ஆகுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறினோம்.23 - (PJதொண்டி)

https://www.onlinepj.in/index.php/alquran/alquran/quran-explanations/23-kurankukalaka-matrapattathu-en 


உங்க(ள்முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று


சனிக்கிழமைகளில் உங்களில் ( நமது கட்டளையை ) மீறியவர்களையும் எனவே," சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள் !" என அவர்களுக்கு நாம் கூறியதையும் திட்டமாக அறிந்து  கொண்டீர்கள். -  (இது ஒரு இயக்கத்தினன் சார்பில் சமீபத்தில்  முக நுாலில் வந்த மொழி பெயர்ப்பு)

இதில் பொருத்தமற்ற இடத்தில்   “எனவே” என்பதை  இடம் பெறச் செய்துள்ளனர்.


உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்றவரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள்அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்என்று கூறினோம். - ஜான் டிரஸ்ட்


மேலும் சனி(க்கிழமை)யில் (மீன் பிடிக்கக் கூடாதென்றிருந்த கட்டளையை) உங்களில் எவர்கள் மீறிவிட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்களை நோக்கி "நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுக!" எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தேயிருக்கின்றீர்கள். ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)


 

 

மேலும், உங்களில் எவர்கள் சனிக்கிழமை வரையறையை மீறினார்களோ அவர்களைப் பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்தே இருக்கிறீர்கள்; அவர்களை நோக்கி, “நீங்கள் குரங்குகளாகி (அனைவராலும் வெறுக்கப்பட்டு) இழிவடைந்தவர்களாகி விடுங்கள்” என்று நாம் கூறினோம். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

 


மேலும், உங்க(ள் முன்னோர்)களிலிருந்து சனி(க்கிழமை)யன்று வரம்பை மீறி விட்டார்களே அத்தகையோரை உறுதியாக நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; (அதன் காரணமாக) நாம் அவர்களுக்கு “நீங்கள் சிறுமையடைந்தவர்களாக, குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம். -

(அல்-மதீனா அல்-முனவ்வரா)


No comments: