அநீதி இழைத்து, குற்றம் புரிந்ததால் வானத்திலிருந்து வேதனையை அவர்களுக்கு இறக்கினோம் என்று இந்த 2:59 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
பார்த்தோம்
ழலமூ என்பதற்கு தலைப்பில் காணும் வார்த்தைகளை அவரவர் ஆய்வுக்கு தக்கபடி மொழி பெயர்ப்பாக தந்துள்ளார்கள்.
வார்த்தைக்கு வார்த்தை
فَبَدَّلَ - Fபபத்தல
மாற்றினார்கள் - மாற்றிவிட்டார்கள்
الَّذِينَ ظَلَمُوا - - அல்லதீன ழலமூ
قَوْلًا - ஃகவ்லன்
சொல்லாக - வார்த்தையாக - வார்த்தையில்
غَيْرَ - கய்ர
வேறு - அல்லாதது
الَّذِي قِيلَ - அல்லதீ ஃகீல
சொல்லப்பட்டதே அது - (எது கூறப்பட்டது)
لَهُمْ - லஹும்
தமக்கு - தங்களுக்கு - அவர்களுக்கு
فَأَنزَلْنَا - Fபஅன்Zஸல்னா
எனவே இறக்கினோம். - எனவே நாம் இறக்கிவைத்தோம் -
عَلَى الَّذِينَ - அலல்லதீன
அவர்களுக்கு - அவர்கள் மீது
ظَلَمُوا - ழலமூ
رِجْزًا - ரிஜ்Zஸன்
வேதனை
مِنَ - மின
இருந்து
السَّمَاءِ - அஸ்ஸமா
வானம்
مِّنَ السَّمَاءِ - மினஸ்ஸமா
வானத்திலிருந்து
بِمَا- பிமா
காரணத்தினால் - எனவே - ஆகவே
كَانُوا - கானுா
இருந்தார்கள்.
بِمَا كَانُوا - பிமா கானுா
அவர்கள் இருந்த காரணத்தினால்
يَفْسُقُونَ - யFப்ஸுஃகூன
குற்றம் புரிவார்கள் - பாவம் செய்வார்கள்
فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ
மொழிப்பெயர்ப்பு :
ஆனால், அவர்களுக்குக் கூறப்பட்ட சொல்லை, அந்தப் பாவிகள் வேறு சொல்லாக மாற்றிக் கொண்டார்கள். ஆகவே, (நம்) கட்டளையைக் கேலி செய்த குற்றத்திற்காக, அந்தப் பாவிகள் மீது வானிலிருந்து தண்டனையை இறக்கினோம். - (அதிரை ஜமீல்)
ஆனால் அநீதி இழைத்தோர், தமக்குக் (கூறப்பட்டதை விடுத்து) கூறப்படாத வேறு சொல்லாக மாற்றினார்கள். எனவே அநீதி இழைத்து, குற்றம் புரிந்ததால் வானத்திலிருந்து507 வேதனையை அவர்களுக்கு இறக்கினோம். - (PJதொண்டி)
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமம் செய்தார்களே அவர்கள் மீது பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம். (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம். - ஜான் டிரஸ்ட்
ஆனால் வரம்பு மீறிக்கொண்டே வந்த அவர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத வார்த்தையை ("ஹின்ததுன்"= கோதுமை என்று) கூறினார்கள். அவர்கள் இவ்விதம் (மாற்றிக் கூறி) பாவம் செய்ததனால் வரம்பு மீறிய (அ)வர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம். - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
ஆனால் அந்த அக்கிரமக்காரர்கள் தமக்குக் கூறப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். இறுதியில் அந்த அக்கிரமக்காரர்கள் மீது, விண்ணிலிருந்து வேதனையை நாம் இறக்கினோம். இறைக் கட்டளைக்கு அவர்கள் மாறு செய்ததினால் கிடைத்த தண்டனையாகும் இது. – (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)
ஆனால், (அவர்களில்) அநியாயம் செய்தார்களே அத்தகையோர் _ தமக்கு கூறப்பட்டதல்லாத வேறு வார்த்தையாக அதனை மாற்றிவிட்டனர்; ஆகவே அநியாயம் செய்துவிட்டார்களே அத்தகையோர் மீது (இவ்வாறு அவர்கள்) வரம்பு மீறி பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கி வைத்தோம். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)
No comments:
Post a Comment