இந்த வசனத்தின் ஆரம்பத்தில் வஇ(ரா)தா லகூவில் ஒரு வாவு இருக்கிறது. வஇ(ரா)தா கலா வில் ஒரு வாவு இருக்கிறது.
ஆக இரண்டு வாவு இடம் பெற்றுள்ளது.
வாவுக்கு இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி என்று மொழி பெயர்த்தே ஆக வேண்டும். பீ.ஜே. மொழி பெயர்க்காமல் விட்டு விட்டார் என்ற குற்றச்சாட்டுக் கூறியுள்ள அல்லாமாக்கள் உலமாக்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களான உமராக்கள் மேலான கவனத்திற்கு.
உமர் ஷரீப்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT
றஹ்மத்
K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி,
ஆகியவர்களும் இரண்டு வாவுக்கும் மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள்
ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி
ஆகியவர்கள் இரண்டு வாவுகளில் ஒன்றுக்கு மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள்
நம்பிக்கை கொண்டோரைக் காணும்போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். அவர்களில் ஒருவர் மற்றவருடன் தனியாக இருக்கும்போது "அல்லாஹ் உங்களுக்கு அருளியதை அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) கூறுவதால் உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதிடுவார்களே? விளங்க மாட்டீர்களா?'' என்று கேட்கின்றனர். -
மேலும், அவர்கள் ஓரிறை நம்பிக்கை கொண்டவர்களைச் சந்திக்கும்போது, "நாங்களும் ஓரிறை நம்பிக்கையே கொண்டிருக்கிறோம்" என்று சொல்கிறார்கள். ஆனால் தங்களுக்குள் அவர்கள் தனித்திடும்போது, "அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த(தவ்ராத்)தின் வசனங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து விடுகிறீர்களே! உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடி வெல்வதற்கா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" என்று எச்சரிக்கின்றனர். - (அதிரை ஜமீல்)
மேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, “நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று சொல்கிறார்கள் ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, “உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா? என்று(யூதர்கள் சிலர்) கூறுகின்றனர். -ஜான் டிரஸ்ட்
மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் ("தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்" எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி "(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்றீர்கள்.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறுகின்றனர். -( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
(இறைத்தூதர் முஹம்மத் மீது) நம்பிக்கை கொண்டவர்களை இவர்கள் சந்திக்கும்போது “நாங்களும் (அவர் மீது) நம்பிக்கை கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் தங்களுக்குள் தனிமையில் பேசிக் கொள்ளும்போது, “என்ன, நீங்கள் மதியிழந்து விட்டீர்களா? உங்களுக்கு அல்லாஹ் அறிவித்துத் தந்திருப்பதை நீங்கள் அவர்களிடம் சொல்லி விடுகின்றீர்களே! அதை வைத்துக் கொண்டு உங்கள் இறைவனிடத்தில் அவர்கள் உங்களுக்கு எதிராக வாதிடுவதற்காகவா (இவ்வாறு செய்கின்றீர்கள்)?” என்று கூறுகின்றார்கள். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)
மேலும், அவர்கள் விசுவாசங்கொண்டோரைச் சந்தித்தால் நாங்கள் (உங்கள் நபியை) விசுவாசிக்கிறோம்” எனக் கூறுகின்றார்கள். மேலும், அவர்களில் சிலர் சிலருடன் தனித்து விடும்போது உங்கள் இரட்சகனிடத்தில் அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காக, “(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்கு (தெரிவித்து) வெளிப்படுத்திக் காட்டியிருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா”? என்று கூறுகின்றனர். (இதனை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா? -(அல்-மதீனா அல்-முனவ்வரா)
எனவேதான் அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது, தாமும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டதாக ஒப்புக்கு சொல்லி வருகிறார்கள். ஆனால் அவர்கள் தனியே சந்தித்துக் கொள்ளும் போது, “நீங்கள் அவர்களிடம் மிகவும் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அல்லாஹ் நமக்கு அறிவித்துத் தந்துள்ள வேத ஆதாரங்களையே நமக்கு எதிராக எடுத்துரைத்து நம்மை அவர்கள் மடக்கி விடுவார்கள். எனவே நம் வேத விஷயங்களை அவர்கள் முன் எடுத்துரைக்காதீர்கள். இதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்துக் கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment