மு.லீக் தலைவர் ஏ.கே.ஏ. அப்துஸ்ஸமது ஸாஹிப் சும்மா விட்டாரா?
துார் மலை தலை மேல் உயர்த்தப்பட்டது என்பது உண்மையா? மூஸா நபி காலத்தில் நடந்ததாகக் குர்ஆன் கூறும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதாரம் உள்ளதா?
முந்தையதில் வலம்புரி ஜான் கூறிய பதிலை குறிப்பிட்டிருந்தோம். அதைக் கண்ட ஒரு சகோதரர், 14 -06-2016 மாலை மலர் நாளிதழில் ஜெஸிலா பானு என்பவர் அதே பொருளில் எழுதியதை . (இணைப்பில் உள்ளதை) அனுப்பி இருந்தார்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/09/2-63.html
https://www.youtube.com/watch?v=kiBJUzRAd7g
இறைநம்பிக்கை கொண்டவர்கள் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, வேறு என்னவாக இருந்தாலும் எவர் வழிபாட்டுக்குரியவன் ஒருவன் என்று அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நல்ல காரியங்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கான நற்கூலியை அல்லாஹ் நிச்சயம் தருவான்.
இதுதான் ஜெஸிலா பானு என்பவர் 14 -06-2016 மாலை மலர் நாளிதழ் கட்டுரையின் ஆரம்பத்திலும் முடிவிலும் 2 :62க்கு எழுதி உள்ள தமிழாக்கம்.
2 :40முதல் 2 :61 சொல்லப்பட்டு வந்துள்ள வரலாற்றையும் அவர்கள் மீது இறங்கிய தண்டனைகள் பற்றியும் சிந்தித்து ஆய்வுடன் படிக்க வேண்டும்.
2 :40 முதல் 2 :61 வரை நன்றாக சிந்தித்து ஆய்ந்து படித்தால் அவற்றில் சொல்லப்பட்டுள்ள அந்த வரலாற்று காலத்தில் வாழ்ந்தவர்களில் நல்லவர்களுக்குத்தான் 2 :62ல் நற் செய்தி கூறப்பட்டுள்ளது என்பதை அறிவுள்ளவர்கள் விளங்குவார்கள்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்ல கடமைப்பட்ட ஈமான் - (நம்பிக்கை) கொண்ட இஸ்லாமியர்கள். இஸ்லாத்தை ஈமான் கொள்ளாதவர்களை (நம்பாதவர்களை)க் கொண்டு இஸ்லாத்தை சொல்ல வைப்பார்கள்.
அதனால் ஈமான் இல்லாத அவர்களின் தவறான விஷக் கருத்துக்களை, இஸ்லாத்தில் இல்லாத மனிதனும் தெய்வமாகலாம் என்ற அத்வைதக் கொள்கைகளை இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களிடம் விதைத்து விட்டுச் செல்வார்கள்.
இஸ்லாத்தில் இல்லாததை இட்டுக்கட்டி அவர்கள் சொல்ல இஸ்லாத்தில். இருப்பவர்கள் கைதட்டி வரவேற்பார்கள். அவர்கள் கக்கிய கதைகளை மௌலவிகள் உள் வாங்கிப் பேசுவார்கள். இது போன்ற செயல்களை மு.லீக் தலைவர்கள் கண்டித்துப் பேசினார்கள்.
அமைப்புகள் அதிகம் இல்லாத கால கட்டத்தில் அரசியல் ஆதாயம் தேடும் நிலை இருக்கவில்லை. ஆகவே அடித்துப் பேசினார்கள்.
அமானி ஹஜரத்தா? பேமானி ஹஜரத்தா என்று ஆ.கா.அ. அப்துஸ்ஸமது மணிவிளக்கில் எழுதிய வரலாறுகள் உண்டு.
1985ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த வலிமார்கள் மாநாட்டில் பேசிய காயல்பட்டிணம் மஹ்ளரத்துல் காதிரியாவின் பேராசிரியராக இருந்த கடையநல்லுார் எஸ்.எஸ். கலந்தர் மஸ்தான் அவர்கள் அவ்லியாக்களைச் சாடுவதற்கும், அவர்களின் பெயரால் நடத்தப்படும் அக்கிரமங்கள், அனாச்சாரங்களைச் சாடுவதற்கும் வேற்றுமை புரியாமல், அவ்லியாக்கள் என்றால் யார்? என்று மௌலவிகளுக்கே பாடம் நடத்தி, பைஅத் இல்லாமல் யாரும் கடைத்தேற முடியாது என்று ரீல் விட்டார்.
அதற்கு, அவரை அடுத்துப் பேசிய மாநில முஸ்லிம் லீக் தலைவர் சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ்ஸமது ஸாஹிப் எம்.ஏ., எம்.எல்.ஏ. அவர்கள், சும்மா விட்டாரா? கலந்தர் மஸ்தானின் அறியாமைக்கு விளக்கம் அளிப்பது போன்று முத்தாய்ப்பான உரையொன்று ஆற்றினார்.
சாதாரண மனிதன் ஒருவனைப் பற்றிக் கூட தவறாக எண்ணுவதோ, விமர்சிப்பதோ கூடாது என்ற உண்மையை ஒரு அரைகுறைப் பாமரனும் தெரிந்து இருக்கிறான். அப்படியிருக்க மார்க்கத்தைக் கற்றுணர்ந்த அறிஞர்கள் வலிமார்களைப் பற்றித் தரக் குறைவாகப் பேசுவார்களா என்ன? வலிமார்கள் எனச் சொல்லப் படுபவர்களின் சன்னிதிகளில் நடைபெறும் அட்டூழியங்களை விமர்சிப்பதற்கும், வலிமார்களை விமர்சிப்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் சிலர் இருந்து கொண்டிருக்கிறார்கள். உலகம் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் நாம் தர்ஹாக்களை வலம் வந்து கொண்டும், கூடுகளைச் சுற்றிக் கொண்டும், கொடி மரங்களை முத்தமிட்டுக் கொண்டும் அலைகிறோம் என மிக வன்மையாகச் சாடினார்.
மேலும், வலிமார்களை எவராவது இதுபோன்ற தகாத செயல்களால் அசிங்கப்படுத்துவார்கள் என்றால் அந்த அசிங்கங்களை அல்லாஹ் சும்மா விட்டு விட்டுத் தேட மாட்டான் என்று வன்மையாகச் சாடிப் பேசினார்.
அதே மாநாட்டில், வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தின் பேராசிரியராக இருந்த ஷப்பீர் அலீ அவர்கள், எங்கேயோ ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்த ஒருவன் மீது பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் அய்யூப் கானுக்கு அன்பு ஏற்பட்டது. உடனே அவனை பாகிஸ்தானுக்கு வரவழைத்து, அவனது தரத்தை தனது தரத்திற்குச் சமமாக உயர்த்தினார். பிறகு தான் அவன் மீது நட்பு கொண்டார் போன்ற சரடுகளை விட்டார்.
மேடையிலிருந்த பெரும் பெரும் தலைப்பாகைகள் எல்லாம் ஆடிக் கொண்டிருந்தன. அவர்கள் காதில் பந்து பந்தாக பூச்சுற்றிக் கொண்டே போனார்.
அடுத்துப் பேசினார், மு.லீக்கின் பொதுச் செயலாளராக இருந்த அஞ்சா நெஞ்சன், நாவலர், மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம். யூசுப் அவர்கள். தமது இளமைக் காலத்திலேயே அவ்லியாக்களை அவமதிக்காதீர்கள் என்ற பெயரில் அனாச்சாரங்களைக் கண்டித்து புத்தகம் எழுதி இருப்பதாகவும், அது அந்தக் காலத்திலேயே பல பதிப்புகள் வெளியாகி மாபெரும் புரட்சி செய்ததாகவும் தமது உரையின் போது குறிப்பிட்டார். கப்ருகளில் சந்தனம் பூசுதல், அதைச் சுரண்டி சாப்பிடுதல், எரியும் விளக்குகளின் விளக்கெண்ணையை வழித்து மேனியில் பூசிக் கொள்ளுதல், சாம்பலைப் புனிதமானது என்று கருதி சாப்பிடுதல் போன்ற அனாச்சாரங்களை மிக வன்மையாகச் சாடியதுடன், அவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்கும் மார்க்க அறிஞர்களையும் கண்டித்துப் பேசினார்.
இது சம்பந்தமாக 1985ல் பீ.ஜே. போட்ட சிற்றிதழை 1992ல் அல் ஜன்னத் மாத இதழுடன் இலவசமாக இணைத்துப் போட்டு மஸ்ஜிதுர்றஹ்மானுக்கு நன்கொடை கேட்டிருந்தோம். அந்த சிற்றிதழ் இணைப்பில் உள்ளது.
சமீபத்தில் ஒரு வீடியோ பரப்பப்படுகிறது. அது, சகோ. வீரபாண்டியன் அவர்கள் இறை நேசர்களையும் ஜியாரத்தையும் எவ்வளவு தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் என்பதை கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது.... மாஷாஅல்லாஹ் என்ற முன்னுரையுடன் பரப்பி வருகிறார்கள்.
அதில் நாகூர் தர்காவில் வழிபட்டு விட்டு வந்ததாகக் கூறுகிறார். பிறகு நான் ஜியாரத்து தான் செய்ய வந்தேன் ஸஜ்தா செய்யவில்லை என்றும் பல்டி அடிக்கிறார். யாரோ தமிழில் எழுதி கொடுத்த அரபு வார்த்தைகளை மனம் பாடம் செய்து ஒப்பு வித்து விட்டு கைதட்டல் பெறுகிறார்.
அமைப்புகள் அளவுக்கு அதிகம் உள்ள கால கட்டத்தில் அரசியல் ஆதாயம் தேடும் நிலை இருக்கிறது. இஸ்லாம் இரண்டாம்பட்சமாக ஆகி விட்டது. இணைப்பில் உள்ள அவர் உரையை கேட்டுவிட்டு 1992ல் மேலப்பாளையம் தவ்ஹீது ஜமாஅத் போட்ட ஒரு நாடகம் அரங்கேறியது என்ற சிற்றிதழை படியுங்கள்.
T.J.M ஸலாஹுத்தீன் ரியாஜி, கம்பம் பீர் முஹம்மது போன்றவர்கள் ஆற்றிய ஏகத்துவ எழுச்சி உரையிலும் இவர்களுக்கான பதில்கள் உள்ளன.
இனி வார்த்தைக்கு வார்த்தை
இன்னும், தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, "நாம் உங்களுக்கு அருளிய மறையை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; நீங்கள் இறையச்சம் உடையோர் ஆவதற்காக அதிலுள்ளவற்றை நினைவில் கொண்டு செயற்படுங்கள்" என்று கூறி, நாம் வாக்குறுதி வாங்கியதையும் நினைத்துப் பாருங்கள். -(அதிரை ஜமீல்)
"நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!'' என்று தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தி உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்!22 - (PJதொண்டி)
இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, "நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்). - ஜான் டிரஸ்ட்
No comments:
Post a Comment