Friday, August 2, 2019

2:52. பெற்றோரின் சாபம் பிள்ளைகளை பாதிக்காதா?

ஒருவர் செய்த நன்மையை துாக்கி இன்னொருவருக்கு கொடுக்கப்படாதா?

ஒருவர் பாவத்தை இன்னொருவர் சுமக்க வைக்கப்பட மாட்டாரா?

இது 2:52. வசனத்திற்கு  சம்பந்தம் இல்லாத தலைப்பு தான். இருந்தாலும் ஒரு கருத்து   எப்பொழுது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி  பேசப்படுகிறதோ அப்பொழுது அது பற்றி விளக்கம் அளிப்பதே  அல்லாஹ்வும் அவனது துாதரும் காட்டிய வழி. அந்த அடிப்படையிலேயே  இதில் எழுதுகிறோம்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/07/252.html


சிலர் உதாரணங்களைக் கூறி விட்டு. அதை ஆதாரம் போல் காட்டுவார்கள். உதாரணங்கள் ஆதராமாகாது. ஆதாரங்களை விளக்க உதாரணங்களைக் கூறலாம். நாம் குர்ஆனிலிருந்தும் ஹதீஸிருந்தும் தான் ஆதாரங்களை எழுதி உள்ளோம். விளங்குவதற்காக உதாரணங்களைக் கூறி உள்ளோம்

أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىِٰ
அல்லா தZஸிரூ வாZஸிரது(ன்)வ் விZஸ்ர உஃக்ரா 53;38

வலா தZஸிரூ வாZஸிரது(ன்)வ் விZஸ்ர உஃக்ரா 6;164

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார் - ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் - ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது வார்த்தைகளை எப்படி அமைத்துக் கொண்டாலும் பொருள் ஒன்றுதான். 6;164,  17;15, 35;18, 39;7, 53;38 ஆகிய வசனங்களில் இந்த வார்த்தைகள் நேரடியாக  இடம் பெற்றுள்ளன. 

இதை அதிகமானவர்கள் சமீபத்தில் பதிவு செய்து இருந்தார்கள். அதை ஒட்டிய கருத்துக்களையும் எல்லாருமே காப்பி பேஸ்ட்தான் பண்ணி இருந்தார்கள். 

குர்ஆன், ஹதீஸ் எதுவாக இருந்தாலும் அதில் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு  எந்த ஒரு முடிவுக்கும் வரக் கூடாது. அது பற்றி முன்பின் உள்ளவற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும். மறுமை சம்பந்தமானதா? இம்மை சம்பந்தமானதா? எனவும்  அறிந்து ஆய்வு செய்து தான் முடிவுக்கு வர வேண்டும். 

மறுமை சம்பந்தமானதை இம்மையுடனும் இம்மை சம்பந்தமானதை மறுமையுடனும் சேர்த்து பார்க்கக் கூடாது.

53;38 போன்ற வசனங்களை போட்டவர்களிடம்    ஒருவர்   சுமையை  ஒருவர்  சுமக்க மாட்டார் என்று உள்ளதா? சுமக்க வைக்கப்பட மாட்டார்கள் என்று உள்ளதா? 

நீங்கள் ஒரு  சுமையை சுமந்து செல்கிறீர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்தவர் உதவும் நோக்குடன் வந்து விரும்பி அந்த சுமையை வாங்கி சுமப்பார்.  இது இந்த உலகில் நடக்கும். ஆனால் மறு உலகில் நடக்குமா? என்று  நாம் கேட்டோம்.

அது இது மாதிரி கன சுமை அல்ல  குற்றச் சுமை. பாவச் சுமை.  குற்றச் சுமையை இம்மையிலும் யாரும் சுமக்க மாட்டார்கள்  என்றார்கள் சிலர். 

தந்தை,  மகன், சகோதரன் என்ற ரத்த உறவு முறையிலும் நண்பன் என்ற நட்பு அடிப்படையிலும் ஒருவரைக் காப்பாற்ற ஒருவர் குற்றத்தை ஒருவர் விரும்பி இந்த உலகில் ஏற்பார்கள். 

ஒருவன் செய்த கொலையைக் கூட அவன் கொடுக்கும் பணத்திற்காக கூலிப்படைக்காரர்கள் தாங்கள் செய்ததாகக் கூறி அந்தக் கொலைக் குற்றத்தை ஏற்று தண்டனை அனுபவிக்கிறார்கள். இவை இம்மையில் நடக்கிறன. ஆனால் மறுமையில் நடக்குமா? 

எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான்.70:10.


அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான். 80:34, 35, 36

மறுமையில் யாரும் யாருடைய குற்றத்தின் பாவச் சுமையையும் சுமக்க முன் வர மாட்டார்கள். அதைத்தான் இந்த வசனங்கள் கூறுகின்றன என்றோம்.

அதே நேரத்தில் ஒருவர் பாவத்தை ஒருவர்   சுமக்க   வைக்கப்பட  மாட்டாரா? என்றால் சுமக்க வைக்கப்படுவார். 

ஒருவர் செய்த நன்மை இன்னொருவருக்கு போகுமா? என்றால் போகும். 

இதற்கான விளக்கம் ஹதீஸில் தெளிவாக உள்ளது. எல்லாரும் அடிக்கடி கேட்ட முப்லிஸ் - ஓட்டாண்டி என்பவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? என்று  கேட்டு விட்டு. அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அளித்த பதிலில் உள்ளது. 

சொர்க்கத்துக்கு செல்லும் நன்மைகளை சுமந்து ஒருவர் வருவார். பிறருக்கு செய்த தீங்குகளுக்கு பகரமாக அவரது நன்மைகள் எடுத்துக் கொடுக்கப்பட்டு அது தீர்ந்து விடும். பிறகு அடுத்தவர்களின் பாவச் சுமைகள் இவர் மீது சுமத்தப்பட்டு நன்மைகளோடு வந்தவர். நரகில் துாக்கி வீசப்படுவார். 

முஸ்லிமில் உள்ள இந்த ஹதீஸ் ஒருவர் பாவத்தை ஒருவர் சுமக்க  வைக்கப்படுவார். ஒருவர் செய்த நன்மை இன்னொருவருக்கு போகும் என்பதற்கு ஆதாரமாக உள்ளது. 

ஒருவர் சுமையை ஒருவர் (விரும்பி)  சுமக்க மாட்டார் என்பது வேறு. ஒருவர் பாவத்தை இன்னொருவர்   சுமக்க  வைக்கப்படுவார்கள்  என்பது வேறு.

2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31,  7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52,  39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 74:38  ஆகிய வசனங்களிலும் ஒருவர் சுமையை ஒருவர் விரும்பி  சுமக்க மாட்டார் என்ற கருத்து உள்ளது. 


இது, ஆதம் (அலை) பாவம் செய்ததால் ஆதமுடைய பிள்ளைகள் எல்லோரும் பாவிகளாகப் பிறக்கிறார்கள். அந்தப் பாவத்தை இயேசு சுமந்து கொண்டார் எனக்  கூறப்படும்  கிறிஸ்தவர்களின் தவறான   கொள்கையை   மறுக்கும் வசனங்களாகும். அவற்றை  இதில் போட்டு குழப்பக் கூடாது.

உலகில் ஒருவர்  செய்யும் குற்றத்திற்கு அப்பாவியான இன்னொருவர் எப்படி பாதிக்கப்படுவார் ?

பெற்றோர் செய்த தப்புக்கு, பெற்றோர்  தவறாக செய்த பிரார்த்தனைக்கு பிள்ளைகள் பாதிக்கப்படுவது  எப்படி?  இதுதான் பலரிடம் உள்ள கேள்வி.

ஒருவரை இன்னொருவர் கத்தியால் குத்துகிறார். அல்லது துப்பாக்கியால் சுடுகிறார்.  குற்றவாளி யார்? பாதிப்பு அடைவது யார்?

குத்தியவர் தான் குற்றவாளி. ஆனால் பாதிப்பு அப்பாவியான குத்துப்பட்டவருக்குத்தானே . அது போல்தான் பிரார்த்தனைகளும்.

அதனால் தான் அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

உங்களுடைய குழந்தைகளுக்கு எதிராகப் பிரார்த்திக்காதீர்கள் என்று  அபூதாவூத்  1309  முஸ்லிம் 5328
பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் என்று இருக்கிறது அந்த நேரமும் துஆ கேட்கும் நேரமும் ஒரே நேரமாக அமைந்து விட்டால் மனிதர்கள் கேட்டது ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும். 

அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொன்ன வரலாற்றுச் சம்பவத்தில் இதற்கான படிப்பினை இருக்கிறது.

பனூ இஸ்ராயீல்களால் ஜுரைஜ்என்றழைக்கப்பட்டு வந்த இறைநேசர்  ஒருவர் இருந்தார். ஒரு முறை அவர் தொழுது கொண்டிருந்த போது அவருடைய தாயார் அவரை அழைத்தார்

ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) யா அல்லாஹ் தாயாருக்கு நான் பதிலளிப்பதாதொழுவதா?' என்று கேட்டுக் கொண்டார். (பதிலளிக்கவில்லை)

அதனால் கோபமடைந்த அவரின் தாய்யா அல்லாஹ் இவனை (இந்த ஜுரைஜை) விபச்சாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச் செய்யாதேஎன்று (சபித்து) பிரார்த்தனை செய்து  விட்டார்.
(தாயின் சாபம் நிறைவேற ஒரு சம்பவம் நடந்தது ஒரு முறைஜுரைஜ் தமது வழிபாட்டுத்தலத்தில் இருந்த போது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்பேசினாள்அதற்கு அவர் மறுத்து விட்டார்.
ஆகவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காகஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபச்சாரம் புரிந்துஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
பிறகு இது ஜுரைஜுக்குப் பிறந்ததுஎன்று (மக்களிடம்சொன்னாள்உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது வழிபாட்டுத்தலத்தை இடித்து கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள்.
உடனேஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டுபின்னர் அந்தக் குழந்தையிடம் சென்றுகுழந்தையேஉன் தந்தை யார்என்று கேட்டார்அக்குழந்தை, (இன்னஇடையன் என்று பேசியதுஅதைக் கண்டு (உண்மையைஉணர்ந்து கொண்ட அந்த மக்கள்தங்கள் வழிபாட்டுத்தலத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம் என்று கூறினார்கள்அதற்கு அவர்இல்லைகளிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார். முஸ்லிம் 4986.   புகாரி 3435

பெற்றோரின் தவறான சாபப் பிரார்த்தனை பிள்ளைகளை பாதிக்கும் அதற்கு அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்லிக் காட்டிய இந்த  வரலாற்றுச் சம்பவத்தை விட வேறு சான்று முஃமின்களுக்கு  தேவை இல்லை. 

இனி 2:52. வார்த்தைக்கு வார்த்தை

ثُمَّ து(ஸு)ம்ம
பிறகு - பின்னர் – பின்பு  பின்னும் - பின்


عَفَوْنَا- ஃஅFபவ்னா

மன்னித்தோம்


 عَنكُم- ஃஅன்கும் 
உங்களை

عَفَوْنَا عَنكُم -  ஃஅFபவ்னா ஃஅன்கும் 
நாம் உங்களை மன்னித்தோம்


 مِنْ بَعْدِ - மி(ன்)ம் பஃதி
பிறகும் - பின்னரும்

 ذَٰلِكَதா(ரா)லிக - 

அதன் - இதன் - அது - இது  - இந்த 

 مِنْ بَعْدِ ذَٰلِكَ  - மி(ன்)ம் பஃதி தா(ரா)லிக
அதற்குப் பிறகும் - அதற்கு அப்பாலும்(பழைய தமிழ்)

لَعَلَّكُمْ تَشْكُرُونَ லஃஅல்லகும் தஷ்குரூ(ன)ன்.
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِنْ بَعْدِ ذَٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَِ

து(ஸு)ம்ம ஃஅFபவ்னா ஃஅன்கும் மி(ன்)ம் பஃதி தா(ரா)லிக  லஃஅல்லகும் தஷ்குரூ(ன)ன். 


மொழிப்பெயர்ப்புகள் 



அதற்குப் பின்னரும் நீங்கள் நன்றியுடையோராய் மாறுவதற்காக நாம் உங்களைப் பொறுத்துக் கொண்டோம். -  (அதிரை ஜமீல்)

நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இதன் பின்னரும் உங்களை மன்னித்தோம். -(PJதொண்டி


இதன் பின்னரும்நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை  மன்னித்தோம் -  ( ஜான் டிரஸ்ட் - K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்)

நீங்கள் நன்றி செலுத்துவீர்களென்று இதற்குப் பின்னும் நாம் உங்களை மன்னித்தோம். -( .காஅப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

அதன் பின்னரும் நீங்கள் நன்றியுடையோராய் இருக்கக்கூடும் என்பதற்காக நாம் உங்களை மன்னித்தோம். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)


பின்னர்நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அதற்குப் பின்னரும் நாம் உங்களை மன்னித்தோம். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)







No comments: