யார் ஸாமிரி போன்ற நரகவாசி பின்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள்?
லைலா என்றால் கருப்பி இருட்டு மாதிரி இருப்பாள் அதனால் தான் அவளுக்கு லைலா (இரவு) என்று பெயர் வந்தது. மஜ்னு கண்ணுக்குத்தான் அழகாகா இருப்பாள். என்று கூறி லைலா பற்றிய பைத்தை (அரபுப் பாடலைக)க் கூட பாடிக் காட்டுவார்கள். . நாம் அந்த லைலா பற்றி கேட்கவில்லை.
இந்த 2:51. வசனத்தில் இடம் பெற்றுள்ள “லைலதன்” எனும் வார்த்தை பற்றியே கேட்டுள்ளோம். இந்த வசனத்தில் எல்லாரும் இரவுகள் என்றே தமிழாக்கம் தந்துள்ளார்கள். இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT மட்டும் “அர்பஃஈன லைலதன்” என்பதற்கு நாற்பது இரவு பகல்களை என்று மொழி பெயர்ப்பு செய்துள்ளனர்.
இதே நிகழ்வை சொல்லக் கூடிய இன்னொரு வசனம் 7:142. இதிலும் இரவுகளை(நாட்களை) என IFTயினர் மொழி பெயர்ப்பு செய்துள்ளனர் .
19:10. வசனத்தில் உள்ள “த(ஸ)லாத லயாலின்” என்பதற்கு ஜான் , அப்துல் ஹமீது பாகவி, அல்-மதீனா அல்-முனவ்வரா,மலிவு பதிப்பு, திரீயெம், பஷாரத் ஆகியவர்கள் மூன்று இரவு(பகல்)கள் என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.
மூன்று நாட்களுக்கு என IFT ம் மூன்று இரவுகள் (நாட்கள்) என உமர் ஷரீப் காஸிமியும் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.
இரவு பகல் ஆகிய இரண்டும் சேர்ந்தது தான் ஒரு நாள். அரபு மொழியில் ஒரு நாளுக்கு யவ்ம் என்பார்கள். இதை எல்லாரும் அறிந்து வைத்திருக்கிறோம்.
அரபிகளிடம் யவ்மன் (நாள்) என்று சொல்வதற்கு பதிலாக “லைலா” என்று சொல்லும் வழக்கமும் இருந்துள்ளது. இரவு பகல் ஆகிய இரண்டையும் அடக்கிய நாள் என்ற சொல்லாக “லைலா” என்பதும் இருந்து வந்துள்ளது.
யவ்ம் - நாள் என்று சொன்னால் எப்படி இரவையும் பகலையும் குறிக்குமோ, அது போல் தான் “லைலா” என்று சொன்னாலும் இரவையும் பகலையும் குறிக்கும். இதற்கு ஆதாரம் குர்ஆனிலும் உள்ளது.
19:10. ல் உள்ள “த(ஸ)லாத லயாலின்” என்று சொன்ன அல்லாஹ் அதே வரலாற்றை சொல்லும் 3:41. ல் “த(ஸ)லாத அய்யாமின்” - மூன்று நாட்கள் என்றும் சொல்லிக் காட்டி உள்ளான். 19:10, 3:41. வசனங்கள் ஒன்றுக்கு ஒன்று விளக்கமாக உள்ளன.

34:18, 69:7.ல் ஆகிய இரு வசனங்களில் அய்யாம் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. அய்யாம் என்பதற்கு நேரடி பொருள் என்ன? நாட்கள் என்பதுதான். ஆனால் இந்த வசனங்களில் அய்யாம் என்பது என்ன பொருளில் இடம் பெற்றுள்ளது? பகல் என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது.
இரவிலும், பகலிலும் அச்சமற்று பயணம் செய்யுங்கள்! 34:18.
அதை (கடுமையான கொடிய காற்றை) ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான் - வீசச் செய்தான். 69:7.
ஆக ஒவ்வொரு வார்த்தைகளும் இடத்திற்கு தக்கவாறு பொருள் தரும் என்பதை இவற்றின் மூலம் மீண்டும் நினைவூட்டிக் கொள்கிறோம்.
-------------------------------------
இந்த வசனத்தில் இன்னொரு படிப்பினை இருக்கிறது. அல்லாஹ் அவன் தான் இறைவன் என்பதற்கு கடலைப் பிளந்து காப்பாற்றிக் காட்டினான். மன்னு ஸல்வா என்ற உயரிய உணவை இறக்கிக் கொடுத்தான். பாறையிலிருந்து ஊற்றுக்களை பீறிட்டு ஓடச் செய்தான்.
இப்படி தனது துாதர் மூஸா(அலை) மூலம் எத்தனையோ பலமான ஆதாரங்களைக் காட்டினான். இருந்தாலும் அவற்றை மக்கள் எப்பொழுது நிராகரித்தார்கள்?? . ஸாமிரி என்ற வழி கேடன் அவர்கள் கண் முன் காட்டிய ஒரே ஒரு வித்தையால் பொய்யை நம்பினார்கள். உண்மையை நிராகரித்தார்கள்.

அற்பமான சிலையிலிருந்து ஒரு சப்தம் வந்ததே கடவுள் என்று நம்புவதற்கு அவர்களுக்குப் போதிய ஆதாரமாகத் தெரிந்தது. மூஸா நபி அவர்கள் அதைத் தீயில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி அந்தச் சாம்பலைக் கடலில் தூவி, இது கடவுள் அல்ல என நிரூபித்துக் காட்டினார்கள். அதுவரை அவர்கள் ஸாமிரி என்ற நரகவாசியையே நம்பினார்கள்.
அதுதான் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. ஸாமிரி போன்ற நரகவாசி ஆதாரம் என்று கூறுவதை ஏற்கிறார்கள். அல்லாஹ் ஒவ்வொரு விஷயத்திலும் எதை ஆதாரமாக ஏற்க வேண்டும் எப்படியானதை ஆதாரமாக ஏற்க வேண்டும் என்று தனது துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் தெளிவுபடுத்தி வழி காட்டி உள்ளான்.
அது தெளிவாகத் தெரிந்த பின்பும். அதன் படி செயல்பட மாட்டோம். நான் அதை உண்மை என்று நம்புகிறேன் என்று ஸாமிரி போன்ற நரகவாசி பின்னால் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
வமா அலைனா இல்லல் பலாஃக. - எமது பணி எத்தி வைப்பதை தவிர வேறில்லை.
இனி வார்த்தைக்கு வார்த்தை
وَإِذْ- வஇ(ர்)து
போது -சமயம் - நேரம்
وَاعَدْنَا- வாஃஅத்னா
வாக்களித்தோம் - உறுதியளித்தோம்
وَإِذْ وَاعَدْنَا - வஇ(ர்)து வாஃஅத்னா
வாக்கு (உறுதி) அளித்த போது - சமயம்- நேரம்
مُوسَىٰ- மூஸா
மூஸா(வுக்கு)
أَرْبَعِينَ-அர்பஃஈன
நாற்பது
لَيْلَةً -லைலதன்
இரவுகள்
ثُمَّ- - து(ஸு)ம்ம
பின் - பின்னர் – பின்பு – பின்னும் - பிறகு
اتَّخَذْتُمُ -அத்தஃக(ர்)த்துமு
எடுத்துக் கொண்டீர்கள் - கற்பனை செய்தீர்கள்
الْعِجْلَ -அல் ஃஇஜ்ல
காளைக் கன்று
مِنْۢ بَعْدِهٖ - மி(ன்)ம் பஃதிஹி
அவருக்குப் பின் - அதற்குப் பின்
وَأَنتُمْ - வஅன்தும்
நீங்கள்
ظَالِمُونَ- ழாலிமூ(ன)ன்
وَاِذْ وٰعَدْنَا مُوْسٰٓى اَرْبَعِيْنَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْۢ بَعْدِهٖ وَاَنْـتُمْ ظٰلِمُوْنَ
வஇ(ர்)து வாஃஅத்னா மூஸா அர்பஃஈன லைலதன் து(ஸு)ம்மத்தஃக(ர்)த் துமுல்ஃஇஜ்ல மி(ன்)ம் பஃதிஹி வஅன்தும் ழாலிமூ(ன)ன்
மேலும், நாம் மூஸாவுக்கு (மறை அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் ஒரு காளைக் கன்றை(க் கடவுளாக) எடுத்துக் கொண்டு பாவம் செய்தீர்கள். - (அதிரை ஜமீல்)
மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள்!18 அவருக்குப் பின் நீங்கள் அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.19 - (PJதொண்டி)
மேலும் மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்த நேரத்தை (நினைவு கூறுங்கள்) பின்னர் காளைக் கன்றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள், அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள். (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)
மேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள். - ஜான் டிரஸ்ட்
அன்றி (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் (அவர் திரும்பி வருவதற்குள்ளாகவே) நீங்கள் வரம்பு மீறி ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
மேலும், இதையும் நினைவுகூருங்கள்: நாம் மூஸாவுக்கு நாற்பது இரவுபகல்களை வாக்களித்திருந்தோம்; ஆனால், அவர் சென்ற பிறகு நீங்கள் காளைக்கன்றை கடவுளாக ஆக்கிக் கொண்டீர்கள்! அப்போது நீங்கள் பெரும் அக்கிரமம் புரிந்தவர்களாக இருந்தீர்கள்.- (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)
இன்னும் மூஸாவிற்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம்; பின்னர் (அவர் திரும்பும் முன்) நீங்கள் அநியாயக்காரர்களாக இருந்துகொண்டு ஒரு காளைக் கன்றை (வணக்கதிற்குரியதாக) நீங்கள் அவருக்குப்பின் எடுத்துக் கொண்டீர்கள் என்பதையும் (நினைவு கூறுங்கள்.) நீங்களோ அநியாயக்காரர்கள். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)
No comments:
Post a Comment