பின்னர் – பின் – பின்னும் - பிறகு என்று மொழி பெயர்க்கப்படக் கூடிய சொற்களில் இரண்டு இந்த வசனத்தில் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளன.
ஒரு இடத்தில் து(ஸு)ம்ம என்பதும் ஒரு இடத்தில் பஃஹ்தி என்பதும் இடம் பெற்றுள்ளது.
Fப என்பதையும் இந்த பொருளில் மொழி பெயர்ப்பார்கள். இவற்றுக்குள்ள வித்தியாசம் என்ன?
https://mdfazlulilahi.blogspot.com/2020/07/256.html
து(ஸு)ம்ம என்பது ஹர்பு - எழுத்து, இணைச் சொல் என்பார்கள். இதை தனியாக (பிறகு என்று) மொழி பெயர்க்க முடியாது. Fப என்பதையும் இந்த பொருளில் மொழி பெயர்ப்பார்கள். இவற்றுக்குள்ள வித்தியாசம் என்ன?
https://mdfazlulilahi.blogspot.com/2020/07/256.html
து(ஸு)ம்ம என்ற எழுத்துடன் பஅ(ஸ்)துனாகும் என்ற வார்த்தை சேர்ந்தால் தான் பிறகு உங்களை நாம் எழுப்பினோம் எனும் பொருள் வரும்.
து(ஸு)ம்ம என்பது வ (வாவு), Fப மாதிரியானது தான். வ, Fபவுடன் சேர்ந்தது தான். து(ஸு)ம்ம என்பது. இன்னும் மேலும் என்பது போலத்தான்.
இந்த பொருளுடன் கால தாமதத்தையும் பிறகு என்பதையும் சேர்த்து பொருள் தரக் கூடியது தான் து(ஸு)ம்ம என்பது.
Fப வுக்கும் பிறகு என்ற பொருள் வரும் என்று பார்த்தோம். இந்த Fப வுக்கும் து(ஸு)ம்ம வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
Fப போட்டால் வரும் பிறகு என்பதற்கு அடுத்து நடந்தது என்று அர்த்தம் தரும். நீண்ட இடைவெளி கிடையாது. து(ஸு)ம்ம, பஃஹ்த என போட்டால் நீண்ட இடைவெளி என்ற பொருள் தரும்.
அல்லாஹ் அவர்களை இடி முழக்கத்தால் மரணிக்கச் செய்தான். பிறகு உயிர்ப்பித்தான். இந்தப் பிறகு உனடியானது அல்ல. அவர்கள் இறந்த பின் உயிர் கொடுத்து எழுப்பியது என்பது நீண்ட இடைவெளி உடையது.
பிறகு என்று பொருள் தரக் கூடியது இந்த வசனத்தில் இரண்டு இடத்தில் இடம் பெற்றுள்ளது. இருந்தாலும்,
1.ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி,
2.ஜான் டிரஸ்ட்,
3.இம்தாதி,
4.ஸலாமத்,
5.தாருஸ்ஸலாம்- ரியாத் ஆகிய ஐவர் மொழி பெயர்ப்பில் ஒரு முறைதான் உள்ளது.
--------------------------------------------------------------------------------
இன்னும் இந்த வசனத்தில் “கும்” என்ற பெயர்ச் சொல் மூன்று இடங்களில் இடம் பெற்றுள்ளன.
இரண்டு இடங்களில் மட்டும் “கும்” என்பதற்கு உங்கள் என்ற வார்த்தையிலிருந்து வரக் கூடியதை பொருள் கொள்ள முடியும். (பொருள் தரும்)
து(ஸு)ம்ம பஅ(ஸ்)துனாகும் (பிறகு உங்களை நாம் எழுப்பினோம்) என்பதில் உள்ள “கும்” உங்களை என்று பொருள் தரும்
மி(ன்)ம் பஃஹ்தி மவ்திகும் (உங்களுடைய மரணத்துக்குப் பின்னால்). என்பதில் உள்ள “கும்” உங்களுடைய என்று பொருள் தரும்
லஃஅல்லகும் (நீங்கள் ஆகுவதற்காக) என்பதில் உள்ள “கும்” என்பது இந்த இடத்தில் நீங்கள் என்று பொருள் தரும்
“கும்” என்ற வார்த்தை லஃஅல்ல என்பதுடன் சேர்ந்து வரும்போதுதான் நீங்கள் என்ற பொருள் தரும்.
அன்தும் என்று சொன்னால் நீங்கள் என பொருள். அரபு இலக்கணப்படி லஃஅல்ல அன்தும் என்று வராது. ஆகவே லஃஅல்லகும் என வரக் கூடியதில் உள்ள “கும்” என்பதற்கு நீங்கள் என பொருள் கொள்ள வேண்டும்.
இப்படியாக நீங்கள் என்றும் உங்களை என்றும் உங்களுடைய என்றும் பொருள் தந்துள்ளன. பல சொற்கள் இப்படித்தான் இடத்துக்கு தக்கவாறு மொழியின் அடிப்படையில் பொருள் தரும். வெறுமனே உங்களுக்கு என்று சொல்வதாக இருந்தால் இய்யாகும் என்று வரும்
“கும்” என்பதற்கு உங்களை என்று ஒரு இடத்தில் மொழி பெயர்த்து விட்டதால் “கும்” என்று வரும் இடங்களிலெல்லாம் உங்களை என்று மொழி பெயர்த்து விட முடியாது.
உங்களுக்கு, உங்களுக்காக, உங்களுடன், உங்களுடைய, உங்களிடம், உங்களில், உங்கள் மீது இப்படியாக எந்த வார்த்தையுடன் சேர்ந்து வருகிறதோ அதற்கு தக்கவாறு பொருள் கொள்ள வேண்டும்.
உங்கள் என்பது இப்படி பொருள் தருவதால் நீங்கள் என்பதை நீங்களுக்கு, நீங்களுக்காக, நீங்களுடன், நீங்களுடைய, நீங்களில் என்று மொழி பெயர்த்தால் என்ன ஆகும்? அதனால்தான் மொழி பெயர்ப்பாளர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்கிறோம்.
“கும்” என்ற பெயர்ச் சொல் மூன்று இடங்களில் இடம் பெற்று இருந்தாலும்
1.அதிரை ஜமீல்,
2.IFT
ஆகியவர்கள் இரு இடத்தில் மட்டுமே மொழி பெயர்த்து உள்ளார்கள்.
இனி 2:56. வார்த்தைக்கு வார்த்தை.
“கும்” என்ற பெயர்ச் சொல் மூன்று இடங்களில் இடம் பெற்று இருந்தாலும்
1.அதிரை ஜமீல்,
2.IFT
ஆகியவர்கள் இரு இடத்தில் மட்டுமே மொழி பெயர்த்து உள்ளார்கள்.
இனி 2:56. வார்த்தைக்கு வார்த்தை.
ثُمَّ - து(ஸு)ம்ம
பின்னர் – பின் – பின்னும் - பிறகு
بَعَثْنَا - பஅ(ஸ்)துனா
உயிர்ப்பித்தோம் - எழுப்பினோம் (அனுப்பினோம்)
உயிர்ப்பித்தோம் - எழுப்பினோம் (அனுப்பினோம்)
كُم - கும்
உங்களை
ثُمَّ بَعَثْنَاكُم
து(ஸு)ம்ம பஅ(ஸ்)துனாகும்
பிறகு உங்களை நாம் எழுப்பினோம்
مِنْ بَعْدِ - மி(ன்)ம் பஃஹ்தி
உங்களை
ثُمَّ بَعَثْنَاكُم
து(ஸு)ம்ம பஅ(ஸ்)துனாகும்
பிறகு உங்களை நாம் எழுப்பினோம்
مِنْ بَعْدِ - மி(ன்)ம் பஃஹ்தி
பின் - பின்னர் – பிறகு - மீண்டும்
مَوْتِ - மவ்தி
மரணம்
மரணம்
كُمْ - கும்
உங்கள் - நீங்கள்
مِنْ بَعْدِ مَوْتِكُمْ
மி(ன்)ம் பஃஹ்தி மவ்திகும்
உங்களுடைய மரணத்துக்குப் பின்னால் - நீங்கள் மரணித்த பின்
உங்கள் - நீங்கள்
مِنْ بَعْدِ مَوْتِكُمْ
மி(ன்)ம் பஃஹ்தி மவ்திகும்
உங்களுடைய மரணத்துக்குப் பின்னால் - நீங்கள் மரணித்த பின்
تَشْكُرُونَ - தஷ்குரூன
நன்றியுடைவர்களாக
لَعَلَّكُمْ تَشْكُرُونَِ
லஃஅல்லகும் தஷ்குரூ(ன)ன்
ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَِ
நன்றியுடைவர்களாக
لَعَلَّكُمْ تَشْكُرُونَِ
லஃஅல்லகும் தஷ்குரூ(ன)ன்
நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - நீங்கள் நன்றி உடையவர்களாக ஆவதற்காக.
ثُمَّ بَعَثْنَاكُمْ مِنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَِ
து(ஸு)ம்ம பஅ(ஸ்)துனாகும் மி(ன்)ம் பஃஹ்தி மவ்திகும் லஃஅல்லகும் தஷ்குரூ(ன)ன்
மொழிப்பெயர்ப்பு :
பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நீங்கள் மரணித்த பின் உங்களை உயிர்ப்பித்தோம். -(PJதொண்டி)
(அனைவரும் கருகிப் போனீர்கள்.) நீங்கள் நன்றியுடையோராய் மாறுவதற்காக இறந்தபின் உங்களை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பினோம். - (அதிரை ஜமீல்)
பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நீங்கள் மரணித்த பின் உங்களை உயிர்ப்பித்தோம். -(PJதொண்டி)
நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம் - (ஜான் - K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)
நீங்கள் (அந்த பெரும் சப்தத்தால்) இறந்துவிட்டதற்குப் பின்னும் நீங்கள் நன்றி செலுத்துவீர்கள் என்பதற்காக உங்களை நாம் உயிர்ப்பித்தோம். - ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி
அதன்பிறகும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு நாம் மீண்டும் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம். - இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் –IFT
பின்னர், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக, நீங்கள் இறந்துவிட்டதற்குப் பின்னர் உங்களை நாம் உயிர்ப்பித்து எழுப்பினோம். - அல்-மதீனா அல்-முனவ்வரா
No comments:
Post a Comment