Friday, July 26, 2019

2:45 ஆட்களைப் பார்ப்பதா? அரும் பணியைப் பார்ப்பதா?

குர்ஆன் எழுத்துக்களில்  மாற்றங்கள் செய்யப்பட்டனவா?
இப்பொழுது நாம் எழுத உள்ளது 2:44  வசனத்தை ஒட்டி வந்த விமர்சனங்களுக்கான பதில். இதற்கு முன்பு  எழுதியவை எதார்த்தமானவைதான். குர்ஆன் இண்டக்ஸ் வெளியிடுங்கள் என்று வலியுறுத்தக் கூடியவர்களும். இருக்கிறார்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/245.html

குர்ஆன் இண்டக்ஸ் தலைப்பு வாரியாக அத்தியாய, வசன நம்பர்கள் மட்டும் போட்டால். வசனத்தை முழுமையாக எழுதுங்கள் என்கிறார்கள்.



வசனத்தை முழுமையாகப் போட்டதும். வார்த்தை குழப்பங்கள் உள்ளது  என்ற விமர்சனங்கள் வந்தன. உதாரணமான  وَعَمِلُوا الصّٰلِحٰتِ 
வஅமிலுஸ்ஸாலிஹாத்தி என்பதற்கு  நல்லறங்கள் என்றுள்ள மொழி பெயர்ப்புடைய தர்ஜமாவிலிருந்து போட்டதால் நற்கருமங்கள் - நற்காரியங்கள் - நற்செயல்கள் என்றுள்ள தர்ஜமாக்கள் வைத்திருப்போருக்கு  கஷ்டமாக இருந்தது. ஆகவே தலைப்பை ஒட்டி  எல்லா வார்த்தைகளையும் இடம் பெறச் செய்யுங்கள் என்றார்கள்.

அவ்வளவு கஷ்டப்பட்டு தயாரிக்கப்படும் இண்டக்ஸ் பேச்சாளர்கள் குறிப்பு எடுக்க பயன்படும். அல்லது ஏதாவது ஒரு வார்த்தையை குறிப்பிட்டு குர்ஆனில் எங்கு உள்ளது என்ற பரிசு போட்டியில் கலந்து கொள்வோருக்கு பயன்படுகிறது.

ஆகவே அதிகமானவர்களுக்கு பயன்படக் கூடிய வார்த்தைக்கு வார்த்தைக்கு  முதலிடம் பொடுத்தோம்.  விளக்கமும் போடுங்கள் என்றார்கள் போட்டு வருகிறோம்.  2:44  வசனத்தை ஒட்டிய விளக்கம். தனிப்பட்ட முறையில் சிலருக்கு  பதில் அளித்து எழுதியதாக கருதி கேள்விகள் கேட்டுள்ளார்கள்.

தலைப்பை பார்த்து விட்டு  அது அவருக்கான பதில். இது இவருக்கான பதில் என அவவரவர்கள் முடிவு செய்து கொள்கிறார்கள். வசனங்கள வரிசையாகவே எழுதி வருகிறோம். கைர்.  2:44  வசனத்தை ஒட்டிய கேள்விக்கான பதில்.



நபி (ஸல்அவர்களின் நேரடி கண்காணிப்பில் தொகுக்கப்பட்ட குர்ஆன் எழுத்துக்கள் அரபி மொழி அல்லாதவர்கள் படிக்கும் அமைப்பில் இருந்தனவா? இல்லை. அதாவது அரபி மொழியை சரியான முறையில் உச்சரிப்பதற்காக  பிரித்து அறியக்  கூடிய குறியீடுகள்  கிடையாது.

குர்ஆனில் உள்ள  அரபு வார்த்தைகளை   அரபி  அல்லாதவர்களும்  சரியான முறையில்  உச்சரிப்பதற்காக  பிரித்து அறியக் கூடிய குறியீடுகள் பிற்காலத்தில்  தான் சேர்க்கப்பட்டது.   

அதாவது நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு அரபு மொழியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 

அரபு மொழியில் ஒரு புள்ளி உள்ள எழுத்துக்கள் ف
இரண்டு புள்ளி உள்ள எழுத்துக்கள்,  ق
மூன்று புள்ளி உள்ள எழுத்துக்கள், ش
மேலே புள்ளி உள்ள எழுத்துக்கள், خ
கீழே புள்ளி உள்ள எழுத்துக்கள் ج என வந்தன.

அரபு மொழியில் பெரும்பாலான எழுத்துக்களுக்கு ஒரே வடிவம் தான் உள்ளன. அதனால் இந்தப் புள்ளிகளை வைத்துத்தான்.
ب ت ث ن  يَ 
பே, தே, ஸே, நுான், யா போன்ற  எழுத்துக்களை அரபு அல்லாதவர்கள் அறிந்து கொள்ள முடியும். ஆனால் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் எழுத்துக்களுக்கு புள்ளிகள் இருக்கவில்லை. 

இதனால் ஒரே வடிவத்தில் பல எழுத்துக்கள் இருந்தன. ஆயினும் அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள், இந்த இடத்தில் இன்ன எழுத்துத்தான் இருக்க முடியும் என்று வாக்கிய அமைப்பைக் கவனித்துச் சரியாக  வாசித்து விடுவார்கள். 
இஸ்லாம் உலகம் முழுவதும் பரவிய பிறகு, அரபு மொழியின் பொருள் தெரியாமலே குர்ஆன் இறை வேதம் என்பதற்காக அதை படிக்கின்ற மக்கள் பெருகினார்கள். அப்போது, புள்ளிகள் இட்டு எழுத்துக்களை இனம் காட்டினார்கள். புள்ளிகள் அமைக்கப்பட்ட எழுத்துக்கள் மூலப் பிரதியில் கிடையாது.
உயிர் மெய்க் குறியீடுகள் தமிழ் மொழியில் "க' என்று எழுதினால் பார்த்தவுடனே வாசிக்க முடியும். 
"கீ' என்பது வேறு வடிவம் பெறுவதால் அதை "கீ' என வாசிக்க முடியும். 
"கு' என்பது இன்னொரு வடிவம் பெறுவதால் அதை "கு' என்று வாசிக்க முடியும். 
ஆனால் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் அரபு மொழியில் உயிர், மெய் குறியீடுகள் இருக்கவில்லை. க, கி, கு, க் ஆகிய நான்கிற்கும் ك ஒரே வடிவம் தான் இருந்தது.  பிற்காலத்தில் தான் உயிர், மெய் குறியீடுகளும் இடப்பட்டன. 
இக் குறியீடுகளைப்  - ஃபத்ஆ - தம்மா - கஸ்ரா என்று அரபி மொழியில் சொல்வார்கள்.

ஸபர் - ஸேர் - பேஷ் , ஸுக்கூன் என்று உருது மொழியில் சொல்வார்கள்.  இவை யாரால்  சேர்க்கப்பட்டது?

மேற்படி  குறியீடுகள்  ஹிஜ்ரி 66-86 வரை ஆட்சி புரிந்த - உமையாத் - காலத்தின் ஐந்தாவது கலீஃபா  அப்துல் மலிக் பின் மர்வானின் ஆட்சியில் ஈராக்கின்  கவர்னராக ஹஜ்ஜாஜ் பின் யூசுப் இருந்தபோது செய்தார்.  ஹஜ்ஜாஜ் பின் யூசுப் கொடுங்கோலன் என்பதால் இந்த சேவையை சமுதாயம் ஏற்றதா? நிராகறித்ததா? 

புள்ளிகளும் குறியீடுகளும் மக்களுக்கு உதவிகரமாக இருப்பதால் முஸ்லிம் உலகம் இதை ஒட்டு மொத்தமாக அங்கீகரித்துக் கொண்டது. குர்ஆனுக்காகச் செய்யப்பட்ட இந்த மாறுதலை அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும் பழகிக் கொண்டார்கள்.

அவர்களும் பழங்கால எழுத்து முறையை மறந்து விட்டார்கள். இது அரபு மொழியில் செய்யப்பட்ட ஒரு முக்கியமான மாறுதல். 

அவன் யூதன்,  கிறிஸ்தவன்,   கொடுங்கோலன்  என்று மனிதக்  குறைகளைக் கூறி மறுக்க இஸ்லாம் கூறுகிறதா? இல்லை. நிச்சயமாக இல்லை.

தர்ஜமாப்  பணிகளுக்கு  பயன்படுத்தப்பட்ட பயன்படுத்தப்படும்  தமிழ் அகராதிகள் எல்லாமே முஸ்லிம்கள் உடையதா?

அரபு மொழியில் உள்ள  டிக் ஷனரிகள் (அரபு மொழி அகராதிகள்) பெரும்பாலும் யாருடையது?  பெயர் அரபியில் இருந்தால் அவர்கள் முஸ்லிம்கள் என்று அர்த்தமா?

நாம் வாழும் ஹிஜ்ரி 15 ஆம் நூற்றாண்டில்  அரபு மொழி வல்லுனர்களாக இருப்பவர்கள்  யூத, கிறித்தவர்களா? முஸ்லிம்களா? 

அரபு மொழி அகராதி, குர்ஆன் பொருள் அட்டவணை, ஹதீஃத் பொருள் அட்டவணை இவற்றைத் தயாரித்து புத்தகங்களாக விற்றவர்கள். ஸாப்ட்வேர்களாக  விற்றுக் கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்  வல்லுனர்களா? முஸ்லிம் அல்லாத அரபு மொழி வல்லுனர்களா?


இன்று இணையத்திலும் அரபு மொழி கல்லூரியிலும் கற்றுத் தரும் அரபு மொழி அகராதி ஒரு யஹுதியால் உருவாக்கப்பட்டது என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? 

வேதக்காரர்கள் (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். 
யூதர்கள் பேசினால் பொய்யே பேசுவார்கள் போன்ற செய்திகளை எப்படி எடுத்துக் கொண்டோம்?

யூதர்களும் கிறித்தவர்களும் எழுதிய அரபு அகராதிகளைக் கொண்டுதான். அந்தக் காலத்தில் இந்த வசனத்தில் அல்லது ஹதீஸில் உள்ள இன்ன வார்த்தைக்கு  என்ன பொருள் இருந்தது என்று பார்த்து மொழி பெயர்ப்புகள் செய்தார்கள். செய்கிறார்கள்.  இப்பொழுதும் தேவையான மாற்றங்களும் செய்கிறார்கள்.  இதனால் குர்ஆன் ஹதீஸில் யூத, கிறிஸ்தவக் கொள்கை நுழைந்து விட்டது என்று அறிவுள்ளவர்கள் சொல்வார்களா?


உதாரணம் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானப்படி சிந்திப்பது மூளைதான் என்று ஆனதும். இதயம் என்றுள்ள இடத்தில் உள்ளம் என்று மாற்றினார்கள். கல்ப் என்பதற்கு இதயம் என்ற பொருள் இருப்பது போல் மூளை என்ற பொருளும் இருக்கிறது என்று அரபு மொழி அகராதி கூறுகிறது என்று ஜாகிர் நாயக்கும் சொன்னார்

ஆக இங்கே நாம் யாரையும் பின்பற்றவில்லை. குர்ஆனைத்தான் பின் பற்றி உள்ளோம்.  அல்லாஹ் ரசூலுக்கு அருளியதையும் அல்லாஹ்வும் ரசூலும் சொன்னதையும் எடுத்துச் சொல்லக் கூடியவர்களாகத்தான் மனிதர்கள் இருக்கிறார்கள்.


மனிதர்கள் எடுத்துச் சொல்லக் கூடிய கருத்துக்கள் நியாயமாகவும் சரியாகவும் குர்ஆன் ஹதீஸுக்கு ஒத்தும் இருந்தால் அந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.  அந்தக் கருத்து சரி இல்லை. குர்ஆன் ஹதீஸோடு முரண்படுகிறது  என்றால்  எப்படி முரண்படுகிறது  என்பதைச் சுட்டிக் காட்டி மறுங்கள்.

யாரையும் பின் பற்ற வேண்டும் என்று நாம் சொல்லவே இல்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுங்கள்.  அல்லாஹ்வின் துாதரை பின்பற்றுங்கள் என்றே சொல்கிறோம்.

இனி வார்த்தைக்கு வார்த்தை
  
وَاسْتَعِينُوا -  வஸ்தஃஈனுவ் 
உதவி தேடுங்கள் -உதவி கோருங்கள் 

بِ - பி 
மூலம் - கொண்டும் - கடைப்பிடித்தும் - மீதும்

الصَّبْر அஸ்ஸப்ரி 
பொறுமை

وَالصَّلَاةِ - வஸ்ஸலாதி 
தொழுகை

وَإِنَّهَا வஇன்னஹா 
அது

لَكَبِيرَةٌ - லகபீரதுன் 
பாரமானது - பளுவானது - பெரியது 


إِلَّا இல்லா 
அன்றி - தவிர 
عَلَى- அலா 
மீது - மேலே
الْخَاشِعِينَ- அல் காஷிஈ(ன)ன்
 பணிவுடையோர் - தாழ்மை உடையோர்,  உள்ளச்சம் உடையோர்,

وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ

வஸ்தஃஈனுவ் பிஸ்ஸப்ரி     வஸ்ஸலாதி    வஇன்னஹா  லகபீரதுன்  இல்லா அலல்காஷிஈ(ன)ன் 


தமிழ் நடையில்  மொழிப் பெயர்ப்புகள்  :

நீங்கள் (மற்ற) மனிதர்களை மட்டும் நன்மை செய்யுமாறு ஏவி, உங்களை மறந்து விடுகின்றீர்களே! இறைமறையையும் ஓதிக் கொள்கின்றீர்கள்! (என்னே முரண்பாடு?) நீங்கள் சிந்தித்து அறிவு பெறக் கூடாதா(அதிரை ஜமீல்)


பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும் - (PJதொண்டி)

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். -(K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்)

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.  டாக்டர். முஹம்மது ஜான்
(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும். 
அப்துல் ஹமீது பாகவி 
பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள். திண்ணமாக, தொழுகை ஒரு பாரமான செயல்தான்; ஆனால் இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற அடியார்களுக்கு அது பாரமான செயலே அல்ல!  இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)

நீங்கள் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (இரட்சகனிடத்தில்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அது உள்ளச்சம் கொண்டவர்களுக்கன்றி, ஏனையோருக்கு மிகப் பாரமானதாக இருக்கும். (அல்-மதீனா அல்-முனவ்வரா)



No comments: