Saturday, July 20, 2019

2:39 கேள்வி கேட்டவர் நடத்திய பாடம் என்ன?

இந்த வசனத்திலும் وَ வா(வு)  இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது.  وَ வா(வு )  பற்றிய விபரங்களை 2:5  வசனத்தின் வார்த்தைக்கு வார்த்தையில் எழுதி விட்டோம்.   இப்படி  குறிப்பிட்டு வந்ததைப் பார்த்த புதியவர்கள்  2:5  தேட கஷ்டமாக இருக்கிறது  மீண்டும் பதிவிடுங்கள் என்றார்கள். அதனால்  திரும்பவும் 2:38 ல் பதிவிட்டோம்.  அதைப் பார்த்த ஈருலகிலும் அல்லாஹ்வின் அருளுக்குரிய  சகோதரர் என்னிடம் கேட்ட கேள்வியும் எனக்கு நடத்திய பாடமும்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/05/239.html

[21/05, 12:42 pm]  والله بالله تالله

சத்தியமாக என அரபுகள் மொழி வழக்கில் சொல் வழக்கில் பயன்படுத்துவது போல நாம் தமிழில் பயன்படுத்த இயலுமா? என்று கேட்டிருந்தார்.

ஒருவர் நம்மிடம் நுாறு ரூபாய்க்கு  சில்லரை கேட்கிறார். நமக்கு அது தேவையாக இருக்கிறது அப்பொழுது இல்லை என்போம். வற்புறுத்தி கேட்கும் போது உண்மையிலேயே இல்லை என்போம். உண்மையிலேயே என்பது  போலத்தான். வல்லாஹி என்பதை பயன்படுத்துகிறார்கள்.

ஒருவர் எது ஒன்றையும்  நம்மிடம் தராமல் தந்து விட்டேன் என்கிறார்.  அப்பொழுது தான்  சத்தியமாக என்று  சொல்லி மறுப்போம். இதைத்தான் சத்தியம் செய்ததாக கருதுவோம். இந்த மாதிரி இடங்களில்தான் அரபிகள்  உஃக்ஸம்  பில்லாஹில் ஃஅழீம்  என்பார்கள் போன்ற பதில் சொன்னோம்.

அதற்கு அவர் தந்த விளக்கம்.

[21/05, 12:50 pm] : وقسم بالله العليم  ,وقسم بالله العظيم

இரண்டில் எது? என்று கேட்டு விட்டு


21/05, 12:51 pm] இங்கு உருது மொழிய தாய் மொழியாக கொண்டவங்க கஸம் வல்லாஹி
قسم و الله
என சொல்வதுண்டு

[21/05, 12:55 pm] நீங்க சொன்னது சரி பேச்சின் போது உண்மைத் தன்மைக்கும் உறுதிக்கும்

والله باالله تاالله 
பயன்பாடும், 

சத்தியம் போன்ற பயன்பாட்டிற்கு وقسم باالله அரபுகள் பயன்படுத்திக்கறாங்க

[21/05, 12:56 pm]: நீங்க சொன்னதில் நான் தெரிஞ்சு கொண்ட புது விசயம் 
 وقسم بالله العليم
என்பதுதான்

[21/05, 12:56 pm] நன்றி🤝🏻

[21/05, 12:56 pm] جزاك الله  خيرا

இன்ன, அன்ன வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்க இயலுமா? 

[21/05, 1:03 pm] ان اخواتها
இன்ன அஹவாத்துஹால வர  
ان - இன்ன, 

ان -அன்ன,

كان - க அன்ன,

ليت - லைத்த, 

ليس - லைஸ

لعل -லஅல்ல

இந்த ஆறுமே தாக்கீதுக்கு உறுதிபாட்டிற்கு வந்தாலும் இன்ன மற்றும் அன்ன இரண்டு சொல்லையும் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்க இயலாது

[21/05, 1:09 pm] நீங்க சொன்னது போல P.J. மொழி பெயர்ப்பு அருமையானது மாற்றுமத சகோதரர்களுக்கு கொடுக்கலாம்.


[22/05, 1:49 pm]  சரியான விளக்கம்

[27/05, 11:00 am] அருமை🤝🏻🙂உம்மைத்தொகையாகவும் வரும்

[27/05, 11:02 am]  வாவ் கஸம் அல்லாஹ் என்ற சொல்லோடு மட்டுமே வரும் இறைவனின் வேறு பண்புப்பெயரோடு வராது

ஆகிய பாடங்களை நமக்கு நடத்தி உள்ளார்.  அல்லாஹ் அவருக்கு பேரருள் புரிவானாக ஆமீன்

இனி  உம்மாவுடன் உம்ராவுக்கு வந்து. வாவுக்கு யாருமே மொழி பெயர்க்காமல் விட்டதில்லை என்று என் மண்டையை கழுவிய மவுலவி போன்றவர்களின் கவனத்திற்கு.  

உமர் ஷரீFப் காஸிமி வெளியிட்டுள்ள  சொல்லுக்கு சொல் நுாலில்  வல்ல(ரீ)தீன -  என்பதற்கு   இன்னும் எவர்கள் என்றும் வக(ர்)த்தபூ  என்பதற்கு(ன்னும்) பொய்ப்பித்தார்கள் என்றும் வார்த்தைக்கு வார்த்தையாக மொழி பெயர்க்கும்போது  பிரித்து மொழி பெயர்த்துள்ளார். வசன நடையில் இரண்டு  இன்னும்  என்பது இல்லை.  இணைப்பில் உள்ள படத்தை பார்க்கவும்.


அடுத்து உள்ளது ரியாத்திலிருந்து வெளியான மொழி பெயர்ப்பு. அதிலும் இரண்டு இன்னும்  என்பது இல்லை



இந்த  2:39 வசனத்தில் உள்ள 2 வாவில்  முதல் வாவுக்கு மட்டும் மேலும் ,  என்று  5  பேரும் அன்றி என்று    8 பேரும்  மொழி பெயர்த்துள்ளார்கள். ஆக எல்லாருமே  வக(ர்)த்தபூ  என்பதில் உள்ள வாவுக்கு மொழி பெயர்க்கவில்லை. வாவுக்கு நாம் அளித்த விளக்கப்படியே மொழி பெயர்த்துள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்






இனி வார்த்தைக்கு வார்த்தை


وَالَّذِينَ  - வல்ல(ரீ)தீன 
அத்தகைய சிலர் - இன்னும் எவர்கள் - அவர்கள் - மற்றும் அந்த


كَفَرُوا - கFபரூ 
மறுத்து - நிராகித்து - காஃபிராகி விட்டார்கள்- 

وَكَذَّبُوا - வக(ர்)த்தபூ 
பொய்யெனக் கருதியோர்- பொய்ப்பித்தார்கள் -பொய்ப்படுத்தினார்கள் - பொய்யாக்கிக் கொண்டு

بِآيَاتِ - பிஆயாதி 
அத்தாட்சிகள் - வசனங்கள்

نَا - நா
 நம் - நமது - எமது -

 بِـاٰيٰتِنَآ பிஆயாதிநாா 
நமது வசனங்களை - 

أُولَٰئِكَ உலாயிக
அவர்கள் - இவர்கள் - இத்தகையர்கள் 


أَصْحَابُ  ஃஅஸ்ஃஹாபு 
வாசிகள் - 

النَّارِ - அன்னாரி 

நரகம் -  (அக்னி, நெருப்பு, தீ)


هُمْ ஹும் 
அவர்கள்

فِيهَا Fபீஹா 
அதில் - இதில்

خَالِدُونَ - காலிதுா(ன)ன்.
 என்றென்றும் - நிரந்தரமாக - 
وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ 


மொழிப் பெயர்ப்புகள்:

அன்றி, (ஏற்க) மறுத்து, நம் சான்றுகளைப் பொய்ப்பிக்க முற்படுவோர் நரகவாசிகள். அவர்கள் அதில் என்றென்றும் வீழ்ந்து கிடப்பர் (என்று அல்லாஹ் கூறினான்). -  (அதிரை ஜமீல்) 

"(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்'' (என்றும் கூறினோம்.)- (PJதொண்டி)

அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்பிக்க  முற்படுகிறார்களோ        அவர்கள்  நரக  வாசிகள்;  அவர்கள்    அ(ந்நரகத்)தில்  என்றென்றும்       தங்கி இருப்பர்  - (அஸ்லிம் தஸ்லம்).


அன்றி யார் (இதை ஏற்க) மறுத்துநம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் நரக வாசிகள்அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர். ((K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்)

அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.

டாக்டர். முஹம்மது ஜான்

(அன்றி) எவர்கள் (என்னுடைய நேர்வழியை) நிராகரித்து என்னுடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே! அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்."

அப்துல் ஹமீது பாகவி

அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்து, எம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்; அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்!” இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)

இன்னும், நிராகரித்துவிட்டு, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டுமிருகிறார்களே அத்தகையோர்_அவர்கள் நரகவாசிகள்; அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.

(அல்-மதீனா அல்-முனவ்வரா)





No comments: