Thursday, July 11, 2019

2:30 மனிதன் அல்லாஹ்வின் கலீஃபாவா? இன்னீ ஜாஃஇலுன் Fபில் அர்ழி ஃகலீFப

இந்த  வசனத்தில் உள்ள   ஃகலீFப(தன்) என்ற  வார்த்தைக்கு  எத்தனை விதமான  மொழி பெயர்ப்புகள் உள்ளன என்பதை வார்த்தைக்கு வார்த்தையில்  காணலாம்.  இந்த  ஃகலீFப(தன்) என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு  மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதி  என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். இந்த பொருள்பட,  தமிழக பதிப்பகத்தாாரில் தாருல் ஹுதா, திரீயெம் பிரிண்டர்ஸ் ஆகிய இருவர் மட்டும் (என்னுடைய) பிரதிநிதி என்று மொழி பெயர்ப்பில்  இடம் பெறச் செய்துள்ளனர். 


M. அப்துல் வஹ்ஹாப் M.A.BTh,  K.A.நிஜபாமுத்தீன் மன்பயீ,  R.K.அப்துல் காதிர் பாகவி ஆகிய மூன்று  மவுலவிகளால் மொழி பெயர்க்கப்பட்டு 1992ல் வெளியானதுதான் திரீயெம் பிரிண்டர்ஸ் வெளியீடு. அதே மூவரால் மொழி பெயர்க்கப்பட்ட அதே தர்ஜமாதான் 2002ல் கோவை திரு குர்ஆன் அறக்கட்டளையும்  2012ல் சென்னை இஸ்லாமிய நுால்கள் மலிவு பதிப்பும் வெளியிட்டன.  ரப்பு என்ற இடத்தில் இறைவன் என்றும் (என்னுடைய) என்பதை நீக்கியும் உள்ளார்கள். இதுதான் இரண்டு வெளியீடுகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்.




மனிதன் அல்லாஹ்வின் கலீஃபா - பிரதிநிதி என்று பொருள்படும் என்னுடைய  என்ற வார்த்தையை  அடைப்புக்குறிக்குள்  தான் இடம் பெறச் செய்துள்ளனர். அதுவே  என்னுடைய, என் என்ற வார்த்தை மூலத்தில் கிடையாது என்பதற்கு ஆதாரமாகும்.  (என்) பிரதிநிதி என்று மொழி பெயர்த்து  மனிதன்  அல்லாஹ்வின்    பிரதிநிதி  கலீஃபா என்று சொல்வது சரி இல்லை, முற்றிலும் தவறானது.

இதற்கு ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. முஃமின்களுக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்  என்ற ஒரு ஆதாரம் போதுமானது. அந்த ஆதாரத்தை மட்டும் இதில் தருகிறோம். பயணத்தின் போது நபி(ஸல்) அவர்கள் கேட்கும் துஆவில் உள்ள வார்த்தைகளில் ஒன்று. 

அல்லா ஹும்ம--- .... வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! என்பதாகும். முஸ்லிமில் 2612வதாக உள்ள இந்த ஹதீஸே அல்லாஹ் தான் மனிதனுக்குப் பிரதிநிதியாவான். அல்லாஹ்வுக்கு மனிதன் பிரதிநிதியாக முடியாது என்பதற்கு மிகப் பெரிய ஆதாரமாகும். முஃமின்களுக்கு இந்த ஆதாரம் போதுமானது. 

இனி சொல்லுக்கு சொல் பார்ப்போம்.

وَاِذْ -  வஇது(ர்) 
போது - சமயம் -நேரம்


قَالَ - ஃகால 
கூறினான் 


 رَبُّ - ரப்பு


இறைவன்
 رَبُّكَ-ரப்புக 
உமது (உம்- உம்முடைய) இறைவன் - இரட்சகன்
 لِلْمَلٰٓٮِٕكَةِ- லில் மலாயிகதி 
வானவர்களை ( மலக்குகளை) நோக்கி – வானவர்களுக்கு மலக்குகளுக்கு- வானவர்களிடம் -  மலக்குகளிடம், 
اِنِّىْ-இன்னீ 
நான் 
 جَاعِلٌ - ஜாஃஇலுன் 
படைக்கப் போகிறேன் - அமைக்கப் போகிறேன் - ஏற்படுத்தப் போகிறேன் -ஆக்கப் போகிறேன் - உண்டாக்கப் போகிறேன்
 فِى الْاَرْضِ - Fபில் அர்ழி 
பூமியில் - பூ உலகில்

 خَلِيْفَةً - ஃகலீFப(தன்) 


பிரதிநிதி - முன் சென்றவர்களின் பிரதிநிதி - வழித் தோன்றல் - தலைமுறை -  வாழையடி வாழையாக  தலைமுறை தலைமுறையாக ஒருவருக்குப் பின் ஒருவாராக பின் தோன்றல்  சந்ததிகளை பெறுபவர்கள் -வழிவழியாகப் பல்கிப் பெருகுபவர்


قَالُوْٓا- ஃகாலுா 
கூறுகின்றனர்- கூறினார்கள்- சொல்கிறார்கள்.- கூறுகிறார்கள் இவைதான் நேரடியான மொழி பெயர்ப்பாகும். இந்த வசனத்தில் அடுத்து கேள்வியாக வரும் வார்த்தைகளை வைத்து நேரடி வார்த்தைகளை இடம் பெறச் செய்யாமல் கேட்டனர், வினவினார்கள்   என்று   ஸலாமத்,  IFT போன்ற பதிப்பக  அறிஞர்கள் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.  

اَتَجْعَلُ - அதஜ்ஃஅலு 


படைக்கிறாயா? -- படைக்கப் போகிறாய்? -  அமைக்கப் போகிறாயா? ஆக்குகிறாயா? - ஏற்படுத்தப் போகிறாயா?  -ஆக்கப் போகிறாயா? - உண்டாக்கப் போகிறாயா?

فِيْهَا - Fபீஹா 
அதில்


 مَنْ- மன் 

எவர் - 

 يُّفْسِدُ -  யுFஸிது 
குழப்பம் விளைவி.ப்பான் - குழப்பம் செய்வான் -  குழப்பம் உண்டாக்குவான் - விஷமம் செய்வான் - ஒழுங்கமைப்பைச் சீர்குலைப்பான்

 فِيْهَا - Fபீஹா 
அதில்


 وَيَسْفِكُ - வயஸ்Fபிகு 

சிந்துவான்  - ஓட்டுவான் - களறியாக்குவான்


 الدِّمَآءَۚ- (அ)த்திமாஃஅ 
இரத்தம்


وَنَحْنُ-வநஃஹ்னு 

நாங்கள் 


 نُسَبِّحُ - நுஸப்பிஃஹு 

போற்றுகிறோம் - ஓதுகிறோம் - துதிக்கிறோம்

 بِ- பி 
கொண்டு - மீது
حَمْدِ- ஃஹம்தி  
புகழ்


كَ -க 
உன் - உங்கள்


وَنُقَدِّسُ-வனுஃகத்திஸு

பரிசுத்தமானவன் குறைகளற்றவன் - துாய்மையையானவன்

 لَـكَ‌ؕ - க 
உன்னை


قَالَ - க ால 
கூறினான்


 اِنِّىْٓ - இன்னீ 
நான்


اَعْلَمُ - அஃலமு 
அறிவேன்


مَا لَا تَعْلَمُوْنَ‏- மாலா தஃலமூ(ன)ன் 
நீங்கள் அறியாதவற்றை - அறிந்து கொள்ளாதவற்றை -




(நபியே!) உம் இறைவன் வானவர்களை நோக்கி, "திண்ணமாக நான் பூவுலகில் ஒரு வழித்தோன்றலை ஏற்படுத்தப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள், "பூமியில் குழப்பத்தை உண்டாக்கி, அதை இரத்தக் களறியாக்குவோரையா பூமிக்கு (ஆள்வோராய்) நியமிக்கப் போகிறாய்? நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் தூய்மையைப் போற்றியவர்களாகவே இருந்து வருகின்றோம்" என்று கூறினார்கள். (அதற்கு அல்லாஹ்,) "நீங்கள் அறியாத அனைத்தையும் திண்ணமாக நான் அறிவேன்" எனக் கூறினான். (அதிரை ஜமீல்)


2:30. "பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்''46 என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறியபோது "அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே'' என்று கேட்டனர். "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்'' என்று (இறைவன்) கூறினான். (P.J)


இன்னும்,   நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன் என்று உம் இரட்சகன் (தனது) மலக்குகளுக்குக் கூறியபோது, (ந்நிலத்)தில் விஷமம் செய்கிறவரையும் இரத்தங்களை ஓட்டுபவரையும் அதில் நீ உண்டாக்கப் போகிறாயா? நாங்களோ உனது புகழைக் கொண்டு (உன்னைத்) துதிக்கின்றோம். மேலும் உன்னை பரிசுத்தப்  படுத்துகிறோம். (உனது பரிசுத்தத்தை வெளியாக்குகின்றோம்) என்று  அ(வ்வான)வர்கள் கூறினர். அதற்கு அ(வ்விறை)வன் நீங்கள்  அறிந்து கொள்ளாதவற்றை நான்  நிச்சயமாக  அறிவேன் என்று கூறினான் (அன்வாறுல் குர்ஆன்)


(நபியே)  இன்னும்,  உமது இறைவன் மலக்குகளிடம் நிச்சயமாக  நான்  பூமியில்  ஒரு  பிரதிநிதியை  அமைக்கப்போகிறேன்  என்று  கூறியபோது,  அவர்கள்  “(இறைவா!)  நீ அதில்  குழப்பத்தை  உண்டாக்கி,  இரத்தம்  சிந்துவோரையா  அமைக்கப்   போகிறாய்?  இன்னும்  நாங்களோ  உன்னைப்   புகழ்வதுடன்  உன்னைத்  துதித்துக்  கொண்டும்,  உன்னைப்  பரிசுத்தப்  படுத்திக்  கொண்டும்  இருக்கின்றோம்  என்று  கூறினார்கள்  அ(தற்கு  இறை)வன்  நீங்கள்  அறியாதவற்றையெல்லாம்  நிச்சயமாக  நான்  அறிவேன்  எனக் கூறினான்.(KSR)


(நபியே) உம்முடைய இறைவன் வானவர்களிடம் நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப்  படைக்கப் போகிறேன் என்று கூறியபோது, அதில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக் கூடியவரையா? படைக்கப் போகிறாய்? நாங்கள்தான் உன்னை புகழ்ந்து துதித்துக் கொண்டும், உனது துாய்மையைப் போற்றிக் கொண்டும் இருக்கிறோமே என்று அவர்கள்  கூறினார்கள். அதற்கு அல்லாஹ் "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்" என்று கூறினான். (றஹ்மத் அறக்கட்டளை)


(நபியே) உம்முடைய இறைவன் "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை உண்டாக்கப்  போகிறேன் என்று வானவர்களிடம் கூறியபோது நாங்கள் உன்னைப் புகழ்ந்து துதித்துக் கொண்டும், உன் துாய்மையைப் போற்றுபவர்களாகவும் இருக்க அதில் (பூமியில்) குழப்பம் விளைவித்து இரத்தம் ஓட்டுபவர்களையா? நீ அதில் உண்டாக்கப் போகிறாய்? என்று அவர்கள்  கேட்டார்கள். (அப்பொழுது) அவன் நீங்கள் அறியாதவற்றையெல்லாம் திண்ணமாக நான் அறிவேன்" என்று கூறினான். (ஸலாமத் பதிப்பகம்)



(நபியே) உம்முடைய ரப்பு வானவர்களை நோக்கி நிச்சயமாக நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) உண்டாக்கப்  போகிறேன் என்று  கூறியபோது. நாங்கள் உன்னுடைய புகழ் கூறி உன்னைத் துதிப்பவர்களாகவும் உன் பரிசுத்தத்தை போற்றுகிறவர்களாகவும் இருக்கின்ற நிலையில் அதில் (பூமியில்) குழப்பம் செய்து இரத்தங்களை ஓடச் செய்பவர்களையா? நீ  அதில் உண்டாக்கப்  போகிறாய்? என்று அவர்கள் (வானவர்கள்) கூறினார்கள். (அப்பொழுது) நிச்சயமாக நான் நீங்கள் அறியாதவற்றை அறிந்திருக்கிறேன் என்று அவன் கூறினான். (திரீயெம் பிரிண்டர்ஸ்)

(நபியே) உம்முடைய இறைவன் வானவர்களை நோக்கி நிச்சயமாக நான் பூமியில் பிரதிநிதியை (ஆதமை) உண்டாக்கப்  போகிறேன் என்று கூறியபோது. நாங்கள் உன்னுடைய புகழ் கூறி உன்னைத் துதிப்பவர்களாகவும் உன் பரிசுத்தத்தை போற்றுகிறவர்களாகவும் இருக்கின்ற நிலையில் அதில் (பூமியில்) குழப்பம் செய்து இரத்தங்களை ஓடச் செய்பவர்களையா? நீ  அதில் உண்டாக்கப்  போகிறாய்? என்று அவர்கள் (வானவர்கள்) கூறினார்கள். (அப்பொழுதுநிச்சயமாக நான் நீங்கள் அறியாதவற்றை அறிந்திருக்கிறேன் என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான். (மலிவு)


(நபியே) "நிச்சயமாக நான் பூமியில் ஒரு  பிரதிநிதியை ஏற்படுத்தப்போகிறேன் என்று உமது ரப்பு (தனது) வானவர்களிடம் கூறியபொழுது. வானவர்கள் அதில் (பூமியில்) குழப்பத்தை  உண்டாக்கி,  இரத்தம்  சிந்தக் கூடியவர்களையா? ஏற்படுத்தப் போகிறாய்? நாங்கள் உனது (திருப்) புகழைக் கொண்டு (உன்னைத்) துதி செய்தும் உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாகவும் இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; (அதற்கு) அவன் கூறினான். "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன். (பஷாரத்)


(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். (டாக்டர். முஹம்மது ஜான்)


"நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை படைக்கப் போகிறேன் என ம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள். அதில் விஷமம் செய்து இரத்தங்களைச் சிந்தக் கூடியவர்களை அதில் நீ படைக்கிறாயா? நாங்களோ உன் புகழைத் துதிக்கிறோம். உன்னைப் பரிசுத்தப்  படுத்துகிறோம். என்று கூறினார்கள்; "நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். (உமர் ஷரீப்)


(நபியே!) உங்களது இறைவன் மலக்குகளை நோக்கி "நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்" எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் "(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன்னுடைய பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன்னுடைய பரிசுத்தத் தன்மையைக் கூறி உன்னுடைய புகழைக் கொண்டு உன்னை புகழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்கள். அதற்கவன் "நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்" எனக் கூறிவிட்டான். (அப்துல் ஹமீது பாகவி)

அந்த நேரத்தை நினைவுகூரும். உம் இறைவன், மலக்கு (வானவர்)களை நோக்கி, “நான் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) பூமியில் ஏற்படுத்தப் போகின்றேன்என்று கூறினான். (அப்போது) அவர்கள், “பூமியில், அதன் ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்து, மேலும் இரத்தஞ் சிந்தக் கூடியவரையா அதில் (பிரதிநிதியாக) நீ ஏற்படுத்தப் போகின்றாய்? நாங்கள்தாம் உன்னைப் புகழ்ந்து துதிபாடி, உன் தூய்மையைப் போற்றிக் கொண்டு இருக்கின்றோமே!என வினவினார்கள். அதற்கு இறைவன் கூறினான்: நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன். (IFT)


 (நபியே!) இன்னும், உமதிரட்சகன் மலக்குகளிடம், “நான் பூமியில் (என்னுடைய) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஆக்கப் போகிறேன்”, எனக்கூறிய சமயத்தில் அ(தற்க)வர்கள்,” (இரட்சகா!) அதில் விஷமம் செய்து இரத்தம் சிந்தக் கூடியவரையா நீ அதில் ஆக்கப்போகிறாய்? நாங்களோ உன்னுடைய புகழைக்கொண்டு உன்னைத் துதிக்கிறோம்; உன்னுடைய பரிசுத்தத் தன்மையைப் போற்றுகிறோம்என்று கூறினர்; (அதற்கு)நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் நன்கறிந்திருக்கிறேன்என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான் (என்பதை நினைவு கூர்வீராக!) (மன்னர் ஃபஹத் வளாகம் சவூதி)














No comments: