இந்த (2:29) வசனத்தின் தமிழாக்க மொழி பெயர்ப்புகளில்
1. அவன், அவனே, அவன்தான், அ(வ்விறை)வன்.
1. அவன், அவனே, அவன்தான், அ(வ்விறை)வன்.
2. எவன் - எத்தகையவன் - எப்படிப்பட்டவன்
3. அனைத்தையும் - எல்லாவற்றையும்
4. பின்னர் – பின்பு – பின்னும் - பிறகு - அப்பால்
5. ஒவ்வொரு - எல்லா - அனைத்து
6. அறிந்தவன் - நன்கு அறிபவன். -நன்கு அறிந்தவன்- நன்கறின்றவன் - ஆழ்ந்தறிபவன் -முழுமையாக அறிந்தவன் முற்றும் அறிந்தவன்
ஆகியவை இடம் பெற்றுள்ளன. வார்த்தைகள் வேறு வேறாக இருந்தாலும் பொருள் - கருத்து ஒன்றுதான்.
அது போல் து(ஸு)ம்மஸ்தவாா இலாஸ்ஸமாஃயி ல் உள்ள இ)ஸ்தவாா வுக்கு
அது போல் து(ஸு)ம்மஸ்தவாா இலாஸ்ஸமாஃயி ல் உள்ள இ)ஸ்தவாா வுக்கு
(வானத்தின் பக்கம்) முற்பட்டான்,
(வானின்பால்) முன்னோக்கி,
(வானத்தின்)
பக்கம் கவனம்
செலுத்தி,
(வானத்தை) படைக்கக் கருதி,
(வானத்தை) நாடி என்ற
தமிழாக்கங்களும். பிறகு வரும் Fபஸவ்வாவுக்கு
ஒழுங்காக்கினான்,
ஒழுங்கு செய்தான்,
ஒழுங்குபடுத்தினான்,
செம்மைப்படுத்தினான்,
செவ்வையாக்கினான்.
கை என்பது தனித்து வந்தால் பெரும்பாலும் கை என்ற நேரடி பொருள் தான் தரும். தும்பிக்கை, உலக்கை, நம்பிக்கை, தணிக்கை, வழக்கை, வாழ்க்கை, வழுக்கை என்ற வார்த்தைகளை எடுத்துக் கொண்டால். நமக்கு தமிழ் தெரிந்ததால் வெறுமனே கை என்ற நேரடி பொருள் கொள்ள மாட்டோம்.
வீரப் பெண்மணி உலக்கையால் புலியை அடித்துக் கொன்றாள். இதில் கை என்ற வார்த்தை வருவதால் ஆங்கிலத்தில் With her hand என்று மொழி பெயர்த்தால். வீரப் பெண்மணி அவள் கையால் புலியை அடித்துக் கொன்றாள் என்ற தவறான பொருள் வரும்.
கைக்கு கரம் என்ற சொல்லும் உண்டு. அதனால் வழுக்கை என்பதை வழுக்கரம் என்றால் சரியான பொருள் வருமா? ஆகவே ஆய்வுகள் பொருத்தமாக இருக்க வேண்டும்.
தமிழ் போன்ற மொழிகளில் ஒரு வார்த்தைக்கு முன் உள்ள சொல்லை சேர்த்தால் தான் சரியான பொருள் தரும். அது போல் அரபியில் ஒரு வார்த்தைக்கு பிறகு வரும் சொல்லை சேர்த்தால் தான் சரியான பொருள் தரும்.
வானத்தைப் படைக்கக் கருதி என்று அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மொழி பெயர்த்துள்ள மாதிரியான வார்த்தைகள் தான் சரியானவை பொருத்தமானவை.. அந்த இடத்தில் அவரது பெயரர் உமர் ஷரீFப்) அவர்கள் வானத்தின் மேல் (தனது கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்தான். என்றும் K,S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி சமமானான் என்றும் நேரடி மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.
எவ்வளவு பெரிய மேதைகள் கூடி முடிவு செய்தாலும் தவறுகள் ஏற்படத்தான் செய்யும். இது போன்றவற்றை எழுதும் போது சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் விளக்கம் தான் தர வேண்டும். அதை விடுத்து
நீ யார்? அரபு நாட்டில் ஆடு மேய்ப்பவன் என விமர்சிப்பார்கள். ஹஜரத்கள் எவ்வளவு பெரியவர்கள் தெரியுமா? எத்தனை வரலாறுகள் எழுதி உள்ளார்கள் என சம்பந்தமில்லாததை பதிலாக சொல்லி ஹஜரத்கள் புகழ் பாடுவார்கள்.
நன்கு ஆலோசித்து, சிந்தித்து தான் செயல்பட்டு இருப்பார்கள். விபரம் இல்லாமலா செயல்பட்டு இருப்பார்கள் என கேள்வி கேட்பார்கள். அந்த விபரத்தை நன்கு ஆலோசித்ததை, சிந்தித்ததை வெளியிட்டு விட்டால். கேள்வி கேட்டவர்களும் விளங்கிக் கொள்வார்கள் அல்லவா? அதை மட்டும் செய்ய மாட்டார்கள்.
2:29ல் இந்த இடத்தில் ஒழுங்குபடுத்தினான் போன்ற வார்த்தைகளே சரியானவை, பொருத்தமானவை. உயர்ந்தான், சமமானான் என்பவை நேரடி மொழி பெயர்ப்பு என்றாலும் இந்த இடத்தில் பொருத்தமானவை அல்ல.
இனி வார்த்தைக்கு வார்த்தையை பார்ப்போம்
ஒழுங்காக்கினான்,
ஒழுங்கு செய்தான்,
ஒழுங்குபடுத்தினான்,
செம்மைப்படுத்தினான்,
செவ்வையாக்கினான்.
சீரமைத்தான்,
வான்வெளியைச் சீரமைக்கலானான்.
ஆகியவை மொழி பெயர்ப்புகளில் இடம் பெற்றுள்ளன. வார்த்தைகள்
வேறு வேறாகவோ சிறு வித்தியாசங்களுடனோ இருந்தாலும் பொருள் - கருத்து ஒன்றுதான். சமமானான், உயர்ந்தான். என்ற நேரடி பொருளையும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள். இது சரியா? இந்த இடத்தில் பொருத்தமான மொழி பெயர்ப்பா?கை என்பது தனித்து வந்தால் பெரும்பாலும் கை என்ற நேரடி பொருள் தான் தரும். தும்பிக்கை, உலக்கை, நம்பிக்கை, தணிக்கை, வழக்கை, வாழ்க்கை, வழுக்கை என்ற வார்த்தைகளை எடுத்துக் கொண்டால். நமக்கு தமிழ் தெரிந்ததால் வெறுமனே கை என்ற நேரடி பொருள் கொள்ள மாட்டோம்.
வீரப் பெண்மணி உலக்கையால் புலியை அடித்துக் கொன்றாள். இதில் கை என்ற வார்த்தை வருவதால் ஆங்கிலத்தில் With her hand என்று மொழி பெயர்த்தால். வீரப் பெண்மணி அவள் கையால் புலியை அடித்துக் கொன்றாள் என்ற தவறான பொருள் வரும்.
கைக்கு கரம் என்ற சொல்லும் உண்டு. அதனால் வழுக்கை என்பதை வழுக்கரம் என்றால் சரியான பொருள் வருமா? ஆகவே ஆய்வுகள் பொருத்தமாக இருக்க வேண்டும்.
தமிழ் போன்ற மொழிகளில் ஒரு வார்த்தைக்கு முன் உள்ள சொல்லை சேர்த்தால் தான் சரியான பொருள் தரும். அது போல் அரபியில் ஒரு வார்த்தைக்கு பிறகு வரும் சொல்லை சேர்த்தால் தான் சரியான பொருள் தரும்.
வானத்தைப் படைக்கக் கருதி என்று அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மொழி பெயர்த்துள்ள மாதிரியான வார்த்தைகள் தான் சரியானவை பொருத்தமானவை.. அந்த இடத்தில் அவரது பெயரர் உமர் ஷரீFப்) அவர்கள் வானத்தின் மேல் (தனது கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்தான். என்றும் K,S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி சமமானான் என்றும் நேரடி மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.
எவ்வளவு பெரிய மேதைகள் கூடி முடிவு செய்தாலும் தவறுகள் ஏற்படத்தான் செய்யும். இது போன்றவற்றை எழுதும் போது சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் விளக்கம் தான் தர வேண்டும். அதை விடுத்து
நீ யார்? அரபு நாட்டில் ஆடு மேய்ப்பவன் என விமர்சிப்பார்கள். ஹஜரத்கள் எவ்வளவு பெரியவர்கள் தெரியுமா? எத்தனை வரலாறுகள் எழுதி உள்ளார்கள் என சம்பந்தமில்லாததை பதிலாக சொல்லி ஹஜரத்கள் புகழ் பாடுவார்கள்.
நன்கு ஆலோசித்து, சிந்தித்து தான் செயல்பட்டு இருப்பார்கள். விபரம் இல்லாமலா செயல்பட்டு இருப்பார்கள் என கேள்வி கேட்பார்கள். அந்த விபரத்தை நன்கு ஆலோசித்ததை, சிந்தித்ததை வெளியிட்டு விட்டால். கேள்வி கேட்டவர்களும் விளங்கிக் கொள்வார்கள் அல்லவா? அதை மட்டும் செய்ய மாட்டார்கள்.
2:29ல் இந்த இடத்தில் ஒழுங்குபடுத்தினான் போன்ற வார்த்தைகளே சரியானவை, பொருத்தமானவை. உயர்ந்தான், சமமானான் என்பவை நேரடி மொழி பெயர்ப்பு என்றாலும் இந்த இடத்தில் பொருத்தமானவை அல்ல.
இனி வார்த்தைக்கு வார்த்தையை பார்ப்போம்
هُوَ - ஹுவ
அவன்
الَّذِي - அல்லதீ(ரீ)
எவன் - எத்தகையவன் - எப்படிப்பட்டவன்
خَلَقَ -ஃகலஃக
படைத்தான்
لَـكُمْ - லகும்
உங்களுக்காக - உங்களுக்கு
مَّا - மா
எவற்றை
فِي الْأَرْضِ - F பில்அர்ழி
பூமியில்
جَمِيعًا- ஜமீஃஅன்
جَمِيعًا- ஜமீஃஅன்
அனைத்தும் - அனைத்தையும் - எல்லாவற்றையும்
ثُمَّ- து(ஸு)ம்ம
பின்னர் – பின்பு – பின்னும் - பிறகு - அப்பால்
اسْتَوٰۤى - (இ)ஸ்தவாா
நாடி - கருதி - சீரமைத்தான் - உயர்ந்தான் - சமமானான்
اِلَى ا - இலா
மேல் - (அதன்)பால் பக்கம் - (அதன்)பால்
السَّمَآءِ-(அஸ்) ஸமாஃயி
வானத்தின் - வானத்தை
فَسَوَّا - Fபஸவ்வா
ஒழுங்கு படுத்தினான் – ஒழுங்காக்கினான்
- அமைத்தான்- செவ்வையாக்கினான் - செம்மைப்படுத்தினான்
هُنَّ -ஹுன்ன
அவற்றை - அவைகளை
سَبْعَ -ஸப்ஃஅ
ஏழு (7)
سَمٰوٰتٍؕ - ஸமாவாதின்
வானங்களாக - வானங்கள்
وَ - வ
இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி ( வாவு பற்றிய விபரங்களை 2 : 5ல்
விளக்கி உள்ளோம்)
هُوَ - ஹுவ
அவன்
بِكُلِّ -பி குல்லி
ஒவ்வொரு - எல்லா - அனைத்து
شَىْءٍ -ஷய்ஃயின்
பொருளையும் - பொருள்
عَلِيْمٌ- ஃஅலீ(முன்)ம்
அறிந்தவன் - நன்கு அறிபவன். -நன்கு அறிந்தவன்- நன்கறின்றவன் - ஆழ்ந்தறிபவன் -முழுமையாக அறிந்தவன் முற்றும் அறிந்தவன்
هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
ஹுவல்லதீ(ரீ) ஃகலஃக லகும் மாFபில்அர்ழி ஜமீஃஅன்
து(ஸு)ம்மஸ்தவாா இலாஸ்ஸமாஃயி Fபஸவ்வா ஹுன்ன ஸப்ஃஅ ஸமாவாதின் வ ஹுவ
பி குல்லி ஷய்ஃயின் ஃஅலீ(முன்)ம்
அவன்தான் பூமியிலுள்ள
அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வான்வெளியைச் சீரமைக்கலானான். அஃதை
ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அவன் ஒவ்வொன்றையும் ஆழ்ந்தறிபவன். (அதிரை ஜமீல்)
அவனே பூமியில் உள்ள
அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை507 நாடி, அவற்றை ஏழு வானங்களாக507 ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (P.J)
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான், பின் அவன் வானத்தின் பக்கம் சமமானான், அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். (KSR)

அ(வ்விறை)வன்
எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான்.
அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (ஜான்)
அ(வ்விறை)வன்
எத்தகையவனெனின் பூமியிலுள்ளவை அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான் பின்னர் அவன் வானின்பால் முன்னோக்கி, அப்பால் அவற்றை ஏழு
வான்களாக ஒழுங்கு செய்தான் அன்றியும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகின்றவன் (அன்வாருல் குர்ஆன்)
அவன்
எத்தகையவனென்றால், பூமியில் உள்ள எல்லாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான் பின் அவன் வானத்தின் பக்கம்
கவனம் செலுத்தி அவற்றை ஏழு வானங்களாகச் செம்மைப்படுத்தினான்.
இன்னும் அவன் அனைத்துப் பொருட்களையும் முழுமையாக
அறிந்தவன். (ஸலாமத் பதிப்பகம்)
அவன்தான்
பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப்
படைத்தான் பின்னர் அவன் வானங்களின் பக்கம் கவனம் செலுத்தி அவற்றை ஏழு வானங்களாகச் சீரமைத்தான்.
அவன் எல்லா பொருட்களையும் நன்கறிந்தவன்.
(றஹ்மத்)
(அல்லாஹ்வாகிய)
அவன் எத்தகையவனென்றால், பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காக
அவன் படைத்தான். பின் அவன் வானத்தின் பக்கம் அவன் கவனம் செலுத்தி அவற்றை ஏழு வானங்களாகச் செவ்வையாக்கினான்.
மேலும் அவன் (அவற்றிலுள்ள) ஒவ்வொரு பொருளையும்
முற்றும் அறிந்தவனாக இருக்கிறான். (திரீயெம் பிரிண்டர்ஸ்)
(அல்லாஹ்வாகிய)
அவன் எத்தகையவனென்றால் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காக
அவன் படைத்தான். பின்னர் அவன் வானத்தை படைக்கக் கருதி அவன் அவற்றை ஏழு வானங்களாக செவ்வையாக்கினான். மேலும் அவன் (அவற்றிலுள்ள) ஒவ்வொரு பொருளையும்
முற்றும் அறிந்தவனாக இருக்கிறான்
(மலிவு)
(அல்லாஹ்வாகிய)
அவன் எத்தகையவனென்றால், அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப்
படைத்தான். பின்னர் வானத்தின் பால் அவன் கவனம் செலுத்தி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு செய்தான் மேலும் அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகின்றவன் (பஷாரத்)
அவன்
பூமியிலுள்ளவற்றை உங்களுக்காகப் படைத்தான்.
பிறகு வானத்தின் மேல் (தனது கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்தான். அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். அவன் எல்லா பொருளையும் நன்கறிந்தவன் (உமர் ஷரீFப்)
அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள
அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். மேலும், அவன் வானத்தைப் படைக்கக் கருதி அதனை ஏழாகவும் அமைத்தான்.
அன்றி (அவற்றிலும் அகிலத்திலும் உள்ள) அனைத்தையும் அவன் நன்கறிந்தவனாகவும்
இருக்கிறான். (அப்துல் ஹமீது
பாகவி)
அவனே பூமியிலுள்ள அனைத்தையும்
உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக
அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும்
நன்கறிந்தவனாக இருக்கின்றான். ( இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்)
அவன் எத்தகையவனென்றால், பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காக
அவன் படைத்தான்; பின்னர் அவன் வானத்தை
படைக்க கருதியபோது அவைகளை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். மேலும் அவன் ஒவ்வொரு
பொருளையும் நன்கறிகின்றவன். ( மன்னர் ஃபஹத் வளாகம்)
No comments:
Post a Comment