Tuesday, July 9, 2019

2:28. உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள்

திரீயெம் பிரிண்டர்ஸ், கோவை, சென்னை மலிவு பதிப்புகளில் உள்ள மொழி பெயர்ப்புகள்.  பிறை ஆசிரியர் M. அப்துல் வஹ்ஹாப் M.A. B.Th,  K.A. நிஜாமுத்தீன் மன்பஈ ,  R.K. அப்துல் காதர் பாகவி  ஆகியோர் மொழி பெயர்த்தது தான். 2:28ல் உள்ள (மறுமை நாளில்) என்று அடைப்புக் குறிக்குள் உள்ள ஒரு வார்த்தை மட்டும் மலிவு பதிப்பில் கூடுதலாக  இடம் பெற்று  இருக்கும்.

அவன்பாலே என்று இருந்த பழைய தமிழ்  அவன் பக்கம் என்றாகி இப்பொழுது அவனிடமே  என்று நடைமுறையில் உள்ள.  இந்த மாதிரி பழைய தமிழ்  தமிழ்களையும் நடைமுறைத் தமிழ்களையும் 14 தமிழாக்கங்கள் மூலம் அறியலாம்.

كَيْفَ - கைFப  

எப்படி? - எவ்வாறு?

 تَكْفُرُوْنَ - தக்Fபுரூன 

மறுக்கிறீர்கள்  நிராகரிக்கிறீர்கள் 

 بِاللّٰهِ பில்லாஹி 

அல்லாஹ்வை

وَڪُنْتُمْ - வகுன்தும் 
இருந்த உங்களுக்குஇருந்தீர்கள்இருந்தீர்களே

اَمْوَاتًا  -  அம்வாதன்
உயிரற்று – உயிரற்றவர்கள் – உயிரற்றவர்களாய் - இறந்தவர்களாக - மரித்தவர்களாக


 فَاَحْيَا - Fபஅஃஹ்யா

உயிரூட்டினான்உயிர்ப்பித்தான்

کُمْ‌ۚ - கும்  
உங்களை – உங்களுக்கு 

ثُمَّ - து(ஸு)ம்ம

பின்னர் – பின்பு – பின்னும் - பிறகு

يُمِيْتُ - யுமீது 

மரணமடைய – மரணிக்க – மரிக்க - இறக்கச் செய்வான் - 

كُمْ - கும்  
உங்களை  

ثُمَّ - து(ஸு)ம்ம

பின்னர் – பின்பு – பின்னும் - பிறகு


 يُحْيِيْ-யுஃஹ்யீ

உயிர்ப்பிப்பான்உயிர் பெறச் செய்வான் – உயிர் கொடுப்பான்

كُمْ -கும்
உங்களை - உங்களுக்கு


ثُمَّ - து(ஸு)ம்ம 

பின்னர் – பின்பு – பின்னும் - பிறகு

اِلَيْهِ - இலைஹி 
அவனிடமேஅவன் பக்கம் - அவன்பாலே

تُرْجَعُوْنَ‏ - துர்ஜஃஊ(ன)ன்
திருப்பப்படுவீர்கள் - திருப்பி கொண்டு வரப்படுவீர்கள் - மீட்கப்படுவீர்கள்  மீட்டப்படுவீர்கள் - மீண்டு வருவீர்கள்


كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ‌ۚ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ

2:28. கைF  தக்Fபுரூன  பில்லாஹி வகுன்தும்  அம்வாதன்  Fபஅஃஹ்யாகும்  து(ஸு)ம்ம யுமீதுகும் து(ஸு)ம்ம யுஃஹ்யீ கும் து(ஸு)ம்ம இலைஹி துர்ஜஃஊ(ன)ன்
  

1. (இறை மறுப்பாளர்களே!) நீங்கள் எப்படித்தான் அல்லாஹ்வை நம்ப மறுக்கின்றீர்களோ? உயிரற்ற நிலையில் இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை இறக்கச் செய்வான். மீண்டும் உங்களுக்கு உயிர் கொடுப்பான். நீங்கள் அவனிடமே மீண்டு வருவீர்கள். (அதிரை ஜமீல்)


2. அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்று இருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்!441( P.J.) 

உயிரற்றதில் இருந்து படைக்கப்பட்ட உயிரினங்கள்  பற்றிய  விஞ்ஞான விபரங்களை அறிய அதன் மீது கிளிக் செய்யவும்

3. நீங்கள் அல்லாஹ்வை எப்படி(த்தான்) நிராகரிக்கிறீர்கள்மரித்தவர்களாக  (-இல்லாமையானவர்களாக)  இருந்தீர்கள்.  அப்பொழுது அவன் உங்களை உயிர்ப்பித்து (-உண்டாக்கி) வைத்தான். பின்னர் உங்களை அவன் மரிக்கச் செய்வான் (அதன்)  பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்பு நீங்கள் (இறுதி நாளில்) அவன்பால் மீட்டப்படுவீர்கள் (அன்வாருல் குர்ஆன்) 



4. நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிக்கிறீர்கள்நீங்கள் உயிரற்றவர்களாக இருந்தீர்கள் அவன்தான் உங்களுக்கு உயிர் கொடுத்தான். பிறகு அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு அவனே உங்களை (மீண்டும்) உயிர்ப்பிப்பான். பின்னர் நீங்கள் அவனிடத்திலேயே மீட்டப்படுவீர்கள். (ஸலாமத் பதிப்பகம்) 

5. (மக்களே!) நீங்கள்  அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்நீங்கள்  உயிரற்றவளாய்  (வெறுமையாய்) இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர் அவனே உங்களை இறக்கச் செய்வான். பின்னர்  (மீண்டும்) உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள் (றஹ்மத் அறக்கட்டளை)

6. நீங்கள்  அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? இறந்தவர்களாக இருந்தீர்களே! உங்களை உயிர்ப்பித்தான் பிறகு  உங்களை மரணிக்கச் செய்கிறான் பிறகு  உங்களை உயிர்ப்பிப்பான்.    பிறகு   அவனிடமே  திருப்ப்படுவீர்கள். (உமர் ஷரீFப்)



7,8 நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டு வரப் படுவீர்கள்(ஜான், இம்தாதி)



9. (மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? உயிரற்றவர்களாக இருந்த உங்களை அவனே உயிர்ப்பித்தான். பின்னும் அவனே உங்களை மரணிக்கச் செய்வான். பின்னும் அவனே உங்களை உயிர்ப்பிப்பான். அதன் பின்னும் நீங்கள் (உங்கள் செயல்களுக்குரிய கூலியை அடைவதற்காக) அவனிடமே (விசாரணைக்குக்) கொண்டு வரப்படுவீர்கள்.(அப்துல் ஹமீது பாகவி)


10. அல்லாஹ்வை நிராகரிக்கும் போக்கினை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? (உண்மை யாதெனில்) நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிரூட்டினான். பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்வான். பின்னர் (மீண்டும்) அவனே உங்களுக்கு உயிர் கொடுப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்(IFT)


11. (மனிதர்களே!) அல்லாஹ்வை எவ்வாறு நீங்கள் நிராகரிக்கிறீர்கள்? நீங்களோ உயிரற்றவர்களாக இருந்தீர்கள்; பின்னர் உங்களை அவன் உயிர்ப்பித்தான்; (அதன்) பின்னும் நீங்கள் (உங்கள் வினையின் பலனை அடைவதற்காக) மீட்கப்படுவீர்கள். (மன்னர் ஃபஹத் வளாகம்)


12. (மனிதர்களே!)  நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை  நிராகரிக்கிறீர்கள்உயிரில்லாதவர்ளாக  நீங்கள் இருந்தீர்கள்.  பின்னர் அவனே  உயிர்ப்பித்தான் பின்னர் உங்களை இறக்கச் செய்வான்  பின்னரும் உங்களை உயிர்ப்பிப்பான். அதன்  பின்னர்  அவன்பாலே  நீங்கள் (மறுமையின் விசாரணைக்காக) மீட்டப்படுவீர்கள்.

13,14 எவ்வாறு அல்லாஹ்வை   நீங்கள்  நிராகரிக்கிறீர்கள்?  உயிரற்றோராக  நீங்கள்  இருந்தீர்கள். - பின்னர்  உங்களை  அவன்  உயிர்ப்பித்தான் பின்பு  உங்களை அவன்  மரிக்கச் செய்வான் மீண்டும் உங்களை (மறுமை நாளில்) உயிர் பெறச் செய்வான்; பிறகு அவன் பக்கமே  நீங்கள் மீட்டப்படுவீர்கள். (திரீயெம் பிரிண்டர்ஸ்,மலிவு பதிப்பு)

No comments: