Monday, July 15, 2019

2:34 யார் இப்லீஸ்? என்பதல்ல தலைப்பு யார் இந்த இப்லீஸ்…? என்பதே


قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ

ஃகுல்னா லில்மலாயிகதிஸ்ஜுதுா லிஆதம Fபஸஜதுாா இல்லா இப்லீஸ்


நாம் வானவர்களுக்குக் கூறினோம் "ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று அப்போது இப்லீஸைத்  தவிர அனைவரும் பணிந்தனர். இது  2:34 வசனத்தில் உள்ள ஒரு பகுதி. இதில் ஒரு எழுத்து கூட பிசகமால் அப்படியே  7:11, 17:61, 18:50, 20:116,  ஆகிய நான்கு வசனங்களிலும் இடம் பெற்றுள்ளன. அதே மாதிரி, 

 فَسَجَدَ الْمَلٰٓٮِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ إِلَّا إِبْلِيسَ

Fபஸஜதல் மலாயிகது குல்லுஹும் அஜ்மஃஊ(ன)ன்(15:30,38;73) . இல்லா இப்லீஸ் (15:31,  38;74)

வானவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணிந்தனர்.(15:30,38;73)  இப்லீஸைத்  தவிர  (15:31,  38;74) என்று (15:30,31,  38;73,74)  ஆகிய இரு இடங்களில் இடம் பெற்றுள்ளது.


இது சம்பந்தமான ஏழு வசனங்களையும் படிக்கும் முஸ்லிம் அல்லாதவர்கள். முதன் முதலில் படிக்கும் முஸ்லிம்கள். மேலும் மேலோட்டமாகவும் கவனம் இல்லாமலும் அரைகுறையாக பார்ப்பவர்கள். இப்லீஸும்  வானவர்களில் ஒருவனாக இருந்தான் என்றே விளங்க வாய்ப்புகள் உள்ளன.  

காரணம், வானவர்களுக்குக் கட்டளையிட்டான். அனைவரும் ஒட்டு மொத்தமாகப் பணிந்தனர். இப்லீஸைத்  தவிர என்று கூறப்பட்டுள்ளது. அதனால் இப்லீஸும் வானவர்களில் ஒருவனாக இருந்தான் என்ற கருத்தைத் தருவது போல் அமைந்துள்ளன. (அப்படி விளங்கி பேசியவர்களும் இருக்கிறார்கள். அதைக் குறிப்பிட்டால் தனி நபர் விமர்சனம் என்றாகி விடும். நமது நோக்கமும் அதுவல்ல)


அரபி இலக்கணத்தில் ஒரு கட்டளையை பின்பற்றுவதற்கென்று ஓர் முறை உள்ளது. அதற்கு ‘தக்லீப்’ என்று பெயர். அந்த முறைப்படி – பெரும்பாலானவர்களுக்கு இடப்படக்கூடிய கட்டளை -சிறுபான்மையாக உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்ற அரபி இலக்கணத்தை எழுதினால் அதுவும் போரடித்து விடும். ஆகவே குர்ஆன் ஹதீஸிலிருந்து மட்டும் பார்ப்போம்.


குர்ஆனின் வசனங்களுக்கு  குர்ஆனின் வசனங்களே  விளக்கம் என்ற அடிப்படையில் ”அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்” என்ற 18:50 வது  வசனம் தெளிவைத் தருகிறது. 

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். "ஜின்"கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். என்ற நபி(ஸல்) மொழியும்   (முஸ்லிம் 5722.இப்லீஸ் வானவர்களைச் சேர்ந்தவனல்ல என்பதற்கு    விளக்கமாக உள்ளது. 

ஜின்கள்  நெருப்பால்  படைக்கப்பட்டார்கள்  என்பதற்கு  7:12,   15:27 ,   55:15.    ஆகிய  வசனங்களும் ஆதாரங்களாக உள்ளன. 


அல்லாஹ்வின் கட்டளைகளை மீற முடியாத தன்மை/இயல்பு உடையவர்களாகவே வானவர்கள் படைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு  16:49, 16:50, 21:19, 21:27, 66:6 ஆகிய வசனங்கள் ஆதாரங்களாக உள்ளன. .

இப்லீஸ் வானவர்களில் உள்ளவனாக இருந்தால் அல்லாஹ்வின் கட்டளையை மீறி இருக்க மாட்டான், மீறி இருக்க முடியாது என்பதற்கும் இந்த 16:49, 16:50, 21:19, 21:27, 66:6 வசனங்கள் ஆதாரங்களாக உள்ளன. .

வானவர்கள் ஆண் பெண் என்ற பாலினத்துக்கு அப்பாற்பட்டவர்கள். ஆகவே அவர்களுக்குச் சந்ததிகள் கிடையாது. 

என்னையன்றி (இப்லீஸாகிய) அவனையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? (18:50) என்ற வசனம் இப்லீஸுக்குச் சந்ததிகள்/வாரிசுகள் உண்டு என்பதற்கு ஆதாரமாக உள்ளது. ஆகவே இப்லீஸ் வானவர் இனத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பது தெளிவு.


இங்கிருந்து நீ வெளியேறு! (15:34,38:77,)  என்ற  வசனங்கள் மூலம்   வானுலகிலிருந்து  வெளியேற்றப்படும் வரை இப்லீஸ்  வானவர்களுடன் வானில் இருந்துள்ளான்  என்பதற்கு விளக்கமாக உள்ளன. 

மேலும் இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள  மிக  முக்கியமான  வார்த்தைகள்   அஸ்ஜுதுா,     ஸஜதுாா  ஆகியவை. இந்த இரு  வார்த்தைகளும் சிந்தித்து ஆய்வு செய்ய வேண்டியவை.  

அஸ்ஜுதுா என்பதற்கு ஸுஜூது  செய்யுங்கள்   என்றும் . ஸஜதுாா  என்பதற்கு  ஸுஜூது செய்தனர்  என்றும் அரபி வாசகத்தை அப்படியே சிலர் இடம் பெறச் செய்துள்ளனர். 

அஸ்ஜுதுா என்பதற்கு சிரம்  பணியுங்கள் சிரம்  தாழ்த்துங்கள் என்றும்  ஸஜதுாா  என்பதற்கு    சிரம் பணிந்தார்கள்; சிரம்  தாழ்த்தினர் என்றும்  மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.  இது விரிவாக விளக்கப்பட வேண்டிய ஒன்று.  இதற்கு சரியான மொழி பெயர்ப்பு  என்ன என்பதற்கு 2:58, 4:154, 7:161, 22:18 ஆகிய வசனங்களே விளக்கமாக உள்ளன.  அவை பற்றிய விரிவான விளக்கத்தை இன்ஷா அல்லாஹ் பின்னர் வெளியிடுவோம்

இப்பொழுது 2:34ன் சொல்லுக்கு சொல்லையும் 15 தமிழாக்கங்களையும்  பார்ப்போம்


 وَ -     
இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி  
 ( வாவு பற்றிய விபரங்களை 2 : 5ல் விளக்கி உள்ளோம்)

 اِذْ- இது(ர்)
போது - சமயம் (ல் - ட்டால் போன்ற துணைச் சொல் இது தனித்து பொருள் தராது)


قُلْنَا ஃகுல்னா 
நாம் கூறினோம், சொன்னோம்

 لِلْ- லில் 

க்கு -(ளி)டம்

مَلٰٓٮِٕكَةِ- மலாயிக(தி)
வானவர்கள்


لِلْمَلَائِكَةِலில்மலாயிகதி 

வானவர்களுக்கு -  வானவர்களிடம்  


اسْجُدُواஅஸ்ஜுதுா 

பணியுங்கள் - ஸுஜூது செய்யுங்கள், 

لِ- லி
க்கு 

اٰدَمَ- ஆதம

لِآدَمَலிஆதம 
ஆதமுக்கு, ஆதத்துக்கு 

فَ - Fப
ஆகவே

سَجَدُوْٓا - ஸஜதுாா 
பணிந்தார்கள்.


إِلَّاஇல்லா
தவிர

إِبْلِيسَ - இப்லீஸ்


أَبَىٰ அபா 
மறுத்தான்


وَاسْتَكْبَرَவஸ்தக்பர 

பெருமையடித்தான் - பெருமை கொண்டான் - ஆணவம் கொண்டான் - செருக்கி நின்றான் -கர்வம் கொண்டான்.


وَكَانَவகான 
ஆகிவிட்டான்

مِنَ الْكَافِرِينَ -மினல் காFபிரீ(ன)ன்.

மறுப்பவனாக ஆகி - நிராகரிப்பவர்களில் 




وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ﴿٣٤﴾

இது(ர்) ஃகுல்னா லில்மலாயிகதிஸ்ஜுதுா லிஆதம Fபஸஜதுாா இல்லா இப்லீஸ் அபா வஸ்தக்பர வகான மினல் காFபிரீ(ன)ன்.


1. பின்னர், "ஆதத்துக்குப் பணியுங்கள்" என்று நாம் வானவர்களுக்குச் சொன்னபோது இபுலீஸைத் தவிர மற்ற அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்; செருக்கி நின்றான்; (எனவே,) இறை மறுப்பாளர்களுள் ஒருவனாகி விட்டான். (அதிரை ஜமீல்)

2. "ஆதமுக்குப் பணியுங்கள்!''11 என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத்509 தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான். (PJ)

3. நாம் வானவர்களிடம் நீங்கள் "ஆதமுக்குப் பணியுங்கள் என்று கூறினோம். அப்போது இப்லீஸைத்தவிர அனைவரும் பணிந்தனர்; அவன் மறுத்து பெருமை கொண்டான். இன்னும் நிராகரிப்பாளர்களுள் ஒருவனாகவும் ஆகி விட்டான். (ஸலாமத் பதிப்பகம்)

4. பின்னர், “நீங்கள் ஆதத்துக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்கு நாம் கட்டளையிட்டபோது அவர்கள் எல்லாரும் பணிந்தார்கள், இப்லீஸைத் தவிர! அவன் கட்டளையை மறுத்தான். மேலும் ஆணவம் கொண்டுவிட்டான்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் - IFT)

5. மேலும் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்கு   ஸுஜூது  செய்)யுங்கள்  என்று  நாம் சொன்ன போது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் ஸுஜூது செய்தனர்.  (இப்லீஸாகிய) அவன் மறுத்தான்; பெருமை கொண்டான்;  இன்னும் அவன் காஃபிர்களில் உள்ளவனாகி விட்டான். ( திரீயெம் ) 



6. மேலும் வானவர்களை நோக்கி, “ஆதமுக்கு   சிரம்  பணியுங்கள்  என்று  நாம் சொன்ன போது இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தார்கள் (இப்லீஸாகிய) அவன் மறுத்தான்; பெருமை கொண்டான்;  இன்னும் அவன் நிராகரிப்பாளர்களில் உள்ளவனாகி விட்டான். ( மலிவு பதிப்பு ) 


(திரீயெம்,  மலிவு பதிப்பு  இரண்டுமே ஒரே அறிஞர்கள் குழுவின் மொழி பெயர்ப்புகள் தான்)

7. மேலும் நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்கு   சிரம்  தாழ்த்துங்கள் (ஸஜதா  செய்)யுங்கள்என்று கூறியபொழுது இப்லீஸைத் தவிர அவர்கள் (அனைவரும்) சிரம் தாழ்த்தினர். (இப்லீஸாகிய) அவன் மறுத்தான்; (நானே பெரியவன் என்று) ஆணவங் கொண்டான் மேலும் (அல்லாஹ்வின் கட்டளையை) நிராகரிப்போரில் அவன் ஆகி விட்டான். (பஷாரத்)


8.அன்றியும்  ஆதமிற்கு ஸுஜூது  செய்(து சிரம் பணி)யுங்கள் என்று  நாம்மலக்குகளுக்குக் கூறிய பொழுது இப்லீஸைத் தவிர்த்து (அனைவரும்) ஸுஜூது செய்தனர். (இப்லீஸாகிய) அவன் (மட்டும்  ஸுஜூது செய்ய) மறுத்தான். (தானே பெரியவன் எனக்) கர்வமுங் கொண்டான் (இறைக் கட்டளையை) நிராகரிப்போரில் அவனும் ஆகி விட்டான். (இ.எம். அப்துர் ரஹ்மான் நுாரி, ஃபாஸில், பாகவி)

9. நீங்கள் ஆதமுக்கு   சிரம்  பணியுங்கள்   என்று   நாம்  வானவர்களிடம் கூறிய போது (அங்கிருந்த) இப்லீஸைத் தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர். கர்வம் கொண்டு மறுத்து விட்டான். இறை மறுப்பாளர்களில் ஒருவானாகவும் அவன் ஆகி விட்டான். (றஹ்மத்)

10. பின்னர் நாம் வானவர்களிடம் ஆதமுக்கு  ஸுஜூது  செய்)யுங்கள்  என்று கூறிய போது  இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் ஸுஜூது செய்தனர். அவன் மறுத்தான் பெருமையும் கொண்டான். அவன் நிராகரிப்பாளர்களில் ஆகி விட்டான். (தாருஸ்ஸலாம்ரியாத்)





11. 12 பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்ன போது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்அவன் (இப்லீஸு) மறுத்தான்ஆணவமும் கொண்டான்;  இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்த வனாகி விட்டான். ( 11KSR, 12ஜான் )


13. ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக ஆகவே,   இப்லீஸைத்தவிர  (அனைவரும்)  சிரம்  பணிந்தார்கள். ;அவன் மறுத்தான்பெருமையடித்தான். நிராகரிப்பாளர்களில் ஆகிவிட்டான்.  (உமர் ஷரீப் காஸிமி)



14.பின்னர் நாம் மலக்குகளை (நோக்கி) "ஆதமுக்கு நீங்கள் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்" எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள். அவனோ பெருமை கொண்டு விலகி (நம்முடைய கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான்.(அப்துல் ஹமீது பாகவி)




15. மேலும், நாம் மலக்குகளிடம், “ஆதமுக்கு நீங்கள் (பணிந்து) ஸுஜூது செய்யுங்கள் எனக்கூறிய போது இப்லீஸைத்தவிர அவர்கள் (அனைவரும்) ஸுஜுது செய்தார்கள், அவன் விலகிக் கொண்டான், ஆணவமும் கொண்டான்; இன்னும் நிராகரிப்பவர்களில் அவன் ஆகிவிட்டான் (என்பதை நபியே! நீர் நினைவு கூர்வீராக!) (அல்-மதீனா அல்-முனவ்வரா)





.

No comments: