Saturday, July 13, 2019

2:32 قَالُوا - கூறினார்கள்,سُبْحَانَ - தூயவன் ,كَ - நீلَا - இல்லை عِلْمَ - அறிவு, கல்விلَنَا - எங்களுக்கு


பதிலாக, பகரமாக, சந்ததிகளாக, வாரிசுகளாக, வழித் தோன்றல்களாக, பின் தோன்றலாக என்ற பொருள் தரும் ஃகலீfபா என்ற சொல் மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற பொருளைத் தராது என்பது பற்றி 6:133. 71;29. 11:57.24:55. ஆகிய ஆயத்களிலிருந்து ஆதாரங்களை முன்பு பார்த்தோம். 


قَالُوا ஃகாலுா 

கூறினர் - கூறினார்கள், சொன்னார்கள் 

سُبْحَانَஸுப்ஃஹான 
தூயவன் - மகா தூயவன் - மிகத் துாய்மையானவன்

كَக 
நீ


لَاலா 
இல்லை

عِلْمَஃஇல்ம 
அறிவு - கல்வி

لَنَاலனா
எங்களுக்கு


إِلَّا இல்லா 

தவிர - அன்றி 

 مَا - மா 
எதை



عَلَّمْت ஃஅல்லம்த
கற்பித்தாய்

نَا - நா
எங்களுக்கு

 مَا عَلَّمْتَنَا - மாஃஅல்லம்தனா 
நீ கற்றுக் கொடுத்ததை (கொடுத்தவற்றை -கற்றுக்கொடுத்தவை)


إِنَّكَஇன்னக 
நீ - நீயே - நீதான் -

أَنتَஅன்த 
நீ-நீயே - நீதான்  

الْعَلِيمُ - (அல்) ஃஅலீமு

பேரறிவாளன், நன்கறிந்தவன், மிக்க அறிந்தவன்,   அறிவுமிக்கவன்.-  நன்கு  அறிந்தோன்   





الْحَكِيمُ - (அல்) ஃஹகீ(மு)ம்


ஞானமிக்கவன் - மகாஞானவான் - ஞானம் உடையவன் - ஞானம் உள்ளவன்- விவேகமிக்கோன், தீர்க்கமான அறிவுடையவன்” - நுண்ணறிவுடையோன் -ஞானம் நிறைந்தவன். ஞானம் நிறைந்தோன்


قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا  إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ ﴿٣٢


ஃகாலுா ஸுப்ஃஹானக லா ஃஇல்ம லனா இல்லா  மாஃ அல்லம்தனா இன்னக அன்தல் ஃஅலீமுல்  ஃஹகீ(மு)ம்


தமிழ் நடையில் 15 மொழிப்பெயர்ப்புகள் 



1. அவர்கள், "(இறைவா!) நீ தூயவன். நீ கற்றுக் கொடுத்தவற்றைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. திண்ணமாக நீயே பேரறிவாளன்; நுண்ணறிவுடையோன்" எனக் கூறினார்கள். (அதிரை ஜமீல்)

2. "நீ தூயவன்.10 நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.2:32. PJ

3. அவர்கள் “(இரட்சகனே) நீயே துாய்மையானவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர வேறறிவு எங்களுக்கில்லை. நிச்சயமாக நீயே நன்கறிந்தவனும் ஞானமிக்கவனுமாவாய் எனக் கூறினார்கள். (தாருஸ்ஸலாம், ரியாத்)

4. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேகமிக்கோன் எனக் கூறினார்கள்.(KSR


5,6 (அப்பொழுது) (யா அல்லாஹ்) நீ மகாத் தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எந்த  அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக நீயே முற்றும் அறிந்தவனும் ஞானமிக்கவனுமாய் இருக்கிறாய் என்று அவர்கள் கூறினார்கள். (5திரீயெம் பிரிண்டர்ஸ், 6 மலிவு பதிப்பு)

7. அதற்கு (வானவர்களாகிய) அவர்கள் நீ துாய்மையானவன் நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததையன்றி (வேறு)  அறிவு எங்களுக்கில்லை. (வேறு எதனையும் நாங்கள் அறிய மாட்டோம்) திண்ணமாக நீயே அறிவுமிக்கவன். ஞானம் நிறைந்தவன் என்று கூறினர்.(பஷாரத்)

8. அதற்கு அவர்கள் நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததை தவிர வேறு எந்த  அறிவும் எங்களுக்கு இல்லை. நீ நன்கு அறிந்தோனும் ஞானம் நிறைந்தோனும் ஆவாய் என்றனர் (றஹ்மத்)

9. (இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்பித்ததன்றி (வேறு) எத்தகைய அறிவுமில்லை. மெய்யாக நீயே மிக்க அறிகிறவன் (தீட்சண்ணிய) ஞானமுடையோன் என்று அ(வ்வான)வர்கள் கூறினர். (அன்வாருல் குர்ஆன்) 


10. (அப்பொழுது) நீ மிகத் தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததை தவிர வேறு) எந்த  அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக நீ தான் அறிவு மிக்கவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கிறாய் என்று அவர்கள் கூறினார்கள் (ஸலாமத் பதிப்பகம்)


11.அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள். (முஹம்மது ஜான்)

12. (அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) "நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்" எனக் கூறினார்கள். (அப்துல் ஹமீது பாகவி)



13. நீ மகாத் தூயவன். நீ எங்களுக்குக் கற்பித்தவற்றைத்   தவிர  வேறு அறிவு எங்களுக்கு அறவே இல்லை. நிச்சயமாக நீதான் நன்கறிந்தவன் மகா ஞானவான் எனக் கூறினார்கள். ( அப்துல் ஹமீது பாகவி பேரர் உமர் ஷரீப்)


14. “குறை ஏதுமில்லாத தூயவன் நீயே! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது. உண்மையில் நீ மட்டுமே பேரறிவும் மிக்க ஞானமும் உடையவன்!என்று அவர்கள் கூறினார்கள். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)


15. அவர்கள் நீ மிகத் தூய்மையானவன்; நீ எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை; நிச்சயமாக நீயே நன்கறிந்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்எனக் கூறினார்கள். (அல்-மதீனா அல்-முனவ்வரா)

No comments: