Friday, July 12, 2019

2:31 ஃகலீFபா என்ற சொல் 19 ஆயத்துகளில் இடம் பெற்றுள்ளன.

அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளபடி. அல்லாஹ் தான் மனிதனுக்கு   பிரதிநிதி  (ஃகலீFபா) ஆவான். அல்லாஹ்வுக்கு மனிதன் (ஃகலீFபாவாக) பிரதிநிதியாக ஆக முடியாது என்பதை முந்தைய வெளியீட்டில்  (முஸ்லிம் 2612 ஹதீஸ்) ஆதாரத்துடன் அறிந்தோம். 


குர்ஆனில் ஃகலீFபா என்ற சொல் 2:30ல் இடம்  பெற்றுள்ளதைப் போல்  இன்னும் 18 இடங்களில் ஃகலீFபா என்ற வார்த்தை(களிலிருந்து) இடம்  பெற்றுள்ளன. அந்த இடங்களில்  இதே மொழி பெயர்ப்பாளர்கள் எப்படி தமிழாக்கம் செய்துள்ளார்கள் என்பதையும் பார்ப்போம். சிந்திப்போம் தெளிவு பெறுவோம்.  

இது சம்பந்தமான வசனங்களை முழுமையாக பதிவு செய்தால் முக்கிய வார்த்தையின் தமிழாக்கத்தை அறிவதில் சிரமம் ஏற்படும் என்பதால் முக்கிய வார்த்தைகளை தந்துள்ளோம். விளக்கமாக அறிய உங்களிடமுள்ள தர்ஜமாக்களை பார்த்துக் கொள்ளுங்கள்.


وَيَسْتَخْلِفْ -வயஸ்தஃக்லிFப் 6:133.

اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ وَيَسْتَخْلِفْ مِنْۢ بَعْدِكُمْ



இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்று - தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான். (ஜான்) 

தான் நாடிய எவரையும் உங்களுடைய இடத்தில் அமர்த்தி விடுவான். இவ்வாறே (சென்று போன) மற்ற மக்களின் சந்ததிகளிலிருந்து உங்களை உற்பத்தி செய்திருக்கிறான்.. (பாகவி)

இதற்கு முன்பு இதர மக்களின் சந்ததியிலிருந்து உங்களைக் கொண்டு வந்தது போல், உங்களுடைய இடத்தில் தான் நாடுகின்ற மற்றவர்களைக் கொண்டுவந்து விடுவான். (IFT)

வேறு சமூகத்தவர்களின் சந்ததியிலிருந்து உங்களை அவன் உற்பத்தி செய்தது போன்று தான் நாடியவரை (உங்களுடைய இடத்தில்) உங்களுக்குப் பிறகு அவன் பகரமாக்கி விடுவான்.  (அல்-மதீனா அல்-முனவ்வரா)

உங்களை வேறு ஒரு சமூகத்தின் சந்ததிகளிலிருந்து உங்களை தோற்றுவித்தது போன்று உங்களுக்குப் பின்னர் அவன் நாடுவோரை (உங்களுக்குப்)   பிரதிநிதிகளாக   ஆக்குவான்   (தாருஸ்ஸலாம்- ரியாத்)

உங்களை வேறு ஒரு சமூகத்தாரின் சந்ததியிலிருந்து அவன் உண்டாக்கியதைப் போன்றே உங்களுக்குப் பின் தான் நாடியவர்களை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான் (மலிவு பதிப்பு, திரீயெம்)


உங்களை வேறு சமூகத்தவர்களின் சந்ததியிலிருந்து உருவாக்கியது போன்று உங்களுக்குப் பின் தான் நாடியவர்களை உங்களுக்கு பகரமாக்கி   விடுவான் (பஷாரத்)



வேறு சமுதாயத்தின் வழித் தோன்றல்களிலிருந்து46 உங்களை உருவாக்கியது போல் உங்களைப் போக்கி விட்டு உங்களுக்குப் பின் அவன் நாடியதை உங்கள் இடத்துக்குக் கொண்டு வருவான். (பீ.ஜே) 6:133.
----------------------------------------------------

  وَيَسْتَخْلِفَكُمْ - வயஸ்தஃக்லிFபகும் 71;29.

عَسٰى رَبُّكُمْ اَنْ يُّهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِى الْاَرْضِ


உங்களுடைய பகைவர்களை (விரோதிகளை) அழித்து, உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும்; (ஜான், அல்-மதீனா அல்-முனவ்வரா, மலிவு பதிப்பு,திரீயெம்)) 


எதிரிகளை அழித்து (அவர்களுடைய) பூமிக்கு உங்களை அதிபதியாக்கி வைக்கக்கூடும்.  (பாகவி)

   
விரோதியை அழித்து   பூமியில்    உங்களைப்   பிரதிநிதிகளாக்கி     (தாருஸ்ஸலாம்  -ரியாத்,  (IFT,  பஷாரத்))


உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி  (PJ) 7129.

-----------------------------------------------------------------------------------


وَيَسْتَخْلِفُ - வயஸ்தஃக்லிFபு 11:57.

ஹுது (அலை)  அவர்கள் தமது சமுதாயத்தை நோக்கி சொன்னது பற்றிய வசனம்.

நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; (ஜான்)

உங்கள் இடத்தில் வைத்து விடுவான்; (பாகவி)

உங்களுக்குப் பகரமாக வேறொரு சமுதாயத்தினரைக் கொண்டு வருவான்.  (IFT)

(உங்கள் இடத்தில்) பகரமாக்கிவிடுவான்,  (அல்-மதீனா அல்-முனவ்வரா, பஷாரத், மலிவு பதிப்பு )

உங்களுக்கு பதிலாக ஆக்குவான் (தாருஸ்ஸலாம்  -ரியாத், 

வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான் (PJ)  11:57.
----------------------------------------------------------------------
 لَـيَسْتَخْلِفَـنَّهُ - யஸ்தஃக்லிFபன்னஹு 
 كَمَا اسْتَخْلَفَ- கமாஸ்தஃக்லFப 24:55.

لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ


முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாக்கியது போல்,   ஆட்சியாளர்களாக்கி         (ஜான்)

 அதிபதிகளாக்கியது போன்றே அதிபதியாக்கி (பாகவிஅல்-மதீனா அல்-முனவ்வரா, தாருஸ்ஸலாம்  -ரியாத்,)

 பிரதிநிதிகளாக்கியது போன்று பிரதிநிதிகளாக்குவான்; .  (IFT, மலிவு பதிப்பு, பஷாரத், திரீயெம் )



அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், P.J. 24:55.


இன்னும் 

 خَلٰٓٮِٕفَ - ஃகலாஃயிFப 

خُلَفَآءَ- ஃகுலFபாாஃஅ
فَخَلَفَ- FபகலFப 
 خَلْفٌ - கல்Fபுன்

போன்ற ஃகலீFபா என்ற வார்த்தையிலிருந்து வந்துள்ளவை குர்ஆனில் உள்ளன. அவற்றை பின்னர் பார்ப்போம். 

இதுவரை பார்த்தில் .பதிலாக, பகரமாக, சந்ததிகளாக, வாரிசுகளாக, வழித் தோன்றல்களாக, அதிபதியாக, ஆட்சியாளர்களாக என வந்துள்ளவற்றை பார்த்தோம். அவை அனைத்தும் "ஒருவர் இறந்த பின், அல்லது அவர் செயலற்றுப் போன பின் அவரது இடத்தைப் பெறுவது அல்லது ஒரு சமுதாயத்தவர் அழிக்கப்பட்ட பின்னர்  அவர்களுக்கு பிறகு, அவர்களுடைய இடத்தில் அடுத்த சமுதாயம்  வருவது ஆகிய பொருளில் தான் இச்சொற்கள் மேற்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-------------------------------------------------
இனி 2:31  வார்த்தைக்கு வார்த்தை பார்ப்போம்.



وَ -

இன்னும், மேலும், பின்னர், பின்பு


عَلَّمَ - ஃஅல்லம 

கற்றுக் கொடுத்தான் - கற்பித்தான் - கற்பித்துக்  கொடுத்தான்.


آدَمَஆதம

ஆதமுக்கு


الْأَسْمَاءَ - ல் அஸ்மாஅ
பெயர்கள் -பெயர்களை - நாமங்களை


كُلَّ  -  குல்ல

எல்லா, அனைத்து

هَا- ஹா
அவை(களை) - அவற்றை


ثُمَّ - (ஸும்ம) 

பின்னர் - பின்  பின்னும் - பிறகு - அப்பால்


عَرَضَ - ஃஅறழ
எடுத்துக் காட்டி - வைத்து 


هُمْ - ஹும்
அவர்கள்

عَلَى - ஃஅலா 
முன்  (அலா என்பது மற்ற இடங்களில் மீது  - மேல் என்ற பொருளில் வரும் இங்கே முன்  என்ற பொருளில் வருகிறது)


الْمَلَائِكَةِ - அல் மலாயிகதி
வானவர்கள்


فَقَالَ - பகால
கூறினான்


أَنبِئُونِي - அன்ம்பிஊனி

எனக்குச்  சொல்லுங்கள் -(கூறுங்கள்- விவரியுங்கள் -  அறிவியுங்கள் தெரிவியுங்கள்)

بِأَسْمَاءِபிஅஸ்மாயி
பெயர்கள் - நாமங்கள்


هَٰؤُلَاءِஹாஉலாாயி 

 இவர்கள், இவை, இற்றின்


إِن كُنتُمْஇன் குன்தும்
நீங்கள் இருப்பீர்களானால்( இருந்தால் -இருப்பீர்களாயின் - இருப்பின்)

صَادقِينَ -ஸாதிகீன்
உண்மை யாளர்கள் - சரியானவர்கள்

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ  ﴿٣١﴾

வஅல்லம ஆதமல் அஸ்மாஅ குல்லஹா  ஸு(து)ம்ம அறழஹும் அலல் மலாஇகதி Fபகால அன்ம்பிஊனி பிஅஸ்மாயி ஹாஉலாாயி இன் குன்தும் ஸாதிகீன்

இனி தமிழ் நடையில் 15 மொழிப்பெயர்ப்புகளை காண்போம்

1. (தன் படைப்புகள்) அனைத்தின் பெயர்களையும் (தான் படைத்த) ஆதத்துக்குக் கற்றுக் கொடுத்தான். பின் அவற்றை வானவர்கள் முன் வைத்து, "இவற்றின் பெயர்களை எனக்குச் சொல்லுங்கள் - (உங்கள் கருத்தில்;) நீங்கள் சரியானவர்களாக இருந்தால்" என்றான். (அதிரை ஜமீல்)



2. அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான்.(PJ) 2:31.


3. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான், பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள் என்று கூறினான்.(K.S.R)


4. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்" என்றான்.(ஜான்) 

(K.S.R - ஜான் இரண்டுக்கும் வித்தியாசம் (உங்கள் கூற்றில்)  என்று உள்ள ஒரு வார்த்தைதான்.)


5, 6 மேலும் (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் ஆதமுக்கு அவன் கற்றுக் கொடுத்தான். பிறகு அவற்றை வானவர்களுக்கு எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் கூற்றில்)  உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள் என்று கூறினான் (5,திரீயெம் பிரிண்டர்ஸ், மலிவு பதிப்பு)

7. மேலும் அவன் (பொருட்களின்) பெயர்கள் அவை அனைத்தையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்து பின்பு அவற்றை வானவர்களுக்கு எடுத்துக்காட்டி, "நீங்கள் (உங்கள் சொல்லில்)  உண்மையாளர்களாக இருப்பீர்களாயின் (ஆதமுக்கு நான்  கற்றுத் தந்த)  இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினான்(பஷாரத்)

8. அவன் ஆதமுக்கு  எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்குக் காட்டி,  "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்குத்  தெரிவியுங்கள் என்று கூறினான்  (றஹ்மத் அறக்கட்டளை)


9. மேலும் அ(வ்விறை)வன்    ஆதமுக்கு    (பொருட்களின்)    பெயர்கள்  அனைத்தையும்  கற்பித்துக்  கொடுத்தான். பின்னர்   (பொருட்களான)  அவற்றை மலக்குகளுக்கு எடுத்துக் காட்டினான், அப்பால் "நீங்கள்  (உங்களது கூற்றில்)  உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள் என்று கூறினான் (அன்வாருல் குர்ஆன்)


10. இன்னும், ஆதமுக்கு  (அல்லாஹ்) அனைத்துப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை  வானவர்கள் முன் காட்டி, "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு  அறிவியுங்கள்  என்று (அவர்களிடம்) கூறினான்  (ஸலாமத் பதிப்பகம்)


11. (பொருள்களின்)பெயர்கள் எல்லாவற்றையும்  ஆதமுக்கு  கற்பித்தான் பிறகு அவற்றை  அந்த வானவர்கள் முன் வைத்து  நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால். இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினான் (உமர் ஷரீப் -அப்துல் ஹமீது பாகவி பெயரர்)

12. பின்பு (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு எல்லாப் (பொருள்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) கற்றுக் கொடுத்து, அவைகளை அந்த மலக்குகளுக்கு முன்பாக்கி "(மலக்குகளே! ஆதமுக்கு என்னுடைய பிரதிநிதி ஆவதற்குரிய தகுதியில்லை என்று கூறினீர்களே! இதில்) நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் (இதோ உங்கள் முன்னிருக்கும்) இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்" எனக் கூறினான். (அப்துல் ஹமீது பாகவி)


13. பின்னர் அல்லாஹ் எல்லாப் பொருள்களின் பெயர்களையும் ஆதத்துக்குக் கற்றுக் கொடுத்தான். பிறகு அவற்றை வானவர்களின் முன் வைத்து “(ஒரு பிரதிநிதியை நியமித்தால் பூமியில் ஒழுங்கமைப்பு சீர்குலையும் எனும்) உங்கள் கருத்து சரியானால், இவற்றின் பெயர்களைச் சற்று சொல்லுங்கள்எனக் கூறினான். இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)


14. (ஆதமைப் படைத்து) ஆதமுக்கு (பொருட்களின்) பெயர்களை_அவை அனைத்தையும் கற்று கொடுத்து, பின்னர் அவற்றை (அந்த) வானவர்களின் மீது எடுத்துக்காட்டினான்; அப்பால் (வானவர்களே! உங்களது கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், இவற்றின் பெயர்களை நீங்கள் எனக்குத் தெரிவியுங்கள்எனக் கூறினான். (அல்-மதீனா அல்-முனவ்வரா)


15. இன்னும், அவன்  ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள் என்று கூறினான் (தாருஸ்ஸலாம், ரியாத்)









No comments: