Monday, July 22, 2019

2:41.விலைக்கு விற்காதீர்கள் என்பது சரியா? விலைக்கு வாங்காதீர்கள் என்பது சரியா?

வலா தஷ்தரூவ்  என்பதற்கு நேரடி பொருள் என்ன? 
இந்த 2:41 வசனத்தில் இடம் பெற்றுள்ள   வலா தஷ்தரூவ்  என்ற இந்த வார்த்தைக்கு 
அற்ப விலைக்கு விற்காதீர்கள்
விற்று விடாதீர்கள் - விற்று விட வேண்டாம். 
வாங்கியும் விற்றும் விட வேண்டாம். 
சொற்ப பொருளுக்காக மாற்றி விட வேண்டாம். 
சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள். 
அற்பவிலை பேசி விடாதீர்கள்;  இப்படியாக பலரும் பல விதமாக அவரவர் ஆய்வுக்கு தக்கவாறு மொழி பெயர்த்துள்ளார்கள். அவை இணைப்பில் JPG பைலாகவும் டெக்ஸாகவும் உள்ளன.

வலா தஷ்தரூவ்  என்பதற்கு நேரடி பொருள் வாங்க வேண்டாம் என்பதுதான். இதை   2:16.  2:86.         2:1022:175. 3:177   3:1874:44.    9:111.   12:2131:6. ஆகிய இந்த வசனங்களில் உள்ள இது போன்ற வார்த்தைகள் மூலம் அறியலாம். 

அவரவர் ஆய்வுக்கு தக்கவாறு என்றதையே அவரவர் அறிவுக்கு தக்கவாறு என்று சொன்னால் விளக்கத்துக்காக சொன்னது விமர்சனமாக  ஆகி விடும். அது போல்தான்

வலா தஷ்தரூவ் (5:44)  என்பதற்கு வாங்க வேண்டாம் என்பதுதான் நேரடி பொருள் என்றாலும். இது போன்ற  வார்த்தைகளான  ஷ்தரூன 2:174.  லிஷ்தரூவ்    2:79.  ஷ்தரவ் 3:187.  லாஷ்தரூவ்ன  3:199.  ஷ்தரூவ்   9:9   இப்படி இடம் பெற்றுள்ள இந்த இடங்களில்  வாங்க வேண்டாம்  என்று சொல்வதை விட அற்ப விலைக்கு விற்காதீர்கள் என்பதே பொருத்தமானதாகவும் அழுத்தமானதாகவும் உள்ளது. இதுவே ஆய்வில் சிறந்தவர்களின் முடிவாகவும் உள்ளது. 


அல்லாஹ்வின் வசனங்களை அற்ப சொற்ப விலைக்கு விற்கக் கூடாது என்றதும். சிலர் தவறாக அதன் நேரடிப் பொருளில்  விளங்கி விட்டார்கள். அதனால் திரு குர்ஆனை,  அதன் மொழி பெயர்ப்புகளை அச்சிட்டு விற்பனை செய்வது ஹராம் - கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

அல்லாஹ்வின் வார்த்தைகளை அற்ப விலைக்கு விற்காதீர்கள் என்பது நேரடிப் பொருளில் சொல்லப்படவில்லை. வேதத்தில் உள்ளதை உள்ளபடி மக்கள் மத்தியில் சொல்லாமல் உலக ஆதாயம் கருதி வேதத்தில் உள்ளதை மறைப்பதைத்தான்  வியாபாரம் என்று கூறப்பட்டுள்ளது. இதுதான்  சரியான விளக்கம் ஆகும். 

அதற்குரிய ஆதாரத்தை குர்ஆனுக்கு விளக்கம் குர்ஆனே என்ற அடிப்படையில் குர்ஆனிலிருந்தே தருகிறோம் பாருங்கள். 

வேதம் கொடுக்கப்பட்டோரிடம் "அதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்; மறைக்கக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி எடுத்தபோது, அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர்.  (அதற்குப் பகரமாக) அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது. 3:187. 

குர்ஆன் ஹதீஸ் தான் மார்க்கம் என்ற ஈமான் - நம்பிக்கை உடையவர்களுக்கு அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ள இது போதும். இருந்தாலும் பெரியார்களும் நாதாக்களும் சொல்ல நான் கேட்டேன் என்பவர்கள் புரிவதற்காக சிறு விளக்கம்.

யூதர்கள் தவ்ராத்தை வியாபாரமாக ஆக்கியதைக் கண்டித்துத்தான் மேற்கண்ட வசனங்கள் அருளப்பட்டன. யூதர்கள் காலத்தில் நூல்களை அச்சிடுவதும், அதை வியாபாரம் செய்வதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே யூதர்கள் தங்களின் வேதப் புத்தகத்தை அச்சிட்டு புத்தக வியாபாரம் செய்து கொண்டிருந்ததைக் குறித்து இவ்வசனம் பேசவில்லை என்பது மிகத் தெளிவு.

அற்பக் காசுக்காக வியாபரம் செய்து விட்டு மனிதர்களுக்கு அஞ்சி உண்மையை - வேதத்தை மறைப்பதும், வேதத்தில் உள்ளபடி தீர்ப்பளிக்காமல் இருப்பதும் தான் வேதத்தை வியாபாரமாக்குதல் என்பதன் பொருளாகும். 

வேதத்தில் உள்ளபடி அதாவது அல்லாஹ்வின் கட்டளைப்படி தீர்ப்பளிக்காமல் தீர்வு காண விரும்பாமல் தங்கள் மனோ இச்சைப்படிதான் நடப்போம் என்பவர்களுக்கு  அல்லாஹ்வின் வேதனை இலேசாக்கப்படாது (2:86நாம் சொல்லவில்லை. அல்லாஹ் சொல்லி உள்ளான்.

அவர்களே நேர்வழியை விற்று அதற்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பை விற்று அதற்குப் பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரக நெருப்பை சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது! 2:175.
இனி வார்த்தைக்கு வார்த்தை

وَآمِنُوا -  வஆமினுா  
நம்புங்கள் -நம்பிக்கை கொள்ளுங்கள்  

بِمَا -  பிமா
அதை - எதை?ஏனெனில், - காரணத்தினால்

أَنزَلْتُ - அன்Zசல்து  
 நான்   இறக்கினேன் - அருளினேன் -நாம் அருளினோம்

 مُصَدِّقًا - முஸத்திஃகன் 
உண்மைப்படுத்தும் - உண்மைப்படுத்தக் கூடியதாக - உண்மையாக்கி வைக்கிறது - மெய்ப்பிக்கின்றது - சான்றளிக்கின்றது - 

لِّمَا லிமா எதை? - அதை - ஒன்றை  

مَعَ - மஃஅ 
உடன்

كُمْ கும்
உங்கள்

 مَعَكُمْ - மஃஅ கும்
உங்களிடம் - உங்களுடன்.

 لِّمَا مَعَكُمْ - லிமா மஃஅ கும் 

உங்களிடம் உள்ளதை - 



وَلَا تَكُونُوا - வலா தகூன 

ஆகாதீர்கள்! -  ஆகிவிடாதீர்கள்- ஆகி விட வேண்டாம்- நீங்கள்   வேண்டாம்          - 

أَوَّلَ - அவ்வல 
முதலில் -முதன்மையானவன் - முதலாமவர் 

كَافِرٍ காபிரி(ன்)ம் 
மறுப்பவன் - நிராகரிப்பவன்

بِهِ பிஹி 
அதை - இதை - அதைக்கொண்டு -இது

وَلَا تَشْتَرُوا - வலா தஷ்தரூவ் 
விற்று விடாதீர்கள் - விற்காதீர்கள் - வாங்காதீர்கள் - வாங்க வேண்டாம்


بِآيَاتِي - பிஆயாதீ 


என் (எனது -எமது)  வசனங்கள் - சான்று -அத்தாட்சி

ثَمَنًا -  (ஸ)தமனன் 
விலை - கிரயம் 

قَلِيلًا - ஃகலீல(ன்) 
சொற்பம் - அற்பம் - மிகக் குறைந்த- ஆகக் குறைந்த

وَإِيَّايَ -வஇய்யாய 
 என்னையே - எனக்கே -

فَاتَّقُونِ - Fபத்தகூ(னி)ன்

 என்னை அஞ்சுங்கள் - பயப்படுங்கள்
وَآمِنُوا بِمَا أَنزَلْتُ مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ وَلَا تَكُونُوا أَوَّلَ كَافِرٍ بِهِ وَلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا وَإِيَّايَ فَاتَّقُونِ ﴿٤١﴾

வஆமினுா  பிமா  அன்Zசல்து முஸத்திஃகன் லிமா மஃஅ கும்  வலா தகூன  அவ்வல காபிரி(ன்)ம்  பிஹி  வலா தஷ்தரூவ்  பிஆயாதீ  தமனன் ஃகலீல(ன்)  வஇய்யாய Fபத்தகூ(னி)ன்


தமிழாக்கங்கள் -


நான் அருளிய இம்மறையை உறுதியுடன் நம்புங்கள். (இதற்கு முன்னர் அருளப் பெற்று) உங்களிடம் உள்ள முன்மறையையும் இம்மறை மெய்ப்பிக்கின்றது. நீங்கள் இதை (நம்ப) மறுப்பவர்களில் முதலிடம் பெற்றுவிட வேண்டாம். மேலும் என் சான்றுமிகு வசனங்களை அற்பவிலை பேசி விடாதீர்கள்; எனக்கே அஞ்சி வாழுங்கள் - (அதிரை ஜமீல்) :

உங்களிடம் உள்ள(வேதத்)தை உண்மைப்படுத்தும் வகையில் நான் அருளிய(குர்ஆன் எனும் வேதத்)தை நம்புங்கள்! இதை மறுப்போரில் முதலாமவராக ஆகாதீர்கள்! எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள்!445 எனக்கே அஞ்சுங்கள்! (PJதொண்டி)


இன்னும் நான் இறக்கியதை நம்புங்கள்இது உங்களிடம் உள்ளதை மெய்ப்பிக்கின்றது,  நீங்கள் அதை மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்இன்னும் என்னையே நீங்கள் அஞ்சுங்கள்.( 2:41 )

இன்னும் நான் இறக்கிய (வேதத்)தை நம்புங்கள்இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றதுநீங்கள் அதை (ஏற்கமறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம்மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி (ஒழுகிவருவீர்களாக. (டாக்டர். முஹம்மது ஜான் )

நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்புங்கள். இது உங்களிடமுள்ள ("தவ்றாத்" என்னும் வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இதை நிராகரிப்பவர்களில் நீங்களே முதன்மையானவர்களாகிவிட வேண்டாம். (இவ்வேதத்தைப் பற்றி உங்களிடமுள்ள "தவ்றாத்"தில் கூறியிருக்கும்) என்னுடைய வசனங்களை (மாற்றிச்) சொற்ப விலைக்கு விற்றுவிட வேண்டாம். நீங்கள் (மற்ற எவருக்கும் பயப்படாது) எனக்கே பயப்படுங்கள். (அப்துல் ஹமீது பாகவி)

மேலும் நான் இறக்கியுள்ள இந்த வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இது (முன்பு) உங்களிடமிருந்த வேதத்தை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. ஆகையால் நீங்களே அனைவருக்கும் முதலில் (இதனை) நிராகரிப்பவர்களாகி விடாதீர்கள். என்னுடைய திருவசனங்களைச் சொற்ப விலைக்கு விற்காதீர்கள். மேலும் எனக்கே அஞ்சுங்கள்! (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

மேலும், உங்களிடமுள்ள (தவ்றாத் என்னும் வேதத்)தை உண்மைப்படுத்தும் நிலையில் நான் இறக்கிவைத்த (இவ்வேதத்)தை நீங்கள் விசுவாசியுங்கள்; இன்னும் இதை நிராகரிப்போரில் முதன்மையானோராக நீங்கள் ஆகிவிடவேண்டாம். என்னுடைய வசனங்களைச் சொற்ப விலைக்கு(ப்பகரமாக) விற்றுவிடவும் வேண்டாம்; இன்னும் என்னையே நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.

No comments: