Monday, July 8, 2019

2:27. விஷமத்தனமும் - குழப்பமும் விளைவிக்கின்ற பாவிகளின் கடைசி கதி என்ன?

இதில் உள்ள வார்த்தைக்கு வார்த்தை நமது மொழி பெயர்ப்பு அல்ல. நாம் இடம் பெறச் செய்துள்ள 14 மொழி பெயர்ப்புகளிலிருந்து தான் பார்த்து எடுத்து எழுதுகிறோம் ஒருவர் படி எடுக்கக் கூடாது என்று அவர் அறிந்த துாய தமிழில் அல்லது பழந் தமிழில் எழுதி இருப்பார். காப்பி எடுக்கக் கூடாது என்று ஒருவர் எழுதி  இருப்பார். 

ஒப்பந்தத்தை அது கெட்டியான பின்னர்  உடைக்கின்றனர்  என்று சிலர் பழந் தமிழில் மொழி பெயர்த்து இருப்பார்கள். உடன்படிக்கையை  உறுதிப்படுத்திய பின் முறிக்கின்றனர் என்று நடை முறையில் உள்ள தமிழில் சிலர்  மொழி பெயர்த்து இருப்பார்கள். இரண்டையும் வார்த்தைக்கு வார்த்தையில் இடம் பெறச் செய்து வருகிறோம். 


கீழே உள்ள துஆ யாருடைய பெயரையும் குறிப்பிட்டு உள்ளது அல்ல. செயலை குறிப்பிட்டே உள்ளது. செயல் தீய செயல்தான் என உங்கள் உள்ளம் ஒத்துக் கொண்டால் உளமார துஆச் செய்யுங்கள்.

சிறைவாசிகளின்    பிள்ளைகள்   ஸ்கூல்    செலவுகளுக்கு என பணம் 
கொடுத்தவரை  கொலை செய்ய பணம் கொடுத்தார்அவர்தான் எங்களை இயக்குகிறார் என்று மாட்டி விட்டவனின் மீதும். அவனது கூட்டத்தார் மீதும் இந்த மாதிரி அநியாயமாக மாட்டி விட்டவனுக்கு பதவி  கொடுத்த கட்சியில் உள்ள அனைவர் மீதும் குறிப்பாக மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீதும் 

1980களிலிருந்து இளைஞர்களின் உணர்ச்சிகளை துாண்டி விட்டு காசு பார்ப்பதை தொழிலாக ஆக்கிக் கொண்டவனின் கூட்டத்தார் மீதும்

ஏவி விட்டு  காட்டிக் கொடுத்து காசு பார்த்தவனின் கூட்டத்தார் மீதும். காசுக்காக காட்டிக் கொடுப்பதையே தொழிலாக ஆக்கிக் கொண்டவனின் மீதும். அவனது கூட்டத்தார் மீதும் 

காசுக்காக உளவுத்துறையின் கைக் கூலியாக இருந்தவர்கள் மீதும் இருப்பவர்கள் மீதும் 

அநியாயமாக அப்பாவிகளை மாட்டி விட்டு காசு பார்த்தவர்கள் மீதும்  அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக ஆமீன். இவர்கள் அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக ஆமீன்.


மாட்டி விட்ட பின்னர் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டவர்களை ஈருலகிலும் வெற்றி பெற்றவர்களாக ஆக்குவாயாக ஆமீன். இதில் பெயர் குறிப்பிட்டால் தான் காழ்ப்புணர்வு என்று கூறி மறுப்பார்கள். பெயர் கூறவில்லை தீய செயலையே கூறி உள்ளோம். துஆச் செய்து விட்டு 2:27. வசனத்தின்  வார்த்தைக்கு வார்த்தையை  பாருங்கள்.


 الَّذِيْنَ - அல்லதீ(ரீ)ய்ன 
எவர்கள் - அவர்கள் - இவர்கள் - சிலர் 

 يَنْقُضُوْنَ - யன்ஃகுலுான
முறிக்கின்றனர் - முறிக்கிறார்கள் - முறித்து விடுகின்றனர்முறித்து விடுவார்கள் - உடைக்கின்றார்கள்
 عَهْدَ - ஃஅஹ்த  
உடன்படிக்கை – ஒப்பந்தம் - உடன்பாடு
اللَّهِ - (அ)ல்லாஹி
அல்லாஹ்வின்

 عَهْدَ اللّٰهِ- ஃஅஹ்தல்லாஹி
அல்லாஹ்வின் உடன்படிக்கையை - அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை - அல்லாஹ்விடத்தில் செய்த உடன்படிக்கையை 

 مِنْۢ - மின் 
இருந்து From -லிருந்து 
 بَعْدِ-  பஃஹ்தி 
பின் - பின்னர் - பிறகு

مِيْثَاقِهٖ - மீதா(ஸா)ஃகிஹி 
அவனுடைய ஒப்பந்தத்தை 

وَ -  வ 

 இன்னும் - மேலும்  அன்றி - பின்னர்பின்பு

يَقْطَعُوْنَ  - யஃக்தஊன 
முறிக்கின்றனர்  – துண்டிக்கின்றனர் - பிரித்து விடுகின்றனர்

مَآ- மாா 
எதை 
 اَمَرَ - அமர
கட்டளை- ஏவல் - உத்தரவு
 اللّٰهُ- (அ)ல்லாஹு 
بِهِ - பிஹி
அதைக்கொண்டு -
 اَنْ يُّوْصَلَ -  அன்ய்யூஸல
இணைக்கப்பட வேண்டும் – ஒன்றிணைக்கப்பட வேண்டும் -  சேர்க்கப்பட வேண்டும் 
وَ -  வ 

 இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி    ( வாவு பற்றிய விபரங்களை 2 : 5ல் விளக்கி உள்ளோம்)


يُفْسِدُوْنَ - யுFப்ஸிதுான 
குழப்பம் விளைவிக்கின்றனர் – குழப்பம் செய்கிறார்கள் – விஷமம் செய்கின்றனர்
فى பீ (Fee) 
 ல். 

 الْاَرْضِ‌ؕ-  அல் அர்ழ்
பூமி 
فِي الْأَرْضِ- பீ(Fee)ல் அர்ழி
பூமி யில்

اُولٰٓٮِٕكَ - உலாயிக
அவர்கள் - இவர்கள்
هُمُ ஹுமு - 
அவர்கள் இவர்கள்
اُولٰٓٮِٕكَ هُمُ- உலாயிக ஹுமு 
அவர்களே - அவர்கள் தான்- இவர்களே - இவர்கள் தான்

الْخَاسِرُونَ- (அல்) காஸிரூ(ன)ன்

நட்டமடைந்தவர்கள். - நஷ்டவாளிகள் - இழப்புக்குரியவர்கள்


2:27. அல்லதீ(ரீ)ய்ன யன்ஃகுலுான ஃஅஹ்தல்லாஹி மின் பஃஹ்தி மீதா(ஸா)ஃகிஹி  யஃக்தஊன  மாா  அமரல்லாஹு  பிஹி அன்ய்யூஸல வ யுFப்ஸிதுான பீ(Fee)ல் அர்ழி உலாயிக ஹுமுல் காஸிரூ(ன)ன்


1. இக்கசடர்கள், அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்து, அஃது உறுதிப் படுத்தப் பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இட்ட (உறவுகள்) அனைத்தையும் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள். இவர்கள்தாம் இழப்புக்கு ஆளானவர்கள் (அதிரை ஜமீல்)


2. அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பின் முறிக்கின்றனர். இணைக்கப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டதை (உறவை) முறிக்கின்றனர். பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். அவர்களே நட்டமடைந்தவர்கள். (PJ) 


3. இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விற்கு  அளித்த  உடன்படிக்கையை அது கெட்டியான பின்னர் உடைக்கின்றனர்.  அல்லாஹ் எதனை இணைக்குமாறு ஏவினானோ அதனைத் துண்டிக்கவும் செய்கின்றனர். பூமியில் விஷமத்தனமும் புரிகின்றனர். இத்தன்மைகளைக் கொண்ட அவர்களேதாம் நட்டவாளிகள். (அன்வாருல் குர்ஆன்)

4. அ(த் தீய)வர்கள் எத்தகையோறென்றால் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். மேலும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதைத் துண்டித்து, பூமியில் குழப்பமும் செய்கிறார்கள்இவர்களே தாம் நஷ்டவாளிகள் பிறை ஆசிரியர் M. அப்துல் வஹ்ஹாப் M.A. B.Th,  K.A. நிஜாமுத்தீன் மன்பஈ ,  R.K. அப்துல் காதர் பாகவி  ஆகியோர் மொழி பெயர்ப்பில் திரீயெம் பிரிண்டர்ஸ் 1992ல் வெளியிட்டது)


5. அ(த் தீய)வர்கள் எத்தகையோறென்றால் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். மேலும் அவர்கள் எதனை (எந்த உறவு முறைகளை) இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதைத் துண்டித்து, பூமியில் குழப்பமும் செய்கிறார்கள்இவர்களே தாம் நஷ்டவாளிகள் (பிறை ஆசிரியர் M. அப்துல் வஹ்ஹாப் M.A. B.Th,  K.A. நிஜாமுத்தீன் மன்பஈ ,  R.K. அப்துல் காதர் பாகவி  ஆகியோர் மொழி பெயர்த்ததை மலிவு பதிப்பு  2002ல் வெளியிட்டது )

1992 - 2002  இரண்டுக்கும்  உள்ள  வித்தியாசம் 

ஒன்றிணைக்கப்பட (1992 )

அவர்கள் எதனை (எந்த உறவு முறைகளை) இணைத்துக் கொள்ளப்பட (2002)


6. (அந்தப் பாவிகள்) அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை அது  உறுதியாகி பின்னர்  முறிக்கின்றனர்.  இன்னும் எது சேர்க்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்  ஏவினானோ அதை  ( _உறவுகளை)த் துண்டிக்கின்றனர். பூமியில் விஷயம் செய்கின்றனர் அவர்கள்தான் நஷ்டவாளிகள்  (உமர் ஷரீFப் - A.K. அப்துல் ஹமீது பாகவி  கொள்ளு பேரன் )



7. அவர்கள் (அந்தப் பாவிகள்) எத்தகையோர் என்றால்,  அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை அதை உறுதிப்படுத்திய பின்பும் முறித்து விடுகிறார்கள். மேலும் அவர்கள் எதனை (எந்த உறவு முறைகளை) ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ, அதை துண்டித்து, பூமியில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்தாம் இழப்புக்குரியவர்கள் (ஸலாமத்) 

8. அவர்கள் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய பின்னர், அதை முறித்து விடுவார்கள்.  எ(ந்த உறவு முறையான)து  அமைக்கப்பட வேண்டும் என்பது என அல்லாஹ்வால் ஆணையிடப்பட்டுள்ளதோ அதை அவர்கள் அரவணைக்க மாட்டார்கள். மேலும்,  அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிப்பவர்கள். இவர்கள் தான் இழப்புக்குரியவர்கள் (றஹ்மத் அறக்கட்டளை) 


9,10 அ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.(9.முஹம்மது ஜான், 10.இம்தாதி)


11. (பாவிகளான) அவர்கள் அல்லாஹ்வுக்கு அளித்திருந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்திய பின்னர், அதனை  முறித்துக் கொள்வர். மேலும் அல்லாஹ் எதனை இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமென ஏவினானோ? அதனைத் துண்டித்தும் நடப்பர். மேலும் பூமியில் குழப்பம் விளைவிப்பர் இவர்கள் தாம் நஷ்டவாளிகள் (பஷாரத்)


12. அல்லாஹ்விடத்தில் (இவர்கள்) செய்த உடன்படிக்கையை இவர்கள் உறுதிப்படுத்திய பின்னும் அதை முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தைச் சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அதைப் பிரித்தும் விடுகின்றனர். பூமியில் விஷமம் செய்துகொண்டும் இருக்கின்றனர். இத்தகையவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள். (அப்துல் ஹமீது பாகவி)



13. அவர்கள் எத்தகையவர்கள் எனில், அல்லாஹ்வுடன் உறுதியான உடன்பாடு செய்துகொண்ட பின்னர் அதை முறித்து விடுவார்கள். மேலும், எந்த உறவு முறைகள் இணைத்து வைக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளானோ அவற்றைத் துண்டிப்பார்கள். மேலும், பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிவார்கள். (உண்மையில்) இத்தகையோரே இழப்புக்குரியவர்களாவர். (IFT)



14. அ(த்தீய)வர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் (அதை)முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ அதை துண்டித்தும் விடுகின்றனர்;மேலும் (அதைத்துண்டிப்பதன் மூலம்) பூமியில் குழப்பம் செய்து கொண்டுமிருக்கின்றனர்; இவர்களே தாம் நஷ்டமடைந்தோராவர். மன்னர் ஃபஹத் வளாகம் -சவூதி)








No comments: