Monday, September 23, 2019

الْحَمْدُ - (அல்ஹம்து ) - எல்லாப் புகழும் لِلَّـهِ - (லில்லாஹி) -அல்லாஹ்வுக்கே

தமிழ் அரபியுடன் சொல்லுக்கு சொல். (வார்த்தைக்கு வார்த்தை) அத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7 


இதில் சொல்லுக்கு சொல். (வார்த்தைக்கு வார்த்தை) தவிர கோர்வையாக உள்ள தமிழாக்கம் மறைந்த சவூதி மன்னர் ஃபஹத் வளாகம் வெளியிட்டுள்ள தமிழாக்கம் ஆகும்.

S.S. முஹம்மது  அப்துல்  காதர்  பாகவி

ஆ.கா.அ. அப்துல் ஹமீது பாகவி

அன்வாருல் குா்ஆன் E.M. அப்துர்றஹ்மான்

ஜான் டிரஸ்ட்

I.F.T

A.முஹம்மது சிராஜுத்தீன் நூரி

திரீயெம் பிரிண்டர்ஸ்

ரஹ்மத் அறக்கட்டளை

இக்பால் மதனி

பீ.ஜே. 

ஆகியவர்களின் ஒவ்வொரு விதமான மொழி பெயர்ப்புகளையும் தொகுத்து 10-12-2012ல் வெளியிட்டோம்

அந்த  பத்து (10) விதமான மொழி பெயர்ப்புகளைக் காண



அல் பாத்திஹா அத்தியாயத்தின் மொழிபெயர்ப்புகள் என்பதை கிளிக் செய்து பாருங்கள் 



الْحَمْدُ -  (அல்ஹம்து )  

எல்லாப் புகழும் - அனைத்துப் புகழும் 



لِلَّـهِ -  (லில்லாஹி)  

அல்லாஹ்வுக்கே 


رَبِّ - (ரப்பி) 

பராமரிப்பவன் - படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவன். - படைத்து வளர்த்துப் பாதுகாப்பவன் - படைத்து வளர்த்து தகுந்த பக்குவப்படுத்துபவன்.- இரட்சகன்

அரபியில் பி க்கு பதிலாக  என்றே பதிவாகி  ரப்ப என்று உள்ளது. பான்ட்ஸ் - fonts பிரச்சனை என எண்ணுகிறேன்  ரப்பி என்பதே சரியானது 




 الْعٰلَمِيْنَۙ‏ - (ல் ஆலமீன்) 

அகிலங்கள் - அகிலத்தை 




அல்ஹம்து  லில்லாஹி ரப்பில் ஆலமீன்


1:2அனைத்து புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது.

الرَّحْمَٰنِ- (அர்றஹ்மானி)

அளவற்ற அருளாளன் - மாபெருங் கருணையாளன் - பேரருளாளன்


الرَّحِيمِ- (ர்ரஹீம்) - 

நிகரற்ற அன்புடையோன்தனிப்பெருங்கிருபையாளன் - மிகக் கிருபையுடையவன் -பேரன்பாளன்


அர்றஹ்மானிர்ரஹீம்


1:3(அவன்) அளவற்ற அருளாளன்; மிகக் கிருபையுடையவன்.




مَالِكِ - (மாலிகி ) -   அதிபதி-


يَوْمِ - (யவ்மி) நாள்


الدِّينِ- (த்தீன்) -தீர்ப்பு - கூலி

மாலிகி யவ்மித்தீன்

1:4(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி..



إِيَّاكَ- (இய்யாக) 

உன்னை- உன்னையே- உனக்கே


نَعْبُدُ - (நஃபுது ) 

வணங்குகிறோம் - அடிபணிகிறோம்.



وَ - (வ) 

இன்னும் - ,மேலும்


إِيَّاكَ - (இய்யாக) -  உன்னிடமே 


نَسْتَعِينُ - (நஸ்தஈ(னு)ன்)

உதவியும் தேடுகிறோம் - உதவி கேட்கிறோம். -உதவி தேடுவோம்



இய்யாக நஃபுது  இய்யாக நஸ்தஈன்

1:5(எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.


اهْدِ - (ஹ்தி) - 

நீ நடத்து -நேர்வழி நடத்து


نَا -  (நா )-  
எங்களை - எங்களுக்கு


الصِّرَاطَ - (ஸ்ஸிராத) 
  வழி - பாதையில்


الْمُسْتَقِيمَ - (ல் முஸ்தகீ(ம)ம்)  -  

நேரானது 


இஹ்திநா ஸ்ஸிராதல் முஸ்தகீம்

1:6நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!


صِرَاطَ -    (ஸிராத)
வழி


الَّذِينَ-    (ல்லரீன)
சிலர் - யாருக்கு 



أَنْعَمْتَ - (அன்அம்த ) 
 நீ அருள்  புரிந்தாய்


عَلَيْ -  (அலை )- மீது



هِمْ- (ஹிம்)அவர்கள்


غَيْرِ -  (கைரி)அல்லாதவன் 


الْمَغْضُوبِ-  (ல் மஃழூபி)  - 

கோபத்துக்குள்ளானவன்


عَلَيْ - (அலை)  மீது


هِمْ-  (ஹிம்)அவர்கள்

 وَ - (வ ),மேலும் 


 لأ-     (லா ) -  இல்லை


 الضَّالِّينَ-  (ல்ழால்லீன்)
வழி தவறியவர்கள்



ஸிராதல்லரீன அன்அம்த அலைஹிம் கைரில் மஃழூபி அலைஹிம் வழல்லால்லீன்



1:7எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக). (அவ்வழி உன்) கோபத்திற்கு உள்ளானவர்களுடையதும் அல்ல; வழி தவறியவர்களுடையதும் அல்ல.

https://kamfazlulilahi.blogspot.com/2019/09/blog-post_23.html



No comments: