இவற்றில் எது சரி? என்கிறது உங்கள் ஆய்வு?
இந்த வசனத்தில் தியாரிகும் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதற்கு 1.அன்வாறுல் குர்ஆன், 2.ஸலாமத், 3.மலிவு பதிப்பு, 4.திரீயெம் ஆகிய நான்கு பதிப்பகத்தார் உங்கள் நாடுகள் என்று மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.
1. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT, 2. அதிரை ஜமீல் ஆகியோர் ஊர் என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.
1.ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி
2. P.J.
3. K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி,
4. ஜான் டிரஸ்ட்,
5.பஷாரத்
6.உமர் ஷரீப் காஸிமி
7.றஹ்மத்
8.அல்-மதீனா அல்-முனவ்வரா
9. தாருஸ்ஸலாம், ரியாத்
தார் என்பது ஊர், நாடு, வீடு, மறுமை வீடு, இவ்வுலகம் மறு உலகம் என்று இடத்துக்கு தக்கவாறு பல பொருள்கள் தரக் கூடிய வார்த்தைதான்.
இந்த வசனத்தின் இந்த இடத்தில் வீடு என்பதே பொருத்தமான மொழி பெயர்ப்பு. என்பது நமது கருத்தாகும்.
இந்த இடத்தில் (இந்த வசனத்தில்) எது சரியானது பொருத்தமானது என்று நீங்களும் ஆய்வுடன் மொழி பெயர்ப்புகளை படியுங்கள். அல்லாஹ்வின் அருளை பெறுங்கள்
-----------------
அன்வாறுல் குர்ஆன்
உமர் ஷரீப் காஸிமி
.றஹ்மத்
.அதிரை ஜமீல்
K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, ஆகியோர் பீ.ஜே. மாதிரி இன்னும் மேலும் என்று இந்த வசனத்தில் மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள்.
உங்கள் இரத்தங்களை ஓட்டிக் கொள்ளாதீர்கள்! உங்கள் வீடுகளிலிருந்து உங்களை (சேர்ந்தோரை) வெளியேற்றாதீர்கள்!'' என்று உங்களிடம் உறுதிமொழி எடுத்தபோது, நீங்களே சாட்சிகளாக இருந்து ஏற்றீர்கள். - (PJதொண்டி)
உங்களிடையே ஒருவருக்கொருவர் இரத்தம் சிந்திக் கொள்ளக் கூடாது. உங்களுள் ஒருவர் மற்றவரை ஊரை விட்டுத் துரத்தக் கூடாது என்னும் உறுதிமொழியை உங்களிடமிருந்து வாங்கினோம். (அதை) ஒப்புக்கொண்டு அதற்கு நீங்களே சாட்சிகளாக இருந்தீர்கள் (என்பதையும் நினைத்துப் பாருங்கள்). - (அதிரை ஜமீல்)
இன்னும் (நினைவு கூறுங்கள்;) “உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்” என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள் (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள். - ஜான் டிரஸ்ட்
அன்றி, நீங்கள் உங்கள் (மனிதர்களுடைய) இரத்தத்தை ஓட்டாதீர்கள் என்றும், உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மனிதர்க)ளை வெளியேற்றாதீர்கள் என்றும், உங்(கள் மூதாதை)களிடம் நாம் உறுதிமொழி வாங்கியதை நீங்களும் (மனம் விரும்பி சம்மதித்து) அதனை உறுதிபடுத்தியிருக்கின்றீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். -( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
No comments:
Post a Comment