Sunday, September 22, 2019

بِسْمِ – (பிஸ்மி) பெயரால் اللَّـهِ - (ல்லாஹி) அல்லாஹ்வின் الرَّحْمَـٰنِ - (ர்றஹ்மானி) - அளவற்ற அருளாளன் الرَّحِيمِ - (ர்றஹீம்) - நிகரற்ற அன்புடையோன்.

தமிழில் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு அரபியில்படிக்க (ஓத) த் தெரியாதவர்களுக்காக அரபி வார்த்தைகளை தமிழிலும் எழுதி உள்ளோம்.

بِسْمِ  (பிஸ்மி) பெயரால்


اللَّـهِ - (ல்லாஹி) அல்லாஹ்வின்


الرَّحْمَـٰنِ - (ர்றஹ்மானி)  -  அளவற்ற அருளாளன்


الرَّحِيمِ  - (ர்றஹீம்)    - நிகரற்ற அன்புடையோன்.


இணைத்து படிப்போம்


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் - அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்.


மன்னர் ஃபஹத் வளாகம் மற்றும் சவூதி  மர்க்கஸ் மொழி பெயர்ப்புகளிலும் திருப் பெயரால் என்று இருக்காது. .... அல்லாஹ்வின் பெயரால் என்றே இருக்கும். காரணம் மூலத்தில் திரு இல்லை என்பது அவர்கள் நிலைப்பாடு.


ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் எது முதல் வசனம்?


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்று திரு குர்ஆனில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் உள்ளது. அல்லாஹ்வின் பெயரால் துவங்க வேண்டும் என்பதற்காக உள்ளதாஅல்லது அந்தந்த அத்தியாயத்தைச் சார்ந்த முதல் வசனமாக அது உள்ளதாஒவ்வொரு அத்தியாயத்திற்கும் எது முதல் வசனம்?


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்று எல்லாரும் சொல்கிறோம்.  இது திரு குர்ஆனில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்தின் முதல் வசனம் ஆகும். இந்த உண்மையின் விபரத்தை பெரும்பாலான மக்கள் விளங்காமல் இருக்கிறோம்இதற்கு இந்த கேள்வியே சான்று. 


இந்தக் கேள்வி ஏன் வருகின்றதுஎல்லா ஆயத்களுக்கும் வசன எண் போடப்பட்டு உள்ளதுபிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதில் வசன எண் போடப்படவில்லை. பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பது அத்தியாயத்தைச் சார்ந்த வசனம் என்றால் அதற்கும் நம்பர் போட்டு இருக்க வேண்டுமே.


எனவே எந்த ஒரு காரியத்தை துவங்கினாலும் பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்று சொல்லித்தான் துவங்குகிறோம்அது போலத்தான் ஒவ்வொரு சூராவையும். –அத்தியாயத்தையும் துவங்கும்பொழுது பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்  என்று சொல்லி துவங்குகிறோம் என்று விளங்கி வைத்துள்ளார்கள்.


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பது ஒட்டு மொத்த குர்ஆனுக்கும் ஒரு முறை சொல்ல வேண்டிய வசனம் அல்லஒவ்வொரு சூராவையும். – அத்தியாயத்தையும் துவங்கும்பொழுது சொல்ல வேண்டிய துவக்க வார்த்தை அல்ல.  அது அந்த அந்த அத்தியாயத்தைச் சார்ந்த முதல் வசனம் ஆகும்.


சூரதுத் தவ்பா என்ற ஒன்பதாவது அத்தியாயத்தை தவிர மீதம் உள்ள 113 சூராக்களின் முதல் வசனமே  பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதுதான்.  துவங்குவதற்காக உள்ள வசனம் என்பதற்கும் முதல் வசனம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.


துவக்க வசனம் என்றால் ஒவ்வொரு காரியத்தையும் துவங்கும்பொழுது சொல்வது போல இங்கும் துவங்குவதற்காக சொல்கிறோம் என்ற பொருள்தான் வரும்அப்படித்தான் விளங்கி வைத்து இருக்கிறோம்


முதல் வசனம் என்றால் அந்த அத்தியாயத்தைச் சார்ந்தது.  அந்த அத்தியாயத்தின் ஏனைய வசனங்களுடன் இதுவும் ஒன்று என்பதை தெளிவுபடுத்தும் வார்த்தையாகும்.


நிச்சயமாக  நாம்  உமக்குத்  திரும்பத்  திரும்ப  ஓதப்படும்  ஏழு    வசனங்களையும்  மகத்தான  குர்ஆனையும்  வழங்கியுள்ளோம்  என்று  
சூரத்துல்  ஹிஜ்ர்  மலைப்பாறை  என்ற  அத்தியாயத்தின்  87  ஆவது    வசனத்தில்  அல்லாஹ்  கூறி  உள்ளான்.  இது  சூரத்துல்  பாத்திஹா  என்ற  
அத்தியாயத்தைப்  பற்றித்தான்  சொல்லப்பட்டுள்ளதுஅனைவருமே ஏற்று இருக்கிறார்கள். இதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை.


அல்லாஹ்வால்  ஏழு  வசனங்கள்  என்று  தெளிவாகச்  சொல்லப்பட்ட  சூரத்துல்  பாத்திஹாவில்  கூட பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதைச் சேர்த்து ஏழு வசனங்களாஅதைச் சேர்க்காமல் ஏழு வசனங்களா?  என்பதில் கருத்து வேறுபாடுகள் கொண்டுள்ளார்கள்.


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்  என்பதைச்  சோ்த்து  தான்  ஏழு வசனங்கள். என்று ஒரு சாரார். சோ்க்காமல் தான்  ஏழு வசனங்கள் என்று இன்னொரு சாரார். இந்த மாதிரி  இருவித கருத்துக்கள் தமிழ் மொழி பெயர்ப்பாளர்களிடமும் உள்ளது. 



இருவித கருத்துக்களை இரண்டு வெளியீட்டாளர்களிடம் காண்பது ஆச்சரியம் இல்லை. ஒரே  தமிழ் தர்ஜுமா வெளியீட்டாளர்களிடம் இருவித  கருத்துக்களை காண்கிறோம். 


தாருல் ஹுதாவின் ஒரு வெளியீட்டில் பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதை ஒட்டி அடைப்புக் குறிக்குள் ஒன்று (1) என போட்டுள்ளார்கள். 

அதாவது பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் தான் முதல் வசனம்  என்ற பொருள்பட போட்டு இருக்கிறார்கள். 


அதே தாருல் ஹுதாவின்  இன்னொரு வெளியீட்டில் அல்ஹம்துலில்லாஹ் ரப்பில் ஆலமீன் என்பதை ஒட்டி அடைப்புக் குறிக்குள் ஒன்று (1) என போட்டுள்ளார்கள். 

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பது முதல் வசனம் அல்ல என்ற பொருள்பட போட்டு இருக்கிறார்கள்.


இது மாதிரி ஒரே மொழி பெயர்ப்பாளர்கள். வேறு இடங்களில் இந்த மாதிரி மாறுபட்டு அவர்களுக்கு அவர்களே முரண்பட்டுள்ளதை தேவை வரும்பொழுது பார்ப்போம். 


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்  என்பதைச்  சோ்த்து ஏழு வசனங்களாசேர்க்காமல் ஏழு வசனங்களாஎன்பது தர்ஜுமாக்களில் மட்டும் அல்ல. 

அரபி மொழியில் மட்டும் வெளியிட்டுள்ள குர்ஆன்களிலும் இந்த வித்தியாசங்கள் உள்ளன. இதை தமிழக பள்ளிவாசல்களில் உள்ள குர்ஆன்களிலும் விற்பனை நிலையங்களில் உள்ள குர்ஆன்களிலும் பார்த்து அறிந்து நீங்கள் தெளிவு பெறலாம்.









குறைகள் காண்பதற்காக இவற்றை சுட்டிக் காட்டுகிறோம் என்று எண்ணாதீர்கள். நீங்கள் குர்ஆனுடன் ஒன்ற வேண்டும் என்பதற்காக தரும் விளக்கம்தான் இது. அருள் மறையை விளங்குவோம் விளக்குவோம் இன்ஷாஅல்லாஹ்.

No comments: