Friday, September 6, 2019

2:87 அகந்தை கொண்டு. சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொலையும் செய்தீர்கள்

இந்த வசனத்தில் புதிதாக இடம் பெற்றுள்ள வார்த்தைகள் 

 1.வஃகFப்Fபைனா  2.பிர்ருஸுலி  3.அல் பையினாதி 4.வஅய்யத்னாஹு 5.பிர்ரூஹி

6.அல்குத்ஸி 7.அFபகுல்லமா ஜாஅகும் 8. லாதஹ்வா ஆகியவையாகும்

https://mdfazlulilahi.blogspot.com/2020/12/287.html




وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِن بَعْدِهِ بِالرُّسُلِ ۖ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ ۗ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَىٰ أَنفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ ﴿٨٧﴾

وَلَقَدْ - வலஃகத்
(இது தஃகீத் - உறுதிபடுத்தும்  வார்த்தைகளில் ஒன்று)   2:65, 


آتَيْنَا ஆதய்னா 

வழங்கினோம் (கொடுத்தோம்) 2:53


مُوسَى - மூஸா
மூசாவிற்கு


آتَيْنَا مُوسَى - ஆதய்னா மூஸா
மூஸாவுக்கு வழங்கினோம் (கொடுத்தோம் - தந்தோம்)


الْكِتَابَ -  அல் கிதாப 
வேதம் - இறை மறை - புத்தகம்

2:442:53. 2:78. 2:79. 2:87.

 அல் கிதாபு 2:2அல் கிதாபி  2:85.


وَقَفَّيْنَا - வஃகFப்Fபைனா 
தொடர்ச்சியாக அனுப்பினோம் -தொடரச் செய்தோம். 


مِن மின் 
இருந்து 

بَعْدِ பஃதி
பின்னர்

هِ -ஹி 
அவருக்கு
 مِنْۢ بَعْدِهٖ  மின்ம் பஃதிஹி  2:51.  
அவருக்குப் பின் (அவருக்குப் பின் இருந்து)

மின்ம் பஃதி -2:27. 2:52. 2:56  2:642:74. 2:75.


بِالرُّسُلِ பிர்ருஸுலி
தூதர்களை

وَآتَيْنَا - வஆதய்னா  
வழங்கினோம் . - கொடுத்தோம்

عِيسَى - ஈஸா 
ஈசாவிற்கு


ابْنَ - இப்ன 
மகன் 
அப்னாஃஅ2:49.


 مَرْيَمَ - மர்யம


عِيسَ ابْنَ مَرْيَمَ - ஈஸப்ன மர்யம 
மர்யமுடைய மகன் ஈஸா - மர்யமின் குமாரர் ஈஸா

الْبَيِّنَاتِ - அல் பையினாதி  
தெளிவான சான்று (அத்தாட்சி - ஆதாரம்)

وَأَيَّدْنَاهُ - வஅய்யத்னாஹு 
அவரை பலப் (வலிமைப்)படுத்தினோம் (வலுவூட்டினோம்)

بِرُوحِ-பிர்ரூஹி 
 ஆவி - ஆத்மா 
الْقُدُسِ- அல்குத்ஸி
தூய -பரிசுத்தமான- 

بِرُوحِ الْقُدُسِ - பிர்ரூஹில்குத்ஸி
தூய ஆவி மூலம் - பரிசுத்தமான ஆத்மாவைக் கொண்டு - பரிசுத்த ஆவியானவர் மூலம்

----------------

أَفَكُلَّمَا جَاءَكُمْ - அFபகுல்லமா ஜாஅகும் 
உங்களுக்கு வந்தபோதெல்லாம் -உங்களுக்கு கொண்டு வந்த போதெல்லாம் 

رَسُولٌ ரசூலுன் 
(ஒரு) தூதர்

بِمَا - பிமா 
எதைக் கொண்டு
2:4. 2:10  2:412:592:61. 2:76.


 لَا -  லா
இல்லை

2:2. 2:6. 2:11. 2:12. 2:13. 2:17. 2:18 2:26. 2:32. 2:482:642:682:712:78. 2:802:83. 2:84.


 تَهْوَىٰ-  தஹ்வா
விருப்பம்

لَا تَهْوَىٰ - லாதஹ்வா  
 விரும்பவில்லை -  விரும்பாததை 

أَنفُسُكُمُ - அன்Fபுஸுகுமு 
உங்கள் மனங்கள்
(2:9. 2:57.அன்Fபுஸகும் 2:442:542:842:85, அன்Fபுஸகுமு 2:87,Fப்ஸுன் 2:48.அன்Fப்ஸின் 2:48.Fப்ஸன் 2:72.)

اسْتَكْبَرْتُمْ - அஸ்தக்பர்தும்
அகந்தை (ஆணவம் -கர்வம்) கொண்டீர்கள். பெருமையடித்தீர்கள்  (ஸ்தக்பர 2:34.)


فَفَرِيقًا - FபFபரீஃகன்
சிலரை - ஒரு பிரிவினரை 2:85

كَذَّبْتُمْ - (ர்)த்தப்தும்
 பொய்ப்பித்தீர்கள் - பொய்யரென்றீர்கள்  2:10, 2:39. 

وَفَرِيقًا -வFபரீஃகன்
 சிலரை -  ஒரு பிரிவினரை

تَقْتُلُونَ தக்துலுான
கொலை செய்கிறீர்கள் 2:85(Fபக்துலுா 2:54.வயக்துலுான 2:61ஃகதல்தும்2:72.  

இந்த வசனத்தில்  5 இடங்களில் வாவு வந்துள்ளது.  சிலர்  3க்கும் சிலர் 2க்கும் சிலர் ஒன்றுக்கும்  இன்னும் மேலும் என்று மொழி பெயர்த்துள்ளனர். சிலர் பீ.ஜே. மாதிரி  வாவை பயன்படுத்தி உள்ளனர்.

அதுபோல்  லஃகத்  என்பதற்கு  திண்ணமாக - திட்டவட்டமாக - நிச்சயமாக - உறுதியாக  என்று மொழி பெயர்த்துள்ளார்கள். லஃகத்  என்பது தஃகீத்  என்றும்  உறுதிபடுத்தும் சொல்லாகும். இதற்கு நிச்சயமாக போன்றவை  நேரடி பொருள் கிடையாது என்ற கருத்துடையவர்கள் பீ.ஜே. மாதிரி  பயன்படுத்தி உள்ளனர்.
 
 

 தமிழ் நடையில்  மொழிப்பெயர்ப்பு :


1.மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். அவருக்குப் பின் பல தூதர்களைத் தொடரச் செய்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ்444 மூலம் அவரைப் பலப்படுத்தினோம். நீங்கள் விரும்பாததைத் தூதர்கள் கொண்டு வந்த போதெல்லாம் அகந்தை கொண்டீர்கள். சிலரைப் பொய்யரென்றீர்கள். சிலரைக் கொன்றீர்கள். (PJதொண்டி) 


2.மேலும், நாம் மூஸாவுக்கு மறை தந்தோம். அவருக்குப் பின் தொடர்ச்சியாகத் தூதர்களை அனுப்பினோம். இன்னும், மர்யமின் மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளைத் தூயவர் (ஜிப்ரீல்) மூலம் வழங்கி வலுவாக்கினோம். உங்கள் மனம் விரும்பாததை(இறை)த் தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் ஆணவம் கொண்(டு, மறுத்து விட்)டீர்கள். அவர்களுள் சிலரைப் பொய்ப்பித்தீர்கள்; சிலரைக் கொலை செய்து விட்டீர்கள். - (அதிரை ஜமீல்)


3.மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின் தொடர்ச்சியாக தூதர்களை அனுப்பினோம்;  இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம், மேலும் பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவரை வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும் போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள். - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்)



4.மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். உங்கள் மனம் விரும்பாததை(நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள். ஜான் டிரஸ்ட் 



5.திட்டவட்டமாக மூசாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின்னர் தொடர்ச்சியாக தூதர்களை அனுப்பினோம். மர்யமுடைய மகன் ஈசாவிற்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்அவரை ( ஜிப்ரீல் எனும் ) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு பலப்படுத்தினோம் உங்கள் மனங்கள் விரும்பாததை தூதர் எவரும் உங்களுக்குக் கொண்டு வந்த போதெல்லாம் நீங்கள் பெருமையடித்( து மறுத்) தீர்களல்லவா? (அத்தூதர்களில்) ஒரு பிரிவினரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள். ஒரு பிரிவினரைக் கொலை செய்கிறீர்கள்.



6.தவிர, (யூதர்களே!) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (ஒரு) வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப் பின் தொடர்ச்சியாகப் பல தூதர்களையும் அனுப்பி வைத்தோம். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்து அவரை (ஜிப்ரீல் என்னும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டும் பலப்படுத்தி வைத்தோம். (ஆனால்) உங்கள் மனம் விரும்பாத யாதொன்றையும் (நம்முடைய) எந்தத் தூதர் உங்களிடம் கொண்டு வந்தபோதிலும் நீங்கள் கர்வம் (கொண்டு விலகிக்) கொள்ளவில்லையா? அன்றியும் (அத்தூதர்களில்) சிலரை நீங்கள் பொய்யாக்கி, சிலரை கொலை செய்தும் விட்டீர்கள்! - ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)


 

7.மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை அருளினோம். மேலும், அவருக்குப் பின்னர் தொடர்ந்து தூதர்களை நாம் அனுப்பினோம். இறுதியில் மர்யமுடைய மகன் ஈஸாவுக்கும் தெளிவான சான்றுகளைக் கொடுத்தனுப்பினோம். மேலும் தூய ஆன்மாவைக் கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். யாரேனும் ஒரு தூதர் உங்களுடைய மன இச்சைகளுக்கு இசைவில்லாத ஏதேனும் ஒன்றை உங்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் நீங்கள் ஆணவம் கொண்டு புறக்கணித்தீர்கள்; சிலரைப் பொய்யரெனக் கூறினீர்கள்; மற்றும் சிலரை நீங்கள் கொலை செய்தீர்கள். இது என்ன போக்கு?

(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 


8.மேலும், நாம் மூஸாவிற்கு திட்டமாக வேதத்தைக் கொடுத்தோம்; அவருக்குப் பின் தூதர்களை தொடர்ச்சியாக நாம் அனுப்பியும் வைத்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவுக்கு தெளிவான அத்தாட்சிகளை வழங்கி, ருஹுல் குதுஸ் (எனும் ஜிப்ரீலைக்) கொண்டு அவரை நாம் பலப்படுத்தியும் வைத்தோம். உங்கள் மனம் விரும்பாததை (நம்முடைய) எந்தத்தூதரும் உங்களிடம் கொண்டுவந்த போதெல்லாம் (அதை ஏற்காது, புறக்கணித்துப்) பெருமையடித்துக் கொள்கிறீர்களா? ஆகவே, (அத்தூதர்களில்) ஒரு சாராரை நீங்கள் பொய்யாக்கினீர்கள்; ஒரு சாராரைக் கொலையும் செய்தீர்கள்-(அல்-மதீனா அல்-முனவ்வரா)




No comments: