இந்த 2:85 வசனத்தில் உள்ள வதுஃக்ரஜுன என்பதற்கு வெளியேற்றுகிறீர்கள் என்று நேரடி பொருளிலும் விரட்டினீர்கள் - துரத்துகின்றீர்கள் என்று தமிழ் நடைக்கு பொருத்தமான வார்த்தைகளிலும்
https://mdfazlulilahi.blogspot.com/2020/12/285.html
யுறத்துான என்பதற்கு திருப்பப்படுவார்கள் என்று நேரடி பொருளிலும் உட்படுவார்கள் -உட்படுத்தப்படுவார்கள் என்றும்
தழாஹரூன என்பதற்கு உதவிக் கொண்டீர்கள்! - வழிவகை செய்கின்றீர்கள் என்றும்.
துFபாதுாஹும் என்பதற்கு ஈட்டுத் தொகை - பிணைப்பணம் – நஷ்டஈடு பெற்றுக் கொள்கிறீர்கள் என்றும்
ஈடுகொடுத்து - மீட்புப் பணம் கொடுத்து – நஷ்டஈடு கொடுத்து என்றும்
விடுதலை செய்து விடுகிறீர்கள் -. விடுவிக்கின்றீர்கள் என்றும் மீட்டு விடுகின்றீர்கள்- மீட்கிறீர்கள் என்றும் மொழி பெயர்த்துள்ளார்கள்.
விடுகிறார்களா? மீட்டு விடுகிறார்களா? (விடுதலை செய்கிறார்களா? விடுதலை பெற்றுக் கொடுக்கிறார்களா?)
பிணைப்பணம் பெற்றுக் கொள்கிறார்களா? கொடுக்கிறார்களா? ஆய்வுடன் படியுங்கள்.
இணையத்தில் இறைமறை மொழி பெயர்ப்பாளர் அதிரை ஜமீல் காகா அளித்துள்ள பதில் இறுதியில் உள்ளது.
அவர்கள் வந்தால்
பின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீடுகளிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவனுக்கு இவ்வுலக வாழ்க்கை யில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. கியாமத் நாளில்1 கடுமையான வேதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. - (PJதொண்டி
(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே ஒருவரைடியாருவர் கொலை செய்து கொள்கின்றீர்கள். உங்களுள் ஒரு பிரிவினரை ஊரை விட்டுத் துரத்துகின்றீர்கள். அவர்களின் மீது (மாற்றார்) அநீதி இழைக்கவும் பகைமை கொள்ளவும் வழிவகை செய்கின்றீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் கைதிகளாக உங்களிடம் வந்தால், பிணைப்பணம் பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள். ஆனால், அவர்களை (ஊரை விட்டு) வெளியேற்றுவதே உங்கள் மீது தடுக்கப்பட்ட செயலாயிற்றே!. அவ்வாறெனில், நீங்கள் இறைமறையில் ஒரு பகுதியை நம்பி மற்றவற்றை மறுக்கின்றீர்களா? உங்களுள் இவ்வாறு செயற்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவையன்றி வேறெதுவும் கூலியாகக் கிடைக்காது. மறுமை நாளிலோ அவர்கள் கடுமையிலும் கடுமையான தண்டனைக்கு உட்படுவார்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி அல்லாஹ் மெத்தனமாக இல்லை - (அதிரை ஜமீல்)
(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களிமீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. - (ஜான் டிரஸ்ட் - இம்தாதி)
இவ்வாறு உறுதிப்படுத்திய பின்னரும் நீங்கள் உங்(கள் மனிதர்)களைக் கொலை செய்து விடுகின்றீர்கள். உங்களில் பலரை அவர்கள் இல்லங்களில் இருந்தும் வெளியேற்றி விடுகின்றீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் (அவர்களுடைய எதிரிகளுக்கு) நீங்கள் உதவியும் செய்கின்றீர்கள். (ஆனால், நீங்கள் வெளியேற்றிய) அவர்கள் (எதிரிகளின் கையில் சிக்கிச்) கைதிகளாக உங்களிடம் (உதவி தேடி) வந்து விட்டாலோ அவர்களுக்காக நீங்கள் (பொருளை) ஈடுகொடுத்து (அவர்களை மீட்டு) விடுகின்றீர்கள். ஆனால், அவர்களை அவர்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றுவதும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. (இவ்வாறு செய்யும்) நீங்கள் வேதத்தில் (உள்ள) சில கட்டளைகளை நம்பிக்கை கொண்டு, சில கட்டளைகளை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கின்றார்களோ அவர்களுக்கு இவ்வுலகத்தில் இழிவைத் தவிர (வேறொன்றும்) கிடைக்காது. மறுமையிலோ, (அவர்கள்) கடுமையான வேதனையின் பக்கம் விரட்டப்படுவார்கள். உங்களுடைய இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. - ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்
(ஆனால் அதற்குப்) பின்னரும் கூட நீங்கள் ஒருவரையொருவர் கொலை செய்கிறீர்கள். உங்களில் ஒரு பிரிவினரை அவர்களின் ஊர்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களுக்கு அநீதியும் அக்கிரமமும் செய்து அவர்களுக்கு எதிராக ஆள் சேர்க்கிறீர்கள். ஆனால் அவர்கள் (போரில்) பிடிபட்டு கைதிகளாய் உங்களிடம் வரும்போது மீட்புப் பணம் கொடுத்து அவர்களை விடுவிக்கிறீர்கள். ஆனால், அவர்களை (அவர்களின் ஊர்களிலிருந்து) வெளியேற்றுவதே உங்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்ததே! அப்படியென்றால், நீங்கள் வேதத்தின் ஒரு பகுதியை நம்பி, மறு பகுதியை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறெந்தக் கூலியும் இல்லை. மறுமைநாளிலோ மிகக் கடுமையான வேதனையின் பக்கம் அவர்கள் திருப்பப்படுவார்கள். மேலும், நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற (இழி) செயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)
பின்னர் (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்கள்தான் அவர்கள்_உங்களை(ச் சேர்ந்தவர்களை) நீங்கள் கொலை செய்கிறீர்கள். இன்னும் உங்களில் ஒரு சாராரை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். பாவத்தைக் கொண்டும், பகைமையைக் கொண்டும் அவர்களுக்குப் பாதகமாக (எதிரிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். மேலும், (வெளியேற்றப்பட்டவர்கள்) சிறைப்பட்டவர்களாக உங்களிடம் வந்துவிட்டால் நஷ்டஈடு கொடுத்து (அவர்களை) விடுவிக்கின்றீர்கள். (அவ்வாறு) அவர்களை (அவர்களின் வீடுகளிலிருந்து) வெளியேற்றுவதே உங்களின்மீது தடை செய்யப்பட்டிருக்கிறது, ஆகவே, நீங்கள் வேதத்தில் சிலவற்றை விசுவாசித்து (மற்றும்) சிலவற்றை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் இதைச் செய்கிறவருக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி இல்லை. இன்னும், மறுமை நாளில் அவர்கள் மிகக் கடுமையான வேதனையின் பால் திருப்பப்படுவார்கள். அன்றியும் நீங்கள் செய்பவற்றைப் பற்றி அல்லாஹ் பராமுகமானவனல்லன்.
(அல்-மதீனா அல்-முனவ்வரா)
[06/12, 4:17 pm] ஜமீல்காக்கா: அல் குர்ஆனுக்கான தமிழாக்கத்தின் வேண்டுகோள் பக்கத்தில், அரபுச் சொல்லுக்குச் சொல் 'மொழி பெயர்ப்பை' தவிர்த்து, மொழியாக்க நடையில் 'இணையத்தில் இறைமறை'யை எடுத்துச் செல்கிறோம் என்றே குறிப்பிட்டுள்ளோம்.
எனவே, வழக்கமான 'மொழிபெயர்ப்பு' என்ற வழியிலிருந்து விலகி, 'கருத்துத் தழுவல், மொழியாக்கம்' எனும் புதுமுறையில் 'இணையத்தில் இறைமறை'யை அமைத்திருக்கிறோம்.
எனவே, இக்கருத்துத் தழுவல் மொழியாக்கத்தில் சொல்லுக்குச் சொல் பொருள்தேட முயல வேண்டாம் என்பது எங்களின் அன்பான வேண்டுகோள்.
'இணையத்தில் இறைமறை' எளிமையாகவும் அதேவேளை கருத்து வீச்சுக் குறையாமலும் இருக்க வேண்டும் என்று பெரிதும் முயன்றிருக்கிறோம்.
அவசியமற்ற அடைப்புக் குறிகள், தமிழையன்றி வேற்றுமொழிச் சொல்லாட்சி ஆகியன முடிந்தவரை விலக்கப் பட்டிருக்கின்றன.
https://sites.google.com/site/tamilquraan2/request கூடுதல் விபரம் இன்ஷா அல்லாஹ் அடுத்து அனுப்பிவைப்பேன்.
------------------------
[06/12, 6:09 pm] ஜமீல்காக்கா:
خَرَجَ
என்னும் வேரடி வினைச் சொல்லுக்குத் தமிழில் ‘வெளியேறினான்’ என்பதுதான் நேரடி மொழிப் பெயர்ப்பு.
وَلَا تُخْرِجُونَ أَنْفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ (2:84)
என்பதற்கு நேரடிப் பொருள்:
“உங்களுடைய இல்லங்களிலிருந்து உங்களை நீங்கள் வெளியேற்றாதீர்கள்”
‘வெளியேற்றினார்கள்’ என்பது இந்த இடத்தில் மிகவும் மிருதுவான, சாதாரணச் சொல்லாக வெளிப்படுகின்றது. துரத்தினார்கள் / விரட்டினார்கள் போன்ற சொற்கள் தன் இனப்பகையின் மீதுள்ள சினத்தை வெளிப்படுத்துபவையாக அமையும்.
***
2:85 வசனத்தை அடைப்புக் குறிகள் இல்லாமல் படித்துப் பாருங்கள்:
(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே ஒருவரை ஒருவர் கொலை செய்து கொள்கின்றீர்கள். உங்களுள் ஒரு பிரிவினரை ஊரை விட்டுத் துரத்துகின்றீர்கள். அவர்களின் மீது (மாற்றார்) அநீதி இழைக்கவும் பகைமை கொள்ளவும் வழிவகை செய்கின்றீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் கைதிகளாக உங்களிடம் வந்தால், பிணைப்பணம் பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள். ஆனால், அவர்களை (ஊரை விட்டு) வெளியேற்றுவதே உங்கள் மீது தடுக்கப்பட்ட செயலாயிற்றே!. அவ்வாறெனில், நீங்கள் இறைமறையில் ஒரு பகுதியை நம்பி மற்றவற்றை மறுக்கின்றீர்களா? உங்களுள் இவ்வாறு செயற்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவையன்றி வேறெதுவும் கூலியாகக் கிடைக்காது. மறுமை நாளிலோ அவர்கள் கடுமையிலும் கடுமையான தண்டனைக்கு உட்படுவார்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி அல்லாஹ் மெத்தனமாக இல்லை
2:84 வசனத்தை அடைப்புக் குறிகள் இல்லாமல் படித்துப் பாருங்கள்:
உங்களிடையே ஒருவருக்கொருவர் இரத்தம் சிந்திக் கொள்ளக் கூடாது. உங்களுள் ஒருவர் மற்றவரை ஊரை விட்டுத் துரத்தக் கூடாது என்னும் உறுதிமொழியை உங்களிடமிருந்து வாங்கினோம். (அதை) ஒப்புக்கொண்டு அதற்கு நீங்களே சாட்சிகளாக இருந்தீர்கள் (என்பதையும் நினைத்துப் பாருங்கள்).
யெமன் நாட்டவரான ஹாரிஸா என்பவரின் இரு மகன்கள் அவ்ஸு பின் ஹாரிஸா & கஸ்ரஜ் பின் ஹாரிஸா. நபி (ஸல்) பிறப்பதற்குச் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர், தம் இரு மகன்களோடு மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து வந்தவர் ஹாரிஸா.
அவ்விருவரின் சந்ததியரின் ஆதரவாளர்களான ஒரே இனத்தவரான யூதர்களைப் பற்றித்தான் நீங்கள் குறிப்பிட்டுள்ள 2:85 வசனம் பேசுகின்றது.
அவ்ஸு-கஸ்ரஜ் இனத்தவருக்கு யூத ஆதரவாளர்கள் இருந்தனர். பிற்றைக் காலத்தில் இஸ்லாத்த ஏற்ற அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களின் யூத ‘கைனூக்கர்’களும் அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களின் இனமான யூத ‘நளீர்’களும் இளையவரின் கோத்திரமான கஸ்ரஜ்களின் ஆதரவாளர்களாவர்.
மூத்தவரின் கோத்திரமான அவ்ஸுக்கு யூத ‘குரைழா’வினர் மட்டும் ஆதரவாளர்களாவர்.
போரென்று வந்தால், அவ்ஸோடு இணைந்து குரைழாவினரும் கஸ்ரஜோடு இணைந்து கைனூக்கர்+நளீர்களும் இணைந்து போரை எதிர்கொள்வர்.
அவ்ஸிடம் அகப்பட்ட யூதக் கைதிகளை, கஸ்ரஜ்களின் ஆதரவாளர்களானான கைனூக்காவினர் பிணைப் பணம் ‘கொடுத்து’ மீட்பர். பெறுபவர்: குரைழாவினர்.
போலவே,
கஸ்ரஜிகளிடம் சிக்கிய குரைழாவினரை கஸ்ரஜ் அணியிலேயே உள்ள நளீர்களும் அவ்ஸின் அணியிலுள்ள குரைழாவினரும் பிணைப் பணம் ‘கொடுத்து’ மீட்பர். பெறுபவர்: கைனூக்கர்+நளீர்.
(இப்னு கஸீரின் சுருக்கம்)
No comments:
Post a Comment