இந்த வசனத்தில் இன்ன அன்ன போன்ற தஃகீது உடைய ஹர்புகள் இடம் பெறவில்லை. இருந்தாலும்
جملة اسمية
ஜும்ல இஸ்மிய்ய வாக (எழுவாய் பயனிலை கொண்ட வாசகம்) இடம் பெற்றுள்ளது. ஜும்ல இஸ்மிய்ய வரும்போது அரபு இலக்கணப்படி அதற்குள் தஃகீது உடைய பொருள் இருக்கும்.
ஆகவே இந்தக் கருத்துடையவர்கள் சிலர். சுவர்க்கவாசிகளே! அத்தகையோர் தாம் அவர்கள் தான் என்று மொழி பெயர்த்து உள்ளார்கள்.
சொர்க்கவாசிகள் என்பதே உறுதி படுத்தும் சொல்தான் என்ற கருத்துடையவர்கள் களே! - தாம் - தான் இன்றி மொழி பெயர்த்துள்ளார்கள்.
இந்த 2:82 வசனத்தில் வல்ல(ரீ)தீன என்ற வார்த்தையில் ஒரு வாவும்.
வஅமிலுா என்ற வார்த்தையில் ஒரு வாவும் ஆக 2 வாவுகள் இடம் பெற்றுள்ளன.
வேதத்தை சுமந்துள்ளவர்கள் கொள்கைப்படி வாவுக்கு இன்னும் / மேலும் என்று மொழி பெயர்த்தாக வேண்டும். ஆனால், இந்த வசனத்தில் இரண்டு வாவுக்கும்
1. ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி
2. உமர் ஷரீப்
3. ஜான் டிரஸ்ட்
4. ஸலாமத்
5.திரீயெம்
6. மலிவு பதிப்பு
7.K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி
8.அதிரை ஜமீல்
9.றஹ்மத்
10.தாருஸ்ஸலாம், ரியாத்
ஆகியோர் இரண்டு வாவுக்கும் மொழி பெயர்க்கவில்லை. குறிப்பாக உமர் ஷரீப் சொல்லுக்கு சொல்லில் 2 வாவுக்கு இ(ன்னும்) என்று மொழி பெயர்த்தவர் வசன நடையில் இன்னும் என்று மொழி பெயர்க்கவில்லை.
----
1. அன்வாறுல் குர்ஆன் E.M. அப்துர் ரஹ்மான், நூரிய்யி, பாஜில் பாகவி
2. பஷாரத்
3.இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)
4.மதீனா அல்-முனவ்வரா
ஆகியோர் ஒரு வாவுக்கு மொழி பெயர்க்கவில்லை.
வாவுக்கு இன்னும் / மேலும் என்று யாருமே மொழி பெயர்க்காமல் விட்டதில்லை என்றவர்கள் கவனத்திற்காக மீண்டும் பதிகிறோம்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். - பீ.ஜே.
நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்கள் சுவனத்திற்குரியவர்கள். அவர்கள் அங்கு என்றென்றும் வாழ்ந்திருப்பர். - (அதிரை ஜமீல்)
எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள். - ஜான் டிரஸ்ட்
ஆனால் எவர்கள் (இவ்வேதத்தை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.-( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
இன்னும் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்கள் சுவனவாசிகள்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள்.- (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)
No comments:
Post a Comment