இணைப்பில்
JPG யாக உள்ள தப்ஸீரில் உள்ள
பழைய றா, யானை தும்பிக்கையை
துாக்கி நிற்பது போன்ற லை, ளை, னை போன்ற பழைய எழுத்துக்கள் .இன்றைய தலைமுறையினருக்கு
தெரியாது.
அதுபோல முடிவு என்பதற்கு அந்தியம் என்றும் (அவர்களை) விட என்பதற்கு பார்க்கினும் என்றும் வலிமையாக என்பதற்கு கடுமையா என்றும் உழுது என்பதற்கு கிளறி என்றும் என்றும் தமக்கு தாமே என்பதற்கு நப்ஸுகளுக்கே என்றும் உள்ள வார்த்தைகளும் இன்றைய தலைமுறையினருக்கு புரிவது கடினம்.
https://kamfazlulilahi.blogspot.com/2007/06/blog-post_25.html
அதுபோல முடிவு என்பதற்கு அந்தியம் என்றும் (அவர்களை) விட என்பதற்கு பார்க்கினும் என்றும் வலிமையாக என்பதற்கு கடுமையா என்றும் உழுது என்பதற்கு கிளறி என்றும் என்றும் தமக்கு தாமே என்பதற்கு நப்ஸுகளுக்கே என்றும் உள்ள வார்த்தைகளும் இன்றைய தலைமுறையினருக்கு புரிவது கடினம்.
https://kamfazlulilahi.blogspot.com/2007/06/blog-post_25.html
பூமியில் அவர்கள் பிரயாணம் செய்து, அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களது அந்தியம் எவ்வாறாயிற்றென்று அவர்கள் கவனிக்க வில்லையா? அவர்களைப் பார்க்கினும் சக்தியால் அவர்கள் கடுமையா யிருந்தனர். இன்னும் பூமியைக் கிளறி, அதனை அவர்கள் செழிக்கச் செய்ததைப் பார்க்கினும் அதிகமாக அதனை அவர்கள் செழிக்கச் செய்தனர். இன்னும் அவர்களுடைய துாதர்கள் அவர்களிடம் (தெளிவான) ஆதாரங்களை கொண்டு வந்தார்கள். ஆகவே, அவர்களை அநியாயஞ் செய்வதற்காக அல்லாஹ் இருக்க வில்லை. என்றாலும் தங்களுடைய நப்ஸுகளுக்கே அநியாயஞ் செய்கிறவர்காளாகி விட்டார்கள்.
இதுதான் 30:9 ஆம் வசனத்திற்கு 1959ல் செய்துள்ள பழைய மொழி பெயர்ப்பு ஆகவே மொழி பெயர்ப்புகளில் உள்ள பழைய தமிழ்களை பழந் தமிழ், கொடுந்தமிழ் கொச்சைத் தமிழ் என்று ஒதுக்காமல் புரிந்து சிந்தித்து விளங்குவதற்காக பயன்பாட்டில் உள்ள தர்ஜுமாக்களில் உள்ள பழைய தமிழ்களுடன் எளிய நடைமுறைத் தமிழையும் இடம் பெறச் செய்துள்ளோம்.
உதாரணமாக “அக்கிரமம் இழைத்துக் கொண்டிருந்தவர்களையும் என்பதை “அநியாயம் செய்தார்களே அவர்களையும் என்று ஒருவர் எளிமைப்படுத்தி இருப்பார். இன்னொருவர் அநியாயம் செய்தவர்களையும் என்று இன்னும் எளிமைப்படுத்தி இருப்பார். இன்னும் சிலர் அநீதி இழைத்தோரையும் என்று மொழி பெயர்த்து இருப்பார்கள். இவை அனைத்தையும் இடம் பெறச் செய்துள்ளோம். அக்ரமஸ்தன், அநியாயஸ்தன் என்ற மொழி பெயர்ப்புகளை முந்தைய வெளியீடுகளான ழாழிமூன், ழாலிமீன் ஆகிய இரண்டில் இடம் பெறச் செய்திருந்தோம். அவை பயன்பாட்டில் இல்லை என்பதால் அதை இதில் இடம் பெறச் செய்யவில்லை.
ழலமூ, ழலமூனா, ழலம்நாாா தழ்லிமூன, துழ்லமூன, யழ்லிமூன என்பது போன்று வரக்கூடிய (அநியாயம், அக்கிரமம், அநீதி) வார்த்தைகள் இடம் பெற்றுள்ள 67 வசனங்களை இந்த இண்டக்ஸில் (பொருள் அட்டவணையில்) காண உள்ளோம்.
1. உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். "நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!'' (என்று கூறினோம்). அவர்கள் (மா ழலமூனா)
- مَا ظَلَمُوْنَا
நமக்குத் தீங்கு – அநீதி - அநியாயம் இழைக்கவில்லை மாறாக (அன்Fபுஸஹும் யழ்லிமூன)
اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
தமக்குத் தாமே தீங்கு – அநீதி - அநியாயம் இழைத்துக் கொண்டனர். 2:57.
-------------------------------------------------
2. ஆனால் ழலமூ
ظَلَمُوْ
அநீதி இழைத்தோர், (- அக்கிரமக்காரர்கள்- அநியாயம்
செய்தவர்கள் - வரம்பு மீறியவர்கள்) தமக்குக் (கூறப்பட்டதை விடுத்து) கூறப்படாத வேறு சொல்லாக மாற்றினார்கள். எனவே ழலமூ
ظَلَمُوْ
அநீதி இழைத்து, (அக்கிரமங்கள் செய்தவர்கள் – அக்கிரமக்காரர்கள்- அநியாயம்
செய்து) குற்றம் புரிந்ததால் வானத்திலிருந்து வேதனையை அவர்களுக்கு இறக்கினோம் 2:59.
---------------------------------------------------------
---------------------------------------------------------
3. அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க
முயல்பவனை விட பெரும் வ மன் அழ்லம்
وَمَنْ أَظْلَمُ
அநீதி இழைத்தவன் - பெரிய கொடுமைக்காரன்- பெரிய அநியாயக்காரன்-கொடிய அக்கிரமக்காரன்- மகா அநியாயக்காரன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு
இவ்வுலகில் இழிவும், மறுமையில்1 கடுமையான வேதனையுமுண்டு. 2:114.
---------------------------------------
3. "இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் மற்றும் (அவரது)
வழித்தோன்றல்கள் யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? நன்கு அறிந்தோர்
நீங்களா? அல்லாஹ்வா?'' என்று கேட்பீராக!
அல்லாஹ்விடமிருந்து தனக்குக் கிடைத்த சான்றை மறைப்பவனை விட வ மன் அழ்லம்
وَمَنْ أَظْلَمُ
அநீதி
இழைத்தவன் –மிகப் பெரிய அநியாயக்காரன்- பெரிய அக்கிரமக்காரன் யார்? நீங்கள்
செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. 2:140
--------------------------------
4. நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில்
திருப்புவீராக! எங்கே நீங்கள்
இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! இல்லல்லதீ(ரீ)ய்ன ழலமூ
اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا
அவர்களில்
அநீதி இழைத்தோரைத் (அநியாயக்காரர்களைத்- வரம்பு மீறியவர் களைத்- அக்கிரமக்காரர்கள்) தவிர (மற்ற)
மக்களிடம் உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப்படுத்துவதும், நீங்கள் நேர்வழி பெறுவதுமே இதற்குக் காரணம். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! 2:150.
-----------------------------------------------------------------------------------
5. அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர்.
நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். ழலமூவ்
ظَلَمُوْٓا
அநீதி இழைத்தோர் – (அக்கிரமக்காரர்கள் – அநியாயக்காரர்கள்- அநியாயம் செய்து கொண்டிருந்தோர்) வேதனையைக் காணும்போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள். 2:165.
----------------------------------------------------------
6. அவர்களை நேர்வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். நல்லவற்றில் நீங்கள்
எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே
செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது
முழுமையாக வழங்கப்படும். நீங்கள் (லா
துழ்லமூன)
لَا تُظْلَمُوْنَ
அநீதி
இழைக்கப்பட மாட்டீர்கள்.- அநியாயம் செய்யப் –படமாட்டீர்கள்
-அநீதி இழைக்கப்பட மாட்டாது.- 2:272.
--------------------------------------------------
7. அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள்
திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. (லா தழ்லிமூன வலா துழ்லிலமூன)
لَا تَظْلِمُوْنَ وَلَا
تُظْلَمُوْنَ
நீங்களும்
அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.
நீங்கள் அநியாயம்
செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட
மாட்டீர்கள்.
நீங்கள் அநீதி
இழைக்கக்கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கப்படக் கூடாது. 2:279.
-------------------------------------------------------------------
8. அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, அவ் ழலமூவ் அன்Fபுஸஹும்
اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ
தமக்குத் தாமே (தங்களுக்குத் தாங்களே)
தீங்கிழைத்துக் கொண்டாலோ - அநீதி இழைத்துக் கொண்டால், அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத்
தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள்
செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். 3:135.
---------------------------------------------------------------------
9. அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத்
தூதரையும் நாம் அனுப்புவதில்லை. (நபியே!) அவர்கள் இது(ர்)ழலமூவ் அன்Fபுஸஹும்
اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ
தமக்குத் தாமே (தங்களுக்குத் தாங்களே) அநீதி இழைத்த நேரத்தில் - அநியாயம் செய்து கொண்டு,- தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும்,- அநீதி இழைத்துக்கொண்ட வேளையில்,- உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் தேடி, அவர்களுக்காக
தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வை அவர்கள் காண்பார்கள். 4:64.
---------------------------------------------------------------------
10. "உங்கள் கைகளை (போர் செய்யாமல்) தடுத்துக் கொள்ளுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்!
ஸகாத் கொடுங்கள்!'' என்று கூறப்பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டபோது அவர்களில் ஒரு சாரார் அல்லாஹ்வுக்கு
அஞ்சுவது போல் அல்லது அதை விடக் கடுமையாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றனர்.
"எங்கள் இறைவா! எங்களுக்கு ஏன் போர் செய்வதைக் கடமையாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்கு அவகாசம் தந்திருக்கக் கூடாதா'' எனவும் கூறுகின்றனர். "இவ்வுலகின் வசதி குறைவு தான். (இறைவனை)
அஞ்சுவோருக்கு மறுமையே சிறந்தது- மேலானது வலா துழ்லமூன Fபதீல
وَلَا تُظْلَمُوْنَ فَتِيْلً
அணுவளவும் நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்''
எனக் கூறுவீராக!
நீங்கள் எள்ளளவேனும் - ஓர் நூலளவும் அநியாயம் - அநீதம் செய்யப்படமாட்டீர்கள்.”
இன்னும் உங்களுக்கு இம்மியளவும்
அநீதியிழைக்கப்படமாட்டாது. 4:77.
--------------------------------------------------------
--------------------------------------------------------
11.ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்கள் வலா யுழ்லமூன நஃகீ(ரன்)ரா
وَلَا يُظْلَمُوْنَ نَقِيْرًا
சிறிதளவும் - இம்மியேனும் – இம்மியளவும்- அற்ப அளவும் அநீதி - அநியாயம் இழைக்கப்பட- செய்யப்பட மாட்டார்கள். 4:124.
-----------------------------------------
-----------------------------------------
12. (தன்னை) மறுத்து வ ழலமூ
وَظَلَمُوْ
அநீதி இழைத்தோரை (அக்கிரமம் - அநியாயமும்
செய்பவர்களுக்கு) அல்லாஹ்
மன்னிப்பவனாக இல்லை 4:168.
--------------------------------------------
-----------------------------------
13. எனவே ழலமூ
ظَلَمُوْا
அநீதி இழைத்த (அக்கிரமம் -அநியாயம் செய்து கொண்டிருந்த) கூட்டத்தினர் வேரறுக்கப்பட்டனர். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே
புகழனைத்தும். 6:45.
14. (நன்மையின்) எடைகள் இலேசாக இருப்போர் தமக்கே நட்டத்தை ஏற்படுத்திக்
கொண்டார்கள். நமது வசனங்கள் விஷயத்தில் யழ்லிமூன
يَظْلِمُوْنَ
அநீதியாக ( மாறுசெய்து- அக்கிரமமாக ) அவர்கள் நடந்து கொண்டதே இதற்குக் காரணம். 7:9.
---------------------------------------------
15. "எங்கள் இறைவா! (ழலம்நாாா அன்Fபுஸனா)
ظَلَمْنَاۤ اَنْفُسَنَا
எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம். (அக்கிரமம் செய்துகொண்டோம்.- அநீதமிழைத்துக் கொண்டோம்) நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்' என்று அவ்விருவரும் கூறினர். 7:23.
------------------------------
------------------------------
16. அவர்களுக்குப்
பின் மூஸாவை ஃபிர்அவ்னிடமும், அவனது
சபையோரிடமும் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவற்றை அவர்கள் பழலமூ பிஹா
فَظَلَمُوْا بِهَا ۚ
ஏற்க மறுத்தனர். (அவமதித்து (நிராகரித்து) விட்டனர்.- அநீதி இழைத்தார்கள். நிராகரித்து அநியாயம் செய்து) விட்டனர்) "குழப்பம் செய்தோரின் முடிவு
எவ்வாறு இருந்தது?" என்பதைக் கவனிப்பீராக! 7:103
(பழலமூ (பிஹா) வுக்கு பெரும்பாலான இடங்களில் அநீதி இழைத்தனர் - அநியாயம் செய்தனர் போன்ற வார்த்தைகளை
பயன்படுத்தி மொழி பெயர்த்த
அப்துல்ஹமீது பாகவி போன்றவர்கள். 7:103ல் அவமதித்து விட்டனர் -நிராகரித்து விட்டனர் என்றும் , பீ.ஜே. ஏற்க மறுத்தனர் என்றும் பொருத்தமாக மொழி
பெயர்த்துள்ளார்கள். 7:103. )
--------------------------------------------------
17. அவர்களைப் பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட
சமுதாயங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமுதாயத்தினர் அவரிடம் தண்ணீர் கேட்டபோது
"உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!' என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன.
ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது
மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம்.
"உங்களுக்கு நாம் வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!" (என்று கூறினோம்)
அவர்கள் (மா ழலமூனா)
- مَا ظَلَمُوْنَا
நமக்குத் தீங்கு (அநீதி – அநியாயம்) இழைக்கவில்லை. மாறாக (அன்Fபுஸஹும் யழ்லிமூன)
- اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
தமக்கே தீங்கு (அநீதி - அநியாயம்) இழைத்தனர். 7:160.
- مَا ظَلَمُوْنَا
நமக்குத் தீங்கு (அநீதி – அநியாயம்) இழைக்கவில்லை. மாறாக (அன்Fபுஸஹும் யழ்லிமூன)
- اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
தமக்கே தீங்கு (அநீதி - அநியாயம்) இழைத்தனர்.
----------------------------------------------------------------
18. அவர்களில் (ழலமூ)
ظَلَمُوْا
அநீதி இழைத்தோர், (அநியாயம் செய்தவர்கள் - வரம்பு மீறியவர்களோ, அக்கிரமக்காரர்கள்- மேற்கூறப்பட்ட சொல்லை) தமக்குக் கூறப்படாத சொல்லாக மாற்றிக் கொண்டார்கள். எனவே அவர்கள் (யழ்லிமூன)
يَظْلِمُوْنَ
அநீதி (அநியாயம்- அக்கிரமம்) இழைத்ததால் - அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம். 7:162.
ظَلَمُوْا
அநீதி இழைத்தோர், (அநியாயம் செய்தவர்கள் - வரம்பு மீறியவர்களோ, அக்கிரமக்காரர்கள்- மேற்கூறப்பட்ட சொல்லை) தமக்குக் கூறப்படாத சொல்லாக மாற்றிக் கொண்டார்கள். எனவே அவர்கள் (யழ்லிமூன)
يَظْلِمُوْنَ
அநீதி (அநியாயம்- அக்கிரமம்) இழைத்ததால் - அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.
--------------------------------------------------------
19. நமது
வசனங்களைப் பொய்யெனக் கருதி, (அன்Fபுஸஹும் கானுா யழ்லிமூன)
اَنْفُسَهُمْ كَانُوْا يَظْلِمُوْنَ
தமக்குத் தாமே தீங்கு (அநீதி- அநியாயம்) இழைத்த கூட்டத்தினரே மோசமான உதாரணமாவர். 7:177.
----------------------------------------
اَنْفُسَهُمْ كَانُوْا يَظْلِمُوْنَ
தமக்குத் தாமே தீங்கு (அநீதி- அநியாயம்) இழைத்த கூட்டத்தினரே மோசமான உதாரணமாவர். 7:177.
----------------------------------------
20. ஒரு சோதனையை அஞ்சுங்கள்! அது ழலமூ மின்கும்
ظَلَمُوْا مِنْكُمْ
உங்களில் அநீதி இழைத்தவர்களை -அநியாயம்
செய்தவர்களை- அநியாயக்காரர்களை- பாவம் புரிந்தவர்களைத்- மட்டுமே பிடிக்கும் என்பதல்ல. . (அதனால் ஏற்படும் விளைவு உங்களையும் சூழ்ந்து
கொள்ளலாம்)
அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து
கொள்ளுங்கள்! 8:25.
-----------------------------------
21. உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும்
அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின்
எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம்.
அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்! அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவிட்டாலும்
அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். ( வ அன்தும் லா துழ்ல மூன)
وَاَنْـتُمْ لَا تُظْلَمُوْنَ
நீங்கள் அநீதி
இழைக்கப்பட மாட்டீர்கள் (மேலும், நீங்கள் ஒருபோதும் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.- ஒரு சிறிதும் (குறைவு
செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.- உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது) 8:60.
----------------------------------------------------------------------22.வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் Fபலா தழ்லிமூ Fபீ(ய்)ஹின்ன அன்Fபுஸகும்
فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ
தீங்கிழைத்து
விடாதீர்கள்! (உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக்
கொள்ளாதீர்கள்; - தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம்.- அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்) இணை
கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு
அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து
கொள்ளுங்கள்! 9:36.
-------------------------------------------------------------
23. அவர்களுக்கு
முன் சென்ற நூஹுடைய சமுதாயம், ஆது, மற்றும் ஸமூது சமுதாயம், இப்ராஹீமின் சமுதாயம், மத்யன்வாசிகள், (லூத் நபி சமுதாயம் உள்ளிட்ட) தலைகீழாகப்
புரட்டப்பட்டோரைப் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் (லியழ்லிமஹும்)
لِيَظْلِمَهُمْ
அவர்களுக்குத் தீங்கு (அநியாயம்) இழைத்தவனாக இல்லை. மாறாக (அன்Fபுஸஹும் யழ்லிமூன)
اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
அவர்கள் தமக்குத் தாமே தீங்கு (அநியாயம்) இழைத்தனர். 9:70.
لِيَظْلِمَهُمْ
அவர்களுக்குத் தீங்கு (அநியாயம்) இழைத்தவனாக இல்லை. மாறாக (அன்Fபுஸஹும் யழ்லிமூன)
اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
அவர்கள் தமக்குத் தாமே தீங்கு (அநியாயம்) இழைத்தனர். 9:70.
24. உங்களுக்கு முன் லம்மா ழலமூ
لَمَّا ظَلَمُوْا ۙۙ
அநீதி இழைத்த (அநியாயம் செய்த போது- செய்துவிட்டபோது அநியாயத்தின் காரணமாக- கொடுமைகள் புரிந்தபோது-) பல தலைமுறையினரை அழித்திருக்கிறோம். அவர்களிடம்
அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். அவர்கள் நம்பிக்கை
கொள்வோராக இருக்கவில்லை. குற்றம் புரியும் கூட்டத்தை இவ்வாறே தண்டிப்போம். 10:13.
-----------------------------------
25. நிச்சயமாக - உண்மையில் அல்லாஹ் (லா யழ்லிமுன் நாஸ)
لَا يَظْلِمُ النَّاسَ
சிறிதளவும் மனிதர்களுக்கு தீங்கு (அநீதி இழைக்க மாட்டான். அநியாயமும் செய்வதில்லை) மாறாக மனிதர்கள் (அன்Fபுஸஹும் யழ்லிமூன)
اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
தமக்கே தீங்கு (அநீதி இழைக்கின்றனர். - அநியாயம் செய்து கொள்கிறார்கள். ) 10:44.
------------------------------------------------------
அநீதி இழைத்தோருக்குக் (அநியாயக்காரர்களை நோக்கி- அக்கிரமக்காரர்களிடம்- அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களிடம்) கூறப்படும் 10:52.
-----------------------------------------------
27.
لَا يَظْلِمُ النَّاسَ
சிறிதளவும் மனிதர்களுக்கு தீங்கு (அநீதி இழைக்க மாட்டான். அநியாயமும் செய்வதில்லை) மாறாக மனிதர்கள் (அன்Fபுஸஹும் யழ்லிமூன)
اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
தமக்கே தீங்கு (அநீதி இழைக்கின்றனர். - அநியாயம் செய்து கொள்கிறார்கள். ) 10:44.
------------------------------------------------------
26. பின்னர் "நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்! நீங்கள் செய்ததற்காகவே தவிர
(வேறெதற்கும்) தண்டிக்கப்படுகிறீர்களா என்ன? என்று லில்லதீ(ரீ)ய்ன ழலமூ
لِلَّذِيْنَ ظَلَمُوْا
அநீதி இழைத்தோருக்குக் (அநியாயக்காரர்களை நோக்கி- அக்கிரமக்காரர்களிடம்- அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களிடம்) கூறப்படும் 10:52.
-----------------------------------------------
27.
الَّذِيْنَ ظَلَمُوا
அநீதி இழைத்தவர்களைப் (அநியாயம் -செய்தோரை செய்து கொண்டிருந்தவர்களை-
வரம்பு மீறியவர்களை- அக்கிரமம் செய்தவர்களை) பெரும் சப்தம் தாக்கியது. காலையில்
தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். 11:67.
---------------------------------------------
28. நமது கட்டளை வந்தபோது, ஷுஐபையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் காப்பாற்றினோம். அல்லதீ(ரீ)ய்ன ழலமூ
الَّذِيْنَ ظَلَمُوا
அநீதி இழைத்தவர்களைப் (அநியாயம் - அக்கிரமம் செய்தவர்களை) பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். 11:94.
--------------------------------------------------------------------------
29.அவர்களுக்கு (மா ழலம்னாஹும்)
مَا ظَلَمْنٰهُمْ
நாம்
தீங்கிழைக்கவில்லை (அநியாயம் செய்யவில்லை;- அநீதி இழைக்கவில்லை; - அநியாயம் செய்யவில்லை) மாறாக அவர்கள் (ழலமூவ் அன்Fபுஸஹும்)
ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ
தமக்கே
தீங்கிழைத்தனர் (தமக்குத்தாமே அநியாயம் செய்து
கொண்டார்கள்.- தீங்கிழைத்துக் கொண்டனர். - அநீதி இழைத்துக் கொண்டார்கள்) உமது இறைவனின்
கட்டளை வந்தபோது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்து வந்த
கடவுள்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவவில்லை. அவர்களுக்கு நட்டத்தைத் தவிர வேறு
எதையும் அவை அதிகப்படுத்தவில்லை. 11:101.
---------------------------------------------------------
32.. மனிதர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) "எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்'' என்று அல்லதீ(ரீ)ய்ன ழலமூ
33. அல்லதீ(ரீ)ய்ன ழலமூவ் அன்Fபுஸஹும்
---------------------------------------------------------
30. இலல்லதீ(ரீ)ய்ன ழலமூ பதமஸ்ஸகுமு
اِلَى الَّذِيْنَ ظَلَمُوْا فَتَمَسَّكُمُ
அநீதி இழைத்தோர் பக்கம் சாய்ந்து விடாதீர்கள் (யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின்
பக்கம் - அநியாயம் செய்து கொண்டிருப்போரின் பால் - வரம்பு மீறுபவர்கள் - அக்கிரமக்காரர்களின்
பக்கம் (சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள்)
அவ்வாறு சாய்ந்தால்) உங்களை நரகம் தீண்டும். அல்லாஹ்வையன்றி
உங்களுக்கு எந்தப் பாதுகாவலரும் இல்லை. பின்னர் உதவி செய்யப்பட மாட்டீர்கள். 11:113.
-----------------------------------------------
31. நாம் காப்பாற்றிய சிலரைத் தவிர உங்களுக்கு முன் சென்ற தலைமுறையினரில் பூமியில்
குழப்பம் செய்வதைத் தடுக்கும் நல்லோர் இருந்திருக்கக் கூடாதா? அல்லதீ(ரீ)ய்ன
ழலமூ
الَّذِيْنَ ظَلَمُوْا
அநீதி இழைத்தோர் (அநியாயக்காரர்களோ- யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள்- அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்கள்- அநியாயக்காரர்கள்) சொகுசு வாழ்க்கையில் மூழ்கினார்கள்.
அவர்கள் குற்றவாளிகளாகவும் இருந்தனர். 11:116.
------------------------------------------------32.. மனிதர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) "எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின்பற்றுகிறோம்'' என்று அல்லதீ(ரீ)ய்ன ழலமூ
الَّذِيْنَ ظَلَمُوْا
அநீதி இழைத்தோர் – (அநியாயம் செய்தவர்கள்- வரம்பு மீறியவர்கள்- அக்கிரமக்காரர்கள்- அநியாயம் செய்தார்களே அத்தகையோர்) கூறுவார்கள். எங்களுக்கு அழிவே இல்லை என்று இதற்கு முன் நீங்கள்
சத்தியம்செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா? 14:44.
-----------------------------------------------33. அல்லதீ(ரீ)ய்ன ழலமூவ் அன்Fபுஸஹும்
الَّذِيْنَ ظَلَمُوْۤا
اَنْفُسَهُمْ
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் (தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் - அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களின்) குடியிருப்புகளில் நீங்களும் குடியிருந்தீர்கள்.
அவர்களை எவ்வாறு நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பல (முன்)
உதாரணங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறினோம். (என்று அவர்களுக்குக் கூறப்படும்) 14:45.
-----------------------------------------------------------------
34. வானவர்கள்
அவர்களிடம் வருவதை, அல்லது உமது இறைவனின் கட்டளை
வருவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அவர்களுக்கு
முன் சென்றோரும் இவ்வாறே செய்தனர் (மா ழலமஹுமுல்லாஹ்)
مَا ظَلَمَهُمُ اللّٰه
அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. (அநீதி- அநியாயம் எதுவும் செய்யவில்லை) மாறாக அவர்கள் (அன்Fபுஸஹும் யழ்லிமூன)
اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டிருந்தனர் (அநியாயம் - அநீதி செய்து கொண்டார்கள்) - 16:33.
مَا ظَلَمَهُمُ اللّٰه
அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. (அநீதி- அநியாயம் எதுவும் செய்யவில்லை) மாறாக அவர்கள் (அன்Fபுஸஹும் யழ்லிமூன)
اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டிருந்தனர் (அநியாயம் - அநீதி செய்து கொண்டார்கள்) - 16:33.
----------------------------------------------------------
35. ( மி(ன்)ம் பஃதி மா ழுலிமூ)
مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا
அநீதி இழைக்கப்பட்ட பின் (அநீதமிழைக்கப்பட்ட - கொடுமைப்படுத்தப்பட்ட - துன்புறுத்தப்பட்ட பின்னர் -கொடுமைக்கு ஆளான பிறகு ) அல்லாஹ்வை நோக்கி ஹிஜ்ரத் செய்தோரை இவ்வுலகில் அழகிய முறையில் குடியமர்த்துவோம். மறுமையின் கூலி இதை விடப் பெரிது. இதை அவர்கள் அறிய வேண்டாமா? 16:41.
------------------------------------------------------------
36. அல்லதீ(ரீ)ய்ன ழலமூ
36. அல்லதீ(ரீ)ய்ன ழலமூ
اَ الَّذِيْنَ ظَلَمُوا
அநீதி இழைத்தோர் (அக்கிரமக்காரர்கள் – அநீதி இழைத்தவர்கள் -அநியாயம் செய்தார்களே
அவர்கள்) வேதனையைக்
காணும்போது அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசமும் அளிக்கப்பட
மாட்டார்கள். 16:85.
-------------------------------------------------------
37. (நபியே!) முன்னர் உமக்கு விவரித்ததை யூதர்களுக்குத்
தடை செய்திருந்தோம். (மா ழலமஹும்)
مَا ظَلَمْنٰهُمْ
அவர்களுக்கு நாம் தீங்கிழைக்கவில்லை. (அநீதமிழைத்துவிடவுமில்லை, நாம் இழைத்த அநீதியல்ல) மாறாக அவர்கள் (அன்Fபுஸஹும் யழ்லிமூன)
اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர் ( தமக்குத் தாமே இழைத்துக் கொண்ட அநீதியாகும்.- தமக்குத் தாமே அநீதமிழைப்பவர்களாக இருந்தனர் ).16:118.
-----------------------------------------------مَا ظَلَمْنٰهُمْ
அவர்களுக்கு நாம் தீங்கிழைக்கவில்லை. (அநீதமிழைத்துவிடவுமில்லை, நாம் இழைத்த அநீதியல்ல) மாறாக அவர்கள் (அன்Fபுஸஹும் யழ்லிமூன)
اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர் ( தமக்குத் தாமே இழைத்துக் கொண்ட அநீதியாகும்.- தமக்குத் தாமே அநீதமிழைப்பவர்களாக இருந்தனர் ).16:118.
38. ஒவ்வொரு சமுதாயத்தையும் அவரவரின் தலைவருடன் நாம் அழைக்கும் நாளில்1 தமது பதிவேடு வலது கையில் கொடுக்கப்படுவோர் தமது பதிவேட்டை வாசிப்பார்கள். அணுவளவும் அவர்கள் (லா யுழ்லமூன)
لَا يُظْلَمُوْنَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள் (அணுவளவு(குறைத்து)ம் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். -இம்மியளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது.) 17:71.
---------------------------------------------
39. அற்புதங்களை முன்னோர்கள் பொய்யெனக் கருதியதே அதை நாம் (இப்போது)
அனுப்புவதற்குத் தடையாகவுள்ளது. ஸமூது சமுதாயத்தினருக்கு ஒட்டகத்தைக் கண் முன்னே
கொடுத்தோம். பழலமூ பிஹா
فَظَلَمُوْا بِهَاؕ
அதற்கு அவர்கள்
அநீதி இழைத்தனர்.- (அநியாயம் செய்தனர்;- வரம்பு மீறி தீங்கிழைத்து விட்டனர்.
கொடுமை இழைத்தார்கள்.) அச்சுறுத்துவதற்காகவே அற்புதங்களை அனுப்புகிறோம். 17:59.
--------------------------------------------------
--------------------------------------------------
40. அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் அறிவுரை
கூறப்பட்டு, அதைப் புறக்கணித்து, தான் செய்த வினையை மறந்தவனை விட வ மன் அழ்லம்
وَمَنْ أَظْلَمُ
அநீதி இழைத்தவன் - (பெரிய அக்கிரமக்காரன் –மிக அநியாயக்காரன்-
பெரும் கொடுமைக்காரன்) யார்? நிச்சயமாக அவர்களின் உள்ளங்கள் புரிந்து
கொள்ளாதவாறு அவற்றின் மீது மூடிகளையும், காதுகளில் செவிட்டுத் தன்மையையும் நாம்
ஏற்படுத்தினோம். நேர்வழிக்கு அவர்களை நீர் அழைத்தால் அவர்கள் ஒருபோதும் நேர்வழி
பெற மாட்டார்கள். 18:57.
----------------------------------------------------------------------
41. பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் லம்மா ழலமூ
لَمَّا ظَلَمُوْا
அநீதி இழைத்தபோது (அக்கிரமம் செய்த போது- கொடுமை
செய்தபோது- பாவம் செய்தபோது- செய்துகொண்டிருந்த) அவர்களை அழித்தோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு
காலக்கெடுவையும் ஏற்படுத்தினோம். 18:59.
------------------------------------------------------
சிறிதளவும் (இம்மியளவும் ஒரு சிறிதும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.- (குறைவு செய்யப்பட மாட்டாது. – அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.) 19:60.
----------------------------------------
44. போர் தொடுக்கப்பட்டோர் (ழுலிமூ)
ظُلِمُوْا
42. திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். வலா யுழ்லமூன ஷய்ஃஅ
وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ
சிறிதளவும் (இம்மியளவும் ஒரு சிறிதும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.- (குறைவு செய்யப்பட மாட்டாது. – அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.) 19:60.
----------------------------------------
43. அவர்களின் உள்ளங்கள் அலட்சியம் செய்கின்றன. "இவர் உங்களைப் போன்ற மனிதர்
தவிர யார்? பார்த்துக் கொண்டே இந்த சூனியத்திடம் செல்கிறீர்களா?'' என்று அல்லதீ(ரீ)ய்ன ழலமூ
الَّذِيْنَ ظَلَمُوْا
அநீதி இழைத்தோர் (அநியாயக்காரர்கள் – கொடுமைக்காரர்கள் - கொடுமையாளர்கள்) மிகவும் இரகசியமாகப் பேசுகின்றனர். 21:3.
-------------------------------------------------------------44. போர் தொடுக்கப்பட்டோர் (ழுலிமூ)
ظُلِمُوْا
அநீதி இழைக்கப்பட்டுள்ளனர் (அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்- அநியாயத்தில் சிக்கி, - கொடுமைப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.- அநீதமிழைக்கப்பட்டிருக்கிறார்கள்) என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன். 22:39.
-------------------------------------
45. "நமது மேற்பார்வையிலும் நமது அறிவிப்பின்படியும், கப்பலைச் செய்வீராக! நமது உத்தரவு வந்து தண்ணீர் பொங்க ஆரம்பித்தால் ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், யாருக்கு எதிராகக் கட்டளை முந்தி விட்டதோ அவர்களைத் தவிர ஏனைய உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்வீராக! Fபில்லதீ(ரீ)ய்ன ழலமூ
فِى الَّذِيْنَ ظَلَمُوْاۚ
அநீதி இழைத்தோர் (அநியாயம் செய்தார்களே - செய்து விட்டார்களே அவர்களைப் - அநியாயம் செய்பவர்- கொடுமைக்காரர்களைப்) பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்'' என்று அவருக்கு அறிவித்தோம். 23:27.
----------------------------------
46. எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம்.68 நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு உள்ளது. அவர்கள் (லா யுழ்லமூன)
لَا يُظْلَمُوْنَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.( அநியாயம் செய்யப்பட மாட்டாது.- செய்யப்படவுமாட்டார்கள்.-அநீதியிழைக்கப்படமாட்டார்கள்)- 23:62.
-----------------------------------------------------------
-----------------------------------------------------------
47. "இது பொய்யைத் தவிர வேறு இல்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். மற்றொரு சமுதாயத்தினரும் இதற்காக இவருக்கு உதவினார்கள்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். அவர்கள் ( ஜாஃஊ - கொண்டு வந்துள்ளனர். ழுல்ம(ன்)வ் - அநியாயத்தையும் - வZஸுர(ன்) பொய்யையும்)
جَآءُوْ ظُلْمًا وَّزُوْرًا ۛۚ
அநியாயத்தையும், பாவத்தையுமே கொண்டு வந்துள்ளனர்.
(அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.
அவர்கள் அநியாயத்தையும் பொய்யையுமே சுமந்து கொண்டனர்.
பெரும் கொடுமை புரியும் அளவிற்கும், கடும் பொய்யைக் கூறும் அளவிற்கும் அவர்கள் இறங்கி வந்துவிட்டார்கள்) 25:4.
----------------------------------------------------------------------
مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا
அநீதி இழைத்ததால் – (அநியாயம் செய்து வந்த காரணத்தால் –கொடுமையின் காரணமாக) இதோ அவர்களின் வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன! அறியும் சமுதாயத்திற்கு இதில் படிப்பினை உள்ளது. 27:52.
---------------------------------------------------
48. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து அல்லாஹ்வை அதிகம் நினைத்து, மின்ம் பஃதி மா ழுலிமூ
அநீதி இழைக்கப்பட்ட பின் (அநியாயம்
செய்யப்பட்ட பின்னர்-அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர்,- தங்களுக்குக் கொடுமை இழைக்கப்பட்டபோது) பழிதீர்த்துக் கொண்ட(புல)வர்களைத் தவிர. எந்த இடத்திற்குத் தாங்கள்
செல்லவிருக்கிறோம் என்பதை அல்லதீ(ரீ)ய்ன ழலமூவ்
الَّذِيْنَ ظَلَمُوْۤا
அநீதி இழைத்தோர் (அநியாயம் செய்தவர்கள்,- அநியாயக்காரர்கள்- கொடுமை புரிகின்றவர்கள்,- அநியாயம் செய்தோர்) பின்னர் அறிந்து கொள்வார்கள். 26:227.
------------------------------------------------
49. அவர்கள் பிமா ழலமூ
بِمَا ظَلَمُوْا ؕ
அநீதி இழைத்ததால் – (அநியாயம் செய்து வந்த காரணத்தால் –கொடுமையின் காரணமாக) இதோ அவர்களின் வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன! அறியும் சமுதாயத்திற்கு இதில் படிப்பினை உள்ளது. 27:52.
---------------------------------------------------
50. அவர்கள் (பிமா ழலமூ)
بِمَا ظَلَمُوْ
அநீதி இழைத்ததால் (செய்து வந்த அக்கிரமத்தின் காரணத்தினால் -செய்துகொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக- கொடுமை செய்த காரணத்தினால் -அநியாயம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக) அவர்களுக்கு எதிரான கட்டளை நிகழும். அப்போது அவர்கள் பேச மாட்டார்கள். 27:85.
---------------------------------------------
---------------------------------------------
51. வேதமுடையோரில் இல்லல்லதீ(ரீ)ய்ன ழலமூ
اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا
அநீதி இழைத்தோரைத் தவிர (அக்கிரமமாய்
நடப்பவர்களைத் தவிர்த்து,- வரம்பு மீறிவிட்டால்- கொடுமையாளர்களிடம் தவிர!- அநியாயம்
செய்தோர் தவிர ) மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! "எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்! 29:46.
------------------------------------------
52. அவர்கள் பூமியில் பயணம் செய்து தமக்கு முன் சென்றோரின் முடிவு எப்படி இருந்தது
என்பதைக் கவனிக்க வேண்டாமா? இவர்களை விட வலிமையுடன் அவர்கள்
இருந்தனர். பூமியைப் பண்படுத்தி இவர்கள் பயிரிட்டதை விட அதிகம் பயிரிட்டனர்.
அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்தனர். (Fபமா கானல்லாஹு லியழ்லிமஹும்)
فَمَا كَانَ اللّٰهُ لِيَظْلِمَهُمْ
அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைப்பவனாக இல்லை. ( தீங்கிழைக்கவில்லை, அல்லாஹ்
அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை,அல்லாஹ்
அவர்களுக்கு அக்கிரமம் புரிபவனாக இருந்ததில்லை,அல்லாஹ்
ஒருபோதும் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை)
( லா கின் கானுா அன்Fபுஸஹும் யழ்லிமூன)
لٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ
மாறாக – எனினும் - ஆனால் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்தனர் -(தீங்கிழைத்துக் கொண்டனர், அவர்கள்
தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள், தமக்குத் தாமே
அவர்கள் அக்கிரமம் புரிந்துகொண்டிருந்தார்கள்) 30:9.
-------------------------------------------------
----------------------------------------------------------------------------------
53. மாறாக, (எனினும்-ஆயினும்) அல்லதீ(ரீ)ய்ன ழலமூவ்
الَّذِيْنَ ظَلَمُوْۤا
அநீதி இழைத்தோர் (அநியாயக்காரர்கள் – அக்கிரமக்காரர்கள்) அறிவின்றி தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ் யாரை வழிகேட்டில்
விட்டு விடுகிறானோ அவருக்கு வழி காட்டுபவன் யார்? அவர்களுக்கு உதவியாளர்கள் யாருமில்லை 30:29.
--------------------------------------------------
54. (ஆகவே - ஆக,- ஆனால்) அந்நாளில் அல்லதீ(ரீ)ய்ன ழலமூ
الَّذِيْنَ ظَلَمُوْا
அநீதி இழைத்தோரின் (அநியாயம் செய்தவர்களுக்கு,- அக்கிரமக்காரர்களுக்கு) சமாளிப்பு அவர்களுக்குப் பயன் தராது. அவர்கள் (உலகுக்கு மீண்டும்
அனுப்பப்பட்டு) வணக்கங்கள் செய்ய வற்புறுத்தப்பட மாட்டார்கள். 30:57.
----------------------------------------
55. "எங்கள் இறைவா! எங்களுக்கு தொலைதூர பயணங்களை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறி வ ழலமூவ்
அன்Fபுஸஹும்
وَظَلَمُوْۤا اَنْفُسَهُمْ
தமக்குத் தாமே தீங்கிழைத்தனர் (அநியாயம் செய்து - தீங்கிழைத்துக் கொண்டார்கள்- அநீதி இழைத்தார்கள்.) அவர்களைப்
பழங்கதைகளாக்கினோம். அவர்களை உருக்குலைத்தோம். பொறுமையும், நன்றியுணர்வும் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன. 34:19.
----------------------------------------------------------
56. எனவே இந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு எந்த நன்மையும், தீங்கும் செய்ய அதிகாரம் பெற மாட்டீர்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிய
நரகமெனும் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று லில்லதீ(ரீ)ய்ன ழலமூ
لِلَّذِيْنَ ظَلَمُوْا
அநீதி இழைத்தோருக்குக் (அநியாயம் செய்தார்களே அவர்களிடம்”- அவ்வக்கிரமக்காரர்களை நோக்கி- கொடுமை புரிந்து கொண்டு இருந்தவர்களிடம்-
அவர்களுக்கு) கூறுவோம் 34:42.
----------------------------------------------------------------
----------------------------------------------------------------
57. (இவ்வாறு கட்டளையிடப்படும்:)
الَّذِيْنَ ظَلَمُوْا
அல்லதீ(ரீ)ய்ன ழலமூ - அநீதி இழைத்தோரையும் ( “அநியாயம் செய்தார்களே அவர்களையும்
- அநியாயம் செய்தவர்களையும், - “அக்கிரமம் இழைத்துக் கொண்டிருந்தவர்களையும்- அவர்களுக்குத் துணை நின்றவர்களையும், ஒன்று திரட்டுங்கள் 37:22,
--------------------------------------------------------
58. லில்லதீ(ரீ)ய்ன ழலமூ
لِلَّذِيْنَ ظَلَمُوْا
அநீதி
இழைத்தோருக்கு (அநியாயம் செய்துவிட்டார்களே
அத்தகையோருக்கு - அநியாயம் செய்தவர்களிடம்- செய்தவர்களுக்குப்-கொடுமைக்காரர்களிடம்) பூமியில் உள்ளவை அனைத்தும், அத்துடன் அது போன்ற இன்னொரு மடங்கும் இருக்குமானால் கியாமத் நாளில்1 தீய வேதனைக்கு ஈடாகக் கொடுப்பார்கள். அவர்கள் எண்ணிப் பார்க்காதவை
அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளிப்படும். 39:47.
----------------------------------------------------
59. அவர்கள் செய்த தீவினைகள் அவர்களைப் பிடித்தன. இவர்கள் செய்த தீவினைகள், இவர்களில் வல்லதீ(ரீ)ய்ன ழலமூ
وَالَّذِيْنَ ظَلَمُوْا
அநீதி இழைத்தோரைப் (எவர் அநியாயம் செய்கிறார்களோ, அவர்களுக்கு - எவர்கள் அநியாயம் செய்கின்றார்களோ அவர்களை,- யார் கொடுமை புரிந்தார்களோ அவர்களையும் - இவர்களில் அநியாயம்
செய்தார்களே அத்தகையோர்) பிடிக்கும். இவர்கள் வெல்வோராக இல்லை. 39:51.
---------------------------------------------------------------------
60. பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்)வைக்கப்படும். நபிமார்களும் சாட்சிகளும் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் (லா யுழ்லமூன)
لَا يُظْلَمُوْنَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.- (அநியாயம் - அநீதியும் செய்யப்பட மாட்டாது.- செய்யப்படவுமாட்டார்கள்.-அநீதியிழைக்கப்படமாட்டார்கள்)- 39:69.
-----------------------------------------------------
-----------------------------------------------------
61. இன்று ஒவ்வொருவரும் செய்ததற்கு கூலி கொடுக்கப்படும் இன்று (லா ழுல்ம)
لَا ظُلْمَ
எந்த – யாதொரு – அநியாயமும் – அநீதியும் இல்லை. - நடைபெறாது.- ஏற்படாது. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன். 40:17.
----------------------------------------------------------------------------------
يَظْلِمُوْنَ النَّاسَ
மக்களுக்கு அநீதி இழைத்து (மனிதர்கள் மீது அநியாயம் செய்து - கொடுமை இழைப்பவர்களும்) நியாயமின்றி பூமியில் வரம்பு மீறுவோருக்கு எதிராகவே குற்றம் பிடிக்க வழி
உண்டு. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு 42:42.
-----------------------------------------------------
لِّلَّذِيْنَ ظَلَمُوْا
அநீதி இழைத்தோருக்கு (அநியாயம் செய்தார்களே அவர்களுக்கு - இந்த அநியாயக்காரர்களுக்கு- கொடுமை புரிந்தவர்களுக்கு) வேதனை எனும் கேடு இருக்கிறது. 43:65.
---------------------------------------------
64. இதற்கு முன் மூஸாவின் வேதம் முன்னோடியாகவும், அருளாகவும் இருந்தது. இது அல்லதீ(ரீ)ய்ன ழலமூ
அநீதி இழைத்தோரை (அநியாயம் செய்வோரை – அநியாயக்காரர்களுக்கு
– அக்கொடுமைக்காரர்களை) எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவதற்காகவும் அரபு மொழியில் அமைந்த வேதமாகும். (முன் சென்ற
வேதங்களை இது) உண்மைப்படுத்துகிறது. 46:12.
-----------------------------------------------------------
65. என்னிடம் பேச்சு மாற்றப்படாது. (வ மா அனா பிழல்லாமில் லல் அபீதி)
وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ
நான்
அடியார்களுக்கு அநீதி இழைப்பவனாகவும் இல்லை'' (அறவே அநியாயம்
செய்பவனல்லன்”- சிறிதும் கொடுமை இழைப்பவன் அல்லன்.” )என்று (இறைவன்) கூறுவான். 50:29
--------------------------------------------------------
--------------------------------------------------------
66. எனவே,
நிச்சயமாக லில்லதீ(ரீ)ய்ன ழலமூ
لِلَّذِيْنَ ظَلَمُوْا
அநீதி இழைத்தோருக்கு (அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு,- அநியாயம் செய்து விட்டார்களே, - இவ்வக்கிரமக்காரர்களின்- இந்தக் கொடுமைக்காரர்களுக்கும்) அவர்களின் முன் சென்ற சகாக்களின்
தண்டனையைப் போல் தண்டனை உள்ளது. எனவே அவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம். 51:59.
-----------------------------------------------------------------
67. அன்றியு ம்- மேலும், நிச்சயமாக லில்லதீ(ரீ)ய்ன ழலமூ
لِلَّذِيْنَ ظَلَمُوْا
அநீதி இழைத்தோருக்கு (அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு-
இவ்வக்கிரமக்காரர்களுக்கு – கொடுமைக்காரர்களுக்கு- அநியாயம்
செய்துகொண்டிருந்தோர்க்கு) இது அல்லாத
வேதனையும் உண்டு. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். 52:47.
-------------------------------------------------------------------
இரவும் அவர்களுக்கு ஒரு சான்றாகும். அதிலிருந்து பகலை உரித்தெடுக்கிறோம். உடனே அவர்கள் முழ்லிமூன்
مُّظْلِمُوْنَۙ
இருளில் ஆழ்ந்து விடுகிறார்கள்- ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.- இருளில்தான் தங்கிவிடுவார்கள்.- அவர்கள் மீது இருள் சூழ்ந்து கொள்கிறது 36:37.
No comments:
Post a Comment