Tuesday, June 19, 2007

அல் அஃராப் - الْاَعْرَاف

இதில் அஃராப் என்று வரக் கூடிய வசனங்களை காண உள்ளீர்கள். அஃராப் என்ற வார்த்தை 2 ஆயத்துக்களில் இடம் பெற்றுள்ளது.
அஃராப் என்பதற்கு  சிகரம்தடுப்புச் சுவர் ,  மதில், உச்சி, உயரமான இடங்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தைகளில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்..

அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பு (சுவர், மதில்) இருக்கும். அந்தத் தடுப்புச்சுவர் மேல் (அதன் உச்சிகளில்) சில மனிதர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரையும் அவர்களின் அடையாளத்தைக் கொண்டு அவர்கள் அறிந்து கொள்வார்கள். சொர்க்கவாசிகளை அழைத்து "உங்கள் மீது ஸலாம்  உண்டாகட்டும்'' என்பார்கள். அவர்கள் ஆசைப்பட்டாலும் அங்கே நுழையாமல் இருப்பார்கள். 7:46. 


அவர்களின் பார்வைகள் நரகவாசிகளை நோக்கித் திருப்பப்படும்போது "எங்கள் இறைவா! எங்களை அநீதி இழைத்த (அக்கிரமக்கார, அநியாயக்கார) கூட்டத்துடன் சேர்த்து விடாதே!'' எனக் கூறுவார்கள். 7:47.


7:48. தடுப்புச் சுவர் மேல் இருப்போர், சிகரங்களிலிருப்பவர்கள் உச்சிகளில் இருக்கும் (நரகிலுள்ள) சிலரை அழைப்பார்கள். அவர்களது அடையாளத்தைக் கொண்டு அவர்களை அறிந்து கொள்வார்கள். "உங்களுடைய ஆள் பலமும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களைக் காப்பாற்றவில்லை;
https://kamfazlulilahi.blogspot.com/2007/06/blog-post.html

No comments: