ழாலிமூன் என்று வரக் கூடிய ஆயத்துக்கள் 34 ஐ முன்பு பார்த்தோம். இதில் ழாழிமீன் – لظّٰلِمِيْنَ என்ற பன்மை வார்த்தைகள் இடம் பெற்றுள்ள 89 ஆயத்துகளை பார்க்க உள்ளோம்.
இதற்கு, அக்கிரமஸ்தன் -அனியாயஸ்தன் என்று 1959ல் தமிழாக்கம் செய்தார்கள். பிறகு அநியாயம் செய்தவர்கள் - அக்கிரமக்காரர்கள் - அக்கிரமம் புரிந்தவர்கள் –அநியாயக்காரர்கள் - அநீதி இழைத்தவர்கள் – அநீதியாளர்கள் - வரம்பு மீறியவர்கள் – கொடுமையாளர்கள் – கொடியோர் - கொடுமை புரிபவர்கள் , ஆகிய வார்த்தைகளை தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மொழி பெயர்த்துள்ளார்கள் அவற்றை அப்படியே புழு கலரில் - நீளம் நிறத்தில் தந்துள்ளோம்.
இதற்கு, அக்கிரமஸ்தன் -அனியாயஸ்தன் என்று 1959ல் தமிழாக்கம் செய்தார்கள். பிறகு அநியாயம் செய்தவர்கள் - அக்கிரமக்காரர்கள் - அக்கிரமம் புரிந்தவர்கள் –அநியாயக்காரர்கள் - அநீதி இழைத்தவர்கள் – அநீதியாளர்கள் - வரம்பு மீறியவர்கள் – கொடுமையாளர்கள் – கொடியோர் - கொடுமை புரிபவர்கள் , ஆகிய வார்த்தைகளை தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மொழி பெயர்த்துள்ளார்கள் அவற்றை அப்படியே புழு கலரில் - நீளம் நிறத்தில் தந்துள்ளோம்.
1.
"ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில்12 குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக
இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை13 (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி
இழைத்தோராவீர்'' - அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்”
- தீங்கிழைத்துக் கொண்டவர்களாவீர்கள்"
- அநியாயக்கார்களில் ஆகிவிடுவீர்கள்”
என்று நாம் கூறினோம். 2:35.
2. அவர்கள் செய்த வினை காரணமாக ஒருபோதும் அதற்கு (மரணத்திற்கு) ஆசைப்பட மாட்டார்கள். அநீதி இழைத்தோரை – அக்கிரமக்காரர்களை – அநியாயக்காரர்களை அல்லாஹ் அறிந்தவன்.
2:95.
3. இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர்
முழுமையாக நிறைவேற்றினார். "உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்''
என்று அவன் கூறினான். "எனது
வழித்தோன்றல்களிலும்'' (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார்.
"என் வாக்குறுதி (உமது வழித்தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் - “அநீதியாளர்களை - அநியாயக்காரர்களுக்குச் சேராது'' என்று அவன் கூறினான்.
2:124
4. வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அத்தனை சான்றுகளையும் ( நபியே!) நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் உமது கிப்லாவைப்
பின்பற்ற மாட்டார்கள். நீர் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை.
அவர்களிலேயே ஒருவர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்கு விளக்கம்
வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளைப் நீர் பின்பற்றினால் அநீதி இழைத்தவராவீர்! –
அநியாயக்காரர்களில் - அக்கிரமக்காரர்களுள் ஒருவராக இருப்பீர் 2:145.
5. கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாக ஆகும் வரை அவர்களுடன் போர்
செய்யுங்கள்! அவர்கள் விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் - அக்கிரமக்காரர்கள் - அநியாயம் செய்பவர்கள் – அநியாயக்காரர்கள் மீதே தவிர (மற்றவர்கள் மீது) எந்த வரம்பு மீறலும்
கூடாது. 2:193.
6. மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில்
(உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? "எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்!
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்''76 என்று தமது நபியிடம் கூறினர். "உங்களுக்குப்
போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?''
என்று அவர் கேட்டார். "எங்கள்
ஊர்களையும், பிள்ளைகளையும்
விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க
எங்களுக்கு என்ன வந்தது?'' என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர்
கடமையாக்கப்பட்டபோது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அநீதி
இழைத்தோரை - அக்கிரமம்
செய்வோரை- அநியாயக்காரர்களை - அக்கிரமக்காரர்கள் ஒவ்வொருவரையும் அல்லாஹ் அறிந்தவன். 2:246.
7. தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக
இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா?
"என் இறைவன் உயிர் கொடுப்பவன்;
மரணிக்கச் செய்பவன்''
என்று இப்ராஹீம் கூறியபோது,
"நானும் உயிர் கொடுப்பேன்;
மரணிக்கச் செய்வேன்''
என்று அவன் கூறினான். "அல்லாஹ்
கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!''
என்று இப்ராஹீம் கேட்டார். உடனே
(ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த - அநியாயம் செய்யும்- அநியாயக்கார- அக்கிரமம் புரியும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 2:258.
8. நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ,
நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை
அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு – அநீதி இழைப்போரை- அக்கிரமக்காரர்களுக்கு
- அநியாயக் காரர்களுக்கு எந்த உதவியாளரும் இல்லை. 2:270.
9. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரின் கூலிகளை
அவர்களுக்கு அவன் முழுமையாக வழங்குவான். அநீதி இழைத்தோரை - அக்கிரமம் செய்வோரை- அநியாயக்காரர்களை அல்லாஹ் விரும்ப மாட்டான். 3:57.
10. தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து,
இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று
விளங்கி, நம்பிக்கை கொண்டு
விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர்வழி காட்டுவான்?
அநீதி இழைத்த –அநியாயக்கார- கொடுமை புரியும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
3:86.
11. உங்களுக்கு (போரில்) ஒரு காயம் ஏற்பட்டால்
அந்தக் கூட்டத்திற்கும் அது போன்ற காயம் ஏற்பட்டிருக்கிறது. காலத்தை மக்களிடையே
நாம் சுழல விடுகிறோம். நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அடையாளம் காட்டவும்,
உங்களில் உயிர் தியாகிகளை ஏற்படுத்தவுமே
(இவ்வாறு துன்பத்தைத் தருகிறான்). அநீதி இழைத்தோரை - அநியாயம்
செய்வோரை-அநியாயக்காரர்களை-அக்கிரமக்காரர்களை அல்லாஹ்
விரும்ப மாட்டான். 3:140.
12. அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளாமலிருந்தும்
அவனுக்கு இணை கற்பித்ததால் (நம்மை) மறுத்தோரின் உள்ளங்களில் பீதியை
ஏற்படுத்துவோம். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோர் – அக்கிரமக்காரர்கள்- அநியாயக்காரர்கள் சென்றடையும் இடம் மிகவும் கெட்டது. 3:151.
13.
"எங்கள் இறைவா! நீ நரகத்திற்கு
அனுப்புபவனை இழிவுபடுத்தி விட்டாய். அநீதி இழைத்தோருக்கு – அக்கிரமக்காரர்களுக்கு - அக்கிரமக்காரர்களுக்கு எந்த உதவியாளரும் இல்லை''
(என்றும் கூறுவார்கள்.) 3:192.
14
"என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை
நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான்
நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன். உன் பாவத்துடன்,
என்(னைக் கொன்ற) பாவத்தையும் நீ சுமந்து
நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் – அநியாயக்காரர்களின்- அநியாயக்காரர்களுக்குரிய-
அக்கிரமக்காரர்கள் புரிந்த கொடுமைக்குச் சரியான கூலியாகும்'' (எனவும் அவர் கூறினார்.) 5:28,29.
15.
"மர்யமின் மகன் மஸீஹ்தான் அல்லாஹ்''
எனக் கூறியவர்கள் (ஏகஇறைவனை) மறுத்து
விட்டனர். "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும்,
உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை
வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து
விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்குஅக்கிரமக்காரர்களுக்கு- அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளர்களும் இல்லை''
என்றே மஸீஹ்
கூறினார். 5:72.
16. அவ்விருவரும் (பொய்சாட்சி கூறி) பாவம் செய்தனர்
என்பது தெரிய வந்தால், யாருக்குப் பாதகமாக சாட்சியம் கூறினார்களோ
அவர்களைச் சேர்ந்த இருவர், அவ்விருவர் இடத்தில் நின்று "எங்கள் சாட்சியம்
இவ்விருவரின் சாட்சியத்தை விட மிகவும் உண்மையானது. நாங்கள் வரம்பு மீறவில்லை.
(அவ்வாறு வரம்பு மீறினால்) அப்போது நாங்கள் அநீதி இழைத்தவர்களாவோம்''-
அநியாயக் காரர்களாகி-
கொடுமைக்காரர்களாகி விடுவோம் - அநியாயக்காரர்களில் உள்ளோராகிவிடுவோம் என்று அல்லாஹ்வின்
மீது சத்தியம் செய்ய வேண்டும். 5:107.
17. (முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள்
உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் – அநியாயக்காரர்கள்- அக்கிரமக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர். 6:33.
18. தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும்,
மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை
நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.
உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை
நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!
- அநியாயம்
செய்பவர்களில்- அநியாயக்காரர்களில்- அக்கிரமக்காரர்களில் நீரும் ஒருவராகி விடுவீர். 6:52.
19.
"நீங்கள் அவசரப்படுவது என்னிடம்
இருந்திருந்தால் எனக்கும், உங்களுக்குமிடையே காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அநீதி
இழைத்தவர்களை - அநியாயம்
செய்வோரை- அநியாயக்காரர்களை-அக்கிரமக்காரர்களை அல்லாஹ் அறிந்தவன்'' என்றும் கூறுவீராக! 6:58.
20. நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக்
கிடப்பவர்களை நீர் காணும்போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை அவர்களைப்
புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்த பின் அநீதி
இழைத்த – அநியாயக்கார-
அக்கிரமம் செய்யும் கூட்டத்துடன் நீர் அமராதீர்! 6:68.
21. அநீதி இழைத்தோரின் –அநியாயக்காரர்களின் – அக்கிரமக்காரர்களின் செயல்களின்
காரணமாக அவர்களில் ஒருவரை மற்றவருக்கு இவ்வாறே நண்பர்களாக ஆக்குவோம். 6:129.
22.
"ஒட்டகத்தில் இரண்டு,
மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண்
பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா?
அல்லது பெண் பிராணிகளின் கருவில்
உள்ளவைகளையா?'' என்று கேட்பீராக!
இவ்வாறு அல்லாஹ் உங்களுக்குக் கூறியபோது நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா?
அறிவின்றி மக்களை வழிகெடுப்பதற்காக அல்லாஹ்வின்
பெயரால் பொய்யை இட்டுக்கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்?
அநீதி இழைத்த- அநியாயக் காரக்- அக்கிரமக்கார கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். 6:144.
23. நமது வேதனை அவர்களிடம் வந்தபோது
" நிச்சயமாக நாம் அநீதி இழைத்து விட்டோம்'' - அநியாயக்காரர்களாக இருந்தோம்-
தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்- அக்கிரமக்காரர்களாகத்தான் இருந்தோம்” என்று கூறுவதைத் தவிர வேறு ஏதும்
அவர்களின் கூப்பாடாக இருக்கவில்லை. 7:5.
24."ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி
விடுவீர்கள்'' - அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்”- தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்"- அக்கிரமக்காரர்களில்
சேர்ந்து விடுவீர்கள்.”- அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்” (என்றும் கூறினான்) 7:19.
25. அவர்களுக்கு நரகத்திலிருந்து விரிப்பும், அவர்களுக்கு மேலே (நரகத்திலிருந்து) போர்வைகளும் உள்ளன. இவ்வாறே அநீதி
இழைத்தவர்களைத் - அநியாயக்காரர்களை இவ்வாறே நாம் தண்டிப்போம்.- அநியாயம் செய்பவர்களுக்கு
- அக்கிரமக்காரர்களுக்கு- நாம்
கூலி கொடுப்போம்.- 7:41.
26.
"எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை
உறுதியாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப்
பெற்றுக் கொண்டீர்களா?'' என்று சொர்க்கவாசிகள் நரகவாசிகளிடம் கேட்பார்கள்.
அவர்கள் 'ஆம்'
என்பர். "அநீதி இழைத்தோர் –அக்கிரமக்காரர்களின்- அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம்6 உள்ளது'' என்று அவர்களுக்கிடையே அறிவிப்பாளர் அறிவிப்பார். 7:44.
27. அவர்களின் பார்வைகள் நரகவாசிகளை நோக்கித்
திருப்பப்படும்போது "எங்கள் இறைவா! எங்களை அநீதி இழைத்த –அக்கிரமக்கார- அநியாயக்கார கூட்டத்துடன் சேர்த்து விடாதே!''
எனக் கூறுவார்கள். 7:47.
28. மூஸாவுடைய
சமூகத்தார் அவருக்குப் பின் அவர்களது நகைகளால் காளைக் கன்றின் வடிவத்தை (கடவுளாக)
கற்பனை செய்து கொண்டனர். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. "அது அவர்களிடம்
பேசாது என்பதையும், அவர்களுக்கு எந்த வழியையும் காட்டாது
என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா? அவர்கள் இதைக் கற்பனை செய்து
(தங்களுக்கு தாங்களே) அநீதி இழைத்தோரானார்கள். -
அநியாயம் செய்து கொண்டவர்களாக - தீங்கிழைத்துக்
கொண்டவர்களாக -அக்கிரமக்காரர்களாக ஆனார்கள். 7:148.
29. கவலையும், கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம் திரும்பியபோது "எனக்குப் பின்னர்
நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு (தண்டனைக்கு)
அவசரப்படுகிறீர்களா?'' என்றார். பலகைகளைப் போட்டார். தமது
சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (அதற்கு அவரது சகோதரர்)
"என் தாயின் மகனே! இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர்.
என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை
ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த - அநியாயக் கார- அக்கிரமக்கார சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்!'' என்றார். 7:150.
30. ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு
முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள்
தமது இறைவனின் சான்றுகளைப் பொய்யெனக் கருதினர். அவர்களின் பாவங்கள் காரணமாக
அவர்களை அழித்தோம். ஃபிர்அவ்னுடைய ஆட்களை மூழ்கடித்தோம். அனைவரும் அநீதி
இழைத்தனர். அநியாயக்காரர்களாக -கொடுமை இழைப்பவர்களாய் இருந்தார்கள். 8:54.
31. ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல்
ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த –அநியாயக்கார - அக்கிரமம் புரியும்- கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 9:19.
32. அவர்கள் உங்களுடன் புறப்பட்டிருந்தால்
சீரழிவைத் தவிர (எதையும்) உங்களுக்கு அதிகமாக்கியிருக்க மாட்டார்கள். குழப்பம்
விளைவிக்க எண்ணி, உங்களிடையே கோள் மூட்டியிருப்பார்கள்.
உங்களில் அவர்களின் ஒற்றர்களும் உள்ளனர். அநீதி இழைத்தவர்களை – அநியாயக்காரர்களை – அக்கிரமக்காரர்களை அல்லாஹ் அறிந்தவன். 9:47.
33. அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன்
நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த – அநியாயக்கார- அக்கிரமம் இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட
மாட்டான். 9:109.
34. அவர்களுக்கு முழுமையான அறிவு
இல்லாததாலும், விளக்கம் கிடைக்காததாலும் பொய்யெனக்
கருதுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். அநீதி
இழைத்தோரின் – அநியாயக்காரர்களின் - அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆனது என்பதைக் கவனிப்பீராக!
10:39.
35. "அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த -அநியாயம் செய்யும்- அக்கிரமம் புரியும் -அநியாயக்காரர்களான கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி
விடாதே!''
என்று அவர்கள் கூறினர். 10:85.
36. அல்லாஹ்வையன்றி
உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப்
பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நிச்சயமாக
(திண்ணமாக) நீர் அநீதி இழைத்தவராவீர்! – அநியாயக்காரர்களில்- அக்கிரமம் செய்பவர்களுள் ஒருவராகி விடுவீர்கள். 10:106.
37. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை
விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அவர்கள் தமது
இறைவன் முன்னே கொண்டு வரப்படுவார்கள். "இவர்களே தமது இறைவனின் பெயரால்
பொய்யுரைத்தோர்'' என்று சாட்சிகள் கூறுவார்கள். கவனத்தில்
கொள்க! அநீதி இழைத்தோர் –அநியாயக்காரர்கள் – அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின்
சாபம் இருக்கிறது. 11:18.
38. "என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன
என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர்
என்றும் கூற மாட்டேன். உங்கள் கண்கள் யாரை இழிவாகக் காண்கிறதோ அவர்களுக்கு அல்லாஹ்
எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். (அவ்வாறு கூறினால்) நிச்சயமாக நான் அநீதி இழைத்தவனாகி - அநியாயக்காரர்களில் ஒருவனாகி- அக்கிரமக்காரனாகி விடுவேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன்'' (எனவும் கூறினார்.) 11:31.
39. "பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக்
கொள்! வானமே நீ நிறுத்து!'' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர்
வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. "அநீதி இழைத்த - அநியாயம் செய்த - அக்கிரமம் புரிந்த - அநியாயக்காரர்களான கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்'' எனவும் கூறப்பட்டது. 11:44.
40. (அவை) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் அநீதி இழைத்த – அநியாயக்காரர்களுக்கு- அக்கிரமக்காரர்களுக்கு இவர்களுக்குத் தொலைவில் இல்லை. 11:83.
41. "யாருடைய சுமையில் அது காணப்படுகிறதோ
அவரே (அவரைப் பிடித்துக் கொள்வதே) அதற்குரிய தண்டனை. நாங்கள் அநீதி இழைத்தோரை - அநியாயம் செய்வோரை- அநியாயக்காரர்களுக்கு-அக்கிரமக்காரர்களுக்கு இவ்வாறே தண்டிப்போம்'' என்று இவர்கள் கூறினர். 12:75.
42. "உங்களை எங்கள் மண்ணிலிருந்து
வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். நிச்சயமாக "அநீதி இழைத்தோரை – அநியாயக்காரர்களை -அக்கிரமக்காரர்களை அழிப்போம்; 14:13,
43. "அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி
அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறிவிட்டேன்.
உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த
அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்!
நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர்.
முன்னர் நீங்கள் (இறைவனுக்கு) என்னை இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். நிச்சயமாக
அநீதி இழைத்தோருக்கு - அக்கிரமக்காரர்களுக்கு- அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. 14:22.
44. நம்பிக்கை கொண்டோரை உறுதியான கொள்கையின்
மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும்
அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை - அநியாயக் காரர்களை அக்கிரமக்காரர்களை அல்லாஹ்
வழிகேட்டில் விட்டு விடுகிறான். அல்லாஹ் நாடியதைச் செய்வான். 14:27.
45. அடர்ந்த தோப்புகளில் வசித்தோரும் (மத்யன்வாசிகளும்) நிச்சயமாக அநீதி இழைத்தனர். அநியாயக்காரர்களாகவே - அக்கிரமக்காரர்களாக- அக்கிரமக்காரர்களாய் இருந்தார்கள். 15:78.
46. நம்பிக்கை
கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக்
குர்ஆனில் இறக்குகிறோம். அநீதி இழைத்தோருக்கு – அக்கிரமக்காரர்களுக்கோ- அநியாயக்காரர்களுக்கோ- கொடுமையாளர்களுக்கோ (அது) நட்டத்தையே அதிகப்படுத்தும். 17:82.
47. "இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து
உள்ளது''
என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்!
விரும்பியவர் மறுக்கட்டும். நிச்சயமாக அநீதி இழைத்தோருக்கு -அநியாயக் காரர்களுக்கு - கொடுமையாளர்களுக்குத் – அக்கிரமக்காரர்களுக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக்
கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற
கொதிநீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம். 18:29.
48. "ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறியபோது
இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்.
தனது இறைவனின் கட்டளையை மீறினான். என்னையன்றி அவனையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் - அக்கிரமக்காரர்கள்- அநியாயக்காரர்கள்- கொடுமையாளர்கள் (ஏகத்துவத்துக்கு இணைவைப்பைப்) பகரமாக்கியது மிகவும் கெட்டது. 18:50.
49. பின்னர் (நம்மை) அஞ்சியோரைக் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை - அநியாயம் செய்தவர்களை- அநியாயக்காரர்களை - கொடுமையாளர்களை மண்டியிட்டோராக அதிலேயே விட்டு விடுவோம். 19:72.
50. "எங்களுக்குக் கேடு தான். நிச்சயமாக நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்'' அநியாயக்காரர்களாக இருந்தோம் - வரம்பு மீறி (பாவிகளாகி) விட்டோம்"- அக்கிரமக்காரர்களாயிருந்தோம் என்று அவர்கள்
கூறினர். 21:14.
51. "அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்'' என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு – அநியாயக்காரர்களுக்குக்- கொடுமையாளர்களுக்கு இவ்வாறே கூலி
வழங்குவோம். 21:29.
52. உமது இறைவனின்
வேதனையில் சிறிதளவு அவர்களுக்கு ஏற்பட்டால் "எங்களுக்குக் கேடு தான். நாங்கள்
நிச்சயமாக அநீதி இழைத்தோம்'' -அநியாயக்காரர்களாகவே - கொடுமையாளர்களாய் இருந்தோம்” - தீங்கு இழைத்துக் கொண்டோம்!" எனக் கூறுவார்கள். 21:46.
53. "நமது கடவுள்களை இவ்வாறு செய்தவன் யார்? நிச்சயமாக அவன் அநீதி இழைத்தவன்''- அக்கிரமக்காரர்களில் - மகா அநியாயக்காரன்" - பெரும் கொடுமைக்காரன்தான் என்று அவர்கள் கூறினர். 21:59.
54. மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார்.
"அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்'' என்று
நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நிச்சயமாக நான் அநீதி
இழைத்தோரில் (அநியாயக்காரர்களில்- அக்கிரமக்காரர்களில்
- குற்றம் செய்துவிட்டவர்களில்) ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். 21:87.
55. உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. அப்போது (ஏகஇறைவனை) மறுத்தோரின்
பார்வைகள் நிலை குத்தியதாக இருக்கும். "எங்களுக்குக் கேடுதான். நாங்கள் இது
பற்றிக் கவனமற்று இருந்து விட்டோம். இல்லை! நிச்சயமாக நாங்கள் அநீதி இழைத்தோம்'' - அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்” - தீங்கிழைத்துக் கொண்டோமே!" கொடுமை புரிந்தவர்களாய் - அக்கிரமக்காரர்களாக இருந்துவிட்டோமே!” அநியாயக்காரர்களாகவுமிருந்தோம்” (என்று
கூறுவார்கள்). 21:97.
56. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதைச் சோதனையாக ஆக்குவதற்காக அதை
அல்லாஹ் மாற்றுகிறான். பின்னர் தனது வசனங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ்
அறிந்தவன்; ஞானமிக்கவன். நிச்சயமாக அநீதி இழைத்தோர் - அநியாயம் செய்பவர்கள்- அக்கிரமக்காரர்கள்- அநியாயக்காரர்கள் - கொடுமையாளர்கள்- தூரமான பிளவில் உள்ளனர். 22:53
57. அல்லாஹ்வை விட்டு விட்டு எதைக் குறித்து
எந்தச் சான்றையும் அவன் அருளவில்லையோ அதையும், எதைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லையோ அதையும் அவர்கள் வணங்குகின்றனர். அநீதி
இழைத்தோருக்கு – அநியாயக்காரர்களுக்கு- அக்கிரமக்காரர்களுக்கு - கொடுமை
புரியும் இம்மக்களுக்கு எந்த உதவியாளனும் இல்லை. 22:71.
58. நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் "அநீதி இழைத்த –அநியாயக்காரரான- அக்கிரமக்கார-
“கொடுமைபுரியும் கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' எனக் கூறுவீராக! 23:28.
59. உண்மையாகவே அவர்களைப் பெரும் சப்தம்
தாக்கியது. உடனே அவர்களைக் கூளங்களாக ஆக்கினோம். அநீதி இழைத்த- அக்கிரமக்கார- அநியாயக்கார- கொடுமை புரிந்த கூட்டத்தினருக்கு (இறையருள்) தூரமே! 23:41.
60. என் இறைவா!
என்னை அநீதி இழைத்த – அநியாயக்காரர்களின்- கொடுமை இழைக்கும் -
அக்கிரமக்காரர்கள் கூட்டத்தில் ஆக்கி விடாதே!'' என்று (நபியே!) கூறுவீராக! 23:94.
61. நூஹுடைய சமுதாயம் தூதர்களைப் பொய்யர்களெனக் கூறியபோது அவர்களை
மூழ்கடித்தோம். அவர்களை மனிதர்களுக்குப் படிப்பினையாக ஆக்கினோம். அநீதி இழைத்தோருக்கு – அநியாயக்காரர்களுக்குத்- கொடுமைக்காரர்களுக்கு - அக்கிரமக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். 25:37.
62. "அநீதி இழைக்கும் – அக்கிரமக்கார-அநியாயக்கார-அக்கிரமம்
புரிந்த- கூட்டமான ஃபிர்அவ்னுடைய
சமுதாயத்தவரிடம் செல்வீராக! 26:10,
63. (இது) அறிவுரை! நாம் அநீதி
இழைத்ததில்லை - அநியாயம் செய்பவராக -கொடுமை
புரிபவராயும்- அக்கிரமக்காரர்களாக
இருந்ததில்லை. . 26:209.
64. பயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். "என் இறைவா! அநீதி இழைக்கும்- அக்கிரமக்கார- அநியாயக்காரர்களின்-கொடுமையாளர்களிடமிருந்து கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!'' என்றார். 28:21.
64. பயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். "என் இறைவா! அநீதி இழைக்கும்- அக்கிரமக்கார- அநியாயக்காரர்களின்-கொடுமையாளர்களிடமிருந்து கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!'' என்றார். 28:21.
65 அவர்களில் ஒருத்தி வெட்கத்துடன் நடந்து
அவரிடம் வந்து, "நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத்
தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்றாள். அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். "நீர்
பயப்படாதீர்! அநீதி இழைக்கும்- அக்கிரமக்கார-அநியாயக்கார-கொடுமையான கூட்டத்திடமிருந்து நீர் தப்பித்து விட்டீர்'' என்று அவர் கூறினார். 28:25.
66. எனவே அவனையும், அவனது படையினரையும் தண்டித்தோம். அவர்களைக் கடலில் எறிந்தோம். "அநீதி
இழைத்தோரின் – அக்கிரமக்காரர்களின்- கொடுமைக்காரர்களின்- அநியாயக்காரர்களின் முடிவு எப்படி இருந்தது?'' என்று கவனிப்பீராக! 28:40.
67. அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால்
அவர்கள் தமது மனோஇச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக!
அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தனது மனோஇச்சையைப் பின்பற்றியவனை விட
வழிகெட்டவன் யார்? அநீதி இழைக்கும் – அக்கிரமக்கார- அநியாயக்கார- கொடுமைக்கார(ர்களுக்கு) கூட்டத்திற்கு நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 28:50.
68. நமது தூதர்கள் இப்ராஹீமிடம்
நற்செய்தியைக் கொண்டு வந்தபோது "அவ்வூரார் நிச்சயமாக அநியாயக்காரர்களாக உள்ளனர்; கொடுமை புரிபவர்களாகி விட்டார்கள். அவ்வூராரை நிச்சயமாக நாங்கள் அழிக்கப் போகிறோம்'' என்றனர். 29:31.
69.. "எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி
(இனிமேல்) நல்லறங்களைச் செய்கிறோம்'' என்று அங்கே
அவர்கள் கதறுவார்கள். "படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு - அக்கிரமக்காரர்களுக்கு எந்த உதவியாளரும் இல்லை'' (என்று
கூறப்படும்) 35:37
70. நிச்சயமாக அதை அநீதி இழைத்தோருக்குச் அநியாயக்காரர்களுக்கு- அக்கிரமக்காரர்களுக்கு சோதனையாக நாம் ஆக்கினோம். அநியாயக்காரர்களை வேதனை செய்வதற்காகவே உண்டுபண்ணி இருக்கிறோம். 37:63.
71. யார் தமது முகத்தை கியாமத் நாளின்1 தீய வேதனையிலிருந்து காத்துக்
கொள்கிறாரோ அவரா (நரகில் நுழைவார்?) "நீங்கள் செய்ததைச் சுவையுங்கள்!'' என்று அநீதி இழைத்தோருக்குக் (அநியாயக் காரர்களுக்கு - அநியாயக்காரர்களை நோக்கி –கொடுமைக்காரர்களிடம்) கூறப்படும். 39:24.
72. சீக்கிரம் வரவிருக்கும் நாளைப்1 பற்றி அவர்களுக்கு எச்சரிப்பீராக!
அப்போது இதயங்கள் தொண்டைக் குழிகளுக்கு வந்து அதை மென்று விழுங்குவோராக அவர்கள்
இருப்பார்கள். அநீதி இழைத்தோருக்கு – அநியாயக்காரர்களுக்கு- அநியாயம்
செய்பவர்களுக்கு – கொடுமைக்காரர்களுக்கு - அக்கிரமக்காரர்களுக்கு எந்த நண்பனும், அங்கீகரிக்கப்படும் பரிந்துரையாளனும் இல்லை. 40:18.
73. அந்நாளில் அநீதி இழைத்தோருக்கு – அநியாயக்காரர்களுக்கு - அக்கிரமக்காரர்களுக்கு- கொடுமைக்காரர்களுக்கு அவர்களின் சமாளிப்புகள் பயன் தராது.
அவர்களுக்குச் சாபம் உள்ளது. அவர்களுக்குத் தீய தங்குமிடமும் உண்டு. 40:52.
74. அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக
ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு
பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். நிச்சயமாக அநீதி இழைத்தோருக்குத் – அநியாயக்காரர்களுக்கு – அநியாயக்காரர்கள்_அவர்களுக்குத் கொடுமைக்காரர்களுக்கு- அக்கிரமக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. 42:21.
75. (நபியே) அநீதி இழைத்தோர் – அக்கிரமக்காரர்கள் –அநியாயக்காரர்கள்- வரம்பு மீறிய இவர்கள்- கொடுமைக்காரர்கள் தாங்கள் செய்தது பற்றி அஞ்சியோராக இருப்பதை நீர் காண்பீர்! அது அவர்களை
வீழ்த்திவிடும். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளில்
இருப்பார்கள். அவர்கள் நாடியவை அவர்களது இறைவனிடம் அவர்களுக்காக உண்டு. இதுவே
பேரருள். 42:22.
76. தீமையின் கூலி அது போன்ற தீமையே.
மன்னித்து சமாதானமாகச் செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. நிச்சயமாக அவன் அநீதி இழைத்தோரை - அநியாயம் செய்பவர்களை – கொடுமைக்காரர்களை- அக்கிரமக்காரர்களை- அநியாயம் செய்வோர்களை விரும்ப மாட்டான். 42:40.
77. அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு
விடுகிறானோ அவனுக்கு அவனன்றி எந்த உதவியாளனும் இல்லை. அநீதி இழைத்தோர் - அநியாயம் செய்தவர்கள் – கொடுமைக்காரர்கள் – அக்கிரமக்காரர்கள் வேதனையைக் காணும்போது "தப்பிக்க
ஏதும் வழி உண்டா?'' எனக் கூறுவதை நீர் காண்பீர். 42:44.
78. சிறுமையினால் அடங்கி ஒடுங்கி, அவர்கள் அதன் முன்னே நிறுத்தப்பட்டு, கடைக்கண்ணால்
பார்ப்பதை நீர் காண்பீர்! "கியாமத் நாளில்1 தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் நட்டத்தை ஏற்படுத்தியோரே (உண்மையில்) நிச்சயமாக நட்டமடைந்தவர்கள்'' என்று நம்பிக்கை கொண்டோர் (அப்போது) கூறுவார்கள். கவனத்தில் கொள்க! நிச்சயமாக அநீதி இழைத்தோர் – அநியாயக்காரர்கள் – கொடுமைக்காரர்கள்- நிலையான வேதனையில்
இருப்பார்கள். 42:45.
79. அவர்களுக்கு நாம் தீங்கிழைக்கவில்லை; (யாதோர் அநியாயமும் செய்யவில்லை;- யாதொரு
தீங்கும் இழைத்துவிடவில்லை- கொடுமை இழைக்கவில்லை.- அநியாயம் செய்து
விடவில்லை,) .மாறாக அவர்களே தீங்கிழைத்துக் கொண்டனர். (தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே.- தமக்குத்தாமே
தீங்கிழைத்துக் கொண்டனர்.- தமக்குத் தாமே கொடுமை இழைத்துக் கொண்டார்கள்.
அவர்களே அநியாயக்காரர்களாக இருந்தனர்.)43:76
80. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டும் சிறிதும் உம்மைக் காப்பாற்ற மாட்டார்கள். நிச்சயமாக அநீதி
இழைத்தோர் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள்.
(தன்னை) அஞ்சியோருக்கு அல்லாஹ் பொறுப்பாளன். (அநியாயக்காரர்களில் – அநியாயக்காரர்களுள்- கொடுமை
புரிபவர்களே தங்களுக்குள்- அநியாயக்காரர்கள் _ அவர்களில் சிலர், சிலருக்கு உதவியாளர்களாகவும்
இருக்கிறார்கள்) 45:19
81. ''இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து, இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி
நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து அகந்தை கொண்டால் (என்னவாகும்
என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்!'' என (முஹம்மதே!)
கேட்பீராக! அநீதி இழைக்கும் கூட்டத்துக்கு - அநியாயக்கார சமூகத்திற்கு- அநியாயக்கார மக்களை- கொடுமைக்காரர்களுக்குத் அக்கிரமக்காரர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 46:10
82. நரகத்தில் நிரந்தரமாக இருப்பதே இருவரின் முடிவாக ஆகிவிட்டது. அநீதி
இழைத்தோருக்கு இதுவே தண்டனை. -அநியாயக்
காரர்களின் -கொடுமைக்காரர்களின் கூலி இதுவேயாகும். - 59:17.
83. இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை
இட்டுக்கட்டுபவனை விட மிகப் பெரிய அநீதி இழைப்பவன் -அநியாயக்காரன் – கொடுமைக்காரன் யார்? - அநீதி
இழைக்கும் – கூட்டத்திற்கு -அநியாயக்கார சமூகத்தாரை –மக்களை-கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 61:7.
84. தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல்
(அதன்படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப்
போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும்
கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு - அநியாயக்கார சமூகத்தாரை-மக்களை- கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். 62:5.
85. அவர்கள் செய்த வினை காரணமாக அதை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். அநீதி
இழைத்தோரை – அநியாயக்காரர்களை- கொடுமைக்காரர்களை அல்லாஹ் அறிந்தவன். 62:7.
86. "என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக!
ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக்
காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் – இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் -மேலும், கொடுமை புரியும் சமூகத்திலிருந்து என்னைக் காப்பாயாக!'' என்று
ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ்
முன்னுதாரணமாகக் கூறுகிறான். 66:11.
87. "எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்'' -நாம் தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்” - தீங்கிழைத்துக் கொண்டோம்" - உண்மையில் நாம் தாம் பாவிகளாயிருந்தோம்!”- நாங்கள் தாம் அநியாயக்காரர்களாகிவிட்டோம்”என்றனர். 68:29.
88. "என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு - மேலும், அநியாயக்காரர்களுக்கு-
கொடுமைக்காரர்களுக்கு அழிவைத் தவிர வேறு எதையும்
அதிகமாக்காதே!'' (எனவும் பிரார்த்தித்தார்.) 71:28.
89. தான்
நாடியோரை அவன் தனது அருளில் நுழையச் செய்கிறான். அநீதி இழைத்தோருக்கு – அநியாயக்காரர்களுக்கு -கொடுமைக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளான். 76:31.
No comments:
Post a Comment