ழாலிம் ஒருமை,
ழாலிமைன் இருமை, ழாழிமூன் பன்மை இதில் நாம்
காண உள்ள வார்த்தை ; ழாழிமூன் – ظٰلِمُوْنَ பன்மை
இதற்கு, அக்கிரமஸ்தன் -அனியாயஸ்தன் என்று 1959ல் தமிழாக்கம் செய்தார்கள். பிறகு அநியாயம் செய்தவர்கள் - அக்கிரமக்காரர்கள் - அக்கிரமம் புரிந்தவர்கள் –அநியாயக்காரர்கள் - அநீதியாளர்கள் - வரம்பு மீறியவர்கள் – கொடுமையாளர்கள் – கொடியோர் - கொடுமை புரிபவர்கள் - அநீதி இழைத்தவர்கள் என்று ஒவ்வொருவரும் அவ்வப்போதைய நடைமுறைத் தமிழை மொழி பெயர்ப்பாளர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். அவற்றை அப்படியே புழு கலரில் - நீளம் நிறத்தில் தந்துள்ளோம். 34 ஆயத்துகளில் ழாழிமூன் – ظٰلِمُوْنَ என்ற பன்மை வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன
இதற்கு, அக்கிரமஸ்தன் -அனியாயஸ்தன் என்று 1959ல் தமிழாக்கம் செய்தார்கள். பிறகு அநியாயம் செய்தவர்கள் - அக்கிரமக்காரர்கள் - அக்கிரமம் புரிந்தவர்கள் –அநியாயக்காரர்கள் - அநீதியாளர்கள் - வரம்பு மீறியவர்கள் – கொடுமையாளர்கள் – கொடியோர் - கொடுமை புரிபவர்கள் - அநீதி இழைத்தவர்கள் என்று ஒவ்வொருவரும் அவ்வப்போதைய நடைமுறைத் தமிழை மொழி பெயர்ப்பாளர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். அவற்றை அப்படியே புழு கலரில் - நீளம் நிறத்தில் தந்துள்ளோம். 34 ஆயத்துகளில் ழாழிமூன் – ظٰلِمُوْنَ என்ற பன்மை வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன
1. மூஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும்
எண்ணிப் பாருங்கள்! அவருக்குப் பின் நீங்கள் வரம்பு மீறி - அநீதி இழைத்துக் காளைக் கன்றை (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.1 (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாக - அக்கிரமம் புரிந்தவர்களாக அநியாயக்காரர்களாக ஆகி விட்டீர்கள். 2:51.
2. நிச்சயமாக மூஸா தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார்.
அவருக்குப் பின் அநீதி இழைத்து காளைக்கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்
(இப்படிச் செய்து)
நீங்கள் அக்கிரமக்காரர்களாக - (வரம்பு கடந்த) - அநியாயக்காரர்களாகவே ஆகி விட்டீர்கள் 2:92
3.இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான
முறையில் விட்டுவிடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த
ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை
நிலைநாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை
நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹரிலிருந்து) ஈடாகக்
கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை
மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள் - அக்கிரமக்காரர்கள் - அநியாயக்காரர்கள், 2:229.
4. நம்பிக்கை கொண்டோரே! பேரமோ,
நட்போ, பரிந்துரையோ இல்லாத நாள்1 வருவதற்கு முன் நாம் உங்களுக்கு
வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! (ஏகஇறைவனை) மறுப்பவர்கள் அநீதி
இழைத்தவர்கள் - அநியாயக்காரர்கள் - அக்கிரமம் புரிபவர் 2:254.
5. இதன் பிறகும் அல்லாஹ்வின் மீது பொய்யை
இட்டுக்கட்டியோரே அநீதி இழைத்தவர்கள் - அக்கிரமக்காரர்கள் - அநியாயக்காரர்கள் - கொடுமையாளர்கள் 3:94.
6. (நபியே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத்
தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் நிச்சயமாக அநீதி இழைத்தவர்கள் - கொடியோர் - அநியாயக்காரர்கள் - அக்கிரமக்காரர்கள் 3:128.
7.உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல்
ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட)
யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும்.
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் நிச்சயமாக அநீதி இழைத்தவர்கள் - அநியாயக் காரர்கள் - அநீதியாளர்கள். 5:45.
8. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட
அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் - அநியாயக்காரன் - அக்கிரமக்காரன் யார்? நிச்சயமாக அநீதி இழைத்தோர் அநியாயக் காரர்கள், அநியாயக்காரர்கள், அக்கிரமக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள். 6:21.
9. "அல்லாஹ்வின் வேதனை திடீரென்று அல்லது பகிரங்கமாக
உங்களிடம் வருமானால் அநீதி இழைத்த (அக்கிரமக்கார - அநியாயக்கார) கூட்டத்தினர் தவிர (வேறு) யாரும் அழிக்கப்படுவார்களா?
என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!''
என்று கேட்பீராக! 6:47.
10.அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் 'எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், 'அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்' என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் - அநியாயக்காரன் - கொடிய அக்கிரமக்காரன் யார்? இந்த அநீதி இழைத்தோர் - அநியாயக்காரர்கள் - அக்கிரமக்காரர்கள் மரணத்தின் வேதனைகளில் இருக்கும்போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். "உங்கள் உயிர்களை நீங்களே
வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்!'' (எனக் கூறுவார்கள்). 6:93.
11. "என் சமுதாயமே! நீங்கள் உங்கள் வழியில்
செயல்படுங்கள்! நானும் (எனது வழியில்) செயல்படுகிறேன். அவ்வுலகின் முடிவு
யாருக்குச் சாதகமாக இருக்கும்? என்பதைப்
பின்னர் அறிந்து கொள்வீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் - அக்கிரமக்காரர்கள் - அநீதி
இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று கூறுவீராக! 6:135,
12. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும்,
உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட
(இறை)மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி
இழைத்தவர்கள் - அநியாயக்காரர்கள் - வரம்பு மீறியவர்கள் - அக்கிரமக்காரர்கள். 9:23.
13. எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து 'வா!'
என்றாள். அதற்கவர் "அல்லாஹ்விடம் பாதுகாப்புத்
தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி
இழைத்தோர் - அநியாயம் செய்பவர்கள் - அநியாயக்காரர்கள் - அக்கிரமக்காரர்கள், நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்'' எனக் கூறினார். 12:23.
14. "எங்கள் பொருளை யாரிடம் எடுத்தோமோ அவரைத் தவிர
மற்றவரைப் பிடித்துக் கொள்வதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறோம்.
அவ்வாறு செய்தால் நாங்கள் அநீதி இழைத்தவர்களாவோம்'' (அநியாயக்காரர்களாக, அக்கிரமக்காரர்களாக, ஆகி விடுவோம்) என்று அவர்
கூறினார். 12:79.
15. அநீதி இழைத்தோர் - அக்கிரமக்காரர்கள் - அநியாயக்காரர்கள் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணிவிடாதீர்! பார்வைகள்
நிலைகுத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே1 அவர்களை
அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான். 14:42.
16. அநீதி இழைத்தோர் அக்கிரமக்காரர்கள் - அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும்போது அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசமும்
அளிக்கப்பட மாட்டார்கள் 16:85.
17. அவர்களிலிருந்தே அவர்களுக்குத் தூதர் வந்தார்.
அவரைப் பொய்யரெனக் கருதினர். அவர்கள் அநீதி இழைத்த (அநியாயம் செய்தவர்களாக - அநியாயக்காரர்களாக - அக்கிரமம் செய்பவர்களாய் ஆகிவிட்ட) நிலையில் வேதனை அவர்களைத் தாக்கியது. 16:113.
18. "சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே
பின்பற்றுகிறீர்கள்' என்று அநீதி இழைத்தோர் - அநியாயக்காரர்கள் - அக்கிரமக்காரர்கள் இரகசியமாகக் கூறியதையும்,
(நபியே!) உம்மிடம் அவர்கள் செவியேற்றபோது எதைச்
செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். 17:47.
19. வானங்களையும், பூமியையும் படைத்தவன்
இவர்களைப் போன்ற (அற்பமான)வர்களைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள்
அறியவில்லையா? சந்தேகமில்லாத ஒரு
காலக் கெடுவையும் அவர்களுக்காக அவன் ஏற்படுத்தியுள்ளான். அநீதி இழைத்தோர், -அக்கிரமக்காரர்கள் - கொடுமை புரிபவர்கள் - அநியாயக்காரர்கள் (இறை) மறுப்பைத்
தவிர வேறு எதையும் ஏற்பதில்லை. 17:99.
20. நம்மிடம் அவர்கள் வரும் நாளில் தெளிவாகப்
பார்ப்பார்கள்; தெளிவாகக்
கேட்பார்கள். எனினும் அநீதி இழைத்தோர் - அக்கிரமக்காரர்கள் -அநியாயக்காரர்கள் - கொடுமையாளர்கள், அன்று பகிரங்கமான வழிகேட்டில் இருப்பார்கள். 19:38.
21. உடனே விழிப்படைந்து "நீங்கள் தாம் (இவற்றை
வணங்கியதன் மூலம்) அநீதி இழைத்தீர்கள்'' (அநியாயம் - அக்கிரமம் செய்து விட்டீர்கள்) என்று தமக்குள்
பேசிக்கொண்டனர். 21:64.
22. "எங்கள் இறைவா! இங்கிருந்து எங்களை வெளியேற்றி விடு!
நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அநீதி இழைத்தவர்கள்''-அநியாயக்காரர்கள் - கொடுமைக்காரர்களாவோம் (என்றும் கூறுவார்கள்). 23:107.
23. அவர்களின் உள்ளங்களில் நோய் உள்ளதா?
அல்லது சந்தேகம் கொள்கிறார்களா?
அல்லது அல்லாஹ்வும்,
அவனது தூதரும் அவர்களுக்கு அநீதி
இழைப்பார்கள் என்று அஞ்சுகிறார்களா? இல்லை! அவர்களே அநீதி இழைத்தவர்கள் - அநியாயக் காரர்கள் - கொடுமையாளர்கள் 24:50.
24. "அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக்
கூடாதா? அல்லது இவருக்கு ஒரு
தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?'' என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே
பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் - அநியாயக் காரர்கள் - அக்கிரமக்காரர்கள்- கேட்கின்றனர்.
25:8.
25. "தன்னிடமிருந்து நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார் என்பதையும்,
யாருக்கு நல்ல முடிவு ஏற்படும்
என்பதையும் என் இறைவன் நன்கறிந்தவன். அநீதி இழைத்தோர் - அக்கிரமம் செய்வோர் –அநியாயக்காரர்கள் - கொடுமைக்காரர்கள் வெற்றிபெற
மாட்டார்கள்'' என்று மூஸா
கூறினார். 28:37.
26. ஊர்களின் தாய் நகரத்துக்குத் தூதரை அனுப்பாத வரை உமது
இறைவன் அழிப்பவனாக இல்லை. அவர்களுக்கு அவர் நமது வசனங்களைக் கூறுவார்.
ஊரிலுள்ளவர்கள் அநீதி இழைத்தால் (அநியாயம் செய்து- கொடுமை புரிபவர்களாய் - அக்கிரமக் காரர்களாக – அநியாயக்காரர்களாக
ஆனால்) அன்றி எந்த ஊரையும் நாம் அழித்ததில்லை. 28:59.
27. நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த (அநியாயக்காரர்களாக - கொடுமை புரிந்த) நிலையில் அவர்களைப் பெருவெள்ளம் பிடித்துக்
கொண்டது. 29:14.
28. மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின்
உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் ( அநியாயக்காரர்களை – கொடுமைக்காரர்களைத்) தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க
மாட்டார்கள். 29:49.
29. இது அல்லாஹ் படைத்தது! அவனன்றி மற்றவர்கள்
படைத்தவற்றை எனக்குக் காட்டுங்கள்! எனினும் அநீதி இழைத்தோர்
அநியாயக்காரர்கள்
– அக்கிரமக்காரர்கள்- தெளிவான வழிகேட்டில் உள்ளனர். 31:11.
30. "இந்தக் குர்ஆனையும், இதற்கு முன் சென்றதையும்
நிச்சயமாக நம்பவே மாட்டோம்''
என்று (ஏகஇறைவனை) மறுப்போர்
கூறுகின்றனர். அநீதி இழைத்தோர் (-அநியாயக் காரார்கள் -அக்கிரமக் காரர்கள்- கொடுமை புரிபவர்கள்) தமது இறைவனிடம் நிறுத்தப்பட்டிருக்கும்போது நீர்
பார்ப்பீராயின் அவர்களில் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்துவார்கள்.
"நீங்கள் இல்லாதிருந்தால் நாங்களும் நம்பிக்கை கொண்டிருப்போம்''
என்று பலவீனமாக இருந்தோர்
பெருமையடித்துக் கொண்டிருந்தோரிடம் கூறுவார்கள். 34:31.
31. "அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்ற,
உங்கள் தெய்வங்கள் பூமியில் எதனைப்
படைத்தன?'' என்று எனக்குக்
காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா?
என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!"
என்று கேட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தை அளித்து அதனால் (கிடைத்த)
தெளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்லை. இந்த அநியாயக்காரர்களில் - அக்கிரமக்காரர்கள் ஒருவருக்கொருவர் மோசடியையே வாக்களிக்கின்றனர். 35:40.
32. அல்லாஹ் நினைத்திருந்தால் அவர்களை ஒரே சமுதாயமாக
ஆக்கியிருப்பான். மாறாக தான் நாடியோரை தனது அருளில் நுழையச் செய்கிறான். அநீதி
இழைத்தோருக்குப் - அநியாயக்காரர்களுக்குப் -கொடுமைக்காரர்களுக்கு பாதுகாவலனும், உதவியாளனும் இல்லை. 42:8.
33. நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய
வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு
பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும்.
உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட
வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக்
கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.- அநியாயக்காரர்கள்- கொடுமைக்காரர்கள். 49:11.
34. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர்,
உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை
வெளியேற்றியோர், உங்களை
வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ்
உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி
இழைத்தவர்கள் – அநியாயக்காரர்கள் -அநியாயம் செய்பவர்கள்.- கொடுமையாளர்கள் 60:9.
1 comment:
ungaludya blog migavam payanullathaga ullathu.allahu akbar
Post a Comment