Sunday, June 16, 2019

2 : 5 உலாயிக - இவர்கள், அலா- மீது, ஹுதன் -நேர்வழி, மின் - இருந்து, றப்பி - இறைவன், ஹிம்- அவர்களுடைய

திருச்சியைச் சேர்ந்த பா. தாவூத்ஷா  இஸ்லாமிய மறுமலர்ச்சி உரை நடையின் தந்தை எனப் போற்றப்பட்டவர். அவர் 1926ல் வெளியிட்ட 'குர்ஆன் மஜீத்பொருளுரையும் விரிவுரையும் என்பதிலிருந்து,  பிரமாணம் - (சத்தியம்) சம்பந்தமாக இதில் குறிப்பிட்டுள்ள சூரியன் என்ற அத்தியாயத்தின் 2 பக்கங்களை இணைத்துள்ளோம். https://kamfazlulilahi.blogspot.com/2019/06/2-5.html




இந்த தமிழ் அன்று தெள்ளு தமிழ் என்ற பாராட்டைப் பெற்றது. இந்த தமிழை இன்றைய தலைமுறை ஓரளவு புரியும். அடுத்தடுத்த தலைமுறைக்கு அறவே புரியாது. அதனால்தான் காலத்திற்கு காலம் உள்ள நடைமுறைப் பேச்சில் மொழி பெயர்ப்புகள் வர வேண்டும் என்று அறிவுள்ளவர்கள் விரும்புகிறார்கள்.

குர்ஆன் சொல்லுக்கு சொல்லில் 2 : 5 வசனத்தை பார்க்க உள்ளோம். முன்னதாக இதில் வாவு பற்றி தெரிந்து கொள்வோம்.
و   வாவு   இடத்துக்கு தக்கவாறு பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொற்களில் ஒன்றாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளை, பெயர்களை இணைக்கக் கூடிய இடங்களில்  ம் என்ற பொருள் தரும்.  இதற்கு உம்மைப் பொருள் என்பார்கள். அவனும் அவளும் அதுவும் இதுவும் என்கிற மாதிரி வருவது உம்மைப் பொருள் ஆகும்.


அஹ்மது வந்தான். முஹம்மது வந்தான் என்பதை  அஹ்மதும்    முஹம்மதும் வந்தான் என்று இணைத்து சொல்லும் போது ம் என பொருள் தரும். இப்றாஹீமும் இஸ்மாயீலும் என வரும் போது கடைசி எழுத்தில் பகுதியை சேர்த்து – இழுத்து - இணைத்து மும் லும் யும் என பொருள் தரும்.  

ஒரு வசனத்தின் இடையில்  வரும்போது    இன்னும் மேலும் என்ற பொருள் தரும்.

ஒரு வசனத்தின் துவக்கமாகவோ முடிவாகவோ வரும்போது பொருள் தராது. ஒரு வசனத்தின் துவக்கம் முடிவு என விளங்கிக் கொள்ள வேண்டும்

சில இடங்களில் துவக்கமாக வரும்போது சத்தியமாக என்ற பொருளும் தரும்

அஸ்ர் என்றால் காலம். வல் அஸ்ர் என்றால் காலத்தின்  மீது சத்தியமாக 103:1.


ஷம்ஸ் - சூரியன்.  வஷ் ஷம்ஸ் சூரியன்  மீது சத்தியமாக  91:1.

கமர் - சந்திரன்.   வல்கமர் சந்திரன் மீது சத்தியமாக 91:2

நஹார் - பகல் - வன்நஹார் -பகலின்  மீது சத்தியமாக 91:3

லைல் – இரவு.  வல்லைல் இரவின் மீது சத்தியமாக 91:4.

அல்லாஹ் என்பதற்கு முன் வ வந்து வல்லாஹ் என்றால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்ற பொருள் தரும்.

இது அரபி இலக்கணமாகும். ஒரேயடியாக இலக்கணத்தை விளக்கினால் போரடித்து விடும். ஆகவே இப்போதைக்கு இது போதும்.  அவ்வப்போதைக்கு தேவைப்படும் போது இடத்துக்கு தக்கவாறு அரபி இலக்கணத்தைப்   பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.

أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ


உலாயிக அலா ஹுதன்ம் மின்ர்றப்பிஹிம் வ உலாயிக ஹுமுல் முFப்லிஹுன்


أُولَـٰئِكَ –   உலாயிக -  இவர்கள் -அவர்கள் - இத்தகையவர்கள்


عَلَىٰ –  அலா-  மீது - மேல்


هُدًى –   ஹுதன் - -நேர்வழி


مِّن –   மின் - இருந்து From -லிருந்து


 رَّبِّ - றப்பி - இறைவன்


هِمْ‌- ஹிம்- அவர்களுடைய 


رَّبِّهِمْ -  றப்பிஹிம்- அவர்களுடைய இறைவன்


وَ – வ - இன்னும் - மேலும்  அன்றி - பின்னர், பின்பு


أُولَـٰئِكَ –  உலாயிக - இவர்கள் -அவர்கள் - இத்தகையவர்கள்



هُمُ   -  ஹுமு -  அவர்கள்


الْمُفْلِحُونَ – முFப்லிஹுன் - வெற்றியாளர்கள்




வார்த்தைகளை தொகுத்துள்ள தமிழ் நடை மொழிப் பெயர்ப்புகள் 

1. அவர்களேதமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (பீ.ஜே.)



2இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (டாக்டர். முஹம்மது ஜான்)


3இத்தகையவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கின்றார்கள். இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள். (அப்துல் ஹமீது பாகவி)


4இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள் (IFT)


5அவர்கள்தாம், தங்கள் இரட்சகனிடமிருந்துள்ள நேர் வழியின் மீது இருப்பவர்கள். மேலும் அவர்களே தாம் வெற்றி பெறக்கூடியவர்கள். (மன்னர் ஃபஹத் வளாகம் சவூதி) 


6அவர்கள் தாம் தங்கள் ரப்பிடமிருந்து வந்துள்ள நேர்வழியின் மீதுள்ளனர். மேலும் அவர்கள் தாம் வெற்றி பெறுபவர்கள் ஆவர். (முஹம்மது சிராஜுத்தீன் நுாரி)



7இவர்கள் தாம் தங்கள் இறைவனில் நின்றுமுள்ள நேர்வழியில் இருப்பவர்கள். மேலும் இவர்களே வெற்றியாளர்கள் (M.அப்துல் வஹ்ஹாப் M.A.B.Th, K.A. நிஜாமுத்தீன் மன்பயீ,  R.K. அப்துல் காதிர் பாகவி,)



8.இவர்கள்தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் நடை பயில்வோர். இவர்கள்தாம் வெற்றியாளர்கள். (அதிரை ஜமீல்)





Thursday, June 6, 2019

2 : 4 وَالَّذِينَ- வல்லதீ(ரீ)ய்ன- எவர்கள் - يُؤْمِنُونَ- யுஃமினுான - நம்புவார்கள் بِمَا - பிமா- எதை

படியுங்கள் சிந்தியுங்கள் செயல்படுங்கள் பரப்புங்கள்  பயன் பெறுங்கள் சொல்லுக்கு சொல் தமிழ் அரபியுடன்   மொழி பெயர்ப்பு .


வாவுக்கு   மேலும் - இன்னும் - அன்றி  பி க்கு கொண்டும் - மீதும் -யும்  என்றுள்ள 3 வித மொழி பெயர்ப்புகளையும் பிளாக்கரில் மட்டும் தான் கலர் கொடுத்து ஹை லைட் செய்து காட்ட முடிகிறது.  பிளாக்கர் அட்ரஸை பேஸ்புக்கில் போட முடியாது. தடை செய்து விட்டார்கள்.


وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ

வல்லதீ(ரீ)ய்ன யுஃமினுான பிமா உன்ஸில  இலைக வமா உன்ஸில மின் கப்லிக  வ பில் ஆகிறதி ஹும் யூகினுான்

وَ-  வ - மேலும் - இன்னும் - அன்றி

الَّذِينَ-   ல்லதீ(ரீ)ய்ன-     எவர்கள் -  அவர்கள்


يُؤْمِنُونَ யுஃமினுான -  நம்பிக்கை கொள்வார்கள் - நம்புவார்கள்-       விசுவாசம்  கொள்வார்கள்;-   

بِ -  பி -கொண்டு - மீது -யும்

 مَا -  மா-  எதை


 أُنزِلَ-   உன்ஸில-  இறக்கப்பட்ட என்பது நேரடி பொருள்ள  இறை வேதம் என்பதால் கண்ணியத்துடன் - அருளப்பட்ட - இறக்கி அருளப்பட்ட- இறக்கி வைக்கப்பட்ட என மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.



بِمَۤا اُنْزِلَ - பிமா உன்ஸில- இறக்கப்பட்டதைக் கொண்டும் - இறக்கப்பட்டதன் மீதும்


إِلَيْكَ- இலைக - உமக்குஉங்களுக்கு- 

وَ-   வ - இன்னும் - மேலும் - அன்றி


مَا -  மா- எதை


أُنزِلَ- உன்ஸில-  இறக்கப்பட்டது -அருளப்பட்டது - இறக்கி அருளப்பட்ட- இறக்கி வைக்கப்பட்ட


مِن மின் - இருந்து From -லிருந்து

 قَبْلِகப்ல் -முன்னர்


لِكَۚ - லிக  - லக - உமக்கு



قَبْلِكَ -  கப்லிக முன்னர்  உமக்கு  - (உமக்கு முன்னர் )



مِنْ قَبْلِكَۚ -  உமக்கு முன்னரிலிருந்தும்


وَ - வ - இன்னும் - மேலும்,

بِ -  பி -கொண்டு - மீது -யும்

الْآخِرَةِ- ல் ஆகிறதி  நேரடி பொருள்   இறுதி-  கடைசி    என்றாலும்   மறுமையைப் பற்றி கூறும் வசனம் என்பதால் மறுமை என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.    

وَبِالْآخِرَةِ- வ பில் ஆகிறதி இன்னும் ஆகிரத்தை (மறுமையை)-   மறுமையையும்  -   இறுதி நாளைக் கொண்டும்இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும்


هُمْ-  ஹும்- அவர்கள்


يُوقِنُونَ- யூகினுான் - உறுதி கொள்வார்கள் - உறுதியாக நம்புவார்கள்.-    உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். விசுவாசம்  கொள்வார்கள்;-   


தமிழ் நடையில் 3 வித மொழிப்பெயர்ப்புகள் :

 இன்னும்  அவர்கள்  (நபியே!)  உமக்கு  இறக்கப்பட்டதைக்  கொண்டும் உமக்கு  முன்னர்      இறக் கப்பட்டவைகளைக்  கொண்டும்  நம்பிக்கை  கொள்வார்கள்;   இன்னும்  மறுமையை  உறுதியாக  நம்புவார்கள்.


2:4(அன்றி, நபியே!) அவர்கள் உங்களுக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உங்களுக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள்.



மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். 2:4


Saturday, June 1, 2019

2 : 3 الَّذِينَ- அல்லதீ(ரீ)ய்ன - எவர்கள் يُؤْمِنُونَ- யுஃமினுான - நம்பிக்கை கொள்வார்கள்

படியுங்கள் பரப்புங்கள்  பயன் பெறுங்கள் சிந்தியுங்கள் செயல்படுங்கள் வார்த்தைக்கு வார்த்தை தமிழ் அரபியுடன்   மொழி பெயர்ப்பு .  


الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

அல்லதீ(ரீ)ய்ன யுஃமினுான பில்கைபி    யுகீமூன ஸ்ஸலாத வ மிம்மா ரZஸஃக்னா ஹும் யுன்Fபிகூன்




الَّذِينَ-    அல்லதீ(ரீ)ய்ன -  எவர்கள் - அவர்கள்

يُؤْمِنُونَ-      யுஃமினுான -     நம்பிக்கை கொள்வார்கள்   -   நம்புவார்கள்.- நம்புகிறார்கள்.-

بِ - பி - கொண்டு - மீது


 لْغَيْبِ-  ல்கைபி- -   மறைவானது 



 بِالْغَيْبِ - பில்கைபி - மறைவானதைக் கொண்டும் - மறைவானவற்றின் மீதும் - மறைவானதையும்

 وَவ - இன்னும் - மேலும் 

يُقِيمُونَ   -  யுகீமூன  - நிலை நிறுத்துவார்கள்நிலைநாட்டுவார்கள்-நிலைபெறச் செய்கிறார்கள்.நிறைவேற்றுவார்கள்


الصَّلَاةَ-    ஸ்ஸலாத     தொழுகை - 

وَ  இன்னும் - மேலும் 

مِمَّا - மிம்மா - ஒன்றிலிருந்து

وَمِمَّا-  மிம்மா - எதிலிருந்து


رَزَقْنَا -   Zஸஃக்னா  வழங்கினோம் - அளித்தோம் -


هُمْஹும் அவர்கள்


يُنفِقُونَ-      யுன்Fபிகூன் - செலவு செய்வார்கள்.  தர்மம் புரிவார்கள் -(நல்வழியில்) செலவிடுவார்கள்.- 


தமிழ் நடையில் 7 மொழிப்பெயர்ப்புகள் :

1. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். -(PJதொண்டி)




2 (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். ஜான் டிரஸ்ட் 



3.அவர்கள்மறைவானவற்றைக் கொண்டு நம்புவார்கள்தொழுகையை நிலை நாட்டுவார்கள்;  இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவு செய்வார்கள். - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்


4.  அவர்கள்மனிதப்புலன்களுக்கு எட்டாத மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையை முறைப்படிக் கடைப்பிடித்து ஒழுகுவார்கள். மட்டுமின்றிநாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து அறவழியில் செலவும் செய்வார்கள். - (அதிரை ஜமீல்)


5. அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.


6. அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். -இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)

7. அவர்கள் எத்தகையோரென்றால்; மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிறைவேற்றுவார்கள்;நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்கள். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)



https://kamfazlulilahi.blogspot.com/2019/06/2-3.html