Monday, September 2, 2019

2:83 இடத்துக்கு தக்கவாறு பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொல்லும் மொழி பெயர்ப்புகளும்

ஒன்றுக்கு  மேற்பட்ட  வார்த்தைகளை  இணைக்கக் கூடிய   வாவுகள்   இடம்  பெற்ற  வசனங்களில் ஒன்றாக  இந்த 2:83 வசனம் உள்ளது.  இதில் 9 வாவுகள்  இடம் பெற்றுள்ளன. 

https://mdfazlulilahi.blogspot.com/2020/11/283.html

و   

வாவு   இடத்துக்கு தக்கவாறு பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொற்களில் ஒன்றாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளைபெயர்களை இணைக்கக் கூடிய இடங்களில்  ம் என்ற பொருள் தரும்.  இதற்கு உம்மைப் பொருள் என்பார்கள். 


ஒரு வசனத்தின் துவக்கமாகவோ முடிவாகவோ வரும்போது பொருள் தராதுஒரு வசனத்தின் துவக்கம் முடிவு என விளங்கிக் கொள்ள வேண்டும்இது போன்ற  விரிவான   விபரங்களை   2:5 முதல் பல  வசனங்களில் விளக்கி இருக்கிறோம். 


ஒவ்வொரு வாவுக்கு இன்னும் மேலும் என்று மொழி பெயர்த்தே ஆக வேண்டும்.  யாருமே மொழி பெயர்க்காமல் விட்டதில்லை. அப்படி மொழி பெயர்க்காமல் விடுவது யூதக் கொள்கை என்ற கருத்துடையவர்களின் மேலான கவனத்திற்கு. 





இந்த வசனத்தை வார்த்தைக்கு வார்த்தையாக (சொல்லுக்குச் சொல்லாக) மொழி பெயர்த்த உமர் ஷரீப் அவர்கள் 8 இடங்களில் (இ) இன்னும் என்று மொழி பெயர்த்துள்ளார். 


வசன நடையில்  பீ.ஜே.யைப் போல்   ஒரு இடத்தில் கூட இன்னும் என்று மொழி பெயர்க்கவில்லை. அது போல் றஹ்மத்தும் மொழி பெயர்க்கவில்லை. 

ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி,  தாருஸ்ஸலாம் ரியாத் 9க்கு 8 மொழி பெயர்க்கவில்லை .


பஷாரத், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT), அதிரை ஜமீல்,  அல்-மதீனா அல்-முனவ்வரா 9க்கு 7மொழி பெயர்க்கவில்லை.

E.M. அப்துர் ரஹ்மான் நூரிய்யி, ஸலாமத், ஜான் டிரஸ்ட், மலிவு, திரீயெம் 9க்கு 6 மொழி பெயர்க்கவில்லை.


ஒருவர்  மொழி பெயர்த்த வாவுக்கு இன்னாருவர் மொழி பெயர்க்கவில்லை.  

தமிழ் நடையில்  இந்த இடத்தில் இன்னும் என்பது அவசியமில்லை என்று கருதும்போது அவரவர் ஆய்வுக்கு தக்கவாறு மொழி பெயர்க்காமல் விட்டுள்ளார்கள்.


وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّـهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِّنكُمْ وَأَنتُم مُّعْرِضُونَ ﴿٨٣﴾

وَإِذْ வஇ(ர்)து  
போது -சமயம் - நேரம்  

أَخَذْنَا - அகதுனா 
வாங்கினோம்

مِيثَاقَ - மீதாக
உறுதிமொழியை




بَنِي إِسْرَائِيلَ - -  பனீ இஸ்ராயீல  
இஸ்ராயீலின் மக்களிடம் -  (சந்ததிகளிடம் -  வழித் தோன்றல்களிடம் - இஸ்ரேலியர்களிடம்)

لَا - லா 
இல்லை

 تَعْبُدُونَ -தஃபுதுான
நீங்கள் வணங்குங்கள்


لَا تَعْبُدُونَ லா தஃபுதுான 
நீங்கள் வணங்கக் கூடாது - வணங்காதீர்கள் - வழி படாதீர்கள் (நீங்கள் வணங்குவதில்லை)

إِلَّا இல்லா
தவிர

اللَّـهَ - அல்லாஹ் 
அல்லாஹ்வை

وَبِالْوَالِدَيْنِ - வபில் வாலிதைனி  
பெற்றோருக்கும் -

إِحْسَانًا - இஹ்ஸானன் 
நன்மை -  நல்லது

وَذِي الْقُرْبَىٰ வ(ரி)தில் ஃகுர்பா 
உறவினர்கள் ( நேரடி பொருள் இது அருகில் உள்ளது)

وَالْيَتَامَىٰ -  வல் யதாமா
அநாதைகள்

وَالْمَسَاكِينِ -வல் மஸாகீன 
 ஏழைகள் (தேவைப்படுபவர்)

وَقُولُوا வஃகூலுா 
கூறுங்கள் - பேசுங்கள் - சொல்லுங்கள்

لِلنَّاسِ - லின்னாஸி 
மக்களிடம் - மனிதர்களிடம்

حُسْنًا - ஹுஸ்னன் 
அழகியதை

وَأَقِيمُوا வஅஃகீமு 
நிலை நிறுத்துங்கள் - நிலைநாட்டுங்கள் 

الصَّلَاةَ - அஸ்ஸலாத 
தொழுகையை

وَآتُوا - வஆதுா 
கொடுங்கள்

الزَّكَاةَ -  அZஸ்ஸகாத 
ஸகாத்தை

ثُمَّ து(ஸு)ம்ம 
பின்னர் - பிறகு

تَوَلَّيْتُمْ - தவல்லைதும்
திரும்பி விட்டீர்கள்

إِلَّا - இல்லா 
தவிர

قَلِيلًا - ஃகலீலன் 
குறைவானவர்கள் (சிறிய -சிலர்)

مِّنكُمْ -மின்கும் 
 உங்களில்

وَأَنتُم -  வஅன்தும் 
நீங்களோ 

مُّعْرِضُونَ -முஃறிலுான
 புறக்கணிப்பவர்கள்

 தமிழ் நடையில் மொழிப்பெயர்ப்புகள். :


"அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஜகாத்தையும் கொடுக்க வேண்டும்'' என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதிமொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள். -(PJதொண்டி)


நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள்பொற்றோருக்கும்உறவினர்களுக்கும்அநாதைகளுக்கும்,  ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்மக்களிடம் அழகியதைக் கூறுங்கள்தொழுகையை நிலை நிறுத்துங்கள்ஸகாத்தை கொடுங்கள் என்று இஸ்ராயீலுடைய சந்ததிகளின் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுங்கள் பிறகு உங்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள் இந்த உறுதிமொழியிலிருந்து) திரும்பிவிட்டீர்கள். நீங்களோ புறக்கணிப்பவர்கள்  -K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்


இன்னும், நாம் இஸ்ராயீல் மக்களிடத்தில், "அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது; பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகுறப் பேசுங்கள். மேலும் தொழுகையை முறைப்படிக் கடைப்பிடித்து ஒழுகுங்கள்; ஸக்காத்தையும் கணக்கிட்டுச் செலுத்தி விடுங்கள்" என்று உறுதிமொழி பெற்றோம் (என்பதையும் நினைத்துப் பாருங்கள்). ஆனால், (அந்த உறுதி மொழியிலிருந்து) உங்களி(ன் முன்னோர்களி)ல் சிலரைத் தவிர அனைவரும் மாறி விட்டார்கள். இப்போது நீங்களும் புறக்கணிப்பவர்களாகவே இருக்கின்றீர்கள். - (அதிரை ஜமீல்)


இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். - ஜான் டிரஸ்ட்

 

மேலும், (நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் "நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள். தாய், தந்தைக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள். அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (அழகிய வார்த்தை சொல்லுங்கள்). தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்து (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள்" என்று நாம் வாக்குறுதி வாங்கியபொழுது உங்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். (எப்பொழுதும், இவ்வாறே) நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கின்றீர்கள். -(ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

இன்னும் நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் இவ்வாறு உறுதியான வாக்குமூலம் வாங்கியதை நினைத்துப் பாருங்கள்; “அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வழிபடாதீர்கள்; (உங்களுடைய) பெற்றோர்கள், உறவினர்கள், அநாதைகள், மிஸ்கீன் (வறியவர்)கள் ஆகியோருடன் நற்பண்போடு நடந்து கொள்ளுங்கள்; மனிதர்களிடம் நல்லனவற்றைப் பேசுங்கள். மேலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். ஜகாத் கொடுத்து வாருங்கள்.” ஆனால் உங்களில் சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் (அந்த வாக்குறுதியைப்) புறக்கணித்து விட்டீர்கள். இப்பொழுதும்கூட (அதனைப்) புறக்கணித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.- (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

மேலும், இஸ்ராயீலின் மக்களிடம் “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறு எதனையும்) வணங்காதீர்கள்; பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் உபகாரம் செய்யுங்கள்; இன்னும் மனிதர்களுக்கு அழகானதைச் சொல்லுங்கள; தொழுகையையும் நிறைவேற்றுங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள்” என்று நாம் வாக்குறுதி வாங்கியதையும் (நினைத்துப்பாருங்கள்), பின்னர், உங்களில் சொற்பமானவர்களைத் தவிர நீங்கள் புறக்கணித்தவர்களாக முகம் திருப்பி(மாறி)விட்டீர்கள்.-(அல்-மதீனா அல்-முனவ்வரா)


Sunday, September 1, 2019

2:82 ஜும்ல இஸ்மிய்ய வாக வந்துள்ள அஸ்ஹாபுல் ஜன்னதி

இந்த வசனத்தில் இன்ன அன்ன போன்ற தஃகீது  உடைய ஹர்புகள் இடம் பெறவில்லை. இருந்தாலும்  

جملة اسمية

ஜும்ல இஸ்மிய்ய வாக  (எழுவாய் பயனிலை கொண்ட வாசகம்) இடம் பெற்றுள்ளது.  ஜும்ல இஸ்மிய்ய வரும்போது அரபு இலக்கணப்படி அதற்குள் தஃகீது  உடைய பொருள்  இருக்கும். 

ஆகவே இந்தக் கருத்துடையவர்கள் சிலர்.  சுவர்க்கவாசிகளே! அத்தகையோர் தாம் அவர்கள் தான் என்று  மொழி பெயர்த்து  உள்ளார்கள்.  

சொர்க்கவாசிகள் என்பதே உறுதி படுத்தும் சொல்தான் என்ற கருத்துடையவர்கள்  களே! - தாம்  - தான்  இன்றி  மொழி பெயர்த்துள்ளார்கள்.

இந்த 2:82 வசனத்தில் வல்ல(ரீ)தீன    என்ற   வார்த்தையில் ஒரு  வாவும்.

வஅமிலுா  என்ற  வார்த்தையில் ஒரு  வாவும் ஆக 2  வாவுகள் இடம் பெற்றுள்ளன. 

வேதத்தை சுமந்துள்ளவர்கள் கொள்கைப்படி வாவுக்கு  இன்னும் / மேலும்  என்று மொழி பெயர்த்தாக வேண்டும். ஆனால்,  இந்த வசனத்தில் இரண்டு வாவுக்கும் 

1. ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி

2. உமர் ஷரீப்

3. ஜான் டிரஸ்ட் 

4. ஸலாமத்

5.திரீயெம்

6. மலிவு பதிப்பு

7.K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி

8.அதிரை ஜமீல்

9.றஹ்மத்

10.தாருஸ்ஸலாம், ரியாத்


ஆகியோர் இரண்டு வாவுக்கும்  மொழி பெயர்க்கவில்லை. குறிப்பாக உமர் ஷரீப் சொல்லுக்கு சொல்லில் 2  வாவுக்கு இ(ன்னும்) என்று மொழி பெயர்த்தவர்  வசன நடையில் இன்னும் என்று மொழி பெயர்க்கவில்லை.


----


1. அன்வாறுல் குர்ஆன் E.M. அப்துர் ரஹ்மான், நூரிய்யி, பாஜில் பாகவி

  2. பஷாரத்

3.இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

4.மதீனா அல்-முனவ்வரா

ஆகியோர் ஒரு வாவுக்கு  மொழி பெயர்க்கவில்லை.  


வாவுக்கு  இன்னும் / மேலும்  என்று யாருமே மொழி பெயர்க்காமல் விட்டதில்லை  என்றவர்கள்  கவனத்திற்காக மீண்டும் பதிகிறோம். 



وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَـٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ ﴿٨٢﴾

وَالَّذِينَ -  வல்ல(ரீ)தீன 
எவர்(கள்)

آمَنُوا -ஆமனுா 
 நம்பிக்கை கொண்டார்கள்

وَعَمِلُوا - வஅமிலுா 
செய்தார்கள்

الصَّالِحَاتِ - அஸ்ஸாலிஹாத்தி 
நல்லறங்கள் - நற்காரியங்கள் - நற் செயல்கள் (நல்ல வேலைகள்)

أُولَـٰئِكَ உலாஃயிக  
அவர்கள்

أَصْحَابُ الْجَنَّةِ அஸ்ஹாபுல் ஜன்னதி 
சொர்க்கவாசிகள் (சொர்க்கத்தின் தோழர்கள்)

هُمْ فِيهَا - ஹும்Fபீஹா 
அதில் அவர்கள் (அவர்கள் அதில் இருக்கிறார்கள்)

خَالِدُونَ - காலிதுான
நிரந்தரமானவர்கள் (அழியாதவர்கள்)

தமிழ் நடையில் மொழிப்பெயர்ப்புகள் :

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். -  பீ.ஜே.

நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்பவர்கள் சுவனத்திற்குரியவர்கள். அவர்கள் அங்கு என்றென்றும் வாழ்ந்திருப்பர். -  (அதிரை ஜமீல்)

 

எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள். - ஜான் டிரஸ்ட் 



எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்காரியங்களைச் செய்தார்களோ அவர்கள் சொர்க்கவாசிகள் ! அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள் -K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்

ஆனால் எவர்கள் (இவ்வேதத்தை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்காரியங்களைச் செய்கிறார்களோ அவர்கள் சுவர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.-( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

இன்னும் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்கள் சுவனவாசிகள்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள்.- (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

இன்னும் விசுவாசங்கொண்டு நற்காரியங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் _ அவர்கள் சுவனவாசிகள்; அதில் அவர்கள் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள். (அல்-மதீனா அல்-முனவ்வரா)