Thursday, June 6, 2019

2 : 4 وَالَّذِينَ- வல்லதீ(ரீ)ய்ன- எவர்கள் - يُؤْمِنُونَ- யுஃமினுான - நம்புவார்கள் بِمَا - பிமா- எதை

படியுங்கள் சிந்தியுங்கள் செயல்படுங்கள் பரப்புங்கள்  பயன் பெறுங்கள் சொல்லுக்கு சொல் தமிழ் அரபியுடன்   மொழி பெயர்ப்பு .


வாவுக்கு   மேலும் - இன்னும் - அன்றி  பி க்கு கொண்டும் - மீதும் -யும்  என்றுள்ள 3 வித மொழி பெயர்ப்புகளையும் பிளாக்கரில் மட்டும் தான் கலர் கொடுத்து ஹை லைட் செய்து காட்ட முடிகிறது.  பிளாக்கர் அட்ரஸை பேஸ்புக்கில் போட முடியாது. தடை செய்து விட்டார்கள்.


وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ

வல்லதீ(ரீ)ய்ன யுஃமினுான பிமா உன்ஸில  இலைக வமா உன்ஸில மின் கப்லிக  வ பில் ஆகிறதி ஹும் யூகினுான்

وَ-  வ - மேலும் - இன்னும் - அன்றி

الَّذِينَ-   ல்லதீ(ரீ)ய்ன-     எவர்கள் -  அவர்கள்


يُؤْمِنُونَ யுஃமினுான -  நம்பிக்கை கொள்வார்கள் - நம்புவார்கள்-       விசுவாசம்  கொள்வார்கள்;-   

بِ -  பி -கொண்டு - மீது -யும்

 مَا -  மா-  எதை


 أُنزِلَ-   உன்ஸில-  இறக்கப்பட்ட என்பது நேரடி பொருள்ள  இறை வேதம் என்பதால் கண்ணியத்துடன் - அருளப்பட்ட - இறக்கி அருளப்பட்ட- இறக்கி வைக்கப்பட்ட என மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.



بِمَۤا اُنْزِلَ - பிமா உன்ஸில- இறக்கப்பட்டதைக் கொண்டும் - இறக்கப்பட்டதன் மீதும்


إِلَيْكَ- இலைக - உமக்குஉங்களுக்கு- 

وَ-   வ - இன்னும் - மேலும் - அன்றி


مَا -  மா- எதை


أُنزِلَ- உன்ஸில-  இறக்கப்பட்டது -அருளப்பட்டது - இறக்கி அருளப்பட்ட- இறக்கி வைக்கப்பட்ட


مِن மின் - இருந்து From -லிருந்து

 قَبْلِகப்ல் -முன்னர்


لِكَۚ - லிக  - லக - உமக்கு



قَبْلِكَ -  கப்லிக முன்னர்  உமக்கு  - (உமக்கு முன்னர் )



مِنْ قَبْلِكَۚ -  உமக்கு முன்னரிலிருந்தும்


وَ - வ - இன்னும் - மேலும்,

بِ -  பி -கொண்டு - மீது -யும்

الْآخِرَةِ- ல் ஆகிறதி  நேரடி பொருள்   இறுதி-  கடைசி    என்றாலும்   மறுமையைப் பற்றி கூறும் வசனம் என்பதால் மறுமை என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.    

وَبِالْآخِرَةِ- வ பில் ஆகிறதி இன்னும் ஆகிரத்தை (மறுமையை)-   மறுமையையும்  -   இறுதி நாளைக் கொண்டும்இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும்


هُمْ-  ஹும்- அவர்கள்


يُوقِنُونَ- யூகினுான் - உறுதி கொள்வார்கள் - உறுதியாக நம்புவார்கள்.-    உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். விசுவாசம்  கொள்வார்கள்;-   


தமிழ் நடையில் 3 வித மொழிப்பெயர்ப்புகள் :

 இன்னும்  அவர்கள்  (நபியே!)  உமக்கு  இறக்கப்பட்டதைக்  கொண்டும் உமக்கு  முன்னர்      இறக் கப்பட்டவைகளைக்  கொண்டும்  நம்பிக்கை  கொள்வார்கள்;   இன்னும்  மறுமையை  உறுதியாக  நம்புவார்கள்.


2:4(அன்றி, நபியே!) அவர்கள் உங்களுக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உங்களுக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள்.



மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். 2:4


Saturday, June 1, 2019

2 : 3 الَّذِينَ- அல்லதீ(ரீ)ய்ன - எவர்கள் يُؤْمِنُونَ- யுஃமினுான - நம்பிக்கை கொள்வார்கள்

படியுங்கள் பரப்புங்கள்  பயன் பெறுங்கள் சிந்தியுங்கள் செயல்படுங்கள் வார்த்தைக்கு வார்த்தை தமிழ் அரபியுடன்   மொழி பெயர்ப்பு .  


الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

அல்லதீ(ரீ)ய்ன யுஃமினுான பில்கைபி    யுகீமூன ஸ்ஸலாத வ மிம்மா ரZஸஃக்னா ஹும் யுன்Fபிகூன்




الَّذِينَ-    அல்லதீ(ரீ)ய்ன -  எவர்கள் - அவர்கள்

يُؤْمِنُونَ-      யுஃமினுான -     நம்பிக்கை கொள்வார்கள்   -   நம்புவார்கள்.- நம்புகிறார்கள்.-

بِ - பி - கொண்டு - மீது


 لْغَيْبِ-  ல்கைபி- -   மறைவானது 



 بِالْغَيْبِ - பில்கைபி - மறைவானதைக் கொண்டும் - மறைவானவற்றின் மீதும் - மறைவானதையும்

 وَவ - இன்னும் - மேலும் 

يُقِيمُونَ   -  யுகீமூன  - நிலை நிறுத்துவார்கள்நிலைநாட்டுவார்கள்-நிலைபெறச் செய்கிறார்கள்.நிறைவேற்றுவார்கள்


الصَّلَاةَ-    ஸ்ஸலாத     தொழுகை - 

وَ  இன்னும் - மேலும் 

مِمَّا - மிம்மா - ஒன்றிலிருந்து

وَمِمَّا-  மிம்மா - எதிலிருந்து


رَزَقْنَا -   Zஸஃக்னா  வழங்கினோம் - அளித்தோம் -


هُمْஹும் அவர்கள்


يُنفِقُونَ-      யுன்Fபிகூன் - செலவு செய்வார்கள்.  தர்மம் புரிவார்கள் -(நல்வழியில்) செலவிடுவார்கள்.- 


தமிழ் நடையில் 7 மொழிப்பெயர்ப்புகள் :

1. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். -(PJதொண்டி)




2 (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். ஜான் டிரஸ்ட் 



3.அவர்கள்மறைவானவற்றைக் கொண்டு நம்புவார்கள்தொழுகையை நிலை நாட்டுவார்கள்;  இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவு செய்வார்கள். - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்


4.  அவர்கள்மனிதப்புலன்களுக்கு எட்டாத மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையை முறைப்படிக் கடைப்பிடித்து ஒழுகுவார்கள். மட்டுமின்றிநாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து அறவழியில் செலவும் செய்வார்கள். - (அதிரை ஜமீல்)


5. அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.


6. அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். -இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)

7. அவர்கள் எத்தகையோரென்றால்; மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிறைவேற்றுவார்கள்;நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்கள். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)



https://kamfazlulilahi.blogspot.com/2019/06/2-3.html

Friday, January 16, 2015

2 : 1-2 الٓمّٓۚ‏  - அலிFப், லாம், மீம் -ذَٰلِكَ - தா ( ரா)லிக - அது لْكِتَابُ - ல் கிதாபு - வேதம்

அத்தியாயம் : அல் பகரா

மொத்த வசனங்கள் : 286

அல் பகரா - அந்த மாடு

திருக்குர்ஆனில் மிகப் பெரிய அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தில் 67வது வசனம் முதல் 71வது வசனம் வரை மாட்டுடன் தொடர்புடைய அதிசய நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இடம் பெற்றதன் காரணமாக "அந்த மாடு' என்ற பெயர் இந்த அத்தியாயத்துக்கு வந்தது.

காளை, பசு இரண்டையும் இச்சொல் குறித்தாலும், பெயர் வரக் காரணமான 67 முதல் 71 வரை உள்ள வசனங்களைக் கவனித்தால் காளையையே குறிக்கிறது என அறியலாம். (நன்றி பீ.ஜே. தர்ஜமா)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. அலிஃப், லாம், மீம்.2


வார்த்தைக்கு வார்த்தை தமிழ் அரபியுடன்   மொழி பெயர்ப்பு . படியுங்கள் பரப்புங்கள் பயன் பெறுங்கள்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

 الٓمّٓۚ‏  -   (அலிFப், லாம், மீம்)

 ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ‏ 
தா(ரா)லிகல் கிதாபு  லா ரய்ப பீஹி ஹுதன்ல் லில்முத்தகீன்

இனி வார்த்தைக்கு வார்த்தை பொருள் பார்ப்போம்.



இதற்கென்று பொருள் ஏதும் இல்லை, இந்த மூன்றில் ஒவ்வொன்றும்   ஒவ்வொரு எழுத்தின் பெயர் ஆகும்


ذَٰلِكَ  -   தா(ரா)லிக - 
அது - இது - இந்த -அது உங்களுக்கானது


لْكِتَابُ  -   ல் கிதாபு -  
வேதம் - இறை மறை - புத்தகம்


لَ -لأ -  லாஇல்லை - 


رَيْبَ  -   ரய்ப  - சந்தேகம்



لَا رَيْبَலா ரய்ப 
அறவே இல்லை / சந்தேகம்

فِيهِ  -  பீஹி - இதில் 


هُدًى  - ஹுதன் - நேர் வழி 

لِّلْمُتَّقِينَ  -  ல்லில்முத்தகீன -(இறைவனை)அஞ்சுவோருக்கு -  பயபக்தியுடையோருக்கு-   இறை அச்சம் உடையவர்களுக்கு- 


தமிழ் நடையில்  ஏழு  மொழி பெயர்ப்புகள்

1. இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.  - P. ஜைனுல் ஆபிதீன், தொண்டி 


2. இதுதான் வேதநூல். இதில் சந்தேகமேயில்லை. இறை அச்சம் உடையவர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும் -  ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)


3,4 இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்இதில் எத்தகைய சந்தேகமும் இல்லைபயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். -( ஜான் டிரஸ்ட் - K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்)


5. இஃது இறைமறை; இதில் எவ்வித ஐயமுமில்லை. இறையச்சம் உடையோருக்கு இது நேர்வழிகாட்டியாகும். -(அதிரை ஜமீல்)


6. இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும்.  - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

7. இது வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமுமில்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர் வழி காட்டியாகும். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)





சிந்தியுங்கள் செயல்படுங்கள்