Monday, July 29, 2019

2:48.தர்ஜமா பணியில் தங்களை அர்ப்பணித்தவர்கள் நிலை எது?

மொழி பெயர்ப்பு துறையில்  ஈடுபாடு இல்லாதவர்கள் நிலை எது?

ஒரு வசனத்தைப் பற்றி எழுதும் போது அது போன்ற வசனங்கள் எங்கு எங்கு உள்ளன என்று சுட்டிக் காட்டி எழுதினால் தான் தப்ஸீர்.  உங்கள் எழுத்து அந்த மாதிரி இல்லை என்ற விமர்சனம் உள்ளது.

நாம் தப்ஸீர் எழுதுவதாக சொல்லவில்லை.  வார்த்தைக்கு வார்த்தையுடன் படிப்பவர்கள் ஒப்பீடு செய்து பார்ப்பதற்காக நம்மிடம் உள்ள 15 வித மொழி பெயர்ப்புகளை இடம் பெறச் செய்து வருகிறோம்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/248.html


மேலும் எல்லோரும் எழுதியதையே எழுதுவதை விட எழுதப்படாததை, மக்களுக்கு புரிய வைக்கப்படாததை புரிய வைப்பதே சிறந்தது. என்ற அடிப்படையில் எழுதி வருகிறோம்.  அந்த அடிப்படையில் வாவு பற்றி 2:38. 2:5. ஆகிய வசனங்களின்  வார்த்தைக்கு வார்த்தையில்  விளக்கம் எழுதி  இருந்தோம்.  

“வா”வுக்கு 1.இன்னம்2.இன்னும், 3.மேலும், 4.பின்னர், 5.பின்பு, 6.அன்றி . இந்த ஆறில் ஒன்றை மொழி பெயர்த்தே ஆக வேண்டும் என்பதே மொழி பெயர்ப்பு துறையில்  ஈடுபாடு இல்லாதவர்கள் நிலையாக உள்ளது. 

தர்ஜமா பணியில் தங்களை அர்ப்பணித்தவர்கள் நிலை அதுவல்ல என்பதற்கு ஒவ்வொருவரது தர்ஜமாக்களும் சான்றாக உள்ளன. 
  

இந்த (2:48) வசனத்திலும்  நான்கு இடங்களில் வாவு  இடம் பெற்றுள்ளன. அந்த நான்கிலும் சொல்லுக்கு சொல்லாக மொழி பெயர்த்த  உமர் ஷரீஃப் காஸிமி  அவர்கள்

 وَاتَّقُوْا வத்தஃகூ -  
இன்னும்அஞ்சுங்கள் )

وَلَا يُقْبَلُ - வலாயுஃக்பலு -

இன்னும் ஏற்கப்படாது

وَلَا يُؤْخَذُ  -வலாயுஃவ்ஃக(ரு)து
இன்னும் வாங்கப்படாது

 وَلَا هُمْ يُنصَرُونَ - வலாஹும் யுன்ஸரூ(ன)ன்.

இன்னும் அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள். 

இவ்வாறு   தனித் தனியாக மொழி பெயர்ப்பு செய்யும் போது வாவுக்கு இன்னும் என்று நான்கு இடங்களிலும் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். இதை இணைப்பில் காண்கிறீர்கள்.  

வசன நடை என வரும்போது நான்கு இடங்களிலும் வாவுக்கு இன்னும் என்றோ இன்னம் என்றோ மொழி பெயர்க்கவில்லை. இதையும் இணைப்பில் காண்கிறீர்கள். 
(இ) என்றால் இன்னும்  என்ற விளக்கம் அவரே வெளியிட்டுள்ளது இணைப்பில் உள்ளது. 
و   வாவு   இடத்துக்கு தக்கவாறு பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொற்களில் ஒன்று. ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளைபெயர்களை இணைக்கக் கூடிய இடங்களில்  ம் என்ற பொருள் தரும். ஒரு வசனத்தின் இடையில்  வரும்போது    இன்னும் மேலும் போன்ற பொருள் தரும்.
ஒரு வசனத்தின் துவக்கமாகவோ முடிவாகவோ வரும்போது பொருள் தராதுஒரு வசனத்தின் துவக்கம் முடிவு என விளங்கிக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு முன்பு எழுதிய இவற்றை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறோம். 

இனி வார்த்தைக்கு வார்த்தை தமிழ் மொழியாக்கம்

 وَاتَّقُوْا வத்தஃகூ

அஞ்சுங்கள் - அஞ்சிக் கொள்ளுங்கள் - பயந்து கொள்ளுங்கள் (இந்த வார்த்தைகளிலேயே நீங்கள் என்பதும் அடங்கி இருக்கிறது) 

يَوْمًا -  யவ்மன் 
நாளை - நாள் - ஒரு நாளை

(அரபு மொழியில் யவ்ம் (நாள்) என்றாலே ஒரு நாளைத்தான் குறிக்கும். வாஹித் யவ்ம் என்று சொல்லும் வழக்கு அரபு மொழியில் இல்லை. 
 வாஹித் என்றால் ஒன்று என்று எல்லாரும் அறிந்தது தான்)

لَا تَجْزِي -  லாதஜ்Zஸீ 
னளிக்காது - பனளிக்காது - உதவாது - பயன்படாது

نَفْسٌ நFப்ஸுன்
ஒருவர் - ஓர் ஆன்மா (ஆத்மா)

عَن نَّفْسٍ ஃஅன்நFப்ஸின்  
இன்னொருவருக்கு - மற்றவருக்கு - ஓர் ஆன்மா(ஆத்மா)வுக்கு

شَيْئًا -  ஷய்ஃஅ 
ஏதாவது - எதனையாவது - ஏதேனும் - எதையேனும்

وَلَا يُقْبَلُ - வலாயுஃக்பலு 

ஏற்கப்படாது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது

مِنْهَا - மின்ஹா 
அதனிடமிருந்து - அதற்காக - அதிலிருந்து

شَفَاعَةٌ - ஷபாஅதுன்  
பரிந்துரை - சிபாரிசு

 وَلَا يُؤْخَذُ  -வலாயுஃவ்ஃக(ரு)து
பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது - எடுக்கப்பட மாட்டாது - வாங்கப்படாது

مِنْهَا - மின்ஹா 

அதனிடமிருந்து - அதற்காக - அதிலிருந்து

عَدْلٌ ஃஅத்லுன் 

ஈடு - பதிலீடு - பரிகாரம் - பிணை

 وَلَا هُمْ يُنصَرُونَ - வலாஹும் யுன்ஸரூ(ன)ன்.

அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள் - 

وَاتَّقُوا يَوْمًا لَّا تَجْزِي نَفْسٌ عَن نَّفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ 

வத்தஃகூ  யவ்மன்  லாதஜ்Zஸீ   Fப்ஸுன் ஃஅன்நFப்ஸின் ஷய்ஃஅ லாயுஃக்பலு  மின்ஹா ஷபாஅதுன்  லாயுஃவ்ஃக(ரு)து மின்ஹா    ஃஅத்லுன்  வலாஹும் யுன்ஸரூ()ன்.

மொழிப்பெயர்ப்புகள் :

ஒருவர் மற்றவர்க்குக் கிஞ்சிற்றும் உதவ முடியாத (அந்த மறுமை) நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்! (அந்நாளில் குற்றவாளிகளுக்காக) எவ்விதப் பரிந்துரையும் எந்த ஈட்டுப் பொருளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் கிஞ்சிற்றும் உதவி செய்யப்பட மாட்டார்கள். -(அதிரை ஜமீல்)

ஒருவர் இன்னொருவருக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத நாளை1 அஞ்சுங்கள்! (அந்நாளில்) எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்கப்படாது.17 எவரிடமிருந்தும் எந்த ஈடும் பெற்றுக் கொள்ளப்படாது. அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். -(PJதொண்டி)


இன்னும், ஒருவர் மற்றவருக்கு பயனளிக்க முடியாத நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதுஅதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாதுஅன்றியும் அவர்கள் உதவி செய்யப்படவும்மாட்டார்கள் - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார்)

இன்னும், ஒர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். -(ஜான் டிரஸ்ட்)

நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள்: (அந்நாளில்) எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் யாதொன்றையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்க மாட்டாது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அன்றி, அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள். - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்) 


மேலும் ஒரு நாளை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்நாளில்) எவரும் மற்றவர்க்கு எதையும் கொடுத்து உதவ முடியாது. எவரிடமிருந்தும் எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது. எவரிடமிருந்தும் மீட்புப் பணம் பெறப்பட்டு, எவரும் விடுதலை செய்யப்படவும் மாட்டார்கள். (குற்றவாளிகளான) அவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது. - இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)

மேலும், நீங்கள் ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள், (அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவுக்கு எவ்விதப் பயனுமளிக்காது; அதனிடமிருந்து பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதனிடமிருந்து யாதொரு ஈட்டையும் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது; அவர்கள் (மற்றவர்களால்) உதவியும் செய்யப்படமாட்டார்கள். - (அல்-மதீனா அல்-முனவ்வரா)


Sunday, July 28, 2019

2:47 அரபிகள் சொல்லும் Fபழ்ழல் இதுவா? வேறா?


இந்த வசனத்தில் இரண்டு இடத்தில் عَلَى -அலா  என்ற இடை(துணை)ச் சொல் இடம் பெற்றுள்ளது. இது தனியாக பொருள் தராது. அடுத்து வரும் சொற்களை வைத்தே  மீது - மேல் - மேலே  - க்கு விட என பொருள் தரும். 


இதில் இடம் பெற்றுள்ள முதல் அலாவுக்கு மீது - க்கு ஆகிய இடை(துணை)ச் சொற்களை பயன்படுத்தி உங்களுக்கு - உங்கள் மீது என பொருத்தமாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள்.

இரண்டாவது இடம் பெற்றுள்ள  அலாவில் விட என்ற இடை(துணை)ச் சொல்லை பயன்படுத்தி அகிலத்தாரை விட,  உலக   மக்கள்  அனைவரையும் விட என பொருத்தமாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 

https://mdfazlulilahi.blogspot.com/2020/06/247-f.html


விட என்ற இடத்தில் க்கு, மீது என்றோ. 

க்கு, மீது என்று இணைக்க வேண்டிய இடத்தில் விட என்றோ இணைத்தால் என்ன ஆகும்?  இது போன்றவற்றை கவனத்தில் கொண்டு சிந்தித்து ஆய்வுவுடன் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும். 

இதில் “உர்குரூ” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதற்கு 2:198. 2:200. 2:203. போன்ற வசனங்களில் திக்ரு(தியானம்)செய்யுங்கள்; - நினையுங்கள் - நினைவு கூருங்கள் என்பவை பொருத்தமான வார்த்தைகள். 

2:47.ல் இடம் பெற்றுள்ள “உர்குரூ” வுக்கு  எண்ணிப்பாருங்கள்! - நினைத்துப் பாருங்கள் - நினைவு கூருங்கள் - நினைவில் கொள்ளுங்கள் என்று மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். இவற்றில் எது பொருத்தமானது என்பதை சிந்தித்து - ஆய்ந்து படியுங்கள்.


அடுத்து இதில் இடம் பெற்றுள்ள பிரபல்யமான வார்த்தை. சர்ச்சையாகி வாதப் பிரதிவாதங்கள் நடந்த வார்த்தை. “இன்ன“ “அன்ன“ என்பதிலிருந்து உள்ள அன்னீ  என்ற தஃகீத் வார்த்தை. இதற்கு பெரும்பாலானவர்கள் நிச்சயமாக என்று தமிழாக்கம் தந்து இருந்தார்கள். நிச்சயமாக என்று மொழி பெயர்க்காதவர் யூத கைக் கூலி என்று விமர்சிக்கப்பட்டார்.  அது 2020 பிப்வரி 5 தேதிய நமது பிளாக்கரில் உள்ளது
https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post.html

இன்ன“ “அன்ன“  என்பது இடை(துணை)ச் சொல். இடைச் சொற்களுக்கு அது போன்ற இடைச் சொல்லாகத் தான் பொருள் செய்ய வேண்டும். 

விட - மீது போன்ற  இடைச் சொல் என்றால் அதை தனியாகக் கூறினால் அர்த்தம் இருக்காது. இன்னொரு சொல்லுடன் சேர்த்தால் தான் அர்த்தம் தரும்.  அதை  இதில்  இடம்  பெற்றுள்ள அலா  என்ற  இடைச் சொல் மூலமும் அறிந்தோம்.  அது மாதிரிதான்  “இன்ன” “அன்ன“  போன்ற தஃகீத் சொற்கள். 

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள அன்னீ  என்ற தஃகீத் சொல்லுக்கு 

1.ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி

2.ஜான் டிரஸ்ட்,

3.ஸலாமத்,

4.றஹ்மத்,

5.IFT,  

6.தாருஸ்ஸலாம்-  ரியாத், 

7.K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, 

8.அதிரை ஜமீல், 
ஆகியோர்  நிச்சயமாக என்று மொழி பெயர்ப்பு செய்யவில்லை. இது போல்தான் பஷாரத், திரீயெம், தாருல் ஹுதா. அல்-மதீனா அல்-முனவ்வரா, மலிவு உட்பட எல்லா பதிப்புகளும் பல இடங்களில் மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்பதை ஆதாரத்துடன்  வெளியிட்டு இருக்கிறோம். கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.  https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post.html

மேலும்  இந்த வசனத்தில் Fபழ்ழல் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இது அரபிகள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை போல் உள்ளது.  அரபிகள் சொல்லும் வார்த்தையின் சரியான  (அசல் -ஒரிஜினல்) சொல் தFபழ்ழல் என்பது தான். எளிதாக இருப்பதற்காக முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் நீக்கி (போக்கி) விட்டு பேசுவது படிப்பது அரபு மொழி வழக்கில் இருக்கின்றது.

இந்த வசனத்தில் உள்ள Fபழ்ழல் என்பதும் Fபழ்ழல் என்பதும் ஒரே வேர்ச் சொல்லில் இருந்து வந்தது தான். இதில் உள்ள  ض “ழாத்”தை அரபிகளல்லாத நாம் உச்சரிப்பதற்கும் அரபிகள் உச்சரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அரபிகள் சொல்லும் போது ரொம்ப மெல்லியதாக த வும் சேர்ந்து (கலந்து) வரும். Fபத்தல் என்பது போல் இருக்கும்.

ஒருவர் வந்தால்  வாருங்கள் என வரவேற்கவும் தFபழ்ழல் (தFபத்தல்) என்பார்கள். 

வந்தவர் ஏதாவது சொல்ல வந்தால் தFபழ்ழல் என்பார்கள். 

வந்தவரை உட்கார சொல்லவும் தFபழ்ழல்  என்பார்கள். 

சாப்பிடும் போது போனால் சாப்பிட வாருங்கள் என்பதற்கும் தFபழ்ழல் என்பார்கள். 

பேப்பரை கொடுத்து எழுதச் சொல்லும் போதும்Fபழ்ழல் என்பார்கள். 

வார்த்தை ஒன்றுதான் விரும்புகிறேன். மேன்மைப்படுத்தினேன், சிறப்பித்தேன், கண்ணியப்படுத்தினேன், வரவேற்கிறேன், சாப்பிடுங்கள், எழுதுங்கள் என்று இடத்திற்கு தக்கவாறு பொருள் தரும். இது போன்றவற்றை புரிந்து கொண்டு குர்ஆன் தமிழாக்கங்களை படிக்க வேண்டும


இனி வார்த்தைக்கு வார்த்தை

يَا بَنِي யா பனீ
மக்களே! - சந்ததிகளே - சந்ததியினரே - வழித் தோன்றல்களே 

إِسْرَائِيلَ இஸ்ராஃயீல 
இஸ்ராயீலின் 

اذْكُرُواஉர்குரூ
எண்ணிப்பாருங்கள்! - நினைத்துப் பாருங்கள்- நினைவு கூருங்கள் - நினைவில் கொள்ளுங்கள்
نِعْمَتِ நிஃமதி 
அருட்கொடை - அருள்

يَ  
என்னுடைய - என் 

الَّتِي -அல்லதீ 
அப்படிபட்ட -  எது - எப்படிப்பட்ட
أَنْعَمْتُ அன் ஃஅம்து 
நான் அளித்தேன் - வழங்கினேன் - அருள் புரிந்தேன்

عَلَى- அலா 
 மீது - மேல் - மேலே  - க்கு விட


كُمْ -கும் 
உங்கள்


عَلَيْكُمْ ஃஅலைக்கும்  

உங்களுக்கு - உங்கள் மீது 

 وَاَنِّىْ அன்னீ 
நான்

فَضَّلْتُ Fபழ்ழல்து 
மேன்மைப்படுத்தினேன் - சிறப்பித்தேன்- கண்ணியப்படுத்தினேன்

كُمْ -கும் 
உங்களை

عَلَى-அலா 
விட - மீது - மேல் - க்கு

الْعَالَمِينَ- அல்ஃஆலமீ(ன)ன்
உலக மக்கள் - உலகத்தார் - உலகோர் - உலக மாந்தர் - அகிலத்தார்


   يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ

யா பனீ  இஸ்ராஃயீல உர்குரூ நிஃமதி யல்லதீ அன் ஃஅம்து  ஃஅலைக்கும்  அன்னீ  Fபழ்ழல்துகும் அலல்ஃஆலமீ()ன் 


இஸ்ராயீல் மக்களே! நான் உங்களுக்கு அளித்திருந்த என்னுடைய அருட்கொடையையும் உலக மாந்தர் யாவரையும்விட உங்களை நான் சிறப்பித்திருந்தேன் என்பதையும் நினைத்துப் பாருங்கள். -(அதிரை ஜமீல்)

இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!16 - (P. ஜைனுல் ஆபிதீன் உலவி, தொண்டி)

இஸ்ராயீலின் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். -(K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதிகடையநல்லுார், - டாக்டர். முஹம்மது ஜான்)

இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும்விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள். ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்

இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் உங்களுக்கு வழங்கியிருந்த என் அருட்கொடையையும் உங்களை நான் உலகத்தோர் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவுகூருங்கள். - இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)
இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய அருட்கொடையையும், அகிலத்தாரைவிட உங்களை நிச்சயமாக நான் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவு கூறுங்கள். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)