Friday, June 28, 2019

2:17 கண்தெரியாக் காரிருளில் அவர்களைத் தத்தளிக்க விட்டு விட்டான்.


مَثَلُ - ம(ஸ)தலு

உதாரணம் - உவமானம்

هُمْ -ஹும்
அவர்கள் இவர்கள்



مَثَلُهُمْ -  ம(ஸ)தலுஹும்

அவர்களுக்கு உதாரணம்


كَمَثَلِகம(ஸ)தலி

உதாரணத்தைப் போன்றது


الَّذِيல் லதீ(ரீ)

ஒருவன்


اسْتَوْقَدَஸ்தவ்  ஃகத 

மூட்டினான்


نَارًاநாரன்  

நெருப்பு - தீ


فَلَمَّاFபலம்மா 

அப்போது


أَضَاءَتْஅழாஅத்

ஒளி வீசியது


مَا حَوْلَهُமா ஹவ்லஹு 
அவனைச் சுற்றிலும்

ذَهَبَத(ர)ஹப
போக்கிவிட்டான்


اللَّـهُ - அல்லாஹு 
அல்லாஹ்


بِنُورِهِمْபிநுாரிஹிம்

அவர்களுடை ஒளி


وَتَرَكَهُمْவ தரக ஹும் 

மேலும்  அவர்களை விட்டு விட்டான்


فِي ظُلُمَاتٍFeபீ ழுலுமாதின்  

காரிருள்களில்


لَّا يُبْصِرُونَலா யுப்ஸிரூ(ன)ன்.

பார்க்க முடியாது

مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللَّـهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَّا يُبْصِرُونَ


ம(ஸ)தலுஹும்  கம(ஸ)தலில் லதீ(ரீ) ஸ்தவ்  ஃகத நாரன்  Fபலம்மா  அழாஅத் மா ஹவ்லஹு த(ர)ஹபல்லாஹு  பிநுாரிஹிம் வ தரக ஹும்  Feபீ ழுலுமாதி(ன்)ல்  லா யுப்ஸிரூ(ன)ன்.



இத்தகையோரின் நிலை, (தன் குழுவினருக்காக ஒளி பெற வேண்டித்) தீ மூட்டிய ஒருவனின் உவமையை ஒத்தது: (இருளில்) ஒருவன் தீ மூட்டினான். அச்சிறு தீப்பொறி வளர்ந்து, சுற்றிலும் ஒளி தரும் வேளையில், அல்லாஹ் அவ்வொளியைப் பறித்து, கண்தெரியாக் காரிருளில் அவர்களைத் தத்தளிக்க விட்டு விட்டான். (அதிரை ஜமீல்)

2:17. இத்தகையோருக்கு ஓர் உதாரணம்; நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான். (ஜான், அன்வாருல் குர்ஆன்)



இவர்களுடைய உதாரணம் ஓர் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (அதாவது: அபாயகரமான காட்டில், காரிருளில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு வழியை அறிவிப்பதற்காக) ஒருவர் தீயை மூட்டி (அதனால்) அவரைச் சூழ ஒளி ஏற்பட்ட சமயத்தில் (அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக) அல்லாஹ் அவர்களுடைய (பார்வை) ஒளியைப் போக்கி பார்க்க முடியாத காரிருளில் விட்டுவிட்டான். (அப்துல் ஹமீது பாகவி)



இத்தகையோரின் உவமானம் (பின்வரும்) உதாரணத்தைப்போல் இருக்கிறது: ஒருவர் தீயை மூட்டினார்; அது அவரைச் சுற்றிலும் ஒளி வீசியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியைப் பறித்து விட்டான். மேலும் எதையுமே அவர்கள் காணமுடியாத நிலையில் அவர்களை இருள்களில் விட்டு விட்டான். (IFT)



இவர்களுக்கு உதாரணம்: (இருள் நீக்க) நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றாகும். அந்நெருப்பு அவரைச்சூழ ஒளி வீசியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியை (அணைத்து)ப் போக்கிவிட்டான்; மேலும் அவர்கள் பார்க்கவும் முடியாத காரிருள்களில் அவர்களை விட்டுவிட்டான். (சவூதி)



இத்தகையோருக்கு ஓர் உதாரணம்; நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அந் (நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் போக்கிவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருள்களில் அவர்களை விட்டு விட்டான்.(இம்தாதி)


2:17. ஒருவன் நெருப்பை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அவர்களின் ஒளியைப் போக்கி, பார்க்க முடியாமல் இருள்களில்439 அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழிகேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது.



Thursday, June 27, 2019

2:16 டிரைனேஜ்களை தலையில் சுமந்து அப்புறப்படுத்தியவன் நான்

என்னைப் பற்றி விமர்சனம் செய்து எழுதிய சகோதரர்   உங்களை என்னமோ நினைத்தேன்  என்று குறிப்பிட்டிருந்தார். வார்த்தைக்கு வார்த்தை வெளியிடுவதால் என்னை என்னமோ என யாரும் நினைக்க வேண்டாம். நான் அரபிக் கல்லுாரிகளில் படித்தவன் அல்ல. அரபிக் கல்லுாரிகளில் படித்தவர்களுடன் நட்பாக இருந்தவன், இருப்பவன்.

1979 முதல் அல் பைசல் ரெஸ்ட்ராரண்ட் என்ற  அரபி கடையில் ஒரே கபீலிடம்  வேலை செய்து வருகிறேன்.  திக்கா, கபாப், சிக்கன் டிக்கா போன்றவை சுட்டு கொடுக்கும் வேலை செய்பவன்தான் நான். என்னை எதிரியாக கருதுபவர்கள் சமையல்காரன் என்று கூறி சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள். நான் ஹோட்டலில் வேலை செய்பவன் என்று சொல்வதில் வெட்கப்படுபவன் அல்ல.

எங்கள் கடையில் இப்பொழுது ஒரு பிளேட் 35 திர்ஹங்களிலிருந்து 50 வரை உள்ளன. இதை நான் நின்று சுட்டு கொடுக்க வேண்டும் என்றால் ஒரு பிளேட் 100 திர்ஹங்கள் அல்லது ஆயிரம் திர்ஹங்களுக்கு குறையாமல் ஆர்டர் தர வேண்டும். அதுவும் ஒரு நாளுக்கு முன் ஆர்டர் சொல்ல வேண்டும் என்ற நிலையில் உள்ளேன். இதையே அல்லாஹ் எனக்கு அளித்த உயர்வாக - கண்ணியமாகக்  கருதுகிறேன்.

1983- 86 களில் கக்கூஸ் கழுவியவர்கள் தங்களை கேஷியர்கள் என்றும் நகர் சுத்தி தொழிலாளிகளாக இருந்தவர்கள் சானிடரி இன்ஸ்பெக்டர்கள் எனவும் ஆடு, ஒட்டகம் மேய்த்தவர்கள், முடி திருத்தம் செய்தவர்கள். தாங்கள் மன்னர் வீட்டில் வேலை செய்வதாக கூறி பெருமைப்பட்டார்கள். 

அந்தக் காலக் கட்டத்தில் மு.லீக் மேடைகளில் பேசிய நான் துபையில் கக்கூஸ் அள்ளியவன் என்று கக்கூஸ் அள்ளிய  சம்பவங்களை மேடைகளில் சொல்லிக் காட்டி இருக்கிறேன்.


டிரைனேஜ் வண்டிகள் வர முடியாத அளவுக்கு சுற்றிலும் குழிகள் தோண்டப்பட்ட நிலையில் நிறைந்து விட்ட டிரைனேஜ்களான மல ஜலங்களை தலையில் சுமந்து அப்புறப்படுத்தியவன் கட்டரை காலி செய்தவன் நான். இதையும் மேடையிலேயே சொல்லிக் காட்டி உள்ளேன். எனக்கு எந்த வரட்டு கவுரமும் கிடையாது. உண்மை எங்கு இருந்தாலும் யார் சொன்னாலம் ஏற்றுக் கொள்வேன்.

இனி 2:16 வசனத்தின் சொல்லுக்கு சொல் பார்ப்போம்.



أُولَـٰئِكَ - உலாயிக

இவர்கள் -அவர்கள் - இத்தகையவர்கள்


الَّذِينَ -  ல்லதீ(ரீ)ன   

அவர்கள்  எவர்கள்- சிலர்


اشْتَرَوُا - அஷ்தரஉ

வாங்கிக்கொண்டார்கள் 


الضَّلَالَةَ - (அ)ழ்ழலாலத

வழிகேடு

بِالْهُدَىٰபில் ஹுதா 

நேர்வழி


فَمَاFபமா 
இல்லை


رَبِحَتறபிஹத் 

இலாபம் - பயன் - அடைந்துவிட்டது

تِّجَارَتُ- திஜாறது 
வியாபாரம்



هُمْ- ஹும்

அவர்கள் – இவர்கள்


تِّجَارَتُهُمْ- திஜாறது ஹும்

அவர்களுடைய இந்த வியாபாரம் 

وَ- வ 
இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி   



وَ مَا -  மா

இல்லை


كَانُواகானுா
ஆகிவிட்டார்கள்


مُهْتَدِينَ  - முஹ்ததீ(ன)ன்

நேர்வழி பெற்றவர்கள் 

இனி வசனத்தை முழுமையாகப் படிப்போம்

أُولَـٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ


உலாயிகல் லதீ(ரீ)ன  ஷ்தராஉ ழ்ழலாலத பில் ஹுதா Fபமா றபிஹத் திஜாறது ஹும் வ மா கானுா முஹ்ததீ(ன)ன்.

தமிழாக்கங்கள்

1. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் வாங்கிக் கொண்டார்கள் இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.2:16 ( KSR)


2. 
இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டைக் கொள்முதல் செய்து கொண்ட, தடம் புரண்ட வணிகர்கள். இவர்களுடைய (இந்த) வணிகம் இலாபம் ஈட்டித் தராது; இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர் (அதிரை ஜமீல்)


3. இவர்கள் எத்தகையவர்கள் என்றால் நேர்வழிக்குப் பதிலாக தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டார்கள்,  எனவே இவர்கள்  (இந்த) வியாபாரம் இலாபம் தரவில்லை. மேலும் இவர்கள் நேர்வழி பெறுகிறவர்களாகவுமில்லை (மலிவு பதிப்பு)

4. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்
; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர்(ஜான், அன்வாறுல் குர்ஆன்)

5. (நயவஞ்சகர்களான) அவர்களோ நேர்வழிக்குப் பகரமாகத் தீய வழியை கொள்முதல் செய்து கொண்டவர்கள். ஆகவே அவர்களது வியாபாரம் (அவர்களுக்கு) ஆதாயம் கொடுக்கவில்லை. அவர்கள் நேர்வழி பெற்றபவர்ளும் அல்லர்.(பஷாரத்)


6. இவர்கள்தான் நேரான வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். எனவே, இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் அளிக்கவில்லை. அன்றி, இவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை. (அப்துல் ஹமீது பாகவி)


7. இத்தகையோரே நேர்வழிக்குப் பகரமாக வழிகேட்டைக் கொள்முதல் செய்தோர்! ஆனால் இவர்களின் இவ்வாணிபம் இலாபம் தரக்கூடியதாக இல்லை. இன்னும் (அறவே) நேர்வழி பெற்றவர்களாகவும் இவர்கள் இருக்கவில்லை. (IFT)


8. இத்தகையோர்தான் நேர்வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டார்கள்; ஆகவே இவர்களுடைய (இந்த) வியாபாரம், இலாபமளிக்கவில்லை. மேலும், இவர்கள் நேர்வழி பெறுபவர்களாகவும் இலர்.


9.  அவர்களே, நேர்வழியை விற்று வழிகேட்டை வாங்கியவர்கள். எனவே அவர்களின் வியாபாரம் பயன் தராது. அவர்கள் நேர்வழி பெற்றோரும் அல்லர்.2:16. (P.J.)

Wednesday, June 26, 2019

2:15 கண் என்பதற்கு பார்க்கும் கண் என்பது மட்டும் தான் பொருளா? தமிழில் எத்தனை வித கண்கள் உள்ளன?

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள  யமுத்து  (நீட்டுதல்,  அதிகப்படுத்தல்) என்பது போன்ற சொற்கள் தனித்த நிலையில் பல பொருள்கள் தரும்.  உதாரணமாக ஐன் (கண்) என்ற அரபு வார்த்தை தனித்து இருக்கும் போது கண். தங்கம், முட்டுக் கால், தலைவன், உளவாளி, பிரமுகர், ஊற்றுக் கண் என்று 70 (அதாவது அதிகமான) பொருள் தரும் என்பார்கள் அரபிகள்.

நமது தாய் மொழியாகிய தமிழ் மொழியில் கூட கண் என்பது பல பொருள்கள்  தரக் கூடியது தான். ஐன் என்பதை பார்க்கக் கூடிய  கண் என்ற பொருளில் குர்ஆனின்    12:84.    15:88.          18:28.     20:131.    36:66.   52:20  54:37.   90:8ஆகிய  வசனங்களில்  அல்லாஹ் பயன்படுத்தி உள்ளான். 

ஊற்றுக்   கண் என்ற பொருளில் 2:607:16044:2544:52. 54:12. 55:50. 55:6676:18.   ஆகிய  வசனங்களில்  அல்லாஹ் பயன்படுத்தி உள்ளான். அது மாதிரி தான் நாமும் தமிழ் மொழியில் பயன்படுத்தி வருகிறோம்.

தேங்காய்  கண்  பனங்காய்  கண் எனும் போது தேங்காய், பனங்காய்களிலுள்ள  குழிகளை குறிக்கிறது.

ரொம்ப பொடி(சிறிய) கண்ணாக இருக்கிறது. கொஞ்சம் பரும் (பெரிய) கண்ணாக வேண்டும் என்றோ, பரும் (பெரிய) கண்ணாக இருக்கிறது. பொடி(சிறிய) கண்ணாக வேண்டும் என்றோ பெண்கள் சொல்வார்கள். எதைப் பார்த்து சொல்வார்கள்? 

சல்லடை, அருத்து, பலகணி (இடியாப்பம், முறுக்கு அச்சு) போன்றவற்றை வாங்கும் போது சொல்வார்கள். இங்கே கண் என்பது எதைக் குறிக்கிறது? அவற்றில் உள்ள சிறு சிறு துவாரம் (ஓட்டை)களை குறிக்கிறது.


கண் வந்து விட்டது இனி புண் உடைந்து விடும் என்பார்கள். உடலில் ஏற்படும் புண், கட்டி போன்றவற்றில் ஜலம் (சீழ்) வெளி வருவதற்குரிய பழுத்த கரு முனை உருவானதும் அந்த கரு முனைக்கு (புண்ணின் வாய் துளைக்கு) கண் என்பார்கள்.  


தோகையின் கண்கள் என்பார்கள். இது மயில் போன்ற பறவையின் சிறகில் உள்ள கருப்பு நிற புள்ளிகள் என்று அர்த்தம் தரும்.

ஊசிக் கண் சிறியதாக இருக்கிறது என்பதன் மூலம் ஊசியின் துளையை கண் என்பார்கள். ஆறு, வாய்க்கால், கால் வாய் போன்றவற்றில் உள்ள மதகுகளை கண்மாய் என்பார்கள். 

தனித்த நிலையில் பல பொருள் தரும் இந்த மாதிரி வார்த்தைகள். இன்னொரு வார்த்தையுடன் சேரும் போது பெரும்பாலும் உறுதி செய்யப்பட்ட வார்த்தையாக ஆகி விடும். அப்போது அது ஒரு பொருளை (அர்த்தத்தை)த்தான் தரும். ஒரு அர்த்தம் தான் வரும்.

இந்த வசனத்தில்  யமுத்து என்பதற்கு நீட்டுதல்,  அதிகப்படுத்தல் என்பது நேரடி பொருள் என்றாலும் இங்கே விட்டு விடுகிறான்- விட்டு வைத்திருக்கிறான்.          அவகாசம்             அளித்துக்          கொண்டு   இருக்கின்றான் என்ற பொருள் தருகிறது. 

நீட்டுதல் என்பதற்கு நேரடி பொருள் ஒன்றாக இருந்தாலும் அதுவும் பல பொருள் தரக் கூடியது தான்.  அதையும்

சட்டத்தின் கண்ணில் அனைவரும் சமம். 
அந்தக் கட்சி தான் ஊழலின் ஊற்றுக் கண்.
அறிவுக் கண் கொண்டு பார்க்க வேண்டும். 
வரலாற்று கண் கொண்டு பார்க்க வேண்டும். 
அவன் நம்மீது கண் வைத்து இருக்கிறான். 

அவன் மீது எப்போதும் ஒரு கண் இருக்கட்டும்

இலக்கிய வசனங்களையும் இனி வரும் இடங்களில் விளங்குவோம். இன்ஷாஅல்லாஹ். இப்பாழுது 2:15 வசனத்தின் வார்த்தைக்கு வார்த்தை பார்ப்போம்.


اَللّٰهُ-அல்லாஹு  -
அல்லாஹ்
 يَسْتَهْزِئُ- யஸ்தஹ்Ziஸிஃஉ
பரிகசிக்கிறான் - பரிகாசம் செய்து கொண்டிருக்கிறான் - கேலி செய்கிறான்

بِهِمْ-பிஹிம்
அவர்களுடைய

 وَ -     
இன்னும், மேலும், பின்னர், பின்பு, அன்றி   

يَمُدُّ-யமுத்து

நீட்டுதல்  - அதிகப்படுத்தல்


هُمْ-  ஹூம் -

அவர்கள் – இவர்கள்


فى பீ (Fee) -  

ல். 


طُغْيَانِ- துஃக்யானி

வழிகேடு – அத்துமீறல்- வரம்பு மீறல் -அட்டூழியம்

هِمْ‌ஹிம்

அவர்களுடைய - அவர்களின்


يَعْمَ- யஃம
கபோதி- குருடு

 هُوْنَ- ஹுன
அது -அவர்கள்

يَعْمَهُوْنَ- யஃமஹு(ன)ன் 

அவர்கள் கபோதிகளாக (விழிகண்  குருடர்களாக – கண் மூடித்தனமாக) இருக்கிறார்கள்

 اَللّٰهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ‏

அல்லாஹு யஸ்தஹ்Ziஸிஃஉ பிஹிம் வ யமுத்து ஹும் பீ(FE) துஃக்யானி ஹிம் யஃமஹு(ன)ன்

இனி 10  மொழி பெயர்ப்புகளின்  தமிழாக்கத்தை பாருங்கள்


1. அதிரை ஜமீல்

விழிகண் குருடர்களாய் இவர்களின் வழிகேட்டிலேயே தட்டழியும்படி விட்டுக் கொடுத்து,  அல்லாஹ் இவர்களைக் கேலி செய்கிறான். 2:15.



 2. அன்வாருல் குர்ஆன், 3.ஜான் - 4. இம்தாதி)



அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.  2:15.


5.  (மலிவு பதிப்பு)
அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கின்றான். மேலும் அவர்களின் வழிகேட்டிலேயே தட்டுத் தடுமாற விட்டு வைத்திருக்கிறான்.  2:15. 

6. (பஷாரத்)
2:15.  அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் அவர்களின் வழிகேட்டிலேயே அவர்கள் தடுமாறுகிறவர்களாக அவர்களை விட்டு வைத்திருக்கிறான்.   2:15. 


7.பாகவி
(அவ்வாறன்று!) அல்லாஹ்தான் அவர்களை பரிகசிக்கின்றான். மேலும், அவர்களுடைய அட்டூழியத்தில் (இவ்விதம் தட்டழிந்து) கெட்டலையும்படி விட்டு வைத்துள்ளான்.2:15


8.(IFT)
அல்லாஹ் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருக்கிறான். (அவன்) அவர்களுக்கு அவகாசம் அளித்துக் கொண்டு இருக்கின்றான்; (அவர்களோ) தமது வரம்பு மீறிய நடத்தையில் கண்மூடித்தனமாக உழன்று கொண்டேயிருக்கிறார்கள். 2:15


9.(சவூதி)
அல்லாஹ் அவர்களை பரிகசிக்கிறான். மேலும் அவர்களுடைய வழிகேட்டில் கபோதிகளாக அவர்களை(த்தட்டழியும்படி) விட்டு வைத்திருக்கிறான். 2:15

10.P.J
அல்லாஹ்வோ அவர்களைக் கேலி செய்கிறான்.6 அவர்களது அத்துமீறலில்  அவர்களைத் தடுமாற விட்டு விடுகிறான். 2:15