அத்தியாயம் : 2 அல் பகரா
மொத்த வசனங்கள் : 286
அல் பகரா - அந்த மாடு
திருக்குர்ஆனில் மிகப் பெரிய அத்தியாயம் இது. இந்த அத்தியாயத்தில் 67வது வசனம் முதல் 71வது வசனம் வரை மாட்டுடன் தொடர்புடைய அதிசய நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இடம் பெற்றதன் காரணமாக "அந்த மாடு' என்ற பெயர் இந்த அத்தியாயத்துக்கு வந்தது.
காளை, பசு இரண்டையும் இச்சொல் குறித்தாலும், பெயர் வரக் காரணமான 67 முதல் 71 வரை உள்ள வசனங்களைக் கவனித்தால் காளையையே குறிக்கிறது என அறியலாம். (நன்றி பீ.ஜே. தர்ஜமா)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
1. அலிஃப், லாம், மீம்.2
இனி வார்த்தைக்கு வார்த்தை பொருள் பார்ப்போம்.
அலிஃப், லாம், மீம்.2
இவை பொருள் செய்ய முடியாத தனித் தனி எழுத்துக்கள்
தமிழ் நடையில் ஏழு மொழி பெயர்ப்புகள்
1. இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி. - P. ஜைனுல் ஆபிதீன், தொண்டி
6. இது அல்லாஹ்வின் வேதமாகும்; இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)
7. இது வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமுமில்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர் வழி காட்டியாகும். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)
சிந்தியுங்கள் செயல்படுங்கள்